உள்ளமுள்ள ஜனங்க இந்த ப்ளாக்கைப் படிச்சு நெகிழும்
"முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கெரகம்
பூமியில எடுத்துவந்தேன் தலையில நான் கரகம்
ஊருலகம் சுத்தி வரும் உத்தமபாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கலங்கும்"
எதுக்கிப்போ கரகாட்டக்காரன் படப் பாட்டு? விநாயகருக்கு வணக்கம்னு வெச்சிப்போமே. இந்தப் பாட்டுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னு கண்டுபிடிச்சி சொல்றவங்களுக்கு புள்ளையார் சார்புல அருள் பாலிக்கப்படும்.
தமிழ் வலையுலகில் ஏகப்பட்ட பதிவுகள் இருக்குது. ஆனா சில பதிவுகளைப் படிச்சிங்கன்னா உங்க மனசு நெகிழ்ந்து போகும், கண்ணு கலங்குனாலும் கலங்கலாம். மனசு நெகிழலன்னாலும், கண்ணு கலங்கலன்னாலும் குறைந்த பட்சம் நம்மை யோசிக்கவாச்சும் வைக்கும் இப்பதிவுகள். அப்படி பட்ட சில பதிவுகளைப் பாப்போம். இதுல கவிதை, உரைநடை ரெண்டும் அடக்கம்.
கவிதைகள்
துபாயில் தன்னுடைய நண்பரைப் பார்க்க சென்ற இடத்தில் தான் கண்டவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தம்பி. வாழ்க்கை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
என் நண்பனுடன் ஒரு நாள்
கணவனுக்காக மனைவி காத்திருத்தலைப் பற்றிய தீக்ஷண்யாவுடைய ஒரு வித்தியாசமான பார்வை.
மனையாள் அன்பு
ஆண் பெண் நட்பு பற்றிய வேதாவினுடைய அழகான கவிதை ஒன்று.
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!
நாம் தெருவில் பார்க்கும் மனிதர்கள் சிலரின் வாழ்வை நாம் ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் எப்படியிருக்கும் என ஏங்குகிறார் கீதா.
அவரவர் உலகம்
"No one has ever won a War" அப்படீங்கற ஆங்கில சொல்லாடலை நினைவுபடுத்தற மாதிரி, போரில் யார் வென்றாலும் தோற்றாலும், தோற்பது மனித இனம் தான் என்று அழகாக இக்கவிதையின் மூலம் சொல்கிறார் நாமக்கல் சிபி.
மரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....!
ஒரு பெண் தாயாகும் தருணங்கள் அவள் கணவனின் பார்வையில். நெகிழவைக்கும் விவசாயியின் கவிதை.
ஜனனம்
கவிதை அல்லாதவை
ஒரு கரகாட்டம் ஆடும் பெண் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ராமின் இந்த பதிவில்.
டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!!
நெருங்கியவர்களின் மரணம் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை எழுதியிருக்கிறார் யாத்ரீகன்.
நெருங்கியவர்களின் மரணம்
2006இல் தேன்கூடு திரட்டி நடத்திய சிறுகதை போட்டியில் "வளர்சிதை மாற்றம்" என்ற தலைப்பில் முதல் பரிசு வென்ற இளவஞ்சியின் சிறுகதை. வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு இளைஞனின் கதை.
விட்டில் பூச்சிகள்
நான் படித்த முதல் பத்து பதிவுகளுள் ஒன்று இது. புக் கிரிக்கெட், FLAMES விளையாட்டு என ஒரு நகரத்து சிறுவனின் சின்னஞ்சிறு உலகத்தைப் பிரதிபலிப்பது போல இருந்தாலும் இறுதியில் ஒரு கணமான இதயத்துடன் உங்களை விட்டுச் செல்லும் தேவின் இக்கதை. கதை என்பதை விட இதை அனுபவம் என்றே சொல்லலாம்.
பழைய பனையோலைகள்
நெல்லிக்கா, கொல்ட்டி என நிறைய பிரபலமான கதைகளை இவர் எழுதியிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. வயதான பின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் துணை எவ்வளவு அவசியமானது என்று உணர்த்தும் ஒரு நல்ல கதை.
பயணம்...
அழிக்கப்பட்ட ஒரு பெண் சிசுவிற்கு தன் உணர்வுகளை எடுத்துரைக்கும் ஆற்றல் வந்தால்...படித்து பாருங்கள் ஜீவ்ஸின் இப்புனைவை.
ஒரு மெளனத்தின் அலறல்
|
|
டங்கா டுங்கா டவுசுக்காரி
ReplyDeleteஹா ஹா ஹா
இவ்வளவு தாமதமாக பதிவிட்டால் எப்படி? நாங்க ஆணி, கடப்பாரைகளைத் தாண்டித்தான் பதிவுகளை படிக்க முடியும். கவனத்தில் வைங்க.
ReplyDeleteஆஹா..இப்படி ஃபீலிங்ஸை பிழிஞ்சு காய வைக்கறீங்களே! :-) நல்ல பதிவுகள் கைப்ஸ் அண்ணா..தீஷண்யாவின் கவிதை அருமை! நன்றி பகிர்ந்தமைக்கு!
ReplyDeleteஇளவஞ்சியின் கதை பரிசுகுத் தகுதியானதான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைய இளவட்டங்கள் அனைவரும் படிக்கவேண்டிய கதை.
ReplyDeleteமுந்தி முந்தி வி நாயகரே பாட்டு நன்றாக கிராமத்து மெட்டில் வருகிறது.
ReplyDeleteபல்வேறு பதிவுகளில் வரும் பாடல்களுக்கு கவிதைகளுக்கு மெட்டு அமைத்து
பாடுவது முதியவனான் எனது பொழுது போக்கு. வணிக நோக்கு எதுவும் இல்லை.
தங்கள் அனுமதியை எதிர்பார்த்து யூ ட்யூபில் போடுகிறேன். கிராமத்து பாடல் மெட்டு தான்.
சுப்பு தாத்தா
http://vazhvuneri.blogspot.com
//முந்தி முந்தி வி நாயகரே பாட்டு நன்றாக கிராமத்து மெட்டில் வருகிறது.
ReplyDeleteபல்வேறு பதிவுகளில் வரும் பாடல்களுக்கு கவிதைகளுக்கு மெட்டு அமைத்து
பாடுவது முதியவனான் எனது பொழுது போக்கு. வணிக நோக்கு எதுவும் இல்லை.
தங்கள் அனுமதியை எதிர்பார்த்து யூ ட்யூபில் போடுகிறேன். கிராமத்து பாடல் மெட்டு தான்.
சுப்பு தாத்தா//
ஐயா,
இது கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் வரும் பாடல். ஏற்கனவே இளையராஜா இசையில் வெளிவந்து பட்டித் தொட்டியெல்லாம் அறியப் பட்ட பாட்டு தான். என்னிடம் அனுமதி கேட்கும் அளவிற்கு நான் அந்த பாடலுக்குச் சொந்தக் காரனுமில்லை அதில் என் பங்களிப்பும் ஏதுமில்லை. மற்றபடி உங்கள் மெட்டில் இப்பாடல் எப்படியிருக்கிறது என்ற ஆவல் என்னை போலவே அனைவருக்கும் இருக்குமாதலால் யூடியூபில் வலையேற்றி விட்டுத் தெரிவியுங்கள். மிக்க நன்றி.
ஜமால், அன்புமணி, முல்லை - தங்கள் தொடர்வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅப்படியா !! நான் கரகாட்டம் ஏதோ இரண்டொரு காட்சி பாடல் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteசரியாக கவனிக்கவில்லை போல் இருக்கிறது.
இந்த பாட்டை இங்கே கேட்கவும்;
சுப்பு தாத்தா.
http://ceebrospark.blogspot.com
மிக்க நன்றி கைப்புள்ள
ReplyDeleteஎப்படி இருக்கிங்க :)