07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 28, 2012

விவசாயதிற்கான தேடல்....


இந்தியா அடிப்படையில் ஒரு விவசாயம் சார்ந்த நாடு.இன்றைய நகரமயமாகும் சூழலில் விவசாயத்தின் நிலை கேள்விக்குறியாக மாறி வருகிறது.நம்மில் பலர் விவசாய சூழலை விட்டு வேறு துறைகளுக்கு மாறிவிட்டிருக்கிறோம்.இந்நிலையில் விவசாயத்திற்கான தேடல் வலையில் கிடைக்கிறதா என தேடிய போது கிடைத்த முத்துகள் சில பற்றி இன்றைய அறிமுகத்தில் பார்ப்போம்.

முதலில் கிடைத்த முத்து இதன் பெயரே பசுமைமுத்து. விவசாயத்தை மறந்துவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் விதையாகக்கிடக்கும் மரம் நடும் ஆசைக்கு வழி சொல்கிறார்.

வேளாண்மை உலகம்.ஆம் பெயருக்கேற்ற மாதிரி நிறைய வேளாண்மைத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்டோசல்ஃபான் போன்ற ரசாயன பூச்சி மருந்துகளுக்கு தடை வந்திருக்கும் சூழலில் பயிரைக்காக்க இயற்கை முறையே போதுமானது.இதை உணர்வோமா?

விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை தருகிறது இந்த தளம்.விவசாயம் சார்ந்த நிறைய நுட்பங்களைத்தருகிறது.வருங்கால விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்ன?என்பதை இந்த பதிவு அலசுகிறது.எங்கே செல்கிறது இந்திய விவசாயம் இந்த தொடரையும் படிக்கத்தவறாதீர்கள்.

பயிர் விளையுமுன் அல்லது அறுவடைக்கு முன் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடு விவசாயிகளிடையே உண்டு.இதற்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம் பற்றிய தகவல்கள் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.

மண்,மரம்,மழை இந்த தளத்தில் காப்புரிமை,அறிவுசார், சொத்துரிமை,வணிகம் பற்றிய விழிப்புணர்வையும் தகவல்களையும் தருகிறது.வேம்பு,மஞ்சள்,பாசுமதிக்கு நான் காப்புரிமை இழந்ததை இப்பதிவு நினைவூட்டுகிறது

வேளாண்மை.காம் என்ற தளம் நாளுக்கு நாள் வேளாண்மை குறித்த தகவல்களை தந்து வருகிறது.
விவசாயம் பண்ண முடியலேன்னா என்னங்க நாம வீட்டிலே விவசாயியாகலாம் அப்படின்னு பசுமை இந்தியா தளத்தில் வீட்டுத்தோட்டம் போட,மூலிகை தண்ணீர் தயாரிக்க சொல்லித்தராங்க வாங்க கத்துக்கலாம். 

விவசாயத்திற்கான தேடலில் இணைந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.

12 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கிட்டத்தட்ட விவசாயம் என்பதே மறாந்தும்,அருகியும் போன னேரத்தில் எழுதப்பட்ட நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் கோகுல் பாஸ்,
    மண் மணம் கமழும் விடயங்களைப் பகிரும் அன்பர்களைப் பற்றிய அறிமுகத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.
    நன்றி.

    ReplyDelete
  4. நண்பா... சிறந்த தொகுப்பு.....

    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  5. அவசியமான சிறப்பான தளங்களின் தொகுப்பு. நன்றிங்க கோகுல்.

    ReplyDelete
  6. கோவி said...
    அனைவருக்கும் வாழ்த்துகள்.
    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. விமலன் said...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கிட்டத்தட்ட விவசாயம் என்பதே மறாந்தும்,அருகியும் போன னேரத்தில் எழுதப்பட்ட நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
    //

    புரிந்துணர்வுக்கு நன்றி. திரு விமலன்.

    ReplyDelete
  8. நிரூபன் said...
    வணக்கம் கோகுல் பாஸ்,
    மண் மணம் கமழும் விடயங்களைப் பகிரும் அன்பர்களைப் பற்றிய அறிமுகத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.
    நன்றி.
    //

    நன்றி நிரூ!

    ReplyDelete
  9. தமிழ்வாசி பிரகாஷ் said...
    நண்பா... சிறந்த தொகுப்பு.....

    வாழ்த்துக்கள்,
    //
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. Rathnavel Natarajan said...
    நல்ல பதிவு.
    நன்றி.

    //
    நன்றி ஐயா!

    ReplyDelete
  11. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    அவசியமான சிறப்பான தளங்களின் தொகுப்பு. நன்றிங்க கோகுல்.

    உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  12. நண்பர் கோகுல்
    இன்றைக்கு தேவையான அறியப்பட வேண்டிய
    பதிவுகள்..
    தேடி தேடி படிக்க வேண்டிய பதிவுகள் ஒரே
    இடத்தில் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
    அறிமுகப் பதிவர்களுக்கு வணக்கங்களும்
    உங்களுக்கு நன்றிகளும்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது