வலைச்சரத்தில் கைப்புள்ள - அறிமுகப் பதிவு
வணக்கம். மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு என்னை வலைச்சர ஆசிரியராக இருக்குமாறு சீனா ஐயா அழைப்பு விடுத்திருந்தார். முதலில் அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கைப்புள்ள எனும் புனைபெயரில் எழுதிவரும் என்னுடைய பூர்வாசிரமப் பெயர் மோகன்ராஜ் என்பது. Kaipullai Calling...எனும் என்னுடைய சொந்த வலைப்பதிவிலும், வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் என்ற குழு வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன். 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் என் தமிழ் வலைப்பூவைத் தொடங்கினேன். அது முதல் இன்று வரை கிட்டத்தட்ட, சற்றேறக் குறைய, அநேகமாக, சுமாராக, தோராயமாக 184 பதிவுகளைப் பதிப்பித்திருக்கிறேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தான் எழுத வேண்டும் என்று எண்ணி கைப்புள்ள காலிங் என்ற என் வலைப்பூவைத் தொடங்கவில்லை. என்ன தான் இருக்குன்னு பாப்போமே அப்படின்னு பாக்க ஆரம்பிச்சப்போ வலைப்பூக்களில் தமிழ் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. சிலரைப் போல நெடுங்காலம் அடுத்தவரின் பதிவுகளைப் படித்திருந்து விட்டு என் வலைப்பூவைத் தொடங்கவில்லை...அப்போ தான் பாத்தேன்...அப்போவே ஆரம்பிச்சிட்டேன். தமிழ் வலைப்பூன்னு சொன்னாலும் என்னோட முதல் சில பதிவுகள் தங்கிலிஷ்ல தான் இருக்கும்...அதுக்குக் காரணம் மூனு பதிவு இருந்தா தான் தமிழ்மணத்துல இணைப்பாங்க அப்படீங்கறதுனால தான்.
சரி...ரொம்பவும் ரம்பம் போடாம என் வலைப்பூவில் நான் எழுதியதில் படித்தவர்களுக்குப் பிடித்ததையும் எனக்கு பிடித்ததையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மனதுக்கு நெருக்கமான பதிவு
நியூ படத்து ட்ரெயிலரைப் பாத்துட்டு நான் எழுதுன இந்த பதிவு என் மனதுக்கு நெருக்கமான ஒரு பதிவு. அப்போது பிரபலமாக இருந்த தேன்கூடு திரட்டியில் "அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்" தொகுப்பில் இப்பதிவு இடம் பிடித்தது. ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்ட நியூ படத்தில் அப்படி என்ன தான் பிடித்த விஷயம் இருக்குன்னு படிச்சித் தான் பாருங்களேன்.
நியூ படத்தில் பிடித்தது
காமெடி மாதிரி
"Tinkle"னு சிறுவர்களுக்கான ஆங்கில சஞ்சிகை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதில் "ஷிகாரி ஷம்பு" என்று ஒரு கார்டூன் தொடர் வரும். இது தமிழில் எதோ ஒரு சஞ்சிகையில் "வேட்டைக்கார வேம்பு" என்ற பெயரில் வெளி வரும். தினமலர் சிறுவர் மலரில் வரும் 'சொரிமுத்துஜி' கூட இந்த மாதிரி ஒரு புல்தடுக்கி பைல்வான் தான். துப்பாக்கியே பிடிக்கத் தெரியாத ஒரு தொடை நடுங்கி வேட்டைக்காரரான ஷம்பு, ஏனோ தானோ என்று செய்யும் செயல்கள் எல்லாம் பெரிதாகப் பேசப் படும். சிங்கத்தை வேட்டையாட அவர் துப்பாக்கியால் சுடும் போது குறி தவறி அது ஒரு புலியை வீழ்த்தும். "ஆஹா! சிங்கத்தோடு ஒரு புலியும் அட்டகாசம் செஞ்சிருக்கு போலிருக்கே. ஷம்பு யூ ஆர் ரியல் கிரேட்" அப்படின்னு அவரை ஊரார் எல்லாம் அசகாய சூரர், வீரர் என்றெல்லாம் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். உண்மையில் அவர் "வீக்னெஸ்"ஆக இருக்கும் விஷயம் யாருக்கும் வெளியில் தெரியாது. அது போல எங்கள் வீட்டில் நடந்த நானும் என் தம்பியும் சிறுவர்களாக இருந்த போது நடந்த சம்பவங்களைத் தொகுத்து "தடிப்பசங்க" என்ற பெயரில் ஒன்னு, ரெண்டு என்று நம்பர் போட்டு எழுதிய பதிவுகள், பதிவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உண்மையில் மகா கடியனான என்னை ஒரு காமெடி பதிவனாக ஏற்றுக் கொள்ளும் நிலைமை உருவாகி விட்டது.
பரிட்சை பேப்பரை வீட்டில் காட்டும் போது என் தம்பியும் நானும் செய்த தில்லாலங்கடி வேலைகளைப் படிச்சிப் பாருங்க.
தடிப்பசங்க # 3
வீட்டுல ஒரு "பெட் அனிமல்ஸ்" வளர்க்கனும்ங்கிற எங்களோட ஆசை நிறைவேறாம போனதுக்கான காரணங்களைப் பாருங்க.
தடிப்பசங்க # 7
இந்த பதிவைப் பத்தி நான் சொல்லக் கூடாதுன்னு தான் நெனச்சேன். ஆனா சொல்லாட்டிப் போனாலும் யாராச்சும் கமெண்ட்ல கொண்டாந்து போட்டுருவாங்க. அதனால நானே போட்டுடறேன். உள்ளே என்ன இருக்குன்னு நீங்களே பாத்துக்கங்க :)
வச்சான்யா ஆப்பு
நெஞ்சை நக்குனது
என் உண்மையான கேரக்டரோடு ஒத்துப் போகற பதிவுகளை வெகுநாள் கழித்து தான் என் வலைப்பதிவில் இட்டேன். "கைப்புள்ள உனக்கு இப்படியொரு முகம் இருக்கா?"அப்படின்னு பல பேரு அந்தப் பதிவுகளைப் படித்துவிட்டு ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.
எனக்கு வயசாகிடுச்சான்னு நான் கேட்ட கேள்விக்கு எத்தனை பேரு ஆர்வமா வந்து பதில் சொல்லிருக்காங்க பாருங்க. நெஞ்சை நக்கியிருந்தாலும் நூறுக்கு மேல அடிக்க முடிஞ்சுதேன்னு எனக்கும் ஒரு ஆச்சரியம் தந்த பதிவு இது.
வயசாயிடுச்சாங்க?
நிஜ வாழ்க்கையில் நான் கண்ட ஒரு சம்பவமும், தற்கொலை செய்து கொள்ளுதல் குறித்த என் எண்ணங்களும்.
தசரதர்கள் வாழ்வதில்லை
பெற்றவர்களைப் பார்வையில் பிள்ளைகளும், பிள்ளைகளின் பார்வையில் பெற்றவர்களும்.
தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சி
கொசுவத்தி சுத்துனது
படிக்கும் வயதில் மிகவும் ரசித்த பேருந்து பயணங்களைக் குறித்த சில மலரும் நினைவுகள், மூன்று பகுதி கொண்ட இத்தொடரில்.
பஸ் பயணங்களில் #1
பஸ் பயணங்களில் #2
பஸ் பயணங்களில் #3
ஊர்சுத்திட்டு சுத்துனது
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கட் என்னும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊரில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த போது ஊர்சுத்திப் பார்த்துவிட்டு ஒரு தொடராக எழுதியது கீழே உள்ள இம்மூன்று பதிவுகளும். இதில் மூன்றாவதாக உள்ள பதிவு, அப்போது தமிழ்மணம் நடத்திக் கொண்டிருந்த பூங்கா இணைய இதழில் இடம்பிடித்தது.
எனது சித்தூர்கட் செலவு
தொண்டையில் தண்ணி பார்க்கலாம்
நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்
சில காலத்துக்கு முன்னாடி ஆங்கிலத்தில் எதிர்பாராத சமயத்தில் நடப்பவற்றைப் பற்றி ஒரு 10 ரூல்கள் என்று ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது ஞாபகமிருக்கா? அதன் சரியான பெயர் நினைவிலில்லை. அதில் ஒன்று "கையில் க்ரீஸ் ஒட்டி கையெல்லாம் அழுக்காக இருக்கும் போது தான் மூக்கு அரிக்கும்" என்பது. அது போல ஓரளவுக்கு ஆணிகள் அற்று இருந்த வேளையில் வலைச்சர ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டதும் திடீரென சில ஆணிகளும், இரு டிரெயினிங் செஷன்களும் திடீரென எங்கிருந்து தான் முளைத்தனவோ என ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும், என் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து பிரிவுகளாய்ப் பிரித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எந்தளவு ஆர்வத்தைக் காட்டினேனோ, அதே அளவு ஆர்வத்தை நான் ரசித்த மற்ற பதிவுகளைப் பற்றி எழுதும் போது வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். நாளை சந்திப்போம். நன்றி.
|
|
வாங்க கைப்புள்ள ...முதல் நாள் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஹையா நான் தான் பஸ்ட்டு.....
ReplyDeleteஆஹா கைப்புள்ள பேனாவோட கிளம்பிட்டாருயா? இனி எத்தன பதிவு விழப்போகுதோ?
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete//Syed Ahamed Navasudeen said...
ReplyDeleteஆஹா கைப்புள்ள பேனாவோட கிளம்பிட்டாருயா? இனி எத்தன பதிவு விழப்போகுதோ? ///
ரசித்தேன்! ;-)
அன்பின் கைப்புள்ளே
ReplyDeleteநல்லா இருக்கு - லேபிள் கைப்புள்ளை என மட்டும் போட்டால் போதும் -
முதல் நாள் வாழ்த்துகள். (தாமதமாக... ஊருக்கு சென்றதால் தாமதம்.)
ReplyDelete//கைப்புள்ள எனும் புனைபெயரில் எழுதிவரும் என்னுடைய பூர்வாசிரமப் பெயர் மோகன்ராஜ் //
ReplyDeleteஎந்த ஆசிரமம்?
வாழ்த்துகள் :)
ReplyDelete//கைப்புள்ள எனும் புனைபெயரில் எழுதிவரும் என்னுடைய பூர்வாசிரமப் பெயர் மோகன்ராஜ் என்பது.//
ReplyDeleteஓ... "அவனா நீயி !!"
வாழ்த்துக்கள். தங்கள் வரவு சிறக்கட்டும்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் கைப்ஸ் அண்ணா..உங்க தடிப்பசங்க சீரிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அப்புறம் ஷாபாலிகா..பதிவும்!
ReplyDeleteவாழ்த்துகள் அர்ச்ச்சனாஅப்பா
ReplyDeleteவாழ்த்தி ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete