07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 13, 2015

நானென்ற நான்

அனைவருக்கும் வணக்கம் .

என்னைப்பற்றி பெரிதாக கூற என்ன இருக்கிறது என்று நானே எனக்குள் கேட்டுக்கொண்ட பொழுது கிடைத்த விடை ஒன்றுமில்லை . நான் மெக்னேஷ் ; தாய் , தந்தைக்கு தலைமகன் .சிறுவயதுமுதலே இசையிலும்இயற்கையிலும் காலம் தள்ளியவன் .எனக்குள் வாசிப்பு எனும் பேரனுபவத்தை விதைத்தவர் திரு.கல்கி .அவரின் புத்தகங்களில் ஆரம்பித்த என் வாசிப்பு பயணம் லாஸ்ட் பாரடைஸ் வரை விரிவடைந்துள்ளதை நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது .சென்னையில் படிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களும் சந்தித்த மனிதர்களின் கலவையாகவும் நான் இருக்கிறேன் .அப்போது ஏற்பட்ட பழக்கங்களால் சினிமாவின் அறிமுகம் . தொடர்ந்தாற்போல் சினிமாவையும் இலக்கியத்தையும் இருகண்களாக நேசிக்க ஆரம்பித்தேன் . காதலை எக்கணமும் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .இயற்கையோடு இயைந்து வாழவேண்டும் என்ற பழந்தமிழரின் வார்த்தைகளை பெரிதும் மதித்து வருகிறேன் .விமர்சன உலகம் , TNPSC உலகம் என்ற இரு வலைத்தளங்களில் எழுதிவருகிறேன் .என்னுடைய பேரவாக்களில் ஒன்று எப்பாடு பட்டாவதும் ஒரே ஒரு பதிவிலாவது சந்திப்பிழையின்றி எழுதவிடவேண்டும் என்பதுதான் .

என்னுடைய பதிவுகளை பெரும்பாலும் ஒரேமாதிரியான டெம்ப்ளேட்களில் எழுதுவது எனக்குப்பிடிக்காது . சினிமா விமர்சனம் என்றாலும் சரி ; சிறுகதை , தொடர்கதை என்றாலும் சரி . ஒவ்வொன்றும் முடிந்தவரை வித்தியாசமாக எழுத முயற்சித்து வருகிறேன் .இதுவரை விமர்சன உலகம் தளத்தில் 12 சிறுகதைகளை எழுதியிருக்கிறேன் .இவற்றுள் பூமி, தடம் மாற்றிய பண்டிகை ஆகியவை சயின்ஸ் பிக்சன் ஜானர்களிலும் , போனிஸ்ம் , பேய்க்கதை என்பவை பேன்டசியிலும்ராசாத்தி , கெட்டவார்த்தை ஆகிய கதைகள் காதல் ஜானரிலும் , வதந்திகள் , மடச்சாம்பிராணி , பாஸ்போர்ட் ஆகிய கதைகள் ஜாலியான ஒரு குட்டி சர்ப்ரைஸ் கதைகளாகவும் எழுதியுள்ளன் .இவை தவிர கில்மா எனும் க்ரைம் கதையும் முயற்சித்திருக்கிறேன் . என்னுடைய சிறுகதைகளிலே மிகப்பெரும் அடையாளமாய் இருப்பது மீண்டும் ஒரு காதல் எனும் சிறுகதை தான் .இது குறும்படமாகவும் இயக்கப்பட்டு நாளைய இயக்குனரில் வெளிவந்தது தனிக்கதை .ஆனால் நான் எழுதிய  சிறுகதைகளில் பெஸ்டாக நினைப்பது நினைவுகள் எனும் நான்-லீனியர் சிறுகதையைத் தான் .

தொடர்கதைகளில் பயணம் @ டைம் மெஷின் எனும் முடிவு பெறாத சயின்ஸ் , பேன்டசி , ஹிஸ்டரிக்கல் என்று எல்லா ஜானர்களையும் கலந்து எழுத ஆரம்பித்தேன் . இதுதான் என் முதல் தொடர்கதை . விளையாட்டாக இரு பாகங்களில் முடிக்கவேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்த அத்தொடர்கதை , வாசகர்களின் ஆதரவினால் இழுத்துக்கொண்டே சென்றது . ஒரு கட்டத்தில் 12 பாகங்களை முடித்த பின் எனக்குத் தோன்றிய விஷயம் , இப்படி ஒரு அமெச்சூர்டானா தொடர்கதையா ? என்பதுதான் . அதனால் தற்காலிகமாக அத்தொடர்கதையை நிறுத்திவைத்துள்ளேன் . மீண்டும் ரீபூட் செய்யவேண்டும் என்ற ஆசை மனதினுள் உள்ளது . ஒரு ட்ரீம் ப்ராஜக்டாக இப்போது எனக்குள் தோன்றுவது இந்த சீரிசை ரீபூட் செய்வதுதான் .வலையுலகில் தொடர்கதைகளுக்கு மவுஸ் கிடையாது என்ற என் எண்ணத்தை முதலில் தகர்த்தெறிந்தது இத்தொடர்கதைதான் .இதன்பின் எழுத ஆரம்பித்த தொடர்கதைதான் காதல் காதல் .இது 4 பாகங்களில் எழுதி முடித்து விடலாம் என்று ஆரம்பித்து ஒரே நாளில் 8 பாகங்களாக எழுதிமுடித்தேன் . நான் கனவிலும் நினைத்துப்பாறாத ஹிட்ஸ்களை வழங்கியது . சில வாசகர்களின் வாழ்த்தும் இத்தொடர்கதையால் கிடைத்தது.FREE TAMIL BOOKS எனும் இலவச  இணைய புத்தக சைட்டிலிருந்து தொடர்பு கொண்டிருந்த திரு.சீனிவாசன் அவர்களின் முயற்சியினால் இத்தொடர்கதை ஒரு குறுநாவல் மின்னூலாக இணையத்தில் உலவி வருகிறது . மேலுஉம் என்னுடைய சிறுகதைகளும் , தொடர்கதைகளும் பெரும்பாலும் சேலம் சார்ந்ததாகவே இருக்கும்; வேறென்ன காரணம் ? எல்லாம் ஊர்ப்பெருமையை நிலைநாட்டவேண்டும் என்ற கொள்கைதான் .

அடுத்து சினிமா விமர்சனங்கள் . வலைப்பதிவு தொடங்கிய நேரத்தில் சிறுகதை மட்டும் எழுதலாம் என சிறுகதைச்சாரல் என்ற பெயரில் வலைத்தளத்தை ஆரம்பித்திருந்த எனக்கு , திரு.சிவகாசிக்காரன் அவர்களின் அறிவுரையினால் சினிமா விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தேன் . ஆனால் இன்று , நான் ஒரு கதைசொல்லியாக அறியப்படுவதை விட சினிமா விமர்சகராகத்தான் இணைய வெளியில் அறியப்படுகிறேன் . நாம் ஒன்று நினைத்தால் , தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது இதுதான் .விமர்சனங்களுக்கிடையில் நான் எழுதிய கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் குறித்த அலசல் விரைவில் மின்புத்தகமாக வெளிவர இருக்கிறது . தமிழ் ஜில்மோரில் இக்கட்டுரைகள் பகிரப்பட்டு வருவதும் கூடுதல் சந்தோஷம் . மேலும் ப்ரதபிலி இணையத்திலும் கூடிய விரைவில் இக்கட்டுரைகள் இடம்பெற உள்ளது .இது தவிர்த்து டேரன் அர்வனாஸ்கி , ஸ்பில்பெர்க் , ஆகியோரது படங்களைப்பற்றிய கட்டுரைகளையும் எழுதி வருகிறேன் . என் விமசனங்களில் எனக்குப் பிடித்தது ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் , தி டார்க் நைட் , தி டாபார்ட்டட் , தி ஃபவுன்டெய்ன்  , REQUIEMFOR A DREAM.

இது தவிர்த்து எப்போதாவது சமூகத்தின் மீது அக்கறை வந்தாலோ , எனக்குத் தெரிந்த சில விஷயங்களையோ கட்டுரைகளாக எழுதிவருவேன் . அவற்றில் குறிப்பிடத்தக்கது என்றால் மீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும் , கான்னாபிஸ் சாடிவாவும் சில உண்மைகளும் , பகல்கொள்ளையில் பார்மாகம்பெனிகள் போன்ற கட்டுரைகளாகும் .இதுதவிர அவ்வப்போது என் அனுபவங்களையும் எழுதி வருகிறேன்என்னுடைய மற்றொரு தளமான TNPSC உலகம் , தமிழ்நாடு தேர்வானைய வாரியத்தின் வேலைகளுக்காக படிக்கும் என் போன்றோர்க்கொரு ஒரு அடிப்படையான தளமாக செயல்பட்டு வருகிறது .

சரி ,சரி ! புரியுது . ஒன்னுமே இல்லனு இவ்வளோ எழுதிருக்க கூடாது தான். நான் யாரென்று வெளிப்படுத்திக் கொள்ள இதை விட ஒரு நல்ல வாய்ப்பு கிட்டாதல்லவா ! அதான் .

இனிவரும் நாட்களில் முடிந்தவரை சிறப்பான முறையில் எனக்குக் கொடுக்கப்பட்ட இவ்வாய்ப்பினை பயன்படுத்தி என்னையும் , எனக்குத் தெரிந்த பதிவர்களையும் முடிந்தவரை சிறப்பாக அறிமுகப்படுத்துவேன் என்றும் வாய்ப்பு வழங்கயுள்ள திரு.சீனா ஐயாவிற்கும் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டும் பணியைத் துவக்குகிறேன் .


பின்குறிப்பு என்னுடைய லேப்டாப்பில் ஏற்பட்ட டிஸ்ப்ளே பிரச்சனை காரணமாக என்னால் சில நேரங்களில் மறுமொழியிட முடியாமல் போகலாம். தயைகூர்ந்து பொறுத்தருளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் கருத்துரை இடுபவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவானாகவே இருப்பேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

27 comments:

  1. வணக்கம்,
    தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துகளுக்கும் வரவேற்பினுக்கும் என் மனமார்ந்த நன்றி அக்கா !

      Delete
  2. தங்களுக்கு நல்வரவு!..

    தங்களுடைய பணி சிறக்க நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவேற்பிற்கு என் நெஞ்சங்கனிந்த நன்றிஐயா!!!

      Delete
  3. வாழ்த்துக்கள் நண்பரே! சிறப்பான சுய அறிமுகம்! நாளை சந்திப்போம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தங்கள் போன்ற பெரியவர்களிடம் கற்றுக்கொண்டது அண்ணா . நன்றி

      Delete
  4. முதன் முதலாக உங்கள் தளம் பற்றி அறிந்தேன் வாழ்த்துக்கள் ஆமாம் ஜானர் என்றால் என்ன.?

    ReplyDelete
    Replies
    1. மெக்னேஷ் திரு முருகன் அவர்களின் மடிக்கணினியில் உள்ள சிறு கோளாறு காரணமாக பின்னூட்டம் இடுவது கடினம் என சொல்லியிருப்பதால் தங்களின் ‘ஜானர்’ என்றால் என்ன என்ற கேள்விக்கு நான் பதில் தந்தால் அவர் என்னை தவறாக எண்ணமாட்டார் என எண்ணுகிறேன். ஆங்கிலத்தில் GENRE என்பதை zhahn-ruh (ஜானர்) என்று உச்சரிக்கவேண்டும் அதற்கு பொருள் படைப்பு வகை என்பதாகும்.

      Delete
    2. நன்றி பாலசுப்ரமணியன் ஐயா ! எனக்கு Genre என்பதை ஜானர் என்று ஒலிக்கவேண்டும் என்றே தெரியும் . ஆனால் நடனசபாபதி அண்ணா கூறிய பின் தான் இதன் பிண்ணனியில் இவ்வளவு விடயங்கள் உள்ளதென்றே தெரியும் . மிக்க நன்றி அண்ணே !!!

      Delete
  5. சுருக்கமாக, அதுவும் உண்மையைச் சொல்லியுள்ளீர்கள்... மின் நூல், பல தளங்களிலும் வரப் போவதை குறித்து மகிழ்ச்சி தம்பி... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தாங்கள் கொடுத்த ஊக்கம் தான் அண்ணே ! மிக்க நன்றி அண்ணே

      Delete
  6. உன்னைப் பத்தி தெரிஞ்சிருந்தாலும் இந்தப் பதிவு மூலமா நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.. மெக்...

    ReplyDelete
    Replies
    1. போக போக நிறைய தெரிஞ்சிப்பிங்க குருநாதா !!!

      Delete
  7. உங்களைச் சிலதளங்களில் பின்னூட்டங்களில் பார்த்திருக்கின்றோம். ஆனால் தளம் வர இயலவில்லை. நேரம்தான் காரணம் அல்லாமல் வேறு இல்லை. இனி தொடர நினைக்கின்றோம் ....தங்களையும், வாழ்த்துகள்,...

    ReplyDelete
    Replies
    1. ஹா தொடர்கிரேன் என்ற தங்களின் கூற்று என்னைப் பேருவுவகைக்காட்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை அண்ணா . நானும் தங்களின் பெரும்பான்மையான பதிவுகளை சுவாசித்திருக்கிரேன் . பின்னூட்டமிட வசதியில்லாத காரணத்தால் என்னை தங்களிடம் நேரடியாக அறிமுகப்படுத்த முடியவில்லை . ஆனால் வலைச்சரம் அந்த வரத்தை அளித்திருக்கிறது . மிக்க நன்றி அண்ணா

      Delete
  8. வருக வருக ! தம்பி :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் அக்கா ! நலமா! தங்களை கடைசியாக மாணவர்களிடையே பரவும் போதைப்பழக்கங்கள் பற்றிய சமூகசார் பதிவில் சந்தித்தது . மீண்டும் சந்திப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது . தம்பிக்கு உறுதுணையாய் இருந்து வழிநடத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  9. அறிமுகம் அருமை. பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா !!! தங்களைப்போன்றோரின் சந்திப்பைப் பெறவே ஆஞ்டவன் இங்கு கொண்டு வந்து என்னைச்சேர்த்தது போலிருக்கிறது

      Delete
  10. பன்முகத் திறமை கொண்ட மெக்னேஷ் திரு முருகன் அவர்களை வரவேற்று இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பன்முகப்பதிவர்களின் சாயம் என்று சொல்லுங்கள் அண்ணா ! ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொண்டவைகளின் மறுபிரதியாய் தான் நானிருக்கிரேன் . வாழ்ழிற்கும் வரவேற்பினுக்கும் நன்றி அண்ணா

      Delete
  11. தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளால் எம்மை வாழவைத்ததற்கு நன்றி அக்கா !!

      Delete
  12. வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது