07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 20, 2009

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்.........

நேற்று கொஞ்சம் அதிக ஆணி காரணமாக எழுத முடியவில்லை , சீனா அண்ணன் மன்னிக்கவும்.....

என் பொறுப்பை நான் சரிவர செய்யவில்லையோ என்று எனக்கு நேற்று சற்றே கவலையாக இருந்தது ,



பல மாதங்களுக்கு முன்பு (மூணு மாசம்......) சின்னபைய்யன் சார் என் பெயரை நம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது நான் மிகவும் மகிழ்ந்தேன், இன்று நானே ஆசிரியர் ஆவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை (பீலிங்க்ஸ்)...

இங்கே ச்சின்னப்பையன் சார் எழுதிய ஒரு தொடர் பதிவு , பல அறிமுகங்கள்உங்களுக்கு கிடைக்கும்.....


என் நான்காம் நாளை சற்றே ஆரோக்கிய விவாதம் நடக்கும் விதமாக அமைக்க ஆசை.....

அதனால் தான் இந்த பதிவு.....

எண்ணற்ற விடை காண முடியாத (அறிவியலால்) கேள்விகளில் ஜோதிடமும் உண்டு...(இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது என்பர் பலர்)

சுஜாதா அவர்களின் கடவுள் இருக்கிறாரா? என்னும் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது (இயற்பியல் படித்ததால் மற்றும் பிடித்ததால் )


(ஒரு சிறு எச்சரிக்கை நீங்கள் அதை முழுதும் படித்தால் ஒரு இரண்டு நாட்களுக்கு பித்து பிடித்தது போல் இருப்பீர்கள்.....)

அதில் எண்ணற்ற விவாதங்கள் மற்றும் பல குறிப்புகள் என்னை மேலும் மேலும்
குழப்பியது (அக்மார்க் சுஜாதா )....ஆனாலும் ரசித்து படிக்கலாம்...

அது போன்று இல்லா விட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமாக , நோ fighting , நோ திட்டிங் (நோ பேட் வோர்ட்ஸ் )....

பல காலங்களுக்கு முன்பே கோள்களை ஆராய்ந்து இவ்வளவு மணி நேரம் தான் ஒரு நாள் என்பது, என்பதில் ஆரம்பித்து இவ்வளவு நாட்கள் தான் ஒரு வருடம் என்பதாகட்டும் , இந்த நேரத்தில் இங்கே சப்த ரிசி மண்டலம் தெரியும் , துருவ நட்சத்திரம் என்றும் நகராது , என்று பல விசயங்களை predict பண்ணிய நம்மவர்களால் ஏன் அதை வைத்து இந்த கால கட்டத்தில் ஒரு மனிதருக்கு அல்லது நம் பூமிக்கு இது போன்ற நேரத்தில் இது போன்ற ஒன்று நடக்கும் என்று அனுமானித்திருக்க முடியாது ?

அறிவியல் prediction ஐ ஏற்று கொள்ளாது என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை....
குவாண்டம் mechanics மற்றும் சார்பியல் தத்துவம் மற்றும் எண்ணற்றவை theorem மட்டுமே (தேற்றங்கள்) அனுமானங்களே.....அதற்கு ஒரு எக்ஸ்பெரிமேண்டல் தீர்வு காண முடியாது என்னும் போது ஏன் ஜோதிடம் என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறீர்கள்....

என் நண்பர் ஒருவருடன் நான் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த போது ஒரு ஜோசியம் அறிந்தவர் (தொழில் முறை அல்ல ) வந்தார், அவர் கொஞ்சம் தெரிந்தவர் நாங்கள் கொஞ்சமே கொஞ்சம் அவரை சீண்டி பார்க்க எண்ணி , அவருடன் பேச்சு கொடுத்தோம் , ஒரு கட்டத்தில் அவர் என் நண்பனை பார்த்து , அவன் பிறந்த நேரமோ அல்லது ராசியோ கேட்டறிந்து விட்டு ,
"உன் திருமணம் திடீர் திருமணம்" உன் உத்தியோகம் இது போன்று அமையும் என்றார் "

உண்மையில் அது போன்றே நடந்தது.....

அதே போன்று இன்னொருவர்(ஜோசியர்) , நண்பர் வேறொருவரின் ஜாதகத்தை பார்த்து விட்டு உனக்கு இத்தனை சகோதரர்கள் என்று சில விசயங்களை சரியாக சொன்னார்...அவை காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை விஷயங்கள் இல்லை....

இரண்டு நாட்களுக்கு முன்பு நீயா நானா பார்க்கும் போது சிறப்பு விருந்தினராக வந்த ஜோதிடர், ஒரு கட்டத்தில் எதிரணி பெண்ணின் ஜாதகத்தை வாங்கி பார்த்து விட்டு ,உங்களுக்கு திருமண வாழ்வில் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்றார்...
"அந்த பெண் ஒரு divorcee" ...

இது போன்று நம்ப தகுந்த , அல்லது நம்ப வைக்க முயற்சிக்கும் அனுபவங்களை அல்லது ஏன் நம்பவேண்டும் என்று ஒரு சாரர் comment இல் சொல்லவும்.....


இனி கொஞ்சம் ஜோதிடம் எதிரானவை .....

நீங்கள் சொல்வது போன்று கோள்கள் மனிதனை பாதிக்கின்றன என்றால் இங்கே இருக்கும் குப்பனுக்கும் அமெரிக்காவோ அல்லது ஆப்பிரிக்கவிலோ இருக்கும் ராபர்ட் அல்லது சுப்பனுக்கோ வேறு பட்டால் தூரம் காரணமாக கோள்களின் ஆதிக்கம் ஒவ்வொருவரின் மீதும் ஒரு விதத்தில் செயல் படுகிறது எனலாம்...ஆனால் இங்கே இருக்கும் குப்பன் மற்றும் அவன் அருகே இருக்கும் சுப்பன் ஆகிய இருவருக்குமே வேறுபாடு இருக்கிறது என்னும் போது அதை நம்ப கடினமாக இருக்கிறது....(ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு frequency யை கிரகிக்கும் தன்மை வேறுபடும் என்பதெல்லாம் கப்சா...)

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது என்றால் ஏன் அது இத்தனை வடிவங்களில்...

கைரேகை ,
பிறந்த பலன்..
numerology (எண்கணிதம் ஜோதிடம்)

name(o)logy

கற்கள் வைத்து நடத்தும் ஜோதிடம்....(ஏங்க கற்களின் நிறம் கூட matters எனில்
ஏன் அந்த நிற உடை அல்லது இன்னும் பல அணிய வேண்டியது தானே..சற்று பெரியதாக இருப்பதால் அதிக பலன் கிடைக்குமே....????...

இன்னும் சகுனங்கள்....இவையெல்லாம் அபத்தம் என்று எண்ணுகிறீர்களா?
ஏன் என்று விளக்கவும்....

இன்னும் பல....

கிளி ஜோசியம் என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை , அவனின் கையில் இருக்கும் தானியத்துக்கு ஏற்றவாறு அந்த கிளி ஆடும் என்பது நான் கண்கூடாக கண்டு தெளிந்த நிகழ்வு....ஒவ்வொரு அட்டையையும் கிளி ஜோதிடன் நன்கு அறிந்து வைத்திருப்பான்....

குறி சொல்வது ? ஹா ஹா ....

கைரேகை நாம் தாயின் கத கதப்பில் இருக்கும் போது நம் கைகளை சுருக்கி வைத்திருப்பதால் ஏற்படும் சுருக்கங்கள்.....
ஆனால் அது ஒவ்வொருவரும் வேறுபடுகிறது,ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது கவனிக்க பட வேண்டியது....

ஆனால் நாடி ஜோதிடம் எவ்வாறு ஒவ்வொரு வருக்கும் ஒரு ஓலை வைத்திருக்கும் என்பது எனக்கு விளங்கவில்லை...
இவை அனைத்தும் நம்பிக்கை சார்ந்த விசயங்களே அன்றி உண்மை இல்லை என்பதை இன்னொரு சாரார் தெளிவு படுத்தினால் நான் மிகவும் மகிழ்வேன்.......

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொனமொன வென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்இருக்கையில் சுட்ட சட்டி சத்துவம்
கறிச்சுவை அறியுமோ

- சிவவாக்கிய சித்தர்

நன்றி நண்பர்களே...

நான் நல்ல ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்....
பின்னூட்டங்களின் வருகைக்காக.....
இதை நான் வலைச்சர ரசிகர்களின் கைகளுக்கு விடுகிறேன்....


Be cool....
Stay cool....

(தவுறுகள் இருப்பின் மன்னிக்கவும்)

28 comments:

  1. நண்பனுக்கு எனது வணக்கங்கள்.

    ஆரோக்கியமான விவாதத்தை துவக்கி உள்ளீர்கள்.

    ஜோதிட சாஸ்திரம் கணிதா மற்றும் சமீதா,ப்ரசன்ன எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. கிரக கணிதத்தை மூன்பே கணித்தார்கள் என சொல்லுவது கணிதா எனும் பிரிவில் அடங்கும்.

    சமீதா, ப்ரசன்ன எனும் பிரிவுகள் எதிர்கால பலனை சொல்ல பயன்படுபவை.

    300 வருடங்களுக்கு முன் (ஆங்கிலேய ஆதிக்கம் வருவதற்கு முன் ) நம்மிடம் இருந்த ஜோதிடம் ஆக்க பூர்வமானது.

    தற்சமயம் சில விஷமிகளால் சுயநலத்திற்காக திரிக்கப்பட்டுள்ளது.
    ///
    கைரேகை ,
    பிறந்த பலன்..
    numerology (எண்கணிதம் ஜோதிடம்)
    name(o)logy

    ////

    மேற்சொன்னவை நமது முன்னோர்கள் சொன்ன ஜோதிட முறை அல்ல. உண்மையான விஷயமும் அல்ல. ஆங்கில ஆதிக்கத்திற்கு பிறகு சில சுயலாப தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்டது.

    அறிவியல் போல் ஒரு முறை நிரூபித்தால் போதுமானது அல்ல.
    ஜோதிடம் எப்பொழுதும் நிரூபிக்க வேண்டிய ஒரு சாஸ்திரம்.

    ஒவ்வொரு காலகட்டத்திற்கும் எற்ப உண்மையான சாஸ்திரம் பயின்றவர்களால் ஜோதிடம் நிரூபிக்கபட்டே இருக்கிறது.


    இல்லை என சொல்லுவது சுலபம்.
    இருக்கு என சொல்லுவதும் சுலபம்.
    இருக்கு என நிரூபிக்க சில விஷய ஞானம் வேண்டும். இல்லை என சொல்ல முட்டாள்களே போதும்.

    இவன்

    ஸ்வாமி ஓம்கார்

    ReplyDelete
  2. சுட்டிகளுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கு முதல் தாரம் நிற்காது(மரணம் அடைந்துவிடும்) என்றார் ஜோதிடர். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றார். அதன்படியே செய்தார்கள். ஆனால் அந்தப் பெண் வேறொருவனுடன் ஓடிப்போய்வி்ட்டாள். என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  5. ஜோதிடத்தில் உள்ள சில ஆதார முரண் பாடுகளை பார்ப்போம்...

    ஜோதிடம் புவி மைய்ய கோட்பாடை அடிப்படை ஆக கொண்டது...(Geo-Centric) ஆனால் அறிவியலால் இக்கொள்கை நிராகரிக்க பட்டது....

    ஜோதிடத்தின் படி சூரியன் ஒரு கோள் ஆனால் நாமறிந்த வரை அது ஒரு நட்சத்திரம்....

    நிலா ஒரு கோள் என்று ஜோதிடமும் ஆனால் ஒரு துணைக்கோள் என்பது உலகறிந்த ஒன்று....

    ஜோதிடத்தில் குறிப்பிட படும் ராகு மற்றும் கேது ஆகியன நிழல் அல்லது சாயா கிரகங்கள் என்று சொல்லபடுகிறது ...அவர்களே நிழல் கிரகங்கள் (That doesn't exist) என்று சொன்ன பின்பு அதனிடத்தில் நமது வாழ்க்கையை கேட்பது அறிவீனம்.....

    1960 பின்பு கண்டறியப்பட்டதால் uranus , neptune , pluto போன்ற கிரகங்கள் ஜோதிடத்தில் இல்லை...

    எனவே ஜோதிடம் என்பது சர்ச்சைக்குரியது....இது என் கருத்தே....

    குணா....

    ReplyDelete
  6. //
    அறிவியல் போல் ஒரு முறை நிரூபித்தால் போதுமானது அல்ல.
    ஜோதிடம் எப்பொழுதும் நிரூபிக்க வேண்டிய ஒரு சாஸ்திரம். //

    அறிவியலில் நிரூபிக்க பட்டவை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நிரூபிக்க இயலும்....எனவே அறிவியல் சார்ந்தவைகளை ஒரு முறை நிரூபித்தால் போதுமானது.....அறிவியல்
    கண்டுபிடிப்புகள் என்பது பல பேரறிஞர்கள் முன்னிலையில் சோதனை செய்து நிரூபிக்க பட்டவை....ஆனால் ஜோதிடம் ஒரு சிலருக்கு இடையே சொல்லப்பட்டது.....

    ReplyDelete
  7. //என் நண்பர் ஒருவருடன் நான் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த போது ஒரு ஜோசியம் அறிந்தவர் (தொழில் முறை அல்ல ) வந்தார், அவர் கொஞ்சம் தெரிந்தவர் நாங்கள் கொஞ்சமே கொஞ்சம் அவரை சீண்டி பார்க்க எண்ணி , அவருடன் பேச்சு கொடுத்தோம் , ஒரு கட்டத்தில் அவர் என் நண்பனை பார்த்து , அவன் பிறந்த நேரமோ அல்லது ராசியோ கேட்டறிந்து விட்டு ,
    "உன் திருமணம் திடீர் திருமணம்" உன் உத்தியோகம் இது போன்று அமையும் என்றார் "//

    உங்கள் நண்பர் பிறந்த அதே நேரத்தில் உலகில் ஆயிரக்கணக்கில் பிறந்து இருப்பர் அவர்கள் அனைவருக்கும் திடீர் திருமணம் நடைபெறுவது சாத்தியமா?.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கூல் கார்த்தி...?

    ReplyDelete
  8. நன்றி ஓம்கார் சுவாமிகள் அவர்களே....

    ReplyDelete
  9. நன்றி நாமக்கல் சிபியாரே....

    ReplyDelete
  10. நன்றி புதுகை தென்றல் அவர்களே....

    ReplyDelete
  11. // குடந்தைஅன்புமணி said...

    எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கு முதல் தாரம் நிற்காது(மரணம் அடைந்துவிடும்) என்றார் ஜோதிடர். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றார். அதன்படியே செய்தார்கள். ஆனால் அந்தப் பெண் வேறொருவனுடன் ஓடிப்போய்வி்ட்டாள். என்னவென்று சொல்வது?

    //
    விரைவில் பின்னூட்டங்கள் இதற்கு பதிலளிக்கும் என்று நம்புகிறேன்.....

    ReplyDelete
  12. வாங்க குணா....

    ReplyDelete
  13. //1960 பின்பு கண்டறியப்பட்டதால் uranus , neptune , pluto போன்ற கிரகங்கள் ஜோதிடத்தில் இல்லை...
    //
    அவை வெகு தொலைவில் உள்ளன என்பதால் அவற்றின் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று சொல்லலாம் அல்லவா?

    ReplyDelete
  14. //உங்கள் நண்பர் பிறந்த அதே நேரத்தில் உலகில் ஆயிரக்கணக்கில் பிறந்து இருப்பர் அவர்கள் அனைவருக்கும் திடீர் திருமணம் நடைபெறுவது சாத்தியமா?.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கூல் கார்த்தி...?
    //
    அதை அறிய சாத்திய படுமா...என்பது சிக்கலான ஒன்று....
    யார் யார் அன்று பிறந்தார்கள் அதுவும் சரியாக அந்த மணிக்கு என்று அறிந்துகொண்டுதேடி பதில் சொல்வது கடினம்....

    ReplyDelete
  15. இன்னும் இந்த வாதங்கள் தொடர வேண்டும் ..நன்றி...

    ReplyDelete
  16. ///குடந்தைஅன்புமணி said...

    எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கு முதல் தாரம் நிற்காது(மரணம் அடைந்துவிடும்) என்றார் ஜோதிடர். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றார். அதன்படியே செய்தார்கள். ஆனால் அந்தப் பெண் வேறொருவனுடன் ஓடிப்போய்வி்ட்டாள். என்னவென்று சொல்வது?///


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ஒருவேளை அந்த பொண்ணு ஜாதகம் அப்படி இருக்குமோ??

    ReplyDelete
  17. நல்ல பொஸ்ட் (ஸ்ப்பெல்லிங் மிஸ்டேக் இல்ல , எல்லாம் இந்த numeralogy பண்ண வேலைதான்)

    ReplyDelete
  18. ஜோதிடம் உண்மை, அது கணிப்பவரை
    பொறுத்தே துல்லியமாய் பலன் சொல்ல
    வரும்,

    ReplyDelete
  19. எனக்கு ஜோசியம் மேல நம்பிக்கை நிறையவே இருந்துச்சு.....இப்போவும் இருக்கு ...

    ஆனா ஜோசியம் பாக்குறது விட்டுட்டேன்...நிலாவுக்கு குட ஜாதகம் எல்லாம் எழுதலை...
    இருந்தாலும் பெற்றோர்கள் அவளுக்கு மொட்டை போடுறதுக்கு நல்ல நாள் பார்க்க போனப்போ பிறந்த நேரம் கேட்டார்கள்....அமேரிக்கா நேரம் குடுத்ததுக்கு ..இல்ல இது செல்லாது....அதை அப்டியே இந்திய நேரத்துக்கு மாத்தி குடுங்கன்னு சொல்றாங்க...எனக்கு என்னமோ அது சரியா படல......இங்க இருக்குற சூரிய சந்திர உதயத்தை வச்சு தானே பார்க்கணும்....இந்திய நேரத்துக்கு மாத்தினா அது அப்டியே அடுத்த நாளா மாறிடுது......என்னமோ போங்க

    ReplyDelete
  20. அன்பின் கூல்ஸ்

    அருமையான விவாதம் ஆக்கபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது. நல்ல முறையில் செல்லட்டும் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  21. வாங்க அணிமா....

    ReplyDelete
  22. //நல்ல பொஸ்ட் (ஸ்ப்பெல்லிங் மிஸ்டேக் இல்ல , எல்லாம் இந்த numeralogy பண்ண வேலைதான்)
    //
    ஹா ஹா ஹா...நீங்களும் விழுந்துட்டீங்களா அணிமா....

    ReplyDelete
  23. //
    எனக்கு ஜோசியம் மேல நம்பிக்கை நிறையவே இருந்துச்சு.....இப்போவும் இருக்கு ...

    ஆனா ஜோசியம் பாக்குறது விட்டுட்டேன்...நிலாவுக்கு குட ஜாதகம் எல்லாம் எழுதலை...
    இருந்தாலும் பெற்றோர்கள் அவளுக்கு மொட்டை போடுறதுக்கு நல்ல நாள் பார்க்க போனப்போ பிறந்த நேரம் கேட்டார்கள்....அமேரிக்கா நேரம் குடுத்ததுக்கு ..இல்ல இது செல்லாது....அதை அப்டியே இந்திய நேரத்துக்கு மாத்தி குடுங்கன்னு சொல்றாங்க...எனக்கு என்னமோ அது சரியா படல......இங்க இருக்குற சூரிய சந்திர உதயத்தை வச்சு தானே பார்க்கணும்....இந்திய நேரத்துக்கு மாத்தினா அது அப்டியே அடுத்த நாளா மாறிடுது......என்னமோ போங்க//

    வாங்க நிலா அம்மா.... (உங்களுக்கு ஒரு வேலை ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால்...ஜாதகம் பார்க்க என்று ஒரு மென்பொருள் கூட உண்டு அதில் பிறந்த நேரம் மற்றும் இடம் தந்தால் சரியான கட்டம் தரும் என்று நினைக்கிறேன்...உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதால் சொல்கிறேன் .....)

    ReplyDelete
  24. வாங்க அறிவே தெய்வம்......ஏன் உண்மை என்றும் சொல்லுங்களேன்.....

    ReplyDelete
  25. வாங்க சீனா சார்......

    ReplyDelete
  26. இதற்கு மேல் நீளாது என்று தோன்றுகிறது......

    எனவே முடிவு......

    நண்பர்கள் குணா மற்றும் குடந்தை அன்புமணி ஆகியோர் ஜோதிடத்தை எதிர்த்தனர் , சுவாமி ஓம்கார் ஆதரித்தார்....

    ஹ்ம்ம்ம்ம், நிலா அம்மா மற்றும் சிலர் சரியாக சொல்லாமல் இரண்டிலும் நம்பிக்கை என்பது போல் சொல்லி உள்ளனர்....

    என்னை பொருத்த வரை...,

    வாழ்வில் விரக்தி உற்ற ஒருவனுக்கு ஜோதிடம் நம்பிக்கை தந்து ..அவனை அவனுக்கு அடையாளமோ அல்லது அவன் வாழ்வு இன்னும் முடிந்துவிட வில்லை என்று நம்பிக்கை தந்து அவனை வாழ்க்கையில் இன்னும் பல படிகளுக்கு கொண்டு போக உதவ ஒரு நம்பிக்கையாக ,ஜோதிடம் செயல் பட்டால் அது இருந்து விட்டு போகட்டுமே....

    அதை விடுத்து உன் வாழ்க்கை இன்றோடு முடிந்து விடுகிறது உன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று ஜோதிடம் சொல்கிறேன் பேர்வழி என்று இத்தனை நாட்க்களாக சந்தோசமாக இருந்த வாழ்வை கெடுக்கும் , போலிகள் ஜோதிடர்களும் அல்ல, அப்படி சொன்னால் அது ஜோதிடமும் அல்ல.....

    ReplyDelete
  27. ஜோதிடம் பார்த்து தான் நான் நாட்க்களை கடத்துவேன் என்று... காலை எழுந்த உடன், தொலைக்காட்சிகளில் தின பலன் பார்க்கும் போது இன்று உங்களுக்கு நல்லாவே இருக்காது என்று சொன்னால் ஒரு விதத்தில் நம் மனம் அதில் சென்று , எது நடந்தாலும் இன்று நாள் அப்படி ,இது தான் காரணம் என்று சப்பு கொட்டி கொள்கிறது....
    அதையே காலையில் உங்கள் குடும்பத்தாரிடம் அன்பாக கொஞ்சம் நேரம் பேசிவிட்டு இரண்டு நகைச்சுவை காட்சிகள் பார்த்து விட்டு போங்களேன்... கடினமாக இருக்கும் வேலைகள் கூட எளிமையாக இருப்பதை உணர்வீர்கள்....உங்களிடம் ஒரு சக்தி அல்லது உற்ச்சாகம் என்றும் சுடர் விட்டு கொண்டே இருக்கும்.....
    நன்றி....

    விவாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும்....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது