07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 20, 2012

நாள் 5 திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் மற்றும் பதிவர் அறிமுகம்





மதம், கடவுள் என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை. அது போல் கடவுள் இல்லை என்ற நம்பிக்கை என்னுடையது. ஆனால் அதனை கூறுவதற்காக நான் இந்த பதிவை இடவில்லை. எந்த சூழ்நிலையிலும் எந்த கொள்கைக்காகவும் என் ஊர் கோயிலை மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். தஞ்சை பெரிய கோயிலுக்கு சில நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டது திருவாரூர் பெரிய கோயில். என்னுடன், என் இளம்வயதில் என் நண்பனாக என் நிழலாக என்னுடன் இருந்தது திருவாரூர் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமி திருக்கோயில் தான். என் வீடு கோயிலின் மிக அருகில் அதாவது 100 மீட்டருக்குளேயே உள்ளது. முன்பெல்லாம் கோயிலில் அந்தஅளவுக்கு கூட்டம் இருக்காது ஆனால் மிகப்பெரிய கோயில். கோயிலின் மொத்தப் பரப்பளவு 5 ஏக்கர். கமலாலய குளம் அந்த அளவுக்கு பெரியது தான்.





சிறு வயதிலிருந்து எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு ஓதுவார் இருந்தார், அவருக்கு கோயிலில் தான் வேலை. விடியற்காலை 4 மணியிலிருந்து கோயிலில் அவர் தான் பாடுவார். காலை நேரத்து பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்து மாலை 6 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜையிலும் தினந்தோறும் அவரே பாடுவார். கோயில் மைக் செட் வைத்து கட்டியிருப்பார்கள். அதனால் மொத்த திருவாரூர் நகர் முழுவதும் அவர் பாடுவது கேட்கும். அவர் மிகச்சிறு வயதில் அதாவது என்னுடைய 4 வயதிலிருந்து அவர் காலை கோயிலுக்கு போகும் போது என்னையும் அழைத்து சென்று விடுவார். அவருடனே காலையிலிருந்து கோயிலில் இருந்து விட்டு எட்டு மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்து பள்ளிக்கு புறப்படுவது எனது அந்த வயதில் அன்றாட பழக்கம்.







அது மட்டுமில்லாமல் எங்கள் தெருவில் உள்ள நண்பர்கள் அனைவரும் கால் பரிட்சை, அரைப் பரிட்சை மற்றும் முழுப் பரிட்சை காலங்களில் கோயிலில் அமர்ந்து தான் படிப்போம். காலையிலிருந்து மதியம் சாப்பாட்டு நேரம் வரை கோயிலில் தியாகராயருக்கு இடப்புறம் அதாவது நீலோத்பலாம்பாள் சன்னதிக்கு வலப்புறம் சிறு சிறு கோயில்களாக நிறைய லிங்கங்கள் இருக்கும். அதில் ஆளுக்கொரு சிறு கோயிலின் உள் அமர்ந்து படிப்போம். மதியம் புறப்பட்டு பள்ளிக்கு சென்று தேர்வழுதுவோம்.

அதே போல் நாங்கள் முதன் முதல் கிரிக்கெட் விளையாடியதும் கோயிலில் வெட்டவாசல் கோபுரத்தின் உட்புறம் உள்ள புல்வெளிகளில் தான். அங்கு ஒரு நெல்லிக்காய் பிள்ளையார் என்று ஒரு கோயில் இருக்கும். தரையிலிருந்து ஒரு சாண் உயரமே இருக்கும். அதனருகில் தான் ஸ்டம்பு நட்டு கிரிக்கெட் விளையாடுவோம். இப்பொழுது போல் ரெடிமேட் பேட் கிடையாது. பேட் வேண்டுமென்று என் தாத்தாவிடம் அடம் பிடித்து அவர் ஆசாரியிடம் சொல்லி செய்து கொடுத்த பேட் அது. நீண்ட நாட்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் வரை அதனை வைத்து தான் கிரிக்கெட் விளையாடுவோம். ரப்பர் பந்து மட்டுமே. துவக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளிக்கு மாறிய பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு கோயிலில் வெட்டவாசல் கோபுரத்தின் வழியாக உள்நுழைந்து ராஜகோபுரத்தின் வழியாக வெளி வந்து தான் பள்ளிக்கு செல்வோம்.







பதின் வயதில் முதன் முதலாக சைட் அடிக்க ஆரம்பித்ததும் கோயிலில் தியாகராஜ சுவாமிக்கு நடக்கும் சாயட்சை பூஜையின் போது தான். இன்னும் நிறைய, நிறைய இருக்கிறது. அதனை பொதுவிடத்தில் சொல்வது நன்றாக இருக்காது. அதனால் அது வேண்டாம்.

என்னுடன் கலந்து விட்ட கோயில் எனக்கு அங்குலம் அங்குலமாக அத்துப்படி. இன்றும் சரி திருவாரூருக்கு சென்றால் முதல் நாளே கோயிலுக்கு சாயரட்சை பூஜைக்கு செல்வது எனது வழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் கூட்டம் அதிகமாகி விட்டதால் அதன் தனித்தன்மையை இழக்க ஆரம்பித்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.



--------------------------------------------------


இனி வலைப்பதிவுகள் அறிமுகம்.

எதைஎதையோ எழுதி விட்டு சமையலை மட்டும் விட்டு விடுவோமா. எனக்கு மிகவும் பிடித்தது சாப்பிடுவது தான். அதற்காக எந்த அளவுக்கு ரிஸ்க்கையும் நான் எடுப்பேன். நான் காதல் திருமணம் புரிந்தவன் தான். என் மனைவியிடம் நன்றாக சமைக்கத் தெரிந்தவள் என்று தெரிந்த பின்பே காதலை சொன்னவன். ஏனென்றால் என் மனைவி சொந்தங்களின்றி என்னை திருமணம் செய்யும் வரை ஹாஸ்டலிலேயே வளர்ந்தவள், அதனால் தான்.

கோவை2தில்லி என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் ஆதி அவர்களின் வாழைப்பூ பருப்புசிலி என்ற ரெசிபியை நானே சமைத்து வீட்டில் சபாஷ் வாங்கியவன். காஜர் ஹல்வாவும் சூப்பர் தான். தக்காளி தோசை பட்டைய கிளப்புது போங்கோ.

மீராவின் கிச்சன் என்ற வலைத்தளத்தில் வரும் ரெசிபிக்கள் அட்டகாசம். அதிலும் இந்த குழிப்பணியாரம் ஏ ஒன். ஆப்கான் ரெய்தாவும், மாங்காய்-வேப்பம் பூ பச்சடியும் சூப்பரோ சூப்பர். இன்னும் நிறைய உள்ளது அவரது வலைத்தளத்தில் சென்று படித்து பாருங்கள்.

பிதற்றல் என்ற வலைத்தளத்தில் வரும் சமையல் குறிப்புகள் அட்டகாசம். அதில் முதலாவதாக பெப்பர் சிக்கன் அசைவப் பிரியர்களுக்கு சூப்பர் டிஷ். வித்தியாசமான சிக்கன் பொறியல்… மற்றும் சிக்கன் போண்டா செய்து பாருங்கள்.

மரகதம் என்பவர் எழுதி வரும் வலைத்தளத்தில் உள்ள சமையல் குறிப்புகளை முயற்சித்து விட்டு பேசுங்கள். அதில் ரவா பொங்கல் என்ற ரெசிபி உள்ளது. நான் சிறு வயதில் பாபநாசத்தில் உள்ள ஒரு அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டது. இப்பொழுது அந்த கடை இல்லை. எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. அப்புறம் பால் போளி. நான் நினைக்கிறேன். இவர் தஞ்சாவூர்க்காரராக இருப்பார் என்று. முந்திரி அமிர்தம் என்ற இந்த ரெசிபியும் சூப்பரோ சூப்பர்.





ஆரூர் மூனா செந்தில்



15 comments:

  1. திருவாரூரை பற்றிய தகவல்கள் அருமை.
    என் பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.
    நீங்களே செய்து பார்த்து சபாஷ் வாங்கியதற்கு பாராட்டுக்கள்.

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கோவிலின் பரப்பளவு வேலி கணக்கில் சொல்வார்களே!

    ReplyDelete
  3. சாப்பாட்டுப் பதிவுகள் அருமை.

    ReplyDelete
  4. /// கோவை2தில்லி said...

    திருவாரூரை பற்றிய தகவல்கள் அருமை.
    என் பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.
    நீங்களே செய்து பார்த்து சபாஷ் வாங்கியதற்கு பாராட்டுக்கள்.

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.///

    நன்றி ஆதி

    ReplyDelete
  5. /// ரமேஷ் வெங்கடபதி said...

    கோவிலின் பரப்பளவு வேலி கணக்கில் சொல்வார்களே! ///

    அது வேற கணக்கு. இது நம்ம கணக்கு.

    ReplyDelete
  6. /// NIZAMUDEEN said...

    சாப்பாட்டுப் பதிவுகள் அருமை. ///

    நன்றி நிஜாமுதீன்.

    ReplyDelete
  7. நான் சின்ன வயதில் பட்டீசுரத்தில் கோவில்களில் அனுபவித்த அதே இளம் பிராய நினைவுகளை நீங்கள் ஆரூர் கோவிலில் அடைந்தீர்கள் போலும். திருவாரூர் கோவிலும் கமலாலய தீர்த்தமும் காணும் போதெல்லாம் பிரமிப்பை தரும் இடங்கள்தான்.

    ReplyDelete
  8. திருவாரூரைப் பற்றி அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பதிவு நல்லா இருக்கு. அறிமுகமானவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. /// கக்கு - மாணிக்கம் said...

    நான் சின்ன வயதில் பட்டீசுரத்தில் கோவில்களில் அனுபவித்த அதே இளம் பிராய நினைவுகளை நீங்கள் ஆரூர் கோவிலில் அடைந்தீர்கள் போலும். திருவாரூர் கோவிலும் கமலாலய தீர்த்தமும் காணும் போதெல்லாம் பிரமிப்பை தரும் இடங்கள்தான். ///

    அண்ணே இளம் வயதின் நினைவுகள் என்றும் நம் மனதை விட்டு நீங்காதவை.

    ReplyDelete
  11. /// Rathnavel said...

    திருவாரூரைப் பற்றி அருமையான பதிவு.
    வாழ்த்துகள். ///

    நன்றி ரத்னவேல் அய்யா.

    ReplyDelete
  12. /// Lakshmi said...

    பதிவு நல்லா இருக்கு. அறிமுகமானவங்களுக்கு வாழ்த்துகள் ///

    நன்றி லட்சுமி அம்மா.

    ReplyDelete
  13. ஒரு அனுபவப்பதிவுடன்,சுவைக்கவும் வைத்த பதிவு.

    ReplyDelete
  14. /// கோகுல் said...

    ஒரு அனுபவப்பதிவுடன்,சுவைக்கவும் வைத்த பதிவு. ///

    நன்றி கோகுல்.

    ReplyDelete
  15. திருவாரூர் பற்றிய தகவல்கள் மிக அருமை. என்னை வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. அறிமுகமான
    அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருவாரூர் அருகில் உள்ள
    மயிலாடுதுறைதான் எனது சொந்த ஊர்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது