07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 12, 2015

சிதறிய முத்துக்களை கோர்க்கின்றேன்!

சிதறிய முத்துக்களை கோர்க்கின்றேன்!
நண்பர்களே வணக்கம்! நன்றி கூறி முடித்துவிட்டாலும் இரவெல்லாம் தூக்கம் சிறிதும் பிடிக்கவில்லை! என் தொகுப்பில் சிலர் விடுபட்டுவிட்டார்கள் என்ற வருத்தம்தான். பூக்களை எப்படித்தான் கோர்த்தாலும் சில பூக்கள் சிதறிவிடும் மிகுந்துவிடும் அல்லவா? அப்படி வலைச்சரத்தில் பதிவு முத்துக்களை கோர்க்கையில் விடுபட்ட  முத்துக்கள் சில. அவற்றினை மீண்டும் எடுத்துக் கோர்க்கின்றேன்.  

வலையில் எழுதுபவர்களுக்கு பின்னூட்டங்கள் முக்கியம் என்று சொல்லியிருந்தேன். அதே சமயம் சில பின்னூட்டங்கள் எரிச்சல் ஊட்டும். நம்மை வெறுப்பேற்றுவதற்கு என்றே முகவரியில்லாமல் வந்து தொல்லை செய்வார்கள். அவர்களின் கருத்துக்கள் ஏற்புடயைதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வம்பு இழுக்க வேண்டும் என்று வந்தால் என்ன செய்வது?
  உங்கள் பிளாக்கர் செட்டிங்ஸ் சென்று கமெண்ட் பார்மில் மட்டுறுத்தல் செய்துவிடுங்கள். இனி எந்த பின்னூட்டமாயினும் உங்கள் அனுமதியின்றி வெளியாகாது. இதனால் சர்ச்சையான பின்னூட்டங்கள் நமது வலையில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும்.

   அதே போல பின்னூட்டத்தில் வாசகர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனேனில் இது உங்கள் வலைப்பூ. வாசகர்கள் சொல்வதில் அவசியமானது, உங்களுக்கு உதவக்கூடியது மட்டுமே நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு  செயல்பட ஆரம்பித்தால் யாரையும் திருப்தி செய்ய முடியாது. இது உங்கள் தளம் எனவே அதில் உறுதியாக இருங்கள்.  

 பதிவுகள் எழுதுகையில் பத்தி பிரித்து எழுதுங்கள் போதுமான இடைவெளி விடுங்கள். மிகச்சிறியதான எழுத்துருவில் எழுதாமல் நார்மல் வியுவில் எழுத்துரு அமைத்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும். எழுத்துக்களை போல்ட் செய்து லைட் பிளாக் கலரில் பதிவிடுங்கள், முக்கியமான ஒன்று பதிவுகளில் தேவையற்ற ஆங்கிலக் கலப்பை செய்யாதீர்கள். முடிந்தவரை தமிழில் சுவையாக எழுதுங்கள். உங்கள் வலைப்பூ மிளிரும். ஒளிரும். .

  

1.   விமலன் சிட்டுக்குருவி என்ற தளத்தில் எழுதி வருகின்றார். எளிமையான நடையில் வாழ்க்கைச்சம்பவங்களை விவரிப்பது இவருக்கு கைவந்த கலை இதோ  வாட்டர் டேங்க்
2.   தென்றல் என்ற தளத்தில் எழுதி வரும் ஆசிரியை கீதா அவர்களின்  இந்த கேள்விக்கு  பதில் தெரியுமா? 
3.   அலையல்ல சுனாமி என்ற தளத்தில் எழுதிவரும் விச்சு அவர்கள் சாணி வண்டின்   கதையைக் கூறுகின்றார்.
4.   வாசகர் கூடம் தளத்தில் பதிவர்கள் அழகாக தாம் படித்த நூல்களை   விமர்சனம் செய்கின்றார்கள்.  பதிவர்கள்.  
5.   மனதில் உறுதி வேண்டும் தளத்தில் மணிமாறன் நகைச்சுவைத் ததும்ப எழுதுகின்றார். இவரது   சப்பாத்தியை ஓட்டைப்போடுவது எப்படி? 
6.   மதியோடை தளத்தில் மதிசுதா எழுதிய   குறியீட்டுசினிமா குறித்து படித்துப் பாருங்கள். 
7.   இளையநிலா தளத்தில் சகோதரி இளமதி அவர்களின் கவிதைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் தற்சமயம் உடல்நலம் குன்றியிருக்கும் இவர் மீண்டுவர வாழ்த்துவோம்!   அன்னையிட்ட தீ இது  
8.   அருணா செல்வம் தமது தளத்தில்   அழுகைவருவது பற்றி கூறுகின்றார் 
9.   ஒரத்தநாடு கார்த்திக் தம்முடைய தளத்தில் மின்நூல்களை பகிர்கின்றார். தற்சமயம்   பூந்தளிர் காமிக்ஸ்களை பகிர்ந்து நம்மை சிறிய வயதுக்கு அழைத்துச்செல்கின்றார் 
10. அமுதவன் பக்கங்களில் எழுதிவரும் எழுத்தாளர் அமுதவன்   சிவக்குமாரை பற்றி எழுதியுள்ள கட்டுரை இது 
11. ஓர் ஊழியனின் குரல் என்ற தளத்தில் எழுதிவரும் எஸ்.ராமன் தான் பார்த்த ஒரு   சம்பவம் பற்றி எழுதுகின்றார் 
12.  கும்மாச்சி என்ற தளத்தில் எழுதி வரும் கும்மாச்சி அரசியல் நையாண்டிகள் செய்வதில் சமர்த்தர் கலக்கல் காக்டெயில் இவரது டிரேட்மார்க்   
13. கே.பி. ஜனா  தன் தளத்தில் நல்லதா நாலு வார்த்தை என்று பொன்மொழிகளை பகிர்வார்   அன்புடன் ஒரு நிமிடம் என்று ஆலோசனைகள் வழங்குவார்  
14. சித்தர்கள் ராஜ்யம் என்ற தளம் அருமையான சித்தமருத்துவக் குறிப்புக்கள்மாதிரிக்கு   
15. தமிழ்நேசன் மின் நூலகம் என்ற தளத்தில் மின் நூல்களை தருகின்றார்   தமிழ்நேசன் மின் நூலகம்.  
16.  இல.விக்னேஷ்  சுயம்பு என்றபெயரில் வலைப்பூ எழுதுகின்றார்   விலை ஆண்கள் பற்றி இங்கே சொல்கின்றார் 
17. அரங்கேற்றம் தளத்தில் எழுதிவரும் பி.எஸ்.டி பிரசாத் நகைச்சுவை ததும்பும் பதிவுகள் தருபவர். ஒரே நாளில் எத்தனை   டெலிவரி இவருக்கு! 
18. உஷா அன்பரசு வேலூரில் இருந்து எழுதும் பதிவரான இவர் பிரபல் எழுத்தாளர். தினமலர் பெண்கள் மலரில் இவரது படைப்புக்கள் பலதும் வெளிவந்துள்ளது.   பாதைகள் காட்டுகின்றார் இங்கே! 
19. என் கணேசன் தனது தளத்தில் ஆன்மீகம் சம்பந்தமான தகவல்களை பகிர்கின்றார். இவரது தொடர்கதை பெரும் வரவேற்பு பெற்றது. இருந்தும் இல்லாமலும்   இறைவன்
20. கற்றலும் கேட்டலும் என்ற வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி ராஜி அருமையாக கதைகள் எழுதுவார்.   தொப்பை யை குறைக்க என்னவழி இங்கே பாருங்கள்! 
21. கலியுகம் என்ற தளத்தில் 2010 முதல் எழுதிவரும் தினேஷ் குமார் பஹ்ரைனில் வேலை செய்கின்றார் இவரது கவிதைகள் இலக்கிய ரகம் இதோ உத்தம உருவிது  
22. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்ற தளத்தில் எழுதும் குட்டன் நகைச்சுவை ததும்ப எழுதுவார்   பணமே மதம் என்கிறார் 
23. கே.ஆர்.பி. செந்தில் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதும் எழுத்துக்கள் அசத்தல் ரகம். இதோ   இரவுகளின் இசை 
24. பஜ்ஜிக் கடை என்ற தளத்தில் எழுதிவரும் முத்தரசு    தொட்டால் தொடரும் என்கின்றார்
25. திருமதி பக்கங்களில் எழுதி வரும் கோமதி அரசு கோயில்களுக்கு சென்றுவந்ததை சுவைபட பகிருவார்   தேடிவந்த பறவைகள் இங்கே 
26. புதுகைத் தென்றல் தம் தளத்தில் தன் மகளுக்கு   டியுசன் ஏற்பாடு செய்தது பற்றி பகிர்கின்றார் 
27. பெண் என்னும் புதுமை தளத்தில் எழுதும் கோவை.மு.சரளா   தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றி கூறுகின்றார் 
28. முத்துச்சரம் என்ற தளத்தில் சகோதரி ராமலஷ்மி புகைப்படங்களை அழகாக பகிர்வார்   போர்ட்ரெய்ட்என்றால் என்ன? கற்றுத்தருகிறார் 
29. சீனி கவிதைகள் தளத்தில் எழுதி வரும் சீனி என்னை  மன்னித்துவிடுங்கள்  என்கின்றார்
30. தூரிகைச்சிதறல் தளத்தில் கவி காயத்ரி கவிதை மழை பொழிகின்றார். இதோ   மவுனத்தை நோக்கி
31. ஹிஷாலியின் கவித்துளிகள் தளத்தில் எழுதும் ஹிஷாலி குட்டிக்கவிதைகள் நிறைய எழுதுவார் இதோ உலகமே   இருண்டிருக்கும்என்கிறார். 
32. மணவை என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர் மணவை ஜேம்ஸ் தமிழார்வலர். சிறுகதைகள் சிறப்பாக எழுதுவார். இவரது ஒரு சிறுகதை ஒரு   பார்வையின் மவுனம்
33. சும்மா என்ற தளத்தில் எழுதிவரும் தேனம்மை லட்சுமணன்   கோடை விடுமுறை குறித்து எழுதுகின்றார்  
34. பிரபல பதிவர் நாஞ்சில் மனோ தற்போது அதிகம் எழுதுவது இல்லை. பெண்களின்   சின்ன சின்னஆசைகள் பற்றி இங்கே 
35. மாணவர் உலகம் என்ற தளம் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றது. இதோ ஓர்   மாணவனின் படைப்புக்கள்
36. எண்ணிய முடிதல் வேண்டும் என்ற தளத்தில் எழுதி வரும் ஷைலஜா நாலயிரத்தை மீட்ட   நாதமுனிகள் குறித்து பகிர்கின்றார் 
37. சங்கவி என்ற தளத்தில் எழுதிவரும் சதிஷ் சங்கவி சுவையான பதிவுகள் எழுதுவார்.  பயணமும்   சுவையும் இதோ
38. காஷ்யபன் என்ற தளத்தில் எழுதும் காஷ்யபன் மூத்த பதிவர் இவரது பதிவு  ஒன்று உங்கள் பார்வைக்கு
39. ஹரணி பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வரும் எழுத்தாளர் ஹரணியின்   பத்தி வாசனை இது 
.40.ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற தளத்தில் எழுதி வரும் வருண் பின்னூட்டங்களில் விவாதம் செய்வதில் மன்னர். மேகி நூடுல்ஸ்  பற்றிய இவரது பதிவு  வாசித்து பாருங்கள் 
41.  சேட்டைக்காரன் நகைச்சுவை பதிவுகளில் கில்லாடி! இவரது நூல் ஒன்றும் வெளியாகி பாராட்டுதல்கள் பெற்றுள்ளது. இவரது இந்த கிட்டாமணியின்   கிப்ட் வவுச்சர் படித்து சிரியுங்கள் 
42. மனோசாமிநாதன். முத்துச்சிதறல் கைமணம் என்ற இரண்டு வலைப்பூக்களில் தன் சிந்தனைகளை பகிர்கின்றார். முத்துச்சிதறல் வலைப்பூவில் இவர் வரைந்த   பிரபலங்களின்ஓவியங்கள் ஆட்டோகிராபுடன் 
43.தஞ்சையம்பதி தளத்தில் எழுதும் நண்பர் துரை செல்வராஜ் ஆன்மீக கருத்துக்கள் பகிர்வார்   இதுவா மானிடம் என்று கேட்கிறார் 


இன்னும் எத்தனையோ முத்துக்கள் இணைய வெளியில் சிதறி இருக்கலாம்! என் கண்ணுக்கு தென்பட்ட முத்துக்களை வலைச்சரத்தில் கோர்த்து அழகு சேர்த்தேன்! இந்த முத்துக்களில் குளித்தெழுங்கள்! உங்களை புத்தாக்கம் செய்திடுங்கள்! வாழ்த்துக்கள்.

ஒரு வார காலமாய் என் பதிவுகளை நீளம் அதிகமாக இருந்தாலும் படித்து பாராட்டியும் ஆலோசனைகள் வழங்கியும் உதவிய வலைச்சர வாசகர்கள் நண்பர்கள் வலைச்சர குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். காலம் ஒத்துழைத்தால் மீண்டும் ஒரு சந்தப்பத்தில் வலைச்சரத்தில் சந்திப்போம்! நன்றி! 

57 comments:

  1. தமிழ்ப் பதிவர்களின் அகராதி ஒன்று உங்கள் வசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    அவற்றின் சில பக்கங்களை இந்த வாரம் முழுவதும் எங்களுக்கு அறியத் தந்தமைக்கு மிக நன்றி.

    ஆசிரியரின் கடமைகளில் மிக முக்கியமானது அறிந்த ஒரு விடயம் பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்திகளைத் தருதல்.

    ஏனெனில் புத்தகச் செய்திகள் வரம்பும் வரையறையும் உடையவை.

    நீங்கள் உங்களின் ஆசிரியப் பணிக்கு நியாயம் செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    இத்தனைப் பதிவுகளையும் பார்க்கின்றீர்கள் தொடர்கின்றீர்கள் என்றால், நிச்சயமாய் பல்துறைப் புலமை பெற வேறெதுவும் வேண்டியதில்லை.

    சீரிய பணிக்குப் பாரட்டும் வாழ்த்தும்.

    எடுத்த பணி முடித்த “மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் ” இல்லம் திரும்பட்டும்.

    தளிர் காத்திருக்கிறது.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உருவாக்கம் ஆகிக்கொண்டிருக்கிறது அடுத்த ஞாயிறன்று பதிவாகுவான் என்று நினைக்கிறேன்! நன்றி!

      Delete
    2. சித்தர் அற்புத மூலிகை = சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம் இதிலிருந்து முற்றிலும் விடுதலை !
      "சர்க்கரை வில்வம்"(call-9003143304—9488828315) மூலிகை, சித்தர்கள் காட்டில் தவம் செய்யும் போது தாகம், பசி எடுக்காமல் இருக்க சாப்பிடும் காய சித்தி மூலிகை,,இது இனிப்பு,கசப்பு,துவர்ப்பு ,காரம்,உப்பு,புளிப்பு,என்ற 6 சுவை உடையது, இதை தூள் செய்து பாலில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் 48 நாட்களில் குணமாகும் ,நரம்புகள், உறுதியாகும், இது உங்களுக்கு வேண்டுமா?call=9003143304--9488828315..

      Delete
    3. சித்தர் அற்புத மூலிகை = சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம் இதிலிருந்து முற்றிலும் விடுதலை !
      "சர்க்கரை வில்வம்"(call-9003143304—9488828315) மூலிகை, சித்தர்கள் காட்டில் தவம் செய்யும் போது தாகம், பசி எடுக்காமல் இருக்க சாப்பிடும் காய சித்தி மூலிகை,,இது இனிப்பு,கசப்பு,துவர்ப்பு ,காரம்,உப்பு,புளிப்பு,என்ற 6 சுவை உடையது, இதை தூள் செய்து பாலில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் 48 நாட்களில் குணமாகும் ,நரம்புகள், உறுதியாகும், இது உங்களுக்கு வேண்டுமா?call=9003143304--9488828315..

      Delete
  2. சிதறிய முத்துக்களையும் எடுத்துக் கோர்த்து வலைச்சரத்திற்கு மாலையாக அழகு சேர்த்திருக்கின்றீர்கள்!..

    அதனுள் தஞ்சையம்பதியையும் கண்டேன்.. மகிழ்ச்சி!..

    பாராட்டத்தக்க பணி தங்களுடையது..

    வாழ்க நலம்..
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! உங்கள் தளம் இத்தனை நாளாய் தொகுப்பில் இடம்பெறாது போனது எனது மறதியினால் முதல் நாளே இடம்பிடித்திருக்க வேண்டியது. இன்றும் கடைசியாக சேர்த்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்!

      Delete
    2. தங்களின் அன்பு என்னை நெகிழச் செய்கின்றது..

      என்றென்றும் வாழ்க அன்பின் நெஞ்சம்!..

      Delete
    3. சித்தர் அற்புத மூலிகை = சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம் இதிலிருந்து முற்றிலும் விடுதலை !
      "சர்க்கரை வில்வம்"(call-9003143304—9488828315) மூலிகை, சித்தர்கள் காட்டில் தவம் செய்யும் போது தாகம், பசி எடுக்காமல் இருக்க சாப்பிடும் காய சித்தி மூலிகை,,இது இனிப்பு,கசப்பு,துவர்ப்பு ,காரம்,உப்பு,புளிப்பு,என்ற 6 சுவை உடையது, இதை தூள் செய்து பாலில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் 48 நாட்களில் குணமாகும் ,நரம்புகள், உறுதியாகும், இது உங்களுக்கு வேண்டுமா?call=9003143304--9488828315..

      Delete
  3. அருமையான தொகுப்பு இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். மீண்டும் தளிர் தளத்தில் சந்திப்போம்.

    ReplyDelete
  4. ஒரே நாளில் கிட்டத்தட்ட 100 பதிவர்களின் பதிவுகளை ஒரு தொகுப்பாக இங்கே குறிப்பிட்டு இருப்பது ஆச்சரியம்... எவ்வளவு நேரம் இதற்காக செலவிட்டு இருப்பீர்கள் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது நண்பரே. பாராட்டுகள். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! இன்று இந்த இரண்டு பதிவுகளுக்கு மட்டும் நேற்றும் இன்றுமாய் ஒன்பது மணி நேரங்கள் செலவிடப்பட்டுள்ளது. இது ஒரு தகவலுக்காகத்தான்! எடுத்த பணியை சிறப்பாக செய்யவேண்டும் நல்ல பதிவுகள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்ற ஓர் ஆர்வமே வீட்டையும் கொஞ்சம் மறந்து இந்த பணியை செய்யத் தூண்டியது. வீட்டுப்பணி, கோயில் பணி இரண்டுமே கொஞ்சம் தாமதமாக செய்தாலும் இதற்கு ஒத்துழைப்பு தந்த மனைவி, பெற்றோர், குழந்தைகள் அனைவருக்கும் இந்த பெருமை சேரும்.

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    ‘சிதறிய முத்துக்களை கோர்க்கின்றேன்!’ என்றவுடன் என் சிந்தையில் தோன்றியது...

    வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?

    மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
    அறத் திகழும் ஏகாந்த
    இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
    கோக்கவே?'" என்றான்;
    திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
    சென்று, செஞ்சோற்றுக்
    கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

    தருமமும்!'

    -துரியோதனன் தன் மனைவி மேல் வைத்த நம்பிக்கையும், தன் நண்பன் கர்ணன் மேல் வைத்த நம்பிக்கையும் ஒளிர் விடுகிறது.

    “தன் நண்பன் மேல் வைத்த நம்பிக்கை”


    சிப்புக்குள்ளே முத்து வச்சு
    உன்னை தந்த அப்பா கண்ணே
    சிப்பியிலும் தங்க சிப்பி
    உன்னை பெத்த அம்மா கண்ணே
    நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
    கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா

    ஆழக்கடலில் தேடிய முத்து
    ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
    எங்க ராஜாக்கண்ணு
    ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
    ஆழக்கடலில் தேடிய முத்து
    ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு

    -முத்தான இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

    நீங்களும் ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு - என்று சொல்லக்கூடிய அளவிற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று மிகமிக அருமையாக செயல்பட்டிருக்கிறீர்கள்... பாராட்டுகள்... வாழ்த்துகள்.

    எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன். அதனால் பின்னூட்டம் இடுவதும்... பதிவுகள் எழுதுவதும் தற்பொழுது இயலவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னையும் மதித்து தாங்கள் வலைச்சரத்தில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘ஒரு பார்வையின் மௌனம்’ சிறுகதையோடு எனது வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    த.ம. 4.


    ReplyDelete
    Replies
    1. உடல் நலம் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா! ஒரே கையால் தட்டச்சுவது சிரமமான ஒன்று. அதிலும் இத்தனை நீண்ட பின்னூட்டம் அளித்து என்னை கவுரவித்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
    2. சித்தர் அற்புத மூலிகை = சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம் இதிலிருந்து முற்றிலும் விடுதலை !
      "சர்க்கரை வில்வம்"(call-9003143304—9488828315) மூலிகை, சித்தர்கள் காட்டில் தவம் செய்யும் போது தாகம், பசி எடுக்காமல் இருக்க சாப்பிடும் காய சித்தி மூலிகை,,இது இனிப்பு,கசப்பு,துவர்ப்பு ,காரம்,உப்பு,புளிப்பு,என்ற 6 சுவை உடையது, இதை தூள் செய்து பாலில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் 48 நாட்களில் குணமாகும் ,நரம்புகள், உறுதியாகும், இது உங்களுக்கு வேண்டுமா?call=9003143304--9488828315..

      Delete
    3. சித்தர் அற்புத மூலிகை = சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம் இதிலிருந்து முற்றிலும் விடுதலை !
      "சர்க்கரை வில்வம்"(call-9003143304—9488828315) மூலிகை, சித்தர்கள் காட்டில் தவம் செய்யும் போது தாகம், பசி எடுக்காமல் இருக்க சாப்பிடும் காய சித்தி மூலிகை,,இது இனிப்பு,கசப்பு,துவர்ப்பு ,காரம்,உப்பு,புளிப்பு,என்ற 6 சுவை உடையது, இதை தூள் செய்து பாலில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் 48 நாட்களில் குணமாகும் ,நரம்புகள், உறுதியாகும், இது உங்களுக்கு வேண்டுமா?call=9003143304--9488828315..

      Delete
  6. அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். அறிமுகத்திற்கு மகிழ்ச்சி சகோ.

    ReplyDelete
  7. சுரேஷ் சகோ மிக மிக அருமை. 42 பதிவுகளா.. அட !

    பிரமிக்க வைக்கின்றீர்கள் !

    என்னுடைய பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றியும் அன்பும் சகோ. :)

    நன்றி வலைச்சரம். :)

    சிறப்பிடம் பெற்ற சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! இன்று மட்டும் 105 பதிவர்களை அறிமுகம் செய்துள்ளேன்! எனக்கே மலைப்பாக இருக்கிறது!

      Delete
  8. உங்கள் ஆசிரியப் பணியைக் கண்டு மலைப்பாக இருக்கிறது சகோ. எவ்வளவு தளங்களை அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்.
    வலைத்தளம் குறித்து பல விஷயங்கள்.. அழகாய் சொல்லிச் செல்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் சுரேஷ்..

    ReplyDelete
  9. அறியாமல் சிதறிய முத்துக்களையும்
    மறவாமல் எடுத்துக் கோர்த்து
    மாலையாக்கி அணிவித்துள்ளீர்கள் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. தளிர் சுரேஷ் உங்களுக்கு என்னுடைய நன்றி. மேலும் ஏற்றுக்கொண்ட கடமையைச் சரிவர செய்யவேண்டுமென்பதற்காக ஒன்பது மணி நேரத்திற்கும் மேல் இதே வேலையாய் உட்கார்ந்து முடித்துக்கொடுத்த உங்களின் கடமை உணர்வு போற்றுதலுக்குரியது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. ஸூப்பர் சுரேஷ்!

    ReplyDelete
  12. மிக்க நன்றி நண்பரே....

    என்றும் நட்புடன்
    தமிழ்நேசன்

    ReplyDelete
  13. நன்றி நண்பரே.-
    என்.கணேசன்

    ReplyDelete
  14. மிகவும் அருமையான பணி .......வாழ்த்துக்கள் ...மேலும் அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  15. அடேங்கப்பா ,இத்தனை தளங்களை இதுவரையிலும் அறிமுகம் செய்ததில்லை ,செம்மையாக செய்து விடீர்கள் உங்கள் பணியை !

    ReplyDelete
  16. தங்கள் பணியை வெகு சிரத்தையுடன் செய்துள்ளீர்கள். பலதுறைகளில் கலக்கும் தங்களின் திறமை வியக்கத்தக்கது மேலும் பல ஆலோசனைகள் வழங்கி இன்னும் உயர்ந்து விட்டீர்கள்.நன்றி வாழத்துக்கள் ...! அறிமுகங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  17. மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  18. உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    அனைத்து அறிமுக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. நண்பர் சுரேஷ்: வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.

    மிகவும் உழைத்து பல தளங்களையும் அழகாக மிகைப்படுத்தாமல் மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete
  20. சுரேஷ் அண்ணா..
    நன்றிங்க அண்ணா !

    ReplyDelete
  21. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்... என் பதிவயும் அறிமுகப்படுத்திய நண்பர் சுரேசுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  22. நன்றி தளிர் சுரேஷ் சார் வலைச்சர அறிமுகத்திற்கு/

    ReplyDelete
  23. உங்கள் அறிமுகப் பதிவுகள் அனைத்தும் மகத்தானது உங்கள் பணி போற்றத் தக்கது!

    ReplyDelete
  24. என்னையும் நினைவு வைத்து அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சுரேஷ்...அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. மன்னிக்கவும் , எனது கால தாமதமான பதிலுக்கு ,
    என்னுடைய தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தளிர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி .

    பல பதிவர்களை அறிமுகம் செய்து வைத்த தளிர் சுரேஷ் அவர்களின் பணி தொடர முடியாமல் போனதற்கு என்ன காரணமோ புரியவில்லை ?இருந்தாலும் உங்கள் பணி சிறப்பானதாக இருந்ததில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .

    என்றும் நட்புடன் ,

    ஒரத்தநாடு கார்த்திக் .

    ReplyDelete
  26. சிலமாதங்களாய் எந்த பதிவும் எழுதவில்லை, அப்படியும் என்னை நினைவுகூர்ந்து என் வலைத்தளத்தை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி தளிர் சுரேஷ்.

    வீட்டில் பேரன், என் மாமியார் வரவால் இணையம் பக்கம் வரவில்லை, வலைச்சர பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  27. அடேயப்பா எத்தனை தளங்களை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்! இதற்கு எத்தனை உழைப்பும் நேரமும் செலவாகி இருக்கும்! எத்தகைய ஆர்வமும் பொறுப்பும் தங்களுக்கு என நினைக்கும்போது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, என் வலைப்பூவினையும் இங்கே கொண்டுவந்தமைக்கு நன்றி மிக...(ஊரில் இல்லாததால் தாமத பதில் மன்னிக்க திரு தளிர் சுரேஷ்)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது