மனநிறைவு
➦➠ by:
கோமதி அரசு
வலையுலக அன்பர்களே!
ஏழு நாட்களாகப் பல தலைப்புகளில் செய்திகளை உங்களுடன் பரிமாறிக் கொண்ட நான்,இன்று நிறைவுப் பகுதியில் வாழ்க்கைக்கு உபயோகமான சில பொதுச்செய்திகளை வலை அன்பர்களின் தளங்களில் இருந்து தொகுத்துத் தந்திருக்கிறேன்.
’கொஞ்சம் வெட்டி பேச்சு’என்ற தளத்தில் சித்ரா அவர்கள் அயல் நாட்டிலும் நல்ல கலாச்சாரத்தைப் பின் பற்றி
வாழும் மக்களையும் அவர்களுடைய கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை பற்றியும் சொல்கிறார். இங்கு நமக்கு மின்சாரம் ஒரு நாள் இல்லையென்றால் வேலை நடக்க மாட்டேன் என்கிறது .மின் சாதனங்கள் இல்லாமல் இன்றும் இயற்கையோடு இணைந்து வாழுகிறவர்கள் அங்கு இருக்கிறார்கள். தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து
கொள்கிறார்கள். அந்த மக்களைப்பற்றி விரிவாய் அழகாய் சொல்கிறார் சித்ரா.
’இங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா...’என்பது தலைப்பு.
// ”சித்ரா, நீ அமெரிக்காவிலேயே இருக்கியே? நம்ம ஊரு கலாச்சாரத்தை அங்கே பின்பற்ற முடிகிறதா?"
என்று கேட்ட தோழிக்கு :
நான் இருக்கும் //மாநிலத்திலும் சரி, அருகில் உள்ள சில மாநிலங்களிலும் சரி - தமிழ் கலாச்சாரங்களை தூக்கி
சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு, ஆமீஷ் ( Amish) என்ற ஒரு பிரிவினர் (sect) வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள், நம்மூரு கலாச்சாரத்தைப் பின்பற்ற தடை என்ன? சொல்லுங்க...
Amish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination)
சார்ந்தவர்கள். எளிமையான வாழ்க்கை முறை - உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது, இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள்.//
எங்கிருந்தாலும் பாரம்பரிய கலாச்சாரத்தோடு வாழ்வது சாத்தியம்தான் என்பது விளங்குகிறது.
*********
அம்பாள் அடியாள் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு ஒரு அருமையான பதிவை எழுதியிருக்கிறார்கள்
குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து சொல்லிகிறார். எப்படி குழந்தையை சிறப்பாய் வளர்ப்பது என்று பெற்றோர்களுக்கு நிறைய குறிப்புகளைத் தருகிறார்.
”வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள்... ”என்ற தலைப்பில்.
//குற்றமற்ற இந்த உள்ளங்களால் என்றும் யுத்தங்கள் நிகழ்வதில்லை .ஆனாலும் இவர்கள் வளர்ந்து வரும்போது எவ்வாறு வர வேண்டும் என்பதை எமது வாழ்க்கையின் நடைமுறைகள்தான் தீர்மானிக்கின்றன .
இயற்கையாக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஏதோ ஓர் திறமை கண்டிப்பாக இருக்கும் .பெற்றோர்களாகிய நாம் எம் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகளைத்தான் முதலில் அதிகம் ஊக்குவிக்க முற்பட வேண்டும் .தவிர பிள்ளைக்கு நாட்டம் இல்லாத எந்த ஒரு கலையையும் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து
திணித்து வந்தால் நிட்சயம் அதில் வெற்றிகொள்வது மிகவும் அரிது .அத்துடன் வயது எல்லைகளையும் நாம் கவனத்தில்க்கொள்ளல் மிக மிக அவசியம் .எல்லாப் பிள்ளைகளாலும் எடுத்த எடுப்பில் சாதனை புரிய முடியாது .அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் மெல்ல மெல்லத்தான் வளர்த்தெடுக்க வேண்டும் .//
நாளைய தலைமுறை நல்ல விதமாய் வளர்ந்திட இக்கருத்துக்கள் பயன்படும்.
**********
”பார்வைகள்” கவிதா ,எந்த காரியம் செய்யும் போதும் திட்டமிடுதல் அவசியம் என்கிறார். திட்டமிட்டு செய்யும் வேலைகள் எல்லாம் சிறப்பாய் முடியும்.
’நமக்கு நாமே திட்டமிடல் - எல்லா பிஸி நண்பர்களுக்கும்.’-என்பது தலைப்பு.
//வாழ்க்கையில், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமும், வெற்றியும் பெற்ற எல்லோருக்குமே இதே 24 மணி நேரம் தான் இருந்து இருக்கிறது. அதே நேரத்தை கொண்டு தான் அவர்கள் சாதித்தும் இருக்கிறார்கள்.
அவர்களால் முடிந்தது நம்மாலும் முடியும் அல்லவா?
இவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம், அவர்களின் தினப்படி நாட்கள், நாளைய தினம், எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மட்டுமே முன் நிற்கும். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரையிலான நம் நேரத்தை எப்படி நாம் பயன்படுத்த போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும்.//
வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
******************
தமிழ் வலைப்பூ வைத்து இருக்கும் கார்த்திக் லக்ஷ்மணன் அவர்கள் ’தனிமனித கருத்துக்கள் & ஆரோக்கியமான உறவுகள்’ என்ற தலைப்பில் அமைந்த பதிவில் நாம் அனைவரும் வேவ்வேறு விதமாக சிந்திப்பதால் தான் நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்கிறார். எல்லோரும் ஒரே மாதிரி யோசித்தால் அந்த உலகம் எப்படி இருக்கும் !
//உளவியலின் மிக அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். எந்த
இரு மனிதர்களும் சிந்திப்பதிலும், புரிந்து கொள்வதிலும் மிகச் சரியாய் ஒரே போல் இருப்பதில்லை, கிட்டத்தட்ட ஒரே பின்புலம் கொண்ட இரட்டையர்கள் கூட வெவ்வேறு விதமாக சிந்திக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவம், சிந்தனை முறை கொண்டவர்கள். வேறு விதமாய் சொல்ல வேண்டுமானால், கடவுள்
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் படைத்துள்ளார். இதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கை.//
முரண்பாடுகள் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று தெரிகிறது.
****
முகுந்தஅம்மா தனது தளத்தில், ’தண்ணீருக்கா ஒரு யுத்தம்? வேண்டாம் ’என்கிறார்.
//உலக புள்ளிவிவரங்கள் எல்லாம் இருக்கட்டும், தற்போது தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது.தானே. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே.
சரி! இதற்கு தீர்வு!
1. இருக்கும் நீர் நிலைகளை காப்பது
2. கழிவு கூடாரமாகி இருக்கும் ஆறு குளங்களை சுத்தபடுத்துவது
3. மேலும் கழிவு ஆறு குளங்களில் கலக்காமல் காப்பது.
4. நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு . //
தண்ணீரைச் சேமிக்க தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தடுக்க பல நல்ல கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
***********
’தலை வாழை விருந்து.’என்ற தலைப்பில் மங்கை அவர்கள் கூறுகிறார்கள்:
//வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு என்பதுடன், இதில் ஒரு மருத்துவத் தன்மையும்
உண்டாம். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் இருக்குமாம். நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். நம் முன்னோர்கள்களின் வாழ்க்கை முறையில்தான் எத்தனை சிறப்பம்சங்கள். அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புகள் படைத்தவை என்று நன்கு தெரிந்தும் ஏனோ நாம் அதை எல்லாம் விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். சாம்பார், ரசம் சாப்பிட்ட பிறகு பாயசம் போடுவது... சாப்பாட்டில் ஒரு நிறைவைத் தந்துவிடும். பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது அந்த இனிப்பான பாயசம் நெஞ்சிலே ஏப்பமாக வராமல் இருக்கும்.//
இனி வாழை இலையிலேயே சாப்பிடுவோம்!
*******
’மூலிகை வளம்’ என்ற தளம் வைத்து அதில் மூலிகைகளைப் பற்றி விரிவாகச் சொல்கிறார்,திரு.குப்புசாமி அவர்கள்.
பொங்கலுக்கு வெற்றிலை வாங்குவோம். அதன் பயனை தெரிந்து கொண்டால் நல்லது தானே! என்ன சொல்கிறார்,பார்ப்போம்.
//வெற்றிலை வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.
வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.
பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.
மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.//
வெற்றிலை சுவைக்கு மட்டுமின்றி மருந்துக்காகவும் பயன்படுகிறது.
திரு குப்புசாமி அவர்கள் மருதாணி இலையின் குணங்கள் பற்றிக் கூறும்போது,
// மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல்
தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.//
பொங்கல் விழாவுக்கு மருதாணி வைக்கும் பழக்கம் நல்லது. அழகுக்கு அழகு! மருத்துவ பயன்களும் உண்டு!
**********
’கவிதை வாழ்த்துக்கள். என்ற தளத்திலிருந்து சில கவிதைகள்.
(தளத்திற்கு உரியவரின் பெயர் காணப்படவில்லை.)
//பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைத்திருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்! //
இந்தப் பண்பாட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவாம்.
***பொங்கலோ! பொங்கல்
ஒரு வாரம் வலைச்சரம் மூலம் நான் படித்த வலைப் பதிவர்களின் பதிவிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. வலைச்சரப் பொறுப்பாசிரியர் திரு. சீனா அவர்களுக்கும், என்னைப் பரிந்துரை செய்த
திரு. வை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்கள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து அன்பர்களுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றி.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
கவிதாயினி கவிநயா அவர்களின் பொங்கல் வாழ்த்து கவிதை.
//பாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!
பச்சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக!
அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக!
பொங்கலோ பொங்கல்!!
நெய்மணக்கும் பொங்கல் எங்கும் பொங்குக!
மெய்மணக்கச் செய்யும் அன்பே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!
மனங்கள் தோறும் என்றும் மகிழ்வே பொங்குக!
கணங்கள் தோறும் அங்கு கனிவே தங்குக!
பொங்கலோ பொங்கல்!!
நாளும் பொழுதும் எங்கும் நலமே பொங்குக!
இல்லந் தோறும் என்றும் இன்பம் தங்குக!
பொங்கலோ பொங்கல்!//
//பாட்டாளி மக்க ளெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழ்க!//---வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வளமுடன்!
|
|
வலைச்சரத்தில் என் தளத்தையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி கோமதிம்மா.
ReplyDeleteசிறப்பான வாரம். தேடித்தந்திருக்கும் இன்றைய பதிவுகள் யாவும் அருமை. மனநிறைவு எங்களுக்கும்.
ReplyDeleteநன்றி கோமதிம்மா.
நம் முன்னோர்கள்களின் வாழ்க்கை முறையில்தான் எத்தனை சிறப்பம்சங்கள். அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புகள் படைத்தவை /
ReplyDeleteநிறைவான அனைத்துப்பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வாழ்க வளமுடன்..
தேடித்தந்திருக்கும் அனைத்து பதிவுகளும் ரசனை மிகுந்தது.மிக்க நன்றி.
ReplyDeleteஇன்றைய நிறைவுக்குப்பகுதியும் மனதுக்கு மிகவும் நிறைவாகவே உள்ளது.
ReplyDelete’கொஞ்சம் வெட்டி பேச்சு’என்ற தளத்தில் எழுதும் திருமதி சித்ரா அவர்களைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்குமே என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.
வெற்றிகரமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பினை அழகாக முடித்துக்கொடுத்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
அன்புடன் vgk
பகிர்வுகள் அனைத்தும் மனநிறைவாய் அருமை.வாரம் இனிதே கழிந்தது.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஇவ்வார வலைச்சர விருந்திற்கு ”மனநிறைவு” தாம்பூலமாய் மணக்கிறது!!
ReplyDeleteரீடரில் படிச்சதால் தொடர்ந்து கமென்ட் இட முடியல ..
ReplyDeleteஅழகா எளிமையா கொண்டு போன விதம் அருமை :-)
மனதுக்கு நிறைவு தந்த வாரம்... நல்ல அறிமுகங்கள் - அறிமுகம் செய்த விதமும் நன்றாக இருந்ததும்மா.....
ReplyDeleteமுகுந்த் அம்மா, உங்கள் பதிவு இந்தக் காலக் கட்டத்துக்கு மிகவும் தேவையான் பதிவு இல்லையா!
ReplyDeleteநான் தான் நன்றி சொல்லவேண்டும்.
வாரம் முழுவதும் வந்து உற்சாகப் படுத்தி பின்னூட்டங்கள் அளித்த உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி,தொடர் வருகை தந்து பின்னூட்டங்கள் மூலம் ஊக்கபடுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி உங்கள் வாழ்த்துக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
ReplyDeleteவிச்சு , உங்கள் ரசனைக்கு நன்றி.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteநீங்கள் கொடுத்த பொறுப்பை நிறைவு செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
ஆசியா, வாரம் இனிதாக கழிய உங்கள் எல்லோர் ஆதரவும்தான் காராணம் உங்களுக்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் தொடர் வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.
ReplyDeleteஜெய்லானி , உங்கள் பாரட்டுக்கு நன்றி.
ReplyDeleteவெங்கட், உங்கள் பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteஅருமை.... அருமை.... கலாச்சாரம் பற்றி உரைத்து, குழந்தைகளை வாழ்த்தி, திட்டமிடச் செய்து, உறவுகளைப் பேணும் வழி உரைத்து, சண்டையிடவேண்டாமென்று அறிவுறுத்தி, வாழையிலையில் விருந்திட்டு, வெற்றிலைத் தாம்பூலம் தரிக்கச் செய்து, கூடவே கைகளில் அழகிய மருதாணியிட்டு பொங்கல் வாழ்த்தினையும் கூறி வழியனுப்பிவைத்த விதம் பிரமாதம். இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteகீதா, நான் வழங்கிய பதிவுகளை அழகாய் தொகுத்து வாழ்த்து சொன்ன உங்களுக்கு என் மனநிறைவான வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகச் சிறத்த பதிவுகளை அழகுற தொகுத்து பயனுற தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநல்ல தளங்களின் அறிமுகத்துடன் இன்றைய நாளைத் தொடக்கி வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteஇனிய வாரம்.
பொங்கல் வாழ்த்துடன் எங்களுக்கும் மனம் நிறைந்துள்ளது.
நன்றி மாதேவி.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தங்கள் பணியை சீரிய முறையில் திறம்பட செய்தீர்கள். நன்றாய் இருந்தது உங்கள் தொகுப்பு
ReplyDeleteநன்றி கடம்பவன குயில்.
ReplyDeleteThank you very much.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி சிதரா.
ReplyDelete