இரண்டாவது தேர்தல்
துளசிதளத்திற்குள் சென்று ஒரு அலசு அலசினேன் .
உள்ளே நுழைந்ததும் ,அயல் நாட்டில் வந்து இறங்கிய அனுபவம் கிட்டியது.
பல இடஙக்ள் சென்றதோடு நில்லாமல்,பார்த்தவைகளைப்ப் படம் பிடித்து அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் அவருக்குள்ள ஆர்வம் பளிச்சென்று தெரிகிறது
இவர்,இருப்பது நியூசிலாண்ட்.
-சாப்பிடவாங்க, விக்கிபசங்க சற்றுமுன் - இவையெல்லாம் இவர் இணைந்திருக்கும் வலைப்பதிவுகள்
யானை, இவருடைய இஷ்ட நண்பன்.
மூன்று குரங்குகள் தத்துவத்தை இவரது, யானைகளும் சொல்கின்றன. பெங்குயின் பறவைகள் கடல் சிங்கம் பற்றியெல்லாம் எழுதி நம்மை நேஷனல் ஜியாகிரஃபி ,டிஸ்கவரி சேனல் என்று அமர்த்திவிடுவார் மொத்தத்தில் விசா இல்லாமல் ,டிக்கெட் எடுக்காமல் நியூசிலாண்ட் போக வேண்டுமென்றால் இங்கே கிளிக் பண்ணுங்கள் http://thulasidhalam.blogspot.com/
http://thulasidhalam.blogspot.com/2009/01/dahlia.html
மலர்கள் கண்காட்சி காண இந்த சுட்டி.
இவர் பதிவில்
சுற்றி வந்ததில் அகப்பட்டது இந்த இடுகை.
மலர்கள் அத்தனையும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அழகு அப்படி அழகு.இறைவனின் ஓவியம் எல்லாமே அழகுதான் .அதை அப்படியே படம் பிடித்துத் தருவதும் அழகுதான்.அந்த அழகை அழகாகவே செய்திருக்கிறார்.
--------------------------------------
http://kusumbuonly.blogspot.com/2007/12/pit.html
மொக்கை,கவுஜ,லொள்ளு,ஜொள்ளு ,கலாய்த்தல் இப்படி நற்றமிழ் வார்த்தைகளோடு அழகாக யாரால் பதிவு போட இயலும்?
ஒன் அண்ட் ஒன்லி குசும்பன்.
உள்ளே நுழைந்தால் ,சீனிய சிடிசன் யாராக இருந்தாலும், ஜீன்ஸ் டீஷர்ட், ஐ பாடு[பெயர் பொறுத்தம் சூப்பர்,வாங்கித் தரலேன்னா அப்பன் பாடு திண்டாட்டம்தான்]ப்ளூ டூத் சகிதமாக வளைய வரும் கல்லூரி மாணவ மாணவி ரேஞ்சுக்கு இழுத்துச் சென்று விடும்.
சமையல் பகுதி ஒன்று ஆசையாக கிளிக் பண்ணினேன் சும்மா சொல்லக் கூடாது .ங்கொக்கமக்கா ரவா தோசை நல்லாத்தான் இருந்துச்சு.
ஆனால்,படித்தபின்னர்தான் புரிந்தது இவர் ஏன் சமையல் பகுதியை எழுதுனார் என்று,இங்கே பாருங்கள்.(குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்.),
(குறிப்பு: தோசை எப்படி சாப்பிடுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக ஊட்டியும் விடபடும்.)
இது எப்படி இருக்கு .சரி நமக்குத் தேவை இவரது கேமரா லுக்.
பாருங்கள்.நேரம் கிடைத்தால்,சமையலறைப்பக்கமும் போங்கள்.
அரசியல் தொடங்கி ஆன்மீகம் வரை எதையும் விட்டு வைக்க வில்லை.
http://memycamera.blogspot.com/
அடுத்த புகைப்படக்கண்காட்சி உண்மையின் வலைப்பூ .
பெயரிலேயே தெரிகிறது இந்த வலை கேமராவுக்கு மட்டும் என்று .
தொடக்க உரையிலேயே பிட் பிளாகுக்கு நன்றி என்பது ஒரு சிறப்பு .
இவருடைய கிளிக்ஸ் அத்தனையும் அருமையான ஓவியமாக அமைந்திருக்கின்றன.
மலர்கள் என்ற சாம்பிளுக்கு இன்னொரு உதாரணமாக இதைச் சொல்லலாம்
http://memycamera.blogspot.com/2007/12/december-flowers-pit.html
http://memycamera.blogspot.com/2008/03/march-reflection-pit.html
ரிஃப்ளெக்ஷன் படப் போட்டிக்கான படம் அருமையான கோணம் இது.
கடலில் மூழ்கி முத்தெடுத்தது போல் எடுத்திருக்கிறேன்.
இந்த பதிவை பூமி உருண்டையின் அந்தப் பக்கம் விழித்திருப்போர் சங்கம் ,முதலில் காணும் வண்ணம் பதிந்திருக்கிறேன்
|
|
Me the First???
ReplyDeleteஆமா நான்தான் மொதல்லே வாழ்த்துக்கள் கோமா!!!
ReplyDeleteவலைச்சரத்தில் ஹாஸ்யத்தில் கலக்கி விட்டீர்கள்.
சூப்பர்.........
ரம்யா
ReplyDeletecome-யா thanku-யா.
அட உங்க பதிவ இரசிப்பதை விட
ReplyDeleteஇப்ப உள்ள பின்னூட்டம் மிக அருமையா இருக்கே!
வாழ்த்துகள்
அப்படியா சங்கதி .அப்படியென்றால் என் பதிவை பின்னூட்டமாகவே போட்டு வைக்கிறேன்
ReplyDeleteஜமால்
ஒரு சின்ன கரெக்ஷனுக்காகப் போனேன் ஜமால் ரசித்த பின்னூட்டம் டெலிட் ஆகி விட்டது .மறுபடியும் போட்டால் போச்சு
ReplyDeleteஹாஸ்யம் ஒரு ஆரோக்கியமான RUM
ReplyDeleteதப்பில்லாத GIN,அதிகமானாலும் ஆபத்தில்லா VOTKA,தினமும் எடுக்க வேண்டிய WISKY.....
நான் சொல்றேன் பாரு,[இது தமிழ் பாரு]
யாரைக் கேட்டாலும் பார் பார்[இது ஹிந்திபார்]
இந்த பாருக்கு [இது இங்லீஷ் பார்]போனால் ஆரோக்கியம் தங்கி நிற்கும்.
இதை என் பாரதியே ஒப்புக் கொள்வார்
எனதருமை நண்பன் குசும்பனின் வலிப்பூவினிற்குச் சுட்டி மட்டும் கொடுத்து விட்டு - அதனைப் பற்றி ஒன்றுமே கூறாதது வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது. அதுவ்ன் அவனது பதிவினில் பூக்களின் கண்காட்சியில் கடைசிப் பூ அழகாக அமர்க்களமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் அப்பதிவினை முறைப்படி அறிமுகப்படுத்தவில்லை.
ReplyDelete\\goma said...
ReplyDeleteஅப்படியா சங்கதி .அப்படியென்றால் என் பதிவை பின்னூட்டமாகவே போட்டு வைக்கிறேன்
ஜமால்\\
ஹா ஹா ஹா
ஹாஸ்யம் ஜாஸ்தி தான் போல
உலகத்தில் தேவையான நல்ல விடயம்
அப்படியா ?!!!!அடடா .குசும்பன் அப்திவில் குசும்பு பண்ணி விட்டேனே?
ReplyDeleteசீனா !உங்கள் நட்பு வாழ்க .நண்பனுக்கு ஒன்று என்றால் ,கொதித்தெழும் உங்களை எப்படி பாராட்டுவது என்பதே தெரிய வில்லை.
ஷாந்தம்...ஷாந்தம்..ஷாந்த...முலேகா...
சீனா
ReplyDeleteதங்கள் கோரிக்கை நிறைவேற்றியாகி விட்டது .இருந்தாலும் உங்களுக்கு கு...சும்பு
துளசி தளத்துக்கு ராயல் சல்யூட்!
ReplyDeleteகுசும்பனின் வலைப்பூ முதன்முறையாகச் சென்றேன். தாங்கள் சுட்டிய பதிவில் புகைப் படங்கள் யாவும் அருமை. பாராட்டி விட்டு வந்தேன். ட்ரூத் பதிவுகளுக்கு நான் ரெகுலர் விசிட்டர்:)!
அருமையான தொகுப்பு.