நாள் 5 -சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை!
➦➠ by:
சென்னை பித்தன்
"விருந்துண்டோம்,அரு மருந்துண்டோம்
கரும்புக் கவிதைச் சாறுண்டோம்- பெரும்
பேறுதான் பெறவேண்டி இந்நாளில்
சிறிதே ஆன்மீகச் சுவை உண்போம் நாம்"
ஒரு கோவில் குடமுழுக்கின் போது மண்டபத்தில் ஆன்மீகச் சொற் பொழிவு நடந்து கொண்டிருந்தது.சொற்பொழிவாளர் கடவுள் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.இறைவன் எங்கும் இருப்பவன், அவன் இல்லாத இடம் இல்லை என்று அவர் சொன்னபோது,கூட்டத்தில் ஒருவன் எழுந்து கேட்டான்”அவன் எங்கும் இருப்பவன் என்றால் எங்கு வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாமே,கோவில்கள் எதற்காக?”
சொற்பொழிவாளர் கேட்டார்”உங்களுக்குக் காற்று வீசுகிறதா?”
அவன் சொன்னான்”ஆம்”
”எதனால்”
“மின் விசிறி இருப்பதால்”
“காற்றுதான் எங்கும் நிறைந்திருக்கிறதே,பின் மின் விசிறி எதற்காக?”
அவன் திகைத்துப் போனான்.
இப்போது ஆன்மீகம் பற்றிச் சிறிது பார்க்கலாமா?
தமிழ் வலைப்பதிவுலகில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு துறை ஆன்மீகம் என நான் நினைக்கிறேன்.ஆன்மீகப் பதிவுகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இருப்பதில்லை.
இருந்தும் தொடர்ந்து ஆன்மீகம் பேசும் பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி நான் அறிந்த சில பதிவர்களைப் பார்க்கலாமா?
இந்த வலைப்பூவில் முதன்மை பெறுவது
1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்
2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்
2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்
நான் ஒரு சிவபக்தன்.தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்லாமல் “ஓம் நமச்சிவாய’ என முகமன் சொல்பவன்,சிவனின் பெருமைகள் பற்றி 46 பதிவுகள் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றால் ,ஆகா,அதை விட எனக்கு வேறென்ன வேண்டும்?
ஆம்! குமரன் அவர்களின் கூடல் பற்றித்தான் சொல்கிறேன்.பாருங்கள்
வேதத்தின் அந்தம் வேதாந்தம்.அவைதாம் உபநிடத்துகள்.அவற்றில் சொல்லப்படாத கருத்துகள் இல்லை.முக்கியமான உபநிடத்துகளில் ஒன்றாகப் பேசப்படுவது, கடோபநிசத்து.சிறுவன் நசிகேதன் யமலோகம் சென்று,எமனிடம் வரங்கள் பெற்றுத் தன் கேள்விகளுக்கு எமனிடம் பதில் பெறுகிறான்.அவை நசிகேதனுக்கு மட்டுமல்ல.நமக்கும் வழி காட்டிகள்தான். இத்தகைய கடோபநிசத்தை மிக எளிமையாக வெண்பா வடிவில் அருமையான விளக்கத்துடன் தருகிறார் அப்பாதுரை நசிகேத வெண்பா என்ற தலைப்பில்.
ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் கோவில்களுக்குப் போவதிலும் அவை பற்றி அறிவதிலும் தாகமுள்ளவர்களாகத்தான் இருப்பர்.அத்தாகத்தைத் தீர்த்து வைக்கிறார் தன் மணியான பதிவின் மூலம் திருமதி இராஜராஜேஸ்வரி.கோவில்கள் பற்றிய செய்திகள்,தல புராணம்,அழகிய படங்கள் என்று ஒரே பக்தி மணம்!
”குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
கந்தரனுபூதி படித்ததுண்டா?அந்தப் பாடல்களைப் பதம் பிரித்து அருமையாக விளக்கம் தருகிறார் ஆத்திகம் பதிவில்.படிக்கப் படிக்க சுவைக்கிறது
இப்போது ஒரு ஆன்மீகப்பயணம் போகலாமா,அழைத்துச் செல்பவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்.”நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க “ என்று 20க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியுள்ளார்.அருமை!
நமக்கெல்லாம் கந்த சஷ்டிக் கவசம் தெரியும்;சண்முகக்கவசம் தெரியும். ஆனால் ஆறு படை வீடுகளுக்கும் தனித்தனிக் கவசம் எழுதியி ருக்கிறார் தோழி.படிக்கக் கிடைத்ததே ஒரு பாக்கியம்.பதிவின் பெயரே ஆன்மீகம்
தைத்திரீய உபநிடதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி என்பது.குரு- சீடன் தொடர்பு பற்றிப் பேசுகிறது .அதைப் பற்றி அருமையாக விளக்குகிறார் மதுரையம்பதி.
தைத்திரீய உபநிடதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி என்பது.குரு- சீடன் தொடர்பு பற்றிப் பேசுகிறது .அதைப் பற்றி அருமையாக விளக்குகிறார் மதுரையம்பதி.
கடைசியாக திருமந்திரம் பற்றிய ஒரு பதிவின் அறிமுகம். நமக்குத் தொழில் பேச்சு என்று திருமந்திரப் பாடல்கள் பற்றி எழுதுகிறார் மதுரைசொக்கன். இந்தப் பதிவை முதல்நாள் அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம்.எனவே இப்போது செய்கிறேன். ஜூலை மாதத்துக்குப் பின் எதுவும் எழுதவில்லை! எழுதுவாரா?!
போதுமா ஆன்மீகம்?
போதுமா ஆன்மீகம்?
|
|
ஆடி ஓடி ஓய்ந்தபின் அனைவரும் நாடுவது ஆன்மீகமே!ஆனால் நீங்களோ இடையிலேயே கொடுத்துவிட்டீர்கள் பதிவுகளின் தொகுப்பை.அனைத்தும் அருமை.
ReplyDeleteமதுரைசொக்கன் திருமந்திரம் தொடரை தொடருவாரா எனக் கேட்டு இருக்கிறீர்கள்.'நமக்குத் தொழில் பேச்சு.' அவரே கூறியிருப்பதால் நிச்சயம் தொடருவார் என எண்ணுகிறேன். எல்லாம் அந்த ‘சந்திரசேகருக்கே’ வெளிச்சம்!
ஆன்மீக பதிவுகளின் தொகுப்பின் முடிப்பில் போதுமா ஆன்மீகம் என்று கேட்டுள்ளீர்கள்.இளையவர்களுக்கு எப்படியோ, மூத்தவர்களுக்கு இது போதாதுதான்.இன்னும் உள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து, உங்கள் பதிவிலும் போடலாம்.
//ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் கோவில்களுக்குப் போவதிலும் அவை பற்றி அறிவதிலும் தாகமுள்ளவர்களாகத்தான் இருப்பர்.அத்தாகத்தைத் தீர்த்து வைக்கிறார் தன் மணியான பதிவின் மூலம் திருமதி இராஜராஜேஸ்வரி.கோவில்கள் பற்றிய செய்திகள்,தல புராணம்,அழகிய படங்கள் என்று ஒரே பக்தி மணம்!//
ReplyDeleteநான் தினமும் போவது இவர்களின் கோயிலுக்கு மட்டுமே. அதன் பிறகே
என் வீட்டருகே உள்ள கோயிலுக்கும் செல்வேன்.
என்னுடைய பெரும்பாலான வாசம்
இந்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புனிதக் கோயிலில் மட்டுமே.
அவர்களின் பதிவினில் உள்ள தெய்வபபடங்கள் ஒவ்வொன்றும் என்னுடன் பேசுவதாகவே உணர்கிறேன்.
அவர்களை அடையாளம் காட்டி சிறப்பித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள.
அன்புடன் vgk
ஹிஹி.. நான் முதல் நாள் பதிவுலயே கேக்கணும்னு நெனச்சேன் மதுரை சொக்கன் என்ன ஆனாருனுட்டு..
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி.
இராஜராஜஸ்வரியின் உழைப்பும் முனைப்பும் blog legend.
ReplyDeleteஆன்மீகம் சார்ந்த பதிவுகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஒவ்வொருவரும் அதில் மூழ்கி முத்து எடுத்து நமக்கு தருபவர்கள்.
நன்றி.
நல்ல ஆன்மீக தொகுப்பு பாஸ்
ReplyDeleteஐயா,
ReplyDeleteஆன்மீகப் பதிவுகளில்
சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப்பூ எனக்கு
பரிச்சயம்.
மற்றவர்களின் வலைப்பூக்களுக்கு இதோ புறப்பட்டு விட்டேன்.
ஆன்மீக பதிவுகள் எல்லாமே நல்லா இருக்கு. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபோதுமா ஆன்மீகம்//
ReplyDeleteதெள்ளமுதுகள் ஒருபோதும் திகட்டுவதில்லை..
அருமையான பகிர்வுகள் .. பாராட்டுக்கள்..
எமது வலைத்தளம் குறிப்பிட்டதற்கு மனம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா..
ReplyDeleteஎமது வலைத்தளம் குறிப்பிட்டதற்கு மனம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா..
ReplyDelete//அப்பாதுரை said...
ReplyDeleteஇராஜராஜஸ்வரியின் உழைப்பும் முனைப்பும் blog legend.//
//வை.கோபாலகிருஷ்ணன் said...//
என்னுடைய பெரும்பாலான வாசம்
இந்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புனிதக் கோயிலில் மட்டுமே.
அவர்களின் பதிவினில் உள்ள தெய்வபபடங்கள் ஒவ்வொன்றும் என்னுடன் பேசுவதாகவே உணர்கிறேன்.
அவர்களை அடையாளம் காட்டி சிறப்பித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள.//
மற்றும் தங்களின் மணியான அறிமுகமும் வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் பெற்ற நிறைவை அளித்து மகிழச்செய்தன..
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
//போதுமா ஆன்மீகம்?//
ReplyDeleteஎப்படி போதும்?
படிக்க படிக்க திகட்டாதே!!
சிறப்பான ஆன்மீக அறிமுகங்களுக்கு நன்றி.
//இன்னும் உள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து, உங்கள் பதிவிலும் போடலாம்.//
ReplyDeleteமுயற்சி செய்கிறேன்.
நன்றி சபாபதி அவர்களே.
//அவர்களின் பதிவினில் உள்ள தெய்வபபடங்கள் ஒவ்வொன்றும் என்னுடன் பேசுவதாகவே உணர்கிறேன்.//
ReplyDeleteமிகச்சரி.
நன்றி வைகோ!
மதுரை சொக்கனை நானே அறிமுகப் படுத்தவில்லையெனில் வேறு யார் செய்வார்கள்?!:)
ReplyDeleteநன்றி அப்பாதுரை.
நன்றி கோமதி அரசு
ReplyDeleteநன்றி ராஜ்
ReplyDeleteநன்றி லக்ஷ்மி அவர்களே.
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteமகிழ்ச்சி என்னுடையது!
நன்ரி RAMVI
ReplyDeleteமாதவிப்பந்தல் வித்தியாசமான ஆன்மீக பந்தல்....அறிமுகம் அனைத்தும் சிறப்பானது அய்யா!
ReplyDeleteகூடல் பதிவினை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஐயா. நான் இது வரையில் அறியாமல் இருந்த மற்ற ஆன்மிகப் பதிவுகளை அறிமுகம் செய்ததற்கும் மிக்க நன்றி.
ReplyDeletemikka nanri
ReplyDeleteநன்றி சுரேஷ்குமார்
ReplyDeleteமகிழ்ச்சி என்னுடையது
ReplyDeleteநன்றி குமரன்
பாக்கியம் எனது
ReplyDeleteநன்றி கீதா சாம்பசிவம்
அவசரமாய்ப் பின்னூட்டம் கொடுத்துச் சென்றேன். பதிவு மிக அருமை, அறிமுகப் பதிவுகளும் அருமையாய் உள்ளன. மிக்க நன்றி. கூடல், மாதவிப் பந்தல் தவிர மற்றவை புதியன.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட ஆன்மிக பதிவர்களில் வலைத்தளத்தில் முதலில் என்னை இணைத்துவிட்டேன். ஆன்மிகம் என்றும் திகட்டாதது.
ReplyDeleteராஜராஜேஸ்வரி, ஆத்திகம் பதிவுகளும் தெரியும். :))) அவற்றை விட்டு விட்டேன். :))))
ReplyDeleteதேடிப் பிடித்து எனது ப்ளாக் முகவரியையும் இங்கு கூறியமைக்கு நன்றிகள் சார்.
ReplyDelete"அதிகம் வரவேற்பில்லாத" எனத் தங்களால் குறிப்பிட்டுள்ள வலைப் பதிவுகள் வரிசையில் எனது பதிவையும் அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா! தங்களது பணி மேலும் சிறக்க முருகனை வேண்டுகிறேன்.
ReplyDelete//ஆனால் ஆறு படை வீடுகளுக்கும் தனித்தனிக் கவசம் எழுதியி ருக்கிறார் தோழி.//
ReplyDeleteஒரு சிறு திருத்தம். இந்த ஆறு கவசங்களையும் இயற்றியவர் தேவராய ஸ்வாமிகள்.