எனது மனதில் தோன்றியவை சில -
➦➠ by:
கோகுல்
தமிழறிந்த அனைத்து உறவுகளுக்கும் எனது வணக்கங்கள்,
தற்செயலாகப் பதிவெழுத வந்தவன் நான்,சில பதிவுகளை எழுதிய பின் இந்த வேலைக்கு நான் சரி வருவேனா என என்னை நானே கேட்டுக்கொண்டிருந்த போது,சக பதிவர்கள்,நண்பர்களின் ஆதரவு,கருத்து காரணமாக இந்த வேலைக்கு எப்படியோ நம்மள ஒத்துக்கிட்டாங்க போல அப்படின்னு நினைச்சுக்கிட்டு தொடர ஆரம்பித்தேன்.இந்த நிலையில் திரு.சீனா ஐயா அவர்கள் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது முந்தைய ஆசிரியர்களின் பட்டியலை பார்த்து பிரமித்தேன்.நான் பதிவெழுத வந்தபிறகு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை எனக்களித்த ஐயாவிற்கும்,வலைச்சரம் குழுவிற்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இனி எனது பதிவுகளின் சரம்..........
எனது முதலில் இருந்து தொடங்குகிறேன்,அம்மா,அப்பாதான் எல்லோருக்கும் முதல் , அம்மாவுக்காக சில வரிகள், தன் பிள்ளைகளை இப்படி நன்றி செய்வாயோ என கேட்கும் ஒரு தந்தையின் ஆதங்கம் இந்த பதிவு.
வீட்டிலிருந்து கிளம்பும் போது போயிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புவதிலிருந்து துவக்குகிறது நமது நம்பிக்கை,அந்த நம்பிக்கையைக்காப்பாற்ற பயணத்தின் போது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதுடன் சாலையில் பயணிப்போர் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.வேகத்தடை ஒரு பாதுகாப்புக்குதான் ஆனா அதுவே சில நேரங்களில் பயணத்தடையாகிவிடுகிறதே . அதே மாதிரி ஹெட்லைட்ங்கறது பாதையை வெளிச்சமாக்கதான் ஆனா அதுவே சிலரின் வாழ்க்கையை இருட்டாக்குவது நியாயமா? மழையில் பயணிப்பது ஒரு சுகானுபவம் தான் ஆனால் அதற்காக பின்னால் கஷ்டப்பட வேண்டுமா? இசை பல பரிமாணங்கள்ல திரியுது அதே மாதிரி ஊர்ல எல்லா கலர்லையும் மாக்கான்(ர்)கள் திரியுறாங்க,அவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்! ஹெல்மெட் அணிவது உயிரைக்காக்கும் இது எல்லாrக்கும் தெரியும்,ஹெல்மெட்டுக்கு விளக்கம் தெரியுமா?
நாம் வாழும் இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமானது அல்ல,நாம் வாழும் காலம் வரைக்கும் பூமிதான் நமக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது.அடைக்கலம் கொடுத்த பூமியை நெகிழியால்(பிளாஸ்டிக்) தவிக்கவிடலாமா? நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக நாம் விட்டுச்செல்ல வேண்டியது வசந்ததையா குப்பைகளையா? உப்பில்லா பண்டம் குப்பைக்கு போகலாம் உப்புள்ள பண்டம் போகலாமா?இது நியாயமா?
பேருந்து பணனத்தின் போது இந்த மோட்டல்களினால் பயணிகள் படும் பாடு சொல்லி மாளாது.அதனால்தான் மோட்டலைக்கண்டாலே பயணிகள் மிரளுகின்றனர்.அதுமட்டுமா?நம்ம ஊர்ல அரிசி வாங்க வசதியில்லன்னு சொல்லி இலவச அரிசி போடுறாங்க, ஆனா இதுக்கு காசு வாங்குறாங்க.
பயணம் நமக்கு பல படிப்பினைகளையும் அனுபவங்களையும் கொடுக்கும் எனது பயண அனுபவங்கள் சில......
ஓடத்தில் பயணம் செய்து கரை சேரலாம் ஆனால் தண்டவாளம் கரை சேர்த்து கேள்விப்பட்டிருக்கீர்களா?பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று சொல்லுவாங்க,எனக்கு கிடைச்ச கனிவான கவனத்தை கொஞ்சம் பாருங்களேன்.
ரொம்ப சீரியஸா போய்க்கிட்டிருக்கோ?வாங்க கொஞ்சம் சிரிச்சிட்டு போலாம். இங்கே ஒருத்தரு தீப்பெட்டி கேக்குறாரு எதுக்குன்னு கேளுங்க.அச்சம்,மேடம்,நாணம் அப்படின்னா உங்களுக்கு அர்த்தம் தெரியும் பயிர்ப்புக்கு அர்த்தம் தெரியுமா?இங்க ஒருத்தர் மயக்கம் போடுறார் எதுக்குன்னு பாருங்க.அப்புறம் புதுசா ஒரு முயற்சி பல”சரக்கு”க்கடை .
வலைச்சரம் வழியாக ஒரு வேண்டுகோள்.
|
|
வணக்கம் தோழர்.. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றறிருப்பது மகிழ்ச்சி.இந்த வாரம் முழுவதும் சிறப்பாய் செயல்பட வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம் கோகுல்.
ReplyDeleteவலைச்சரத்தில் தொடர்ந்து காத்திரமான விடயங்களை அறிமுகம் செய்வீர்கள் என்ற ஆவலில் காத்திருக்கின்றேன் தயக்கம் இன்றி செயல்படுங்கள் இந்தவாரம் உங்களுடன் கூட வருவேன்.வாழ்த்துக்கள் நண்பா.
வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள்..!! :)
ReplyDeleteவணக்கம் கோகுல், மற்றும் வலைச்சர நண்பர்களுக்கு,
ReplyDeleteகோகுலின் அறிமுகப் பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறேன்.
வலைச்சரத்தினையும் தாங்கள் இனிமையாகத் தொகுத்து வழங்குவீங்க என்பதில் ஐயமில்லை!
தொடர்ந்தும் எழுதுங்கள்! வலைச்சரத்திலும் இனிய சரங்களைக் கோருங்கள் என வாழ்த்துகிறேன்.
உங்கள் பதிவுகள் பெரும்பாலானவைகளில் உங்களின் சமூக அக்கறையைப்பார்த்து . வியந்திருக்கிறேன். வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்புடன் ஆற்ற வாழ்துக்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் மகுடம் சூட்டப்பட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅசத்துங்க !
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா .. நீங்க கலக்குங்க
ReplyDeleteVaazhthukkaL. DhooL kiLappunga!
ReplyDeleteஅன்பின் கோகுல் - அழகான் சுய அறிமுகம் - பகிர்ந்த பதிவுகள் இருபதினையும் - சுட்டியைச் சுட்டிச் சென்று பார்த்து படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழியும் இட்டு வந்தேன். அனைத்துமே நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் பாஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடருங்கள் தொடர்கின்றேன்
உங்கள் அறிமுகப்பதிவுகளை நான் முன்பே படித்துள்ளேன் எனவே அது பற்றி ஒன்றும் கூறவில்லை.அடுத்த பதிவுகளுக்கு வருகின்றேன் விரிவான கருத்துரைகளுடன்
பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆசிரியரே..
ReplyDeleteவாழ்த்துக்கள். அம்மாவிடமிருந்து ஆரம்பித்தது சிறப்பு.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பதற்கு என் வாழ்த்துக்
ReplyDeleteகள்!
பணி சிறக்க செய்வீர் என்பதில்
ஏதும் ஐயமில்லை!
புலவர் சா இராமாநுசம்
புதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள்/
ReplyDeleteவணக்கம் நண்பர் கோகுல்,
ReplyDeleteதங்களின் பதிவுகளில் சமூக சிந்தனைகளை
படித்து படித்து ரசித்தவர்களில் நானும் ஒருவன்.
அழகான பூக்களால் வலைச்சரம் அருமையாக
தொடுத்திட வாழ்த்துக்கள்.
அருமையான சுய அறிமுகம் கோகுல், வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவலைசரம் ஆசிரியர் கோகுலுக்கு,
எழுதுங்கள் எதிர்பார்கிறேன்
அறிமுகமே அசத்தல்
இவ்வாரம் நிச்சயம் சிறந்த வாரமாக இருக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஏற்றிருக்கும் ஆசிரியர் பணியினை திறம்படச் செய்ய வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteசுய அறிமுகம் அருமை. சிறப்பாய் பணியாற்ற வாழ்த்துகள்.
ReplyDeleteவருக...!வருக...!கோகுல்.
ReplyDeleteவாழ்த்துகள் கோகுல். அசத்துங்க
ReplyDelete