மாணவனாக தொடர்கிறேன்.....
➦➠ by:
கோகுல்
இந்த வாரம் நிறைய தேடல்.நிறைய புதிய தளங்களின் அறிமுகம் எனக்கும் கிடைத்தது.இன்னும் நிறைய பேரை அறிமுகம் செய்ய நினைத்தேன்.ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் எழுதலாமா எனவும் நினைத்தேன்.ஆனால் எனது சூழல் ஒத்துழைக்கவில்லை.சொல்லப்போனால் முதலிரண்டு பதிவுகள் வெளியே உலவு மையம் (browsing center)போய்தான் பதிவிட்டேன்.நான் அறிமுகப்படுத்த விரும்பும் சிலபதிவுகளுடன் மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.
செய்தாலி இந்த தளம் முழுக்க கவிதைகள் கசிகின்றன.வீதிக்கு வந்த இறைவனை பார்க்கலாம்.
என் செய்வேன் என கேட்கும் இவர் ஐன்ஸ்டீனும் நாமும் ஒன்றுதான் என்கிறார்.
jom pages அதென்ன jom? ஜூனியர் ஓல்ட்மாங்க் என்பதின் சுருக்கம் இது.ரயிலுக்கு நேரமாச்சு ரயிலில் போகும் போதெல்லாம் நினைவுக்கு வரும்.
இந்த நல்லவன்.ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார் மனிதன் உயர்திணையா?அஃறிணையா? தீர்ப்பு என்ன பாருங்க
பணங்கூர், தெரியாததை தெரிந்து கொள்,தெரிந்ததை பகிர்ந்து கொள் என்று சொல்லும் இவர் மகாத்மா காந்தியைப்பற்றி தனக்குத்தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்.
Shri Prajna.நல்லோதோர் வீணை செய்து கொண்டிருக்கிறார்.மரங்கள் எனும் மகாத்மாக்கள் மூலம் வெட்டப்பட்ட மரமொன்று மனிதனுக்கு சொல்லிகொள்வது என்ன பாருங்கள்.
மெல்ல தமிழ் இனி வாழும்.சத்தியமான வார்த்தை தான் இது.THE BANYAN – இது வெறும் ஆலமரம் மட்டுமல்ல.இந்த பதிவு அன்னை தெரசா இன்னும் நம்மோடு தான் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
தன் எண்ணங்களை அம்பலத்தில் ஏற்றும் அம்பலத்தாரின் பக்கம் இது.ஆண்களின் உலகத்தில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என அறியலாம் வாருங்கள்.
பார்த்தது,கேட்டது,தோணியது,விசாரித்தது எல்லாவற்றையும் பகிர்ந்து வரும் இவர் கிரிக்கெட் மோகத்தை கபடி ஆடுகிறார்.
தமிழ் பேரண்ட்ஸ்.இந்த தளம் எல்லா பேரண்ட்ஸ்களும் கவனிக்க வேண்டியதளம்.குழந்தைகள் என்ன பந்தயக்குதிரைகளா?என கேட்கிறார்.
என் மேல் நம்பிக்கை வைத்து வலைச்சரத்தில் எழுத அழைத்து அங்கீகாரமளித்த சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.தொடர்ந்து ஆதரவளித்துவந்த நண்பர்களுக்கும்,பின்னூட்டம் மூலம் உற்சாகம் அளித்தவர்கள் ,வலைச்சர குழுவிற்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.ஆசியராக இன்றுடன் விடைபெறுகிறேன்.மாணவனாக தொடர்கிறேன்.நன்றி.......
|
|
அன்பின் கோகுல் - நல்ல முறையில் பொறுப்பினை நிறைவேற்றியமைக்கு நன்றி.ொரு வாரமும் அனைத்துப் பதிவுகளும் அரிய அறிமுகங்களைத் தந்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல முறையில் இந்த வாரம் முழுவதும் ஆசிரியராக பணியாற்றியதற்கும் நீங்கள் அறிமுகப்படுத்திய அறிமுகங்களுக்கும் நல்வாழ்த்துகள் கோகுல்..
ReplyDeleteவாரம் முழுவதும் அருமையான அறிமுகங்கள் நண்பா...
ReplyDeleteசில இடுகைகளுக்கு வர இயலவில்லை என்னால்...
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் கோகுல் - நல்ல முறையில் பொறுப்பினை நிறைவேற்றியமைக்கு நன்றி.ொரு வாரமும் அனைத்துப் பதிவுகளும் அரிய அறிமுகங்களைத் தந்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
/
நன்றி ஐயா.
@மதுமதி,@தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDeleteமிக்க நன்றி நண்பர்களே.
வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகபத்தியமைக்கு மிக்க நன்றி
நிறைய நல்ல தளங்களை அறிய தந்தமைக்கும் நன்றிகள் பல
என்னை
ReplyDeleteதங்கள் வலைத்தளத்தில்
அறிமுக படுத்தியமைக்கு
மிக்க நன்றி தோழரே ...:)
நல்ல பணியைச் செய்திருக்கிறீர்கள். புதிய பதிவர்களுக்கு வெளிச்சத்தையும் காட்டி உள்ளீர்கள்.
ReplyDeleteஎன்னை
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு
மிக்க நன்றி கோகுல்...
நல்ல முறையில் இந்த வாரம் முழுவதும் ஆசிரியராக பணியாற்றியமை நன்று...
நல்வாழ்த்துகள் நண்பா...