இணையக் கதம்பம் மணக்கின்றது!
➦➠ by:
தளிர் சுரேஷ்
வலைச்சரம் ஏழாம் நாள்! வலைப்பூ கதம்பம்!
அன்பார்ந்த வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்
எனது முதற்கண் நன்றிகள். ஒரு வாரகாலமாய் எனது பதிவுகளை படித்து கருத்திட்டு ஊக்கம்
வளர்த்த உறவுகளே இந்த ஒருவாரத்தில் நிறைய பதிவுகளை பல்வேறு தலைப்புக்களில் தந்திருக்கிறேன்.
நண்பர்களும் தொடர்பவர்களும் வாசிப்பவர்களும் என என் பட்டியல் பெரிது. அனைவரையும் அறிமுகம்
செய்ய ஆசைதான்! ஆனால் இடமும் நேரமும் குறைவு. எனவே அடையாளப்படுத்தப்படாத நட்பூக்கள்
மன்னித்தருள்க!
வலையில் எழுத வந்தாகிவிட்டது. பதிவும் எழுதி,
அட்டகாசமான தலைப்பும் வைத்தாகிவிட்டது. வெளியிட்ட பின் அதை திரட்டிகளிலும் இணைத்தாகிவிட்டது
அவ்வளவுதானா அடுத்த பதிவுக்கு செல்ல வேண்டியதுதான் என்று நினைத்தீர்கள் என்றால் அது
மிகவும் தவறு.
நாம் எழுதியது நமக்குச் சரியாக இருக்கலாம்!
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல நமக்கு நம் பதிவில் குறைகளே இருக்காது.
ஆனால் அதை வாசித்தவர்கள் கண்ணில் நிறைய தென்படும். பின்னூட்டங்களில் அதை தெரிவித்து இருப்பர். சிலர் பாராட்டி மட்டும் இருப்பர். முதலில்
அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். எல்லோருக்கும் எல்லா பதிவுக்கும் இப்படி நன்றி கூறிக்கொண்டு
இருக்க முடியாதுதான். ஆனால் கொஞ்சம் வலையுலகில் கால் பதிக்கும் வரையாவது இதை கடைபிடித்தல்
நலம்.
பெரும்பாலான சக பதிவர்கள் நன்றி கூட சொல்லவில்லையே
என்று எதிர்பார்ப்பார்கள்! சக பதிவர் ஸ்கூல்பையன் கார்த்திக் சரவணன் கூட இதைப்பற்றி
வலைச்சரத்தில் எழுதி இருந்தார். பிரபல பதிவர்கள் தங்களுக்கு வரும் அனைத்து பின்னூட்டங்களுக்கும்
சளைக்காமல் பதிலும் நன்றியும் தெரிவிக்கிறார்கள். அவர்களே செய்யும் போது புது நாற்றான
நாம் செய்வதில் தவறேதும் இல்லை.
பின்னூட்டங்கள் மூலம் நமது பதிவினை திருத்திக்கொள்ள
மெருகேற்றிக் கொள்ள ஓர் வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே நீங்களும் பிறருடைய தளங்களுக்குச்
சென்று கருத்திடுங்கள் உங்கள் கருத்தையும் ஆகா, அருமை வாழ்த்துக்கள் என்று சொல்லாமல்
பதிவில் நீங்கள் பெற்ற ஓர் கருத்தை சொல்லி கருத்திடுங்கள். உங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கும்
மதிப்பு கொடுங்கள்
வலைப்பூ குறித்த உங்கள் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு
இந்த தளமும் உதவும். பொன்மலர் பக்கங்கள்
தமிழ் வலைப்பூக்கள் எண்ணற்று விரிந்து கிடக்கின்றன!
நான் படித்து ரசித்து தொடர்ந்து கொண்டிருக்கும் சில வலைப்பூக்களை கதம்பமாய் இங்கே தொகுத்திருக்கின்றேன்!
1. ஊமைக் கனவுகள் என்ற தளத்தில் எழுதி வரும்
விஜி ஓர் ஆங்கில ஆசிரியர். ஆயினும் அவரது தமிழ் அறிவும் இலக்கணப் புலமையும் அபாரமானது.
ஒவ்வொரு இடுகையிலும் ஓர் புதிய தகவலை தரும் இவரது பதிவுகள் சில! பிறவிக்கோளாறுகளின் வகைகள் , வெளிநாட்டில் சம்பாதிக்க சென்றவன்
2. தேன்மதுரத் தமிழ் என்ற தளத்தில் எழுதி வரும்
கிரேஸ் பிரதிபா அவர்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்து செய்யுள் விளக்கம் தருவது அருமை!
அதற்கு இணையாக ஓர் கவிதையும் தந்து அசத்துவார். தீயில் மெழுகாய் உருகுகின்றார்
3. கி. பாரதிதாசன் ஐயா அவர்கள் தமது தளத்தில்
பல வெண்பாக்கள், மரபுக்கவிதைகளை படைக்கின்றார்.இவரது ஓரெதுகை வெண்பா
4. பாலமகி பக்கங்கள் என்ற தளத்தில் எழுதிவரும்
மகேஸ்வரி பாலச்சந்திரன் ஓர் தமிழ் பேராசிரியை. கவிதைகள் எழுதுவதோடு தமிழார்வத்தோடு
இலக்கியங்களை பகிர்கின்றார். அண்ணே கொஞ்சம் சீக்கிரம் போங்க!
5. இலக்கியம் –litereture என்ற தளத்தில் இலக்குவனார்
திருவள்ளுவன் தமிழ் இலக்கிய சுவைகளை பகிர்ந்து
கொள்கின்றார் சங்க இலக்கியங்கள் மங்கா புகழுடையன
என்கிறார் இங்கே!
6. யாழ்பாவாணன் தமிழ் வெளியீட்டகம் என்ற தளத்தில்
தமிழார்வலரும் கவிஞருமான யாழ்பாவாணன் ஊடகத்தில் தமிழை தமிழை பயன்படுத்துவது எப்படி என்று
கற்றுத்தருகின்றார்
7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் என்ற தளத்தில்
எழுதும் கவிஞர் ரூபனின் நெஞ்சை உருக்கும் கவிதை இது!
8. தமிழார்வலர் தமிழாசிரியர் முத்துநிலவன் ஐயா
அவர்களின் வலைப்பூ வளரும் கவிதை இதில் வளரும் எழுத்தாளர்களுக்கு சில அறிவுரைகள் தருகின்றார்
இங்கே!
9. தமிழா தமிழா என்ற தளத்தில் எழுதிவரும் டி.வி
இராதாகிருஷ்ணன் அவர்கள் குறுந்தொகைக்குஅழகான விளக்கம் தருகின்றார்
10. வேர்களைத் தேடி என்ற தளத்தில் எழுதிவரும்
முனைவர் திரு குணசீலன் மிகச்சிறந்த ஆர்வலர் தனித்தமிழில் திருமண பத்திரிக்கை மாதிரிகளை
தருபவர். சங்க இலக்கியங்களை பகிர்ந்து கொள்வார் கலித்தொகை காட்டும் ஏறுதழுவல் இங்கே!
11. காவியக்கவி என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி
இனியா அவர்களின் கவிதைகள் அசத்தல் ரகம். புலம் பெயர்ந்து வாழும் சோகம் தென்பட்டாலும்
இவர் கவிதைகள் தென்றலாய்வீசி மகிழ்விக்கிறது
12. மகிழ்நிறை என்ற தளத்தில் எழுதிவரும் சகோதரி
மைதிலி கஸ்தூரி ரங்கன் குறுங்கவிதைகள் அழகாய் எழுதுவார். சமூக நலம் விரும்பி இவர் இடும்
இடுகைகள் அருமையாக இருக்கும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறவர்களிடம் அவர் கேட்கும் கேள்வி
இது!
13. பாண்டியனின் பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி
வரும் பாண்டியன் ஜெபரத்தினம் ஓர் நிகழ்வைஎத்தனை அருமையாக புனைகின்றார்
14. ARROW SANKAR அன்பு-அமைதி- ஆனந்தம் என்ற
தளத்தில் எழுதிவரும் ஜோதிடர் சங்கர் அற்புதமான தகவல்களையும் ஆன்மிக கட்டுரைகளையும்
பகிர்கின்றார் நேர்த்திக்கடன் குறித்த அவரது கட்டுரை
15. காகிதப்பூக்கள் என்ற தளத்தில் எழுதிவரும்
சகோதரி ஏஞ்சலின் அருமையான கைவேலைப்பாடுகள் கற்றுத்தருவார். வியக்கும்வைக்கும் விசாலினி பற்றி கூறுகின்றார் இங்கே!
16. Killergee என்ற தளத்தில் எழுதிவரும் தேவகோட்டையை சேர்ந்த கில்லர்ஜி
அமீரகத்தில் பணி புரிகின்றார். இவரது பதிவுகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிறார்
17. அம்பாளடியாள் என்ற தளத்தில் கவிதைகள் எழுதி
வரும் சகோதரி அம்பாளடியாளின் கவிதைகள் உணர்ச்சிப் பிழம்பானவை! இதோ நீயும் மகாத்மாவே என்கிறார்
18. அரும்புகள் மலரட்டும் என்ற தளத்தில் ஆசிரியர்
பாண்டியன் அருமையான கட்டுரைகள், சமூகநல ஆக்கங்கள் தருகின்றார் இதோ சம்பவங்களும் சாதனைகளும் பற்றி பகிர்ந்து கொள்கின்றார்
19. இரவின் புன்னகை என்ற தளத்தில் எழுதிவரும்
நண்பர் வெற்றிவேல் இலக்கிய ஆர்வலர் வானவல்லி என்ற அருமையான நாவலை தொடராக எழுதினார்.
தற்சமயம் தேர்த்துகன் என்ற தொடரை எழுதுகின்றார்
20. உணவு உலகம் என்ற தளத்தில் எழுதி வரும் நண்பர்
உணவுக் கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்தும் பதிவுகளை
தருகின்றார் குழந்தைகளுக்கான பால் பவுடரில் கலப்படம் பற்றி இங்கே!
21. ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் சொக்கன் சுப்ரமணியன்
தனது உண்மையானவன் தளத்தில் ஆத்திச்சூடி கற்றுத்தரும் பாடம் பற்றி சொல்கின்றார்
22. ஒண்ணும் தெரியாதவன் தளத்தில் இல்யாஸ் அபுபக்கர் சுயம் பற்றி எழுதுகின்றார்
23. கரைசேரா அலைகளில் அரசன் நீந்தி கரையேறி பதிவுகள்
இடுகின்றார் ஒவ்வொன்றும் கடலில் குளித்த முத்துக்கள் அதில் ஒன்று இளமதி அத்தை
24. கீதமஞ்சரி தளத்தில் எழுதும் சகோதரி கீதமஞ்சரி
இயற்கையை அதிகம் நேசிப்பவர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவர் அங்கு புதிதாக
சேர்ந்த பிராணிகள் குறித்த கட்டுரை எழுதுகின்றார் அதில் ஒன்று ஒண்ட வந்த பிடாரிகள்
25. குடந்தையூர் தளத்தில் எழுதும் நண்பர் ஆர்.வி
சரவணன் சிறந்த நாவலாசிரியர், குறும்பட இயக்குனர் குறும்பட நடிகர் இவர் அடிக்கடி வெளியூர்
பயணிப்பதால் பயண அனுபவங்கள்ஏராளம் இதோ ஒன்று!
26. சாமானியனின் கிறுக்கல்கள் தளத்தில் சாம்
எழுதி வருகின்றார் அருமையான பதிவுகள் நிரம்பிக் கிடக்கும் தளம். நிறைய எழுதாமல் நிறைவாக
எழுதுபவர் பொறுமை எனும் புதையல் இங்கே!
27. தனிமரம் என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர்
நேசன் தன்னுடைய அனுபவங்களை தொடராக எழுதி பாராட்டு பெற்றவர் இவரது கவிதையும் கிறுக்கலும் இங்கே!
28. மனசு என்ற தளத்தில் நண்பர் பரிவை சே. குமார் எழுதும்
பதிவுகள் மனசோடு பதிபவை சிறுகதைகள் அருமையாக எழுதுவார் பரிசுபெற்ற கதை ஒன்றினை இங்கே
படியுங்கள் விழலுக்கு இரைத்த நீர்
29. மலர் தரு என்ற தளத்தில் எழுதிவரும் ஆசிரியர்
கஸ்தூரி ரங்கன் உலக சினிமாக்களை பகிர்கின்றார். சிறப்பான கட்டுரைகள் பலதும் எழுதி இருக்கின்றார் இவரைத் தெரியுமா?என்று கேட்கிறார் பதில் சொல்லுங்கள்
30. வசந்த மண்டபம் தளத்தில் கவிஞர் மகேந்திரன்
அருமையாக எழுதுகின்றார் இப்போது குறைத்துவிட்டார் இவர் எழுதிய அருமையான கவியொன்றுஇங்கே!
31. ஸ்கூல் பையன் என்ற தளத்தில் எழுதி வரும்
நண்பர் கார்த்திக் சரவணன் அருமையாக சினிமாவிமர்சனங்கள் அனுபவ பகிர்வுகள் சிறுகதைகள்
எழுதுவார் இவர் எழுதிய இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது உத்தம வில்லன்
32. எனது எண்ணங்கள் என்ற தளத்தில் எழுதிவரும்
ஐயா தமிழ் இளங்கோ திருச்சியில் வசிக்கின்றார் சுவையாக எளிமையாக கருத்துக்களை பகிர்வார்
இவரது கட்டாய ஹெல்மெட்எதிர்ப்பு ஏன்? என்ற கட்டுரையை படித்துப்பாருங்கள்
33. எண்டர் + என்ற தளத்தில் ஸ்டாலின் வெஸ்லி
தொழில் நுட்ப குறிப்புக்கள் தருகின்றார் பிளாக்கரில் தலைப்புக்கள்எப்படி இருக்க வேண்டும்
இதோ
34. கடவுளின் கடவுள் தளத்தில் எழுதிவரும் பசி பரமசிவம்
தீவிர பகுத்தறிவு கொள்கையாளர். அக்கொள்கைகள் பதிவில் பிரதிபலிக்கும் இதோ ஒன்று! கங்கையை எரித்தவர்கள்
35. கவியாழி என்ற தளத்தில் கவியாழி கண்ணதாசன் எழுதிவருகின்றார்
காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றுமிவர் சிறந்த கவிஞர் ஒரு காலத்தில் தினம் ஒரு கவிதை
எழுதி மகிழ்வித்த இவர் உடல் நலக்குறைவினால் தற்சமயம் அதிகம் எழுதுவது இல்லை! என்னடா வாழ்க்கையிது என்கிறார்
36. செங்கோவி என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர்
சினிமா ஆர்வலர் சினிமா எடுக்க திரைக்கதை முக்கியம் அதற்கான சூத்திரங்களை சொல்லித்தருகின்றார் ஹிட்சகாக் பற்றிய ஓர் அலசல் இங்கே!
37. ஜெயதேவ் தாஸ் ஜெயதேவ் என்ற வலைப்பூவில் பல்சுவை
பகிர்வுகள் தருவார் விழிப்புணர்வு தரும் செய்திகள் நகைச்சுவையாக இருக்கும் இரண்டு கொள்ளையர்கள் கதை
38. அறிவியல் புரம் என்ற வலைப்பூவில் என் ராமதுரை
அறிவியல் செய்திகள் பகிர்கின்றார் இதோ எல்லாமே அதே நிலா
39. எப்படி ஏன் எதனால் என்ற தளத்தில் சதிஷ் சில நல்ல விஷயங்கள் கற்றுத் தருகின்றார்
40. முகுந்த் அம்மா தன்னுடைய தளத்தில் இப்போது வாக்கிங் செல்பவர்களை பற்றி சொல்கின்றார்
43. திருப்பதி
மகேஷ் தன்னுடைய பதிவில் இனி அந்த தவறு செய்யக்கூடாது என்கின்றார்
44. ஆடுமாடு என்ற தளத்தில் ஏக்நாத் ஆவிகளுடன்பேசுகின்றார்
45. பூனைக்குட்டி என்ற தளத்தில் ஆஹா யோகாஎன்று கலக்குகின்றார் இவர்
46. முதல் கோணல் என்ற தளத்தில் கிருஷ்ண மூர்த்தி
தன் அம்மாவின் நினைவுகளைபகிர்கின்றார்
47. பழைய பேப்பர் என்ற தளத்தில் விமல்ராஜ் நேற்று இன்று நாளைபட விமர்சனம் தருகின்றார்
48. கரிகாலன் என் மனவெளியில் என்ற தளத்தில் எழுதியுள்ள
இந்த நிகழ்வு மனதை அப்படியே பிழிகின்றது
49. எழிலாய் பழமை பேசி என்ற தளத்தில் பழமை பேசி தன் தந்தை பற்றி பகிர்ந்து கொள்கின்றார்
50. மை மொபைல் ஸ்டுடியோஸ் தளத்தில் விஜயகுமார்
தான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்கின்றார்
51. கண்ணம்மா என்ற தளத்தில் கார்த்திக் கண்ணம்மா பிரிவின் வலி பற்றி கவிதை எழுதுகின்றார்
52. வெட்டிப்பேச்சு வேதாந்தி என்ற தளத்தில் வேதாந்தி தன் ஒய்ஜா போர்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்
53. அடுத்த வீட்டு வாசம் என்ற தளத்தில் வடகோவையூரான் நாவல்களை பகிர்ந்து கொள்கின்றார் பார்த்திபன் கனவு
54. பரதேசி அட் நியுயார்க் தளத்தில் ஆல்பிரட் தியாகராஜன் படித்ததில் பிடிச்சதை பகிர்ந்து கொள்கின்றார்
55. அரும்பிதழ் என்ற வலைப்பூவில் செந்தழல் சேது அடிப்பதை நிறுத்தாதே அப்பா என்று எதற்கு சொல்கிறார் படியுங்களேன்.
56. பசுபதிவுகள் என்ற தளத்தில் பசுபதி சங்கீத சங்கதிகளை பகிர்ந்து கொள்கின்றார்
57. கனவுத்திருடி என்ற வலைப்பூவில் எழுதி வரும் ஸ்ரீதேவி செல்வராஜன் டீவியில் பார்த்த சித்த மருத்துவம் பற்றி சொல்லி விழிப்புணர்வு ஊட்டுகின்றார்.
58. புன்னகையே வாழ்க்கை என்ற தளத்தில் எழுதும் பெய்க் நகைச்சுவையாக எழுதுவார் இவரது என் உச்சி மண்டையிலே! படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.
59 அனுராதா ப்ரேம் தன்னுடைய தளத்தில் கிராப்ட் ஒர்க் செய்ததை அழகாக போட்டோக்கள் மூலம் பகிர்கிறார்.
60. கசியும் மவுனம் என்ற வலைப்பூவில் கவிஞர் ஈரோடு கதிர் குறியிட்ட இடம் தேடி அலைகின்றார்.
வலைச்சர வாரத்தை இனிதே இத்துடன் நிறைவு செய்கின்றேன்!
இன்றைய பட்டியல் பெரியது! ஆயினும் இந்த தளங்கள் புதியதாய் எழுதுவோருக்கு மிகவும் பயனளிக்குமென்று
நம்புகின்றேன். இன்னும் எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்ட ஆளில்லை!
உரமூட்ட பாராட்ட நிறை குறைகளை சொல்லிட பார்வையாளர்கள் கிடைத்தால் படைப்பாளியும்
அவன் படைப்பும் மிளிரும்.
இந்த வாரம் முழுக்க எண்ணற்ற படைப்பாளிகளின் தளங்களுக்கு
சென்று வாசித்து அவர்களின் படைப்புக்களை அடையாளம் காட்டிட உதவிய வலைச்சர ஆசிரியர் திரு
சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர குழுவினர் திரு தமிழ்வாசி பிரகாஷ் திரு யாதவன் நம்பி
அவர்களுக்கும் தொடர்ந்து வந்து கருத்துரைகளும் வாக்குகளும் இட்ட நண்பர்களுக்கும் மிக்க
நன்றிகள். மீண்டும் சந்திப்போம் இறைவன் சித்தம் இருந்தால்! நன்றி! நன்றி! நன்றி!
|
|
அடேங்கப்பா.... எத்தனை நண்பர்கள்! அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பாக முடித்தீர்கள் சுரேஷ்.
நன்றி! முடிக்கவில்லை! கொசுறு கொஞ்சம் இருக்கிறது! 4.30க்கு வெளியாகும்!
DeleteT H A N K S ...... Sako
ReplyDeleteநன்றி!
Deleteவாரம் முழுவதும் அசர வைக்கும் தொகுப்புகள்... இன்றைய அறிமுகங்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி! இன்னும் கொஞ்சம் தொகுப்பு 4.30க்கு வெளியாக உள்ளது!
Deleteஆத்தி!!! நம்ம குடும்பத்தோட அறிமுகம் செய்துவிட்டீர்களே!!! மிக்க நன்றி சார்!
ReplyDeleteஉங்க குடும்பம் என்ன சாதாரண குடும்பமா? வாத்தியார் குடும்பமாச்சே சகோ!
Deleteஎன்னுடைய பதிவையும் அறிமுக படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா!
Deleteவலையுலகமே வசப்பட்டு விட்டது நண்பரே!
ReplyDeleteகலை நயமிகும் விலை மதிப்பற்ற தங்களதுஆசிரிய எழுத்துப் பணியின் மூலம்!
வாழ்த்துகள்.
அனைத்து நண்பர்களுக்கும் குழலின்னிசையின் வாழ்த்துகள்.
வலைச்சரம் வானத்தில் இத்தனை பதிவு நட்சத்திரங்கள் பளிச்சிட்டத்தை இதுவரையில் நான் கண்டதில்லை!
வலைஉலக வானம் இன்று நண்பர் தளிர் சுரேஷ் உங்கள் வசம்! இது நிசம்!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி ஐயா! நீங்கள் வழங்கிய வாய்ப்பினால் நானும் பல தளங்களுக்கு செல்ல முடிந்தது. மற்றுமொரு தொகுப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும். நன்றி!
Deleteஇன்றைய பதிவில்
ReplyDeleteஅறுபது பதிவுகள் அறிமுகம்
சிறந்த அறிமுகங்கள்
தங்கள் அரிய பணிக்கு
எனது பாராட்டுகள்
நன்றி ஐயா!
Deleteவலைச்சரத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அதிக எண்ணிக்கையிலான நண்பர்கள், ஆங்காங்கு எழுதும் முறை என பன்முக நோக்கில் தாங்கள் ஒரு வாரமாக எங்களை கைகோர்த்து அழைத்துச்சென்றவிதம் அருமையாக இருந்தது. நல்லதொரு பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றி. தொடர்ந்து சந்திப்போம்.
ReplyDeleteநன்றி ஐயா! சாதனைக்கு எழுதவில்லை! மன திருப்திக்கு எழுதுகின்றேன்!
Deleteஅத்தனை நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்...உங்கள் பதிவும் செம...நல்ல கருத்துகள்! பின்னூட்டம் பற்றி...வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅன்புள்ளம் கொண்ட சுரேஷ்,
ReplyDeleteகடந்த காலங்களில், என் பெரும்பான்மையான பதிவுகளைப்[குறைகளைப் பொருட்படுத்தாமல்] பாராட்டிய தங்களின் பெருந்தன்மையை நினைவு கூர்கிறேன்.
நானோ, எப்போதாவதுதான் தங்களின் பதிவுகளுக்குக் கருத்துரை வழங்கியிருக்கிறேன்.
எதிர்பாராத சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக, பதிவுலகில் நான் சஞ்சரிக்கும் நேரம் மிக மிகக் குறைந்துவிட்டது. இது உண்மை. இதன் காரணமாகவும், பதிவுகளுக்கு கருத்துரை வழங்குவதை அறவே தவிர்த்துவிட்டேன். இருந்தும் என் புறக்கணிப்பைப் பொருட்படுத்தாமல், தங்களின் வலைச்சரம் பதிவில் என்னையும் குறிப்பிட்டுச் சிறப்பித்திருக்கிறீர்கள்.
தங்களின் உயர்குணம் என்னைப் பெரிதும் நெகிழ வைத்தது. மனம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நன்றி...நன்றி.
தங்களால் வலைச்சரம் வாயிலாகச் சிறப்பிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.
மிக மிகக் கடுமையாக உழைத்துக் கருத்துச் செறிவுள்ள பதிவுகளை வழங்கியிருக்கிறீர்கள். மனதாரப் போற்றுகிறேன்.
கருத்துரை வழங்குபவர் வழங்காதவர் என நான் பாகுபாடு செய்வதில்லை ஐயா! உங்களின் நல்ல படைப்புக்களை அடையாளம் காட்டுவதே நோக்கம்! அறிந்தவர் அறியாதவர் பேதமில்லை!
Deleteஇன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களில் பலர் எனக்கு எனக்கு அறிமுகமானவர்கள். எப்படி உங்களால் இவ்வளவு பேரையும் அறிமுகப்படுத்த முடிந்தது என எண்ணி வியக்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! தங்கள் பணியை திறம்பட செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஇன்றைய அறிமுகங்கள் மட்டுமே ஐம்பது பேருக்கு மேல்! .... அசர வைக்கும் உழைப்பு.
ReplyDeleteபாராட்டுகள் சுரேஷ்.
அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி நண்பரே!
Deleteஇன்றைய அடையாளங்களில் பலரும் பரிச்சயம் . சிலர் இல்லை. வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஐயா வணக்கம்.
ReplyDeleteமுதலில் தங்கள் பொறுப்பேற்ற பொழுது வந்த என்னால் பின், தொடர முடியவில்லை.
அதற்கு மன்னியுங்கள்.
என் பதிவுகள் தங்கள் மனதில் இடம்பிடித்ததற்கும், இங்குஅறிமுகப்படுத்தப்பட்டமைக்கும் மகிழ்ச்சியும் நன்றியும்.
என்னுடன் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட எல்லாப் பதிவர்களுக்கும் என் வாழ்த்தும் வணக்கமும்.
நன்றி.
நன்றி நண்பரே! மன்னிப்பெல்லாம் எதற்கு? நேரம் கிடைக்கையில் வாசியுங்கள்! இன்று உங்கள் தளம் அறிமுகம் ஆனதால் ஒரு தகவல் தந்தேன். இத்தனை நாளாய் பிற அறிமுகங்களுக்கு தகவல் தர எனக்கே நேரம் இல்லை! இன்று கொஞ்சம் கூடுதலாய் நேரத்தை திருடிக்கொண்டேன். நன்றி!
Deleteஇன்று கருத்துரையிட - கொஞ்சம் (அதிகமாகவே) தாமதமாகி விட்டது..
ReplyDeleteஇதற்கடுத்த பதிவினைக் கண்ட பிறகே - இங்கு வருகின்றேன்..
கடும் உழைப்பு தங்களுடையது.. பாராட்டுகள் என்றும் உரியன..
வாழ்க நலம்.. வாழ்க வளமுடன்!..
நன்றி நண்பரே!
Deleteஅருமையான தொகுப்பு. நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteவணக்கம் சகோ. என்னை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஇவ்வளவு தளங்களைப் அறிமுகம் செய்துள்ளீர்களே , பிரமாதம் சகோ. உங்கள் உழைப்பிற்கு வந்தனம். அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி சகோதரி.
Deleteஎன் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஇன்றைய 60+ - ல் நான் விரும்பி வாசிக்கும் நட்புக்களுடன் எனக்கும் ஒரு அறிமுகம் வழங்கிய தங்களுக்கு நன்றி....
ReplyDeleteஎப்படி இத்தனை பேருக்கான இணைப்புக் கொடுத்தீர்கள்... அப்பா... மிகவும் சிறப்பான பணி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே! இணைப்பு கொடுப்பதில் தான் ரொம்பவும் சிரமப்பட்டேன். சில தளங்களுக்கு இணைப்பு மாறி அதை யாரும் சுட்டவும் செய்யாததால் திருத்தம் செய்யப் போய் இணையம் மெதுவாகி கொஞ்சம் அவஸ்தைதான்!
Deleteமிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி!
நன்றி நண்பரே!
Deleteஎனது வலைப்பூக்களில் ஒன்றான "அடுத்த வீட்டு வாசத்தை" வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநேசமுடன் கோமகன்
நன்றி நண்பரே!
Deleteஅசர வைத்து விட்டீர்கள் சகோதரர். தங்களின் உழைப்பு கண்டு தங்கள் மீதான மரியாதை மேலும் கூடி விட்டு சகோ. எத்தனை அறிமுகங்கள். ஆலோசனையும் நன்று. கடைபிடிக்க முயல்கிறேன். நண்பர்களோடு என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அனைவருக்கும் என் வாழ்த்துகள். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஎத்தனை எத்தனை அறிமுகங்கள், உங்களுக்கு வலைபதிவில் அறிமுகமில்லாதவர் இருக்கவே முடியாது போல தெரிகிறது.
ReplyDeleteஎனது பெரும்பாலான பதிவுகளுக்கு கருத்துரை கொடுத்தும், இப்பொழுது அறிமுகம் செய்ததற்கும் நன்றிகள் பல.....
வாழ்த்துகள் அனைவருக்கும்.
நன்றி நண்பரே! கற்றது கைமண் அளவுதான்! இன்னும் நிறையபேர் வலையில் இருக்கின்றார்கள் தேடத்தேட கிடைப்பார்கள்!
Deleteமிகுந்த நன்றி சார்! எனது வளைப்பூவையும் இவ்வையம் அறிய வைத்ததற்கு! விளையாட்டாய் தான் எழுதத்தொடங்கினேன்! உங்களைப்போன்றோர் என்னையும் அடயாலப்படுத்துவீர்கள் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை! இங்கு அறிமுகப்படுத்தியவர்களுள் நானும் பலரின் வளைப்பூவை படித்திருக்கின்றேன்! புதியவர்களை இனி படிக்க இப்பதிவு உதவியுள்ளது! உங்களுக்கு மீண்டும் நன்றிகள் கோடி.
ReplyDeleteஉங்களை அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி! மிக்க நன்றி!
Deleteஅம்மாடியோவ் ! எத்தனை பதிவர்கள் !! பாதி பேர் நான் அறியாதவர்கள் ..அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஇன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்! தற்சமயம் எழுதாமல் இருப்பவர்கள் நிறைய பேரை நான் தவிர்த்துவிட்டேன்! அதையும் சேர்த்தால்... அம்மாடி! நன்றி!
Deleteஅறிமுகத்திற்கு நன்றி சுரேஷ்.
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே!
Deleteபிரமிக்கத் தக்கவகையில் பணியை ஆற்றி வருகிறீர்கள் வலைச்சரத்தின் நோக்கத்திற்கு ஏற்ப அதிகமானோரை அறிமுகம் செய்து பெரும் பாராட்டையும் பெற்றிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. இதில் என்னையும் அறிமுகம் செய்து வை த்ததில் பெரு மகிழ்ச்சியே. என் அன்புக்குரியவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அறிமுகம் செய்தமையினால் இரட்டிப்பு மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோ மேலும் தங்கள் திறமைகள் வெளியில் வரட்டும் என்று வாழ்த்துகிறேன்...!
ReplyDeleteநன்றி சகோ!
Deleteநண்பரே...
ReplyDeleteமிக தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
தனிப்பட்ட காரணங்களால் எனது வலைப்பூ பங்களிப்பு அதிகம் தடைப்படுகிறது....
தங்களின் வலைச்சரபொறுப்பு அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தங்களின் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்கட்டும்.
என்னையும் உங்களின் தொகுப்பில் குறிப்பிட்டு, எனக்கு தகவலும் தந்தமைக்கு நன்றிகள் பல. தாங்கள் அறிமுகப்படுத்திய படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
சாமானியன்
மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பரே! முதலில் வீட்டுக்கடமை செய்யுங்கள்! அப்புறம் வலைப்பூ பக்கம் நேரம் கிடைக்கையில் வரலாம்! தவறொன்றும் இல்லை! வாழ்த்துக்கள்!
Deleteஎன்னை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteவருகைக்கு நன்றி! மன்னிப்பெல்லாம் எதற்கு?
Deleteசிறப்பான தொகுப்பு!!!
ReplyDeleteநன்றி!
Deleteநன்றி சுரேஷ்.
ReplyDeleteவருகைக்கு நன்றி!
Deleteஅறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteபதிவுகளை இணைத்து பதிவாய் ஆக்கி விட்டீர்.சூப்பர் ,நன்றி
ReplyDeleteநீங்கள் இத்தனை பேரை கவனிக்கிறீகள் எனும் போது ஆச்சர்யமாகவும் இப்படியும் கௌரவிக்கலாம் என்ற வழிகாட்டலும் அற்புதம் .இம்மாதிரி அழைப்புகளில் மலர்பவர்கள் பிற்காலத்தில் தவிர்க்க முடியாத வாசிப்பாளர்களாக அமைபவர்களாகட்டும்.நன்றி
ReplyDelete‘பூனைக்குட்டி’யில் வெளிவந்த ‘ஆஹா... இது யோகா!’ கட்டுரையை வெளியிட்டு, அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே.தொடர்பை தொடர்வோம்.
ReplyDelete- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -