கதை கதையாம் காரணமாம்
➦➠ by:
கோமதி அரசு
முன்பு எல்லாம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பினை ஊட்டும் கதைகளைச் சொல்லி வளர்க்க தாத்தா, பாட்டி இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கதை சொல்லிகள் உண்டு. என் பேத்திக்கு தினம் கதை கேட்க வேண்டும் படுக்கப் போகும் முன். நல்ல கதை கேட்டு நல்லபடியாக வளர்வார்கள் குழந்தைகள். கதை கதையாம் காரணமாம் காரணத்தில் தோரணமாம் , என்பது போல் இன்று கதைத் தோரணம் கட்டப் போகிறேன். கதை கேட்க ரெடியா?
எந்த ஒரு செயலைச் செய்தாலும் இறைவன் அருள் இருந்தால் தான் முடியும் என்பார்கள்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள். எந்தச் செயலைச் செய்யும் போதும் முழுமுதற் கடவுளான விநாயகனை வணங்கிச் செய்தால் நல்லது என்பார்கள்.
வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நல்ல கதை சொல்லி. நல்ல படிப்பினை ஊட்டும் கதைகள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் கதைகள் எல்லாம் எழுதுவார். நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வரேன் ’என்ற கதை படித்துத் தான் நான் அவருடைய வலைத்தளத்திற்குப் போக ஆரம்பித்தேன்.
உருக்கமான கதை.
’ஏமாற்றாதே ! ... ஏமாறாதே’ கதை உச்சிப் பிள்ளையாருக்கு 12 தேங்காய்கள் உடைப்பதாய் வேண்டிக் கொண்டவரின் கதை. தெருவோரம் தேங்காய் விற்பவரிடம் எப்படி தேங்காய் வாங்குகிறார் பாருங்கள்.
//அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, மீதிப்பணம் கொடு என்றார் அவசரமாக.//
வேண்டிக்கொண்டபடி 12 தேங்காய்களை உச்சி பிள்ளையாருக்கு உடைத்தபின் ஏமாற்றி வாங்கிய 13வது தேங்காயை தன் மனைவியின் சமையலுக்கு கொடுக்கிறார். அது எப்படி இருந்தது என்று சொல்கிறார் பாருங்கள்.
//பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.//
காசு கொடுத்து வாங்கிய தேங்காய்கள் பிள்ளையாருக்கு நல்ல வெள்ளையாக உடைந்தது. ஏமாற்றி வாங்கிய காய் என்ன ஆனது பாருங்கள். இறைவன் என்ன நினைக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார் பாருங்கள்.
//அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார். //
கதை சொல்லும் நீதி- யாரையும் ஏமாற்றகூடாது. தெய்வம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது தானே!
***
அடுத்த கதையும் வை.கோபாலகிருஷ்ணனின் கதைதான். கதையின் பெயர் உடம்பெல்லாம் உப்புச்சீடை உருவம் கண்டு எள்ளல் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை. பலாப்பழம் வெளித் தோற்றத்தில் முட்கள் நிறைந்ததாய்க் காணப்பட்டாலும் உள்ளே உள்ள சுளை மிகவும் இனிப்பானது.
காசி செல்லும் ரெயில் பயணத்தில் சக பயணியாய் வருபவரை எப்படி நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் பாருங்கள்:
//அவருக்கு சுமார் 75 முதல் 80 வயதுக்குள் இருக்கலாம். உயரமான ஒல்லியான தேகம். சற்று கருத்த உருவம். பின் கழுத்துக்கு மேல் கொஞ்சமாக தொங்கும் நரைத்த முடிக்கற்றைகள். அதன் மேற்புறம் சந்திர பிம்பம் போன்ற வளைவு. முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//
அழகற்ற அவரைப் பார்க்கவும் ,பேசவும், பிடிக்காமல் அவரை வார்த்தைகளால் சக பயணி சாடுகிறார்., பின் அந்த அழகற்ற அவர், அவர்களுக்கு உதவிய போது, அவர்களுடைய மனதில் அழகிய மனிதராய் உயர்ந்து நிற்கிறார்.
இந்தத் தொடர்கதையைப் படித்து முடிக்கும்போது கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வந்தது உண்மை.
அழகிய உடலோ
அருவருப்பான உடலோ
உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய,
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய
பொருளாகி விடுகிறது.
அதை எரிக்க வேண்டிய
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும்
ஏற்படுகிறது.
எரிந்த அதன் சாம்பலில்
அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!//
என்று பெரியவர் சொல்வதாய் தோன்றுகிறது சக பயணிக்கு. உயர்ந்த மனிதர் என்ன உதவிசெய்தார் என்பதைப்
படித்துப் பாருங்களேன்!
***
அடுத்த கதை-
கே.பி. ஜனா அவர்களின் சிறுகதைகள்
பக்கம் பக்கமாய்ச் சொல்லும் விஷயங்களை எளிமையாகத் தன் சிறுகதையில் சொல்லிவிடுகிறார். இவர் நாவல்களும் எழுதியிருக்கிறார். கவிதைகளும் எழுதி இருக்கிறார். இவரைப் பற்றி வசந்தபாரதி கூறியது மிகவும் சாலப் பொருத்தமே:
//வாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடிநாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி //
நலம் வாழ சிறுகதையில் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக என்னக்கொடுத்து மகிழ்வித்தார் பாருங்கள். தன் மனைவியின் முன்னாள் தோழியின் முகவரியைக் கண்டுபிடித்துச் சந்திக்க வைக்கிறார், தன் மனைவிக்கு மறக்க முடியாத பரிசாக.
சிறந்த பரிசு தானே!
சந்தோஷ முகம் -சிறு கதையில் : // என்ன வாத்தியார் ஐயா? மெடிகல் செக் அப்புக்கு சென்னை போறீங்களாமே? கேள்விப்பட்டேன். கண்டிப்பா நம்ம பையன் வீட்டில தான் தங்கணும்.'' பரிவோடு சொன்னார் பொன்னையா. //
//சோமு , பரதன்,லோகநாதன் -- எல்லாருமே தற்போது சென்னையில் இருக்கும் அவரது பழைய மாணவர்கள் -- இவர்களின் பெற்றோரும் அவரை சந்தித்து, தங்கள் மகன் வீட்டில் தங்கிக் கொள்ளச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.//
இத்தனை பேர் அழைத்தும் அவர் யார் வீட்டில் தங்கினார்? அவர் மனைவிக்கு எழுந்த ஆவல் போல் நமக்கும் ஏற்படுகிறது. மனைவியிடம் ,’வெங்கட் வீட்டில்’ என்கிறார். காரணம் கேட்கும் மனைவியிடம் அவர் சொல்வது :
// வெங்கட்டைத் தவிர மற்ற எல்லாரும் கல்யாணமானதும் பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போகாம இங்கே கிராமத்திலேயே விட்டு வெச்சிருக்காங்க. பெத்தவங்களையே கவனிக்காதவங்க, என்னை எவ்வளவு தூரம் வரவேற்பாங்க? ஓர் ஆசிரியர் பார்க்க விரும்பறது தன் மாணவன் முன்னுக்கு வந்து நல்லா இருக்கிறதை மட்டுமில்லே, அவனைப் பெத்தவங்களோட சந்தோஷ முகத்தையும்தான். அதுக்கு நான் அங்கேதானே போகணும்?''//
வாழ்த்து - சிறுகதை, அடுத்தவர் மனது புண்படாமல் அவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான் மனிததன்மை. என்பதையும், தவறை மறந்து மன்னித்தலையும் வலியுறுத்துகிறது. அதைக் கதை நாயகனுடைய தாயின் மூலம் சொல்லவைக்கிறார். தன்னை அவமானப்படுத்திய மாமன் மகன் திருமணத்திற்கு வர மறுக்கும் மகனுக்குப் புத்தி சொல்லும் தாயைப் பாருங்கள்:
// ''இத பாரு ரகு, நீ சொல்றது சரிதான். உன் மனசில் விசனம் இருக்கும். வார்த்தைகள் வெளி உதட்டிலேயிருந்துதான் வரும். ஆனால் இது வெளியில் யாருக்காவது தெரியப்போகிறதா? இல்லையே? அவங்க கோணத்திலேயிருந்து பாரு. நீங்க சிரிச்சபடியே அங்கே வர்றீங்க. எல்லா நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறீங்க. கைகுலுக்கி வாழ்த்தறீங்க. அதைக் கேட்டு அவங்க மனசு சந்தோஷம் அடையுது. பார்க்கிறவங்களும் சந்தோஷப்படறாங்க. அத்தனை பேரையுமே சந்தோஷப்படுத்த நம்மால முடியுதுன்னா அப்புறம் பிரயோசனமில்லைன்னு ஏன் நினைக்கிறே? யார் கண்டது? ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி மனசார அந்த வாழ்த்தை
வாழ்த்திடலாமில்லையா?''//
ரகு திருமணத்திற்கு போனாரா வாழ்த்தினாரா படித்துப் பாருங்களேன்.
***
அடுத்து ரிஷபன்.
இவர் , சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் எழுதுகிறார்.
அவர்களின் சூர்யா- சிறுகதை சமூக அவலங்களை கூறுகிறது.
இதில் குழந்தையை 10 மாதம் சுமந்து அதை இழக்கும் தாயின் சோகத்தைச் சொல்கிறார். ஆசையாய் தந்தி கிடைத்தவுடன் குழந்தையைப் பார்க்க ஆவலாய் வந்த தந்தையின் சோகத்தையும் கண்முன்னே கொண்டு வருகிறார்.
// "...ஹரீஷ்னு பேர் வச்சோம். பொண்ணா இருந்தா... சூர்யான்னு..."// என்று சொல்லி புலம்பும் தந்தை ராஜன் கதாபாத்திரம்
உண்மையான சோகத்தை சொல்கிறது.
இது ஒரு புறம் இருக்க, குழந்தை வேண்டாம் என்று குப்பைத் தொட்டியில் எறியும் ஒரு கல்மனதையும் சொல்கிறது.குழந்தையின் தந்தையின் நண்பர் பாலு குழந்தையை இழந்த தன் நண்பனுக்கு ஆறுதல் சொல்லி வெளியில் அழைத்து செல்வதும் தான் நடத்தும் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் குப்பைதொட்டிகளை துப்புரவு செய்வதும் அதில் குழந்தை கிடப்பதை பார்த்த சிறுவன் பாலுவிடம் வந்து சொல்லும் போது நம் மனதும் பதை பதைத்துப்
போகிறது.
//"...அண்ணே... ஒரு குழந்தையை யாரோ குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்க..."//
பாலு தன் நண்பனை அழைத்துக் கொண்டு அங்கு போனபோது அவர்கள் பார்க்கும் காட்சி நெஞ்சை உலக்குகிறது.
//பிறந்த சிசு. கண் மூடிப் படுத்திருந்தது. வாழை இலை ஒன்றின் மேல் விடப்பட்டிருந்தது. சுள்ளெறும்புகள் மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தன. அவசரமாய் வாரித் தூக்கினான். மேலே ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டான். //
பாலு அங்கு வேடிக்கை பார்க்கும் பெண்ணைப் பார்த்துக் கேட்கும் கேள்வி:
//"...ஏம்மா... நீயும் புள்ளையப் பெத்தவதானே... அட... புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது... எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல..." என்றான் பாலு ஆற்றாமையுடன்.//
நம்மையும் அப்படித்தான் கேட்கச் சொல்கிறது.பாலுவுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல் மிக யதார்த்தம். சிணுங்கும் குழந்தையின் பசியை எப்படிப் போக்குவது என்றவுடன் குழந்தையை இழந்த தந்தை தன் மனைவி கொடுப்பாள் என்று சொன்னதும் கதையின் முடிவு தெரிந்து விடுகிறது. கூட்டத்தில் இருந்த சிறுமி குழந்தையை ஏன் குப்பை தொட்டியில் போட்டார்கள் யார் போட்டார்கள் இவர்கள் ஏன் தூக்கி போகிறர்கள் என்ற
கேள்விக்கு கணேசன் சொல்லும் பதில் "...பாப்பா... இங்கே... வா..." "உனக்கு அம்மா... அப்பா இருக்காங்க... அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க... இல்லையா... பாவம்... அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லே... அதனால தான்... நாங்க எடுத்துக்கிட்டுப் போய்... வளர்க்கப் போறோம்..."புரிந்தவள் போல தலையாட்டியது.
//கூட்டத்தில் ஒரு குரல் என்ன குழந்தை என்று கேட்டது. சூர்யா என்றான் //
பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால கொடுத்து அழிப்பது, குப்பைத்தொட்டியில் போடுவது எல்லாம் என்று முடிவுக்கு வரும்?
***
வெங்கட் நாகாராஜ் நிறைய பயணக்கட்டுரைகளை சுவாரசியமாக எழுதி உள்ளார். அவருடைய பதிவிலிருந்து ஒரு அனுபவக்கதை..
’ தடுப்பது மேல்’
இந்தக் காலத்தில் ஆண் பெண் திருமண வயது தள்ளிப் போகிறது. அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் குழந்தை என முடிவு எடுக்கிறார்கள் . அப்புறம் குழந்தைக்காக மருந்து மாத்திரைகள், புதிதாக வந்து இருக்கும் சிகிட்சை என்று நேரத்தையும், பணத்தையும் தண்ணீராய்ச் செலவு செய்கிறார்கள்.
முதல் குழந்தைக்கு 11 மாதம் தான் ஆகிறது அதற்குள் அடுத்த குழந்தை. அந்த குழந்தையை அழிக்க வந்த தாயைப் பற்றிய கதை.
டாக்டரைப் பார்க்க வந்த கணவன் மற்றும் மனைவியின் மன நிலையை அழகாகக் கூறுகிறார். கணவன் தன் குழந்தையை கண்ணே! மணியே என்று கொஞ்சுகிறான்.
தாயின் கவலை தோய்ந்த முகத்தைப் பற்றியும் சொல்கிறார். சூழ்நிலைக் கைதியாக சில நேரம் பெண்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். முதல் குழந்தை பெண் என்றால் அடுத்து பிறக்கப் போவதும் பெண் என்றால் புகுந்த வீட்டில் வேண்டாம் என்கிறார்கள். ஆண்பிள்ளை இலலை என்று மறு திருமணம் செய்வதும் நடக்கிறது. ஸ்கேன் செய்து பார்த்து அந்த குழந்தைக்கு நோய் இருந்தால் வேறு வழி இல்லாமல் அழிக்கலாம். மற்றபடி அழிப்பது பாவம் இல்லையா
டாகடருக்கும், அந்த குழந்தையின் தாயுக்கும் நிகழும் உரையாடல்கள் அருமை.
//டாக்டர்: சரி, வாம்மா, பார்க்கலாம் [சிறிது நேரத்திற்குப் பின்], "ம்ம்ம் கொஞ்சம் கஷ்டம் தான். உங்க பிரச்சனை ஒரு குழந்தை ஏற்கனவே இருக்கும்போது அதையும் பார்த்துக்கொண்டு இன்னுமொரு குழந்தையை வயிற்றுக்குள் வளர்த்து பெற முடியாது என்பதுதானே. வயிற்றுக் குழந்தையை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, அதாவது அதை அழிக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், ஏற்கனவே பிறந்த இந்த குழந்தையை வேண்டுமானால் அழித்து விடலாம். அது கொஞ்சம் சுலபம்... அப்புறம் நீங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பிறந்த பின் பொறுமையாக வளர்க்கலாம் இல்லையா! //
டாக்டரின் கேள்வியில் பதறி போகும் பெற்றோரிடம் டாகடர் கூறும் விளக்கமும் அவர் காட்டும் காணொளியும் பார்க்க வேண்டிய ஒன்று. முடிவில் என்ன ஆயிற்று என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

|
|
கதைகளை தாங்கள் விமர்சித்து பகிர்ந்தது பாராட்டத்தக்கது.அத்தனையும் முத்துக்கள்.பகிர்வு அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கதைகளை அழகான விமர்சனங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்பு. நன்றி கோமதிம்மா.
ReplyDeleteஅருமையான தொகுப்பு ..
ReplyDelete”கதை கதையாம் காரணமாம்” என்ற தலைப்பும், விநாயகர் படமும் வெகு அருமை.
ReplyDeleteதங்களின் மனம் கவர்ந்த குறிப்பிட்ட கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நீளம் அகலம் ஆழம் முதலியவற்றை நன்கு சிலாகித்திருப்பது, மிகவும் புதிய பாணி தான்.
என் எழுத்துலக மானஸீக குருநாதரான் திரு. ரிஷபன் அவர்களின் “சூர்யா” மிகப்பொருத்தமான தேர்வு. அந்தக்கதையைப்படித்து விட்டு, நானும் மிகவும் வியந்து போய், அந்தக்குழந்தையின் [குப்பைத்தொட்டியில் குடியிருந்த சுள்ளெறும்புகளுடன் கூடிய] நிலைமையை நினைத்து, பல நாட்கள் கண்ணீர் விட்டுள்ளேன்.
அதைத் தாங்கள் பிறரும் படிக்கும் வண்ணம் அடையாளம் காட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
நல்ல கதைகளுடன் பகிர்ந்த பதிவு அருமை . வாழ்த்துகள்.
ReplyDeleteமிக அருமையான பெரியயய .. அறிமுகம் கதைகள்
ReplyDeleteஅன்புள்ள வலைச்சர ஆசிரியர்
ReplyDeleteதிருமதி கோமதி அரசு அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய மூன்று சிறுகதைகளை
இன்று முதன் முதலாக எடுத்துக்கொண்டு
அதைப்பற்றி விலாவரியாகாப் பாராட்டியிருப்பது
எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது.
அதற்கு என் மனமார்ந்த நன்றிகளை முதலில்
தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவர்களும்
அவர்களின் படைப்புகளும் உண்மையிலேயே
மிகச்சிறந்ததாகவே உள்ளன.
அனைவருக்கும் என் பாராட்டுக்களும்,
வாழ்த்துக்களும்.
உங்களுக்கு என் நன்றிகள்.
பிரியமுள்ள,
வை. கோபாலகிருஷ்ணன்
ஆசியா ,உங்கள் முதல் வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி, கதைகள் உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி.
நன்றி ராஜபாட்டை ராஜா.
ReplyDeleteகதை கதையாம் காரணமாம் காரணத்தில் தோரணமாம் ,
ReplyDeleteகருத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நல்ல கதை சொல்லி. நல்ல படிப்பினை ஊட்டும் கதைகள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் கதைகள் எல்லாம் எழுதுவார்.
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
அனைத்து கதை சொல்லிகளும் மனநிறைவைத்தரும் வகையில் அருமையான குறிப்புகள்..
ReplyDeleteகதைகளை வெறுமே பட்டியலிட்டுப் போகாமல், அவற்றோடு ஒன்றிய பகுதிகளை எடுத்துக் காட்டியிருப்பது, செய்யும் பணியில் நீங்கள் கொண்டிருக்கும் முழு ஈடுபாட்டைத் தெரிவிக்கிறது.
ReplyDeleteஎல்லாமே மன நிறைவைத்தந்த கதைகள். உங்க விமர்சனத்தோட பகிர்ந்தது இன்னும் அழகாருக்கு.
ReplyDeleteகதைகளை அழகாக விமர்சித்துள்ளீர்கள்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னைப் பற்றி அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு மனப்பூர்வமான நன்றி.
அட “கதை கதையாம் காரணமாம்” என்று தலைப்பிட்டு கதைகள் எழுதுவதில் வல்லவர்களான திரு கே.பி.ஜனா, திரு ரிஷபன் மற்றும் திரு வை. கோபாலகிருஷ்ணன் போன்றவர்களுடன் என்னையும் அறிமுகம் செய்து இருப்பது மகிழ்ச்சி தந்தது....
ReplyDeleteஉங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது அம்மா....
மீண்டும் நன்றிம்மா....
இராஜராஜேஸ்வரி,உங்கள் பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteவை .கோபாலகிருஷ்ணன் சார்,
ReplyDeleteஉங்கள் பாரட்டுக்கு நன்றி.
வாங்க லக்ஷ்மி, உங்கள் பாரட்டுக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க ஜலீலா, பெரிய கதையா படித்து விட்டீர்களா?
ReplyDeleteநன்றி.
வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
ReplyDeleteஉங்கள் பாரட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க ஹுஸைனம்மா, உங்கள் மனதிறந்த பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க அமைதிச்சாரல், உங்கள் பாரட்டுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க மாதேவி பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ரிஷபன், உங்களை நான் அறிமுக படுத்துவதா !
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி.
வாங்க வெங்கட், உங்கள் பாரட்டுக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடைய சிறுகதைகளை அறிமுகப்படுத்தி எழுதிய தங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி!
ReplyDeleteஒவ்வொன்றும் ஒவ்வறு முத்துக்கள் மாலை அழகாக தவழ்கிறது உங்கள் கரங்களில்...அய்யா!
ReplyDelete