எப்படியெல்லாம் பேர் வைக்குறாங்க?
➦➠ by:
கோகுல்
பதிவுக்கு தலைப்புவைக்க ரொம்ப யோசிப்போம்.சில பேரோட வலைப்பூவின் பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கும் அப்படிப்பட்ட சில தளங்களின் அறிமுகத்தை இன்று பார்ப்போம்.
யோசிங்க ,அட உங்களைசொல்லலைங்க இங்க ஒருத்தர் அப்படித்தான் தன் தளத்துக்கு பேர் வைச்சிருக்காரு.அப்படி என்ன யோசிக்க சொல்றார்னு உள்ள போய்த்தான் பாப்போமேன்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாதுங்க மண்டைய பிச்சுக்க வைச்சிட்டார்(யோசிச்சு தாங்க)அறிவுக்கு வேலை கொடுக்கும் பல விளையாட்டுகளை நீங்களும் போய் விளையாடுங்கள்.
யார்கூடவாவது பேசிக்கிட்டு இருக்கும் போது அடிக்கடி எதிர்வாதம் பேசுறவங்களை பாத்து ஏன்பா இப்படி எடக்கு மடக்கா பேசுற அப்படின்னு கேப்போம்.உடனே அவங்க பார்த்திபன் மாதிரி எடக்குன்னா என்ன மடக்குன்னா என்னன்னு அதுக்கும் மடக்குவாங்க.இப்படி தன் வலைக்கு பேர் வைச்சு வாழ்க்கை பற்றி தனது நடையில் சொல்லியிருக்கிறார்.
பிசாசு இது யாரையாவது திட்டுறத்துக்கு நாம பயன்படுத்துற வார்த்தை இதை கோபமாவோ இல்ல செல்லமாவோ பயன்படுத்தலாம்.செல்லமா தன் வலைக்கு பிசாசுக்குட்டி அப்படின்னு பேர் வைச்சிருக்கார் ஒருத்தர்.இவர் ஆண்களின் ஆளுமை பெண்களின் ஆளுமை பற்றி சொல்லியிருக்கிறார் பார்க்கலாமா?
சரியான லொள்ளு பார்ட்டி அப்படின்னு சில பேர சொல்லுவோம் .இங்கே ஒருத்தரு லொள்ளு அப்படின்னு பேர் வைச்சுக்கிட்டு பேருக்குத்தகுந்தமாதிரியே எழுதிக்கிட்டு வராரு.இவரு சம்பள உயர்வு பெற சில வழிகள் சொல்றாரு.பாத்து கடைபிடிக்கலாம் வாங்க.
காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு.... இப்படித்தன் வலையைப்பற்றி அறிமுகம் செய்து வழக்கம் போல் அப்படின்னு பேர்வைச்சு வீராப்பு பேசுறார் .
நாஸ்தென்கா – இது எந்த மொழின்னு தெரியுதுங்களா?எனக்கும் தெரியலைங்க .சரி தெரிஞ்சுக்கலாம்னு கூகுள்ல தேடினப்போ எஸ்.ரா.அவர்களோட தளத்துக்கு கூட்டிட்டுப்போச்சு அங்கே தஸ்தாயெவ்ஸ்கி இவரோட அறிமுகமும் இவரோட (White Nights, by Fyodor Dostoevsky இந்த கதையில வரும் பெரு பெண்ணின் பெயர் என ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு.இவர் அடிக்கடி எழுதுவதில்லை.இவரது ஹைக்கூ முயற்சியை ரசிக்கலாம் வாங்க.
மண்மணம் இது எல்லாருக்கு தெரியும் அது என்னங்க மண்கவுச்சி.இந்த பெயரில் உள்ள தளத்துக்கு போய் அப்படியே நாம ஊர் விளையாட்டுகளின்பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
படம் ரொம்ப மொக்கடா சாமின்னு ஏதாவது மொக்க படத்த பாத்து ரொம்பவே அலுத்துப்போயிருப்போம்சில நேரம்.இவரு தன்னை மொக்கசாமி-ஆனா ரொம்பஷார்ப் அப்படின்னு சொல்லுறார் தன்னைப்பத்தி. இவரு உயிர் காக்குமா மருந்துகள் அப்படின்னு கேக்குறார்.
மேலும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி.
மேலும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி.
|
|
பெயரை வெச்சே இன்றைய அறிமுகங்களா....? முடிந்தவரை அறிமுகங்களை படித்து பார்க்கிறேன். வாழ்த்துகள்!
ReplyDeleteஇதுவரை நான பார்க்காத பதிவுகள்
ReplyDeleteநீங்கள் சொல்வது போல பெயரைப் பார்த்தே
பார்க்காமல் இருந்திருப்பேனோ எனத் தோன்றுகிறது
இன்று பார்த்துவிடுகிறேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சுவையான பெயரோடு அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteஅத்தனையும் வித்தியாசமான அறிமுகங்கள் நண்பரே.
ReplyDeleteஅனைவரையும் சென்று பார்க்கிறேன்.
ஆஹா, பெயரை வைத்தே இன்றைய அறிமுகங்களா? புதுமைதான். வாழ்த்துகள்.
ReplyDeleteகோகுல் உண்மையிலேயே வித்தியாசமான சிந்தனை.... அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவித்தியாசமான பெயர்கள்.....அனைத்து பதிவுகளையும் படிக்கிறேன் நன்றி!
ReplyDeleteநல்ல தேடல்....வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅட எல்லாமே வித்தியாசமான பெயரா இருக்கே எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்தியாசமான பெயர் உள்ள தளங்களை அறிமுகம் செயததுக்கு நன்றி பாஸ் நேரம் இருக்கும் போது கண்டிப்பாக இந்த தளங்களை பார்வையிடுக்கின்றேன்
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபெயரை வெச்சே இன்றைய அறிமுகங்களா....? முடிந்தவரை அறிமுகங்களை படித்து பார்க்கிறேன். வாழ்த்துகள்!
//
மிக்க நன்றி!
Ramani said...
ReplyDeleteஇதுவரை நான பார்க்காத பதிவுகள்
நீங்கள் சொல்வது போல பெயரைப் பார்த்தே
பார்க்காமல் இருந்திருப்பேனோ எனத் தோன்றுகிறது
இன்று பார்த்துவிடுகிறேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
//
வாங்க சார்,அதற்காகத்தான் இந்த முயற்சி,கருத்துக்கு மிக்க நன்றி.
அருமை..
ReplyDelete