07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 26, 2012

அறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே...


உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை இயற்கை பல ரகசியங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.இந்த ரகசியம் உலகில் வீற்றிருக்கும் ஒவ்வொரு பொருளிலும்,ஒவ்வொரு உயிரிலும் அடங்கியுள்ளது.அதைக்கண்டுபிடிக்க மனிதன் கண்டுபிடித்த சாவிதான் அறிவியல்.தேடத்தேட முடிவுறாப்புள்ளியை நோக்கி பயணிக்கும் இந்த ரகசியம்.அறிவியலைப்படிப்பது நம்மில் பலருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கசக்கச்செயதாலும் கற்க கற்க இனிக்கும் விஷயம்.அதுவும் நமது இனிய தமிழில் சொல்லவா வேணும்.இன்றைய அறிமுகங்களில் சில அறிவியல் விசயங்களை எளிமையாக சொல்லிச்செல்லும் பதிவுகளைப்பார்ப்போம்.

அறிவியல் நம்பி இந்த தளத்தில் பல அறிவியல் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. சந்திரனுக்குப் போகலாம் வாங்க என்ற பதிவின் வழியே நாமும் சந்திரனுக்குப்போய் ஒரு ரவுண்ட் அடித்து வரலாம் வாங்க.

தமிழ்த்தோட்டம் என்ற தளத்தில் தாய்மொழிக்கல்வி,அறிவியல் தமிழ்,போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியலால் வெல்வோம் வாருங்கள்.

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.இப்படி அறிமுகத்துடன் வளவு என்ற பெயரை தாங்கி வரும் தளத்தில் தமிழர்களின் அறிவியல்,வானியல் நுட்பங்களைப்பற்றி நிறைய அறியலாம்.தமிழர் வானியல் என்ற பதிவைப்பார்க்கலாமா?

தமிழில் அறிவியல் இந்த தளத்தின் பெயரே இதுதான்.சில புரிந்துகொள்ள முடியாத அறிவியல் கோட்பாடுகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி வரும் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன இந்த தளத்தில்.நியூட்டன் எப்படி புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார் ?

அறிவியலுக்கு என ஒரு ஊர் இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து அறிவியல்புரம் என பெயர் வைத்து பூமியியலைப்பற்றி நிறைய தகல்வல்கள் கொண்டுள்ள தளம் இது.காற்றழுத்தத்தாழ்வு நிலை ஒன்று புதிதாய் உருவாகியிருக்கிறது என டி.வி.ல திரு ரமணன் சொல்ல அடிக்கடி கேட்டிருப்போம்.அதென்ன காற்றழுத்த தாழ்வு மண்டலம்?தெரிஞ்சுக்க வேணாமா?

அவியல் தெரியும் இங்க அறிவியலையே அவியல் போல சுவையா விருந்தாக்கி வைச்சிருக்காங்க.மாயா மாயா எல்லாம் மாயா தாமரை இலையில் நீர் போல ஒட்டி ஒட்டாமல் இரு.எப்பேர்ப்பட்ட தத்துவம் இது?ஆனால் தாமரை இலையில் ஒளிந்துள்ள அறிவியலின் ரகசியம் அறியாமலிருக்கலாமா?

பொதுவாக குருவி இரை தேடப்பறக்கும் ஆனால் ஒரு விஞ்ஞானக்குருவி  அறிவுப்பசியால் பறந்து பல தகவல்களை நமக்கு அளித்து வருகிறதஎக்கச்சக்கமான தவகள்கள் இந்த விஞ்ஞானக்குருவியின் கூட்டில் கிடைக்கிறது.ஒளியின் வேகம் தெரியும் ஆனால் ஒளியின் வேகத்தை மிஞ்சக்கூடியது எது தெரியுமா?

வணக்கம் இணையக்கல்வி இந்த தளம் தமிழ் அறிவியல்,விஞ்ஞானப்ப்ரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,பல துறைகள் சார்ந்த தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.ஏன்,எதற்கு,எப்படி,எனும் இந்த தளத்தின் பக்கத்தில் மூடநம்பிக்கையாகப்பார்க்கும் சில விசயங்களுக்கு அறிவியல் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

கனல் மணக்கும் பூக்கள் என சமீபமாக எழுதி வருகிறார் திரு.பெர்ஜின், இவர் ரத்தத்தை சுத்தப்படுத்தலாம் என்கிறார் எப்படி?

இன்னும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி!

9 comments:

  1. அறிமுகங்களுக்கு நன்றி......

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  3. அறிவியலை எழுதிவரும் பதிவர்களை அறிமுக படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அறிவியலைப்பற்றி இத்தனைபேர் பதிவிடுவது இத்தனைநாட்களாக நான் அறியாமலிருந்தது என்னை வெட்கப்படவைத்தது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி கோகுல்.

    ReplyDelete
  5. அறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே..."

    அறிவிற்கு சிந்தனைக்கு விருந்தான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. அறிவியல் சம்பந்தமான பகிர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி கோகுல்...

    இன்னும் வித்யாசமான பகிர்வுகளை எதிர்நோக்கி...

    ReplyDelete
  7. சூப்பர் கோகுல், வழமையான அறிமுகங்களை விட அறிவியல் வலைப்பூக்கள் மிக்க சிறப்பு!

    ReplyDelete
  8. அறிவியலை அறிவிக்க வந்த
    பதிவர்களின் அறிமுகங்கள் அழகு...

    அறிமுகங்களுக்கும்
    அறிமுகப்படுத்திய உங்களுக்கும்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது