பல்சுவை
➦➠ by:
கோமதி அரசு
வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகள்,விவரங்கள் பதிவுகளில் உள்ளன.பல சுவையான அச்செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்.
தருமி அவர்கள் தான் கற்றுக் கொண்டவைகளைப்பற்றி சொல்கிறார்: முதலில் ஒவியம், பின் புல்லாங்குழல், பின் புல் புல் தாரா, மவுத்ஹாரன், விசில் அடித்துப் பாடுவது, பலவித விளையாட்டுகள் என்று விளையாடி கடைசியில் புகைப்படக் கலையை ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்து விட்டதை அழகாய்ச் சொல்கிறார். வயதானாலும் கற்கும் ஆசை இருந்தால் எப்படியும் கற்கலாம் தானே!.
539. நானும், photography-யும் .. 1
//-வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை புதுசா கத்துக்கிடணும்னு சின்ன வயசில இருந்து அப்படி ஒரு ஆசை. ஏதாவது ஒண்ணுன்னா ... ஏதாவது ஒரு கலையைக் கத்துக்கிடணும்னு ஆசை.
எங்க காலத்தில் அப்பா அம்மாக்களுக்கு இது மாதிரி ஆசைகளை பிள்ளைகளிடம் வளர்த்து விடணும்னு எல்லாம் தெரியாது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை.//
ஆமாம், இப்போது பரவாயில்லை.குழந்தைகள் தங்கள் படிப்புடன் பொழுதுபோக்குகளை மேற்கொள்ளப் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.
*************
மருத்துவர்கள் உயிரைக் காக்கும் பணி, உயர்ந்த பணி. அதை சரியாக செய்த மருத்துவரை பற்றிய ஒரு உண்மைக் கதை:
//மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை- என ஒரு சிறுகதை அவரது முக நூல் பக்கத்தில் 21.12.2011 நாள் எழுதியிருக்கிறார். இது உண்மைக்கதை. ஒரு மருத்துவரின் வாழ்வில் நடந்த்து. நண்பரின் அனுமதி வாங்கி பதிவாக வெளியிடுகிறேன். திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.//
இப்படி கூறிப்பிட்டு எழுதி இருக்கிறார், தன் பதிவில் திரு ரத்னவேல் நடராஜன் அவர்கள்.
டாக்டரின் உண்மைக்கதை ப்டிக்கவேண்டிய ஒன்று.
*********
’ஒரு மாலைக்குறிப்பு’ - வழங்குபவர் செல்வநாயகி.
//பாவாடை சட்டை போட்டுக்கிட்டு அம்மாவோடு இடுப்பு உசரம் இருந்தப்ப ஊர்ல அடிக்கடி
நான் போய் உட்கார்ந்து அனுபவிச்ச மொட்டப்பாறையும், சும்மா வெறுமனே போய் நின்னுட்டு வரத் தோணுமே அந்தப் பெரிய புளியமரத்து நெழலும் ஏன் என்னை ஈர்த்துதோ அது போலத்தான் இந்த ஊர்ல அந்த மியூசியமும் போறப்பெல்லாம் எனக்குள்ள ஒரு பிடிபடாத அமைதியை, நெகிழ்வைத் தருது.//
நமக்கும் அந்தப் புளியமரத்து நிழல் மகிழ்ச்சியைத்தருகிறது!
************
'என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்’
என்று திரு.சபாபதி அவர்கள் குறிப்பிட்டார்.அவரது கருத்துக்களை திரு தருமி அவர்கள் மேற்கோளாகத் தனது பதிவில் கூறியுள்ளார்.
// சாலை பாதுகாப்பு வார கடைசி நாளான 7-1-2012 அன்று அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?//
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி //
சாலைப்பாதுகாப்பு வாரத்தில் மட்டுமின்றி எப்போதுமே பாதுகாப்பாக இருப்போம்.
*************
‘ஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்’
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறுமுயற்சி முத்துலெட்சுமி தானும் சாலைப்பாதுகாப்பு பற்றி எழுதியுள்ளார்.
//விதிமுறைகளை பின்பற்றினாலே பாதுகாப்பு தானாக அமைந்துவிடும்.
மிகப்பெரிய சாலைகளில் 4 லேன்கள் இருந்தாலும் ட்ராபிக் முண்டியடிக்கும். உண்மையில் அவரவர் லேனில் தொடர்ந்து பயணித்தால் ட்ராபிக் இத்தனை இருக்கவே செய்யாது. மக்கள் லேன் பற்றிய எந்த ஒரு உணர்வுமே கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு எப்படி முன்னேறுவது என்பது தான் வழியே ஒழிய விதிமுறைகள் பொருட்டு அல்ல. 5 கார்கள் ஒரு வரிசையில் அதற்கும் நடுவில் மூக்கை நுழைக்க முண்டியபடி ஆறாவது என்பது சர்வ
சாதாரணம்.//
டெல்லி அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்.
*** ’வேகம் விவேகம் அல்ல’
இது முத்துலெட்சுமியின் தொடர்பதிவு அழைப்பிற்கு நான் எழுதியது.
//வேகம் வேகம் என்று தாங்களே முதலில் முந்திப் போக வேண்டும் என்று எல்லோருமே நினைக்கிறார்கள் .சீக்கிரம் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்கள் .டிராபிக் ஜாம் ஏற்பட்டால் காத்திருத்தல் என்பது பெரிய குற்றமாய் கருதப்படும் காலம்.
முன்பு நான் சிறுமியாய் இருக்கும் போது நீதி போதனை வகுப்பு உண்டு.
அதில் சாலை குறியீடுகள்,சாலை அடையாள குறிகள்,சாலை விளக்குகள்
பற்றி எல்லாம் பாடம் உண்டு .இப்போது இல்லை.//
மீண்டும் அவை பாடத்திட்டத்தில் அரசு சேர்த்தால் நல்லது.
***
’சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..’
என்ற தலைப்பில் திருமதி. ராமலக்ஷ்மி தன் சிறு வயது நிலாச்சோறு நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். இப்போது அந்த மாதிரி காலங்களை மறுபடியும் வாழமட்டோமா என்ற ஏக்கங்கள் எல்லோருக்கும் வரும் இதைப் படிக்கும் போது. குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து சாப்பிட நேரம் இல்லாமல் ஒடிக் கொண்டு இருக்கிறோம்.இனிமேலாவது உறவுகளுடன் கூடி மகிழ நேரம் ஒதுக்குவோம்.
//அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.//
நிலாச்சாப்பாட்டைச் சிறப்பாகப் படங்களுடன் கொண்டுவந்து தருகிறார்.
***************
’உங்களின் மந்திரச் சொல் என்ன? என்ற தலைப்பில் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நிறைய நல்ல மந்திரச்சொற்களை சொல்லி இருக்கிறார்.’அம்மா’என்பதே முதல் மந்திரச்சொல் என்று கூறுகிறார்.
’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.
அதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோவின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.
//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வாழ்நாள் பூரா இது எல்லாவற்றுக்கும் தனித்தனி மாத்திரை சாப்பிட வேண்டும். இவை எல்லாம் சமாளித்து இவர் பள்ளிக்கு பங்சுவலாக காலை 8 3/4 க்கு வந்தாரென்றால் மாலை 4 மணிக்கு பள்ளி பூட்டியபின்தான் வீடு செல்வார்.இதுவரை ஆஸ்பத்ரியில் படுத்திருந்த நாள் தவிர லீவே எடுத்ததில்லை. பிள்ளைகளுக்கு மெட்ரிக்குலேஷன் கல்விக்கு இணையாக இங்கும் கல்வி அளிக்கப்படுவதாக சொன்னார் //
திருமதி.லூர்துராணி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துவோம்.
வாழ்வில் எல்லா சுவைகளும் அளவோடு இருந்தால் தான் மகிழ்ச்சி.

|
|
பல் சுவை அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதெரிந்த அறிமுகங்கள்தான்.
ReplyDeleteசுவையாகத் தந்துள்ளீர்கள்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
பல்சுவையில் ஒருசுவையாக நிலாச்சோறு நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்ட பகிர்வுகள் சிறப்பு.
பல்சுவை பகிர்வின் சாராம்சத்தை ஓரளவு நீங்களே சுருக்கி பகிர்ந்தது அருமை.
ReplyDeleteபகிர்வைப் பற்றிய முன்னோட்டம் வாசிக்க தூண்டுகிறது.
எல்ல அறிமுகங்களும் சுவைப்பட அமைந்ததற்கு வாழ்த்துக்கள் கோமதியம்மா.
ReplyDeleteஇன்றைய பல்சுவை அறிமுகங்கள் யாவும் மிகவும் அருமை.
ReplyDeleteபிரபல எழுத்தாளர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் படைப்பொன்றைச் சுட்டிக் காட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
மிகச்சிறப்பாக ஆசிரியர் பணியை செய்து வரும் தங்களுக்கும் தான்! ;))
அன்புடன் vgk
சாலைப் பாதுகாப்பு பற்றிய பாடம் மீண்டும் பள்ளிகளில் வரவேண்டும்.
ReplyDeleteநல்ல கருத்து.
தொகுப்பிற்கு நன்றி!
எங்களது பதிவை அறிமுகப் படுத்தியது மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி.
எல்லாச்சுவைகளுமே அருமையா இருக்கு..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்து பல்சுவை பதிவு அறிமுகங்களும் மிக அருமை
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
முன்பு நான் சிறுமியாய் இருக்கும் போது நீதி போதனை வகுப்பு உண்டு.
ReplyDeleteஅதில் சாலை குறியீடுகள்,சாலை அடையாள குறிகள்,சாலை விளக்குகள்
பற்றி எல்லாம் பாடம் உண்டு .இப்போது இல்லை.//
மீண்டும் அவை பாடத்திட்டத்தில் அரசு சேர்த்தால் நல்லது./
கட்டாயம் உடனடியாக சேர்க்கவேண்டும்..
பல்சுவைப்பகிர்வுகள் அனைத்தும்
ReplyDeleteபயன்தரத்தக்க விழிப்புண்ர்வாக அமைந்தன.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
வாங்க லக்ஷ்மி, வாரம் முழுவதும் வந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி மாதேவி
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteஆசியா, பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.
ReplyDeleteவை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteகலையன்பன் உங்கள் வரவுக்கும், பாரட்டுக்கும் நன்றி.
ReplyDeleteரத்னவேல் ஐயா, நன்றி.
ReplyDeleteநன்றி அமைதிச்சாரல்.
ReplyDeleteவாங்க ஜலீலா. உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteதினம் இரண்டு பின்னூட்டங்கள் அளித்து உற்சாகப்ப்டுத்தும் உங்களுக்கு மிகவும் நன்றி இராஜராஜஸேவரி.
ReplyDeleteநல்ல கதம்ப அறிமுகங்கள்.
ReplyDeletenalla arimugam .... vaalththukkal
ReplyDeleteமுக்காலும் தெரிந்தவர்கள் என்றாலும், உங்களின் அறிமுகப்பத்தி கூடுதல் ஆர்வம் தந்து, மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.
ReplyDeleteகடம்பவனகுயில், உங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteமதுரை சரவணன், வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteஹூஸைனம்மா , அறிமுகப்பத்தி பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி.
ReplyDelete//வயதானாலும் கற்கும் ஆசை இருந்தால் எப்படியும் கற்கலாம் தானே!.//
ReplyDeleteஆனா . மண்டையில் ஏறணுமே .. அதான தகராறாக இருக்குது :-(
அன்பின் தருமி அண்ணே
ReplyDeleteமண்டையிலே ஏறின வரைக்கும் போதும் - புகைபப்படக் கலையில் தூள் கெளப்பூறீங்க - இன்னும் என்ன ஏறணும் அண்ணே !