07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 11, 2015

நம்பிக்கை ஊற்றுக்கள்!

வலைச்சரம் ஆறாம் நாள்  நம்பிக்கை ஊற்றுக்கள்!

வணக்கம் வாசகர்களே! நேற்றைய பதிவினை படித்து ரசித்து கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வலைப்பூ துவங்கி எழுத ஆரம்பித்திருக்கும் அனைவருக்கும் ஓர் குழப்பம் இருக்கும். அது தலைப்பு வைப்பதுதான்.
   நமது இடுகை என்பது நம்முடைய குழந்தைமாதிரி! குழந்தைக்கு பெயர் சூட்டுவது போலவே இடுகைக்கு பெயர் வைத்திருப்போம். பொருத்தமாகவும் இருந்திருக்கும். ஆனால் அந்த இடுகைக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  வலைப்பூ துவங்கி கொஞ்சம் பிரபலமானவராக இருந்தால் தொடர் வாசகர்களைப் பெற்றிருப்பார். அவரைப்பொறுத்தவரையில் தலைப்புக்கு மெனக்கெடுவது இரண்டாம் பட்சம் தான். ஆனால் புதியவர்கள் தம்முடைய இடுகைகளுக்கு வைக்கும் தலைப்புக்களில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் வாசகர்களை கவரலாம்.

     தலைப்புக்கள் நீண்டதாக இல்லாமல் எளிமையாக சின்னதாக இருத்தல் அவசியம்.

அப்போதைய நேரத்துக்கு தகுந்தார் போல தலைப்புக்கள் வைத்தல். மதுரைத் தமிழன், ராஜபாட்டை ராஜா போன்றோர் கச்சிதமாக தலைப்புக்களை வைத்து வாசகர்களை இழுப்பர்.

நானும் சில வகை தலைப்புக்கள் வைத்து வாசகர்களைப் பெற்றுள்ளேன். பங்குனி உத்திர திருவிழா பற்றிய பதிவொன்றிற்கு உலகநாயகனின் திருமணநாள் என்று பெயர் வைத்தேன். வருகை அதிகமாக இருந்தது. ஆனால் இவ்வாறு தலைப்புக்கள் மூலம் வாசகர்களை இழுத்துவர முடியுமே தவிர தக்க வைக்க முடியாது. அப்படி தக்கவைக்க உங்கள் எழுத்துக்கள் தான் உதவும். நீங்கள் எழுதும் மொழிநடை, எளிமை, வாசகர்களை மதிக்கும் பண்பு உள்ளிட்டவை உங்கள் வாசகர்களை தக்க வைக்கும்.

சுய அலசல், தன்னம்பிக்கை, எழுத்துப்பிழையின்றி எழுதுதல் ஆபாசம் தவிர்த்தல் போன்றவை உங்கள் வலைப்பூவை மிளிரவைக்கும். வலைப்பூவில் உங்களுக்கு இருக்கும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு பிளாக்கர் நண்பன்  மிகவும் உதவியாக இருக்கும். முன்பு தொடர்ந்து எழுதிவந்த நண்பர் அப்துல் பாசித் இப்பொழுது எழுதுவதை குறைத்துவிட்டார் ஏனோ தெரியவில்லை.    வந்தேமாதரம் சசிக்குமார்     அன்பைத் தேடி மென்பொருள் பிரபுவின்  சுதந்திர மென்பொருள்  ஆகிய தளங்களும் தொழில்நுட்ப சந்தேகங்கள் போக்கி கொள்ள உதவும்.

இன்றைய அறிமுகப்பதிவாளர்களுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு தன்னம்பிக்கையாளர்கள். வாழ்க்கை நிறைய சோதனைகளை கொண்டது. காட்டாறாய் சோதனைகள் குறுக்கிட அதில் போராடி நீந்தி வெற்றிபெறுபவர்கள் சொற்பமே! ஒருவனிடம் எல்லாம் இழந்து போகலாம் ஆனால் நம்பிக்கை இழக்க கூடாது. நம்பிக்கை என்ற ஒளி இருப்பின் வாழ்க்கையின் இருள் அகன்று வெளிச்சம் பிறக்கும். இணையத்தில் சில தன்னம்பிக்கை பதிவுகளை காண உள்ளோம்.

1.   தன்னம்பிக்கை என்ற தளத்தில் தன்னம்பிக்கை கட்டுரைகள் பல எழுதி வந்த கவுதம் இப்போது எழுதுவது இல்லை! இவர் கண்ணதாசன் வாழ்வில்   தன்னம்பிக்கை பற்றி சொல்கிறார் 

2.   சிந்தனைத்துளிகள் தளத்தில் எழுதிவந்த பாலாஜி சரவணனும் பதிவுகள் எழுதுவது இல்லை! அவரது   தன்னம்பிக்கை கட்டுரை
3.   பாண்டியனின் வலைப்பதிவு என்ற தளத்தில் சிவகிருஷ் தலைக்கணம் இல்லா   தன்னம்பிக்கை பற்றி கூறுகின்றார் 

4.   வணக்கம் லண்டன் என்ற தளத்தில் உலகின்   தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணை பற்றி பகிர்ந்துள்ளது   

5.   டேக் ஆப் வித் நடராஜன் என்ற தளத்தில் வந்துள்ள ஒரு   தன்னம்பிக்கை தமிழரின் கதையை படித்தால் நெகிழ்ந்துவிடுவீர்கள்!
6.   முகமூடி என்ற தளத்தில் சோமசுந்தரம் சில   தன்னம்பிக்கைஊட்டும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றார் இவரும் இப்போது எழுதுவது இல்லை
  
7.   மணிராஜ் என்ற தளத்தில் எழுதி வரும் வலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்கள்   தன்னம்பிக்கை தித்திப்பு தத்துவங்களை அழகாக பகிர்கின்றார் இங்கே! 

8.   குருகுலம் என்ற தளம் ஆன்லைனில் இலவசமாக் டி.என்.பி.சி டி.இ.டி பி.ஜி. டி.ஆர்.பி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றது. இந்த தளத்தில் வந்த ஓர்   தன்னம்பிக்கை சம்பவம்  

9.   லைப் மச்சி என்ற தளத்தில் எழுதிவந்த சிவப்பிரகாஷ் தற்சமயம் எழுதுவது இல்லை. அந்த தளத்தில் சில   தன்னம்பிக்கை கதைகள்   

10. தென்றலின் வீதி என்ற தளத்தில் எழுதிவந்த சங்கர் நீதிமாணிக்கம்   தன்னம்பிக்கைவளர்த்துக்கொள்ள தரும் கட்டுரை இது! 

11. தமிழ்ப் பேரண்ட்ஸ் தளம் குழந்தைவளர்ப்புக்கான ஆலோசனைகள் வழங்குகின்றது. இந்த தளமும் தற்சமயம் இயங்குவது இல்லை! வளரும்   குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை  வளர கற்றுக்கொடுக்கிறது   
12. இ தூத்துக்குடி என்ற தளத்தில்   நொண்டி விளையாட்டு எவ்வாறு தன்னம்பிக்கையை தருகின்றது என்று சொல்கிறார்கள் 

13. அறுசுவை சமையல் களஞ்சியம் என்ற தளத்தில் பிரேமா பாஸ்கர்      தன்னம்பிக்கை  கதை ஒன்றினை பகிர்கின்றார்

14. தொழில்நுட்பம் தளத்தில் எழுதி வரும் தங்கம் பழனி   உன்னால் முடியும் தம்பி என்கிறார் 

15. கிருஷ்ணாலயா என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர் ரவி   தன்னம்பிக்கை எதிர்மறை எண்ணங்கள் பற்றி கூறுகின்றார் 
16. மேலத்தெரு- கொடிநகர் தளத்தில் வந்துள்ள இந்த   நம்பிக்கை மனிதரை அறிந்து கொள்ளுங்கள்! 

17. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலைபாதுகாப்பு சங்கம் என்ற வலையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் பற்றி சொல்வது நம்பிக்கை அளிக்கின்றது. 

18. துளசிதரன் தில்லை அகத்து என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா அவர்கள் பல்சுவை தகவல்களை பகிர்வர். குறும்படங்கள் பல எடுத்துள்ளனர். அவர்களின்   தன்னம்பிக்கை பதிவு நமது சக பதிவரின் தாயாரின் தன்னம்பிக்கை   இது.


19. கரந்தை ஆசிரியரான திரு ஜெயக்குமாரின் ஒவ்வொரு பதிவுகளும் பொக்கிஷம். வாழ்ந்து சாதித்த சாதனைமனிதர்களை தனக்கேயுரிய பாணியில் இவர் அறிமுகம் செய்யும்விதம் ரசிக்கவைக்கும் ஹாரிபாட்டர்.   கதையின் எழுத்தாளார் தான் சந்தித்த சோதனைகள சாதனையாக மாற்றியவிதம் இங்கே! 

  தன்னம்பிக்கை மிக்க தம்பதியினரை அறிந்து கொள்ளுங்கள்   மாக்சிம் கார்க்கி சந்திக்காத துன்பங்களா? 

20. ஜானகி மணி என்ற தளத்தில் எழுதிவந்த டி.ஆர் சுமதி நான்கு பதிவுகளுடன் நிறுத்திவிட்டார். அவர் தனக்கு ஏற்பட்ட ஓர்   சம்பவத்தை விவரிக்கிறார் 

21. குழலின்னிசை தளத்தில் எழுதி வரும் யாதவன் நம்பி அவர்கள் ஒரு சிறு செய்தியைக் கூட கவிதையாக்குவதில் வல்லவர். தினகரனில் வந்த ஓர் நம்பிக்கை வாசகம்   இந்த கவிதையை தந்திருக்கிறது

22. கதம்ப உணர்வுகள் தளத்தில் எழுதி வருகின்றார் மஞ்சுபாஷினி சம்பத் குமார் முன்பெல்லாம் நிறைய எழுதியவர் தற்போது குறைவாகவே எழுதுகின்றார். இவர் பதிவில்  தேஜஸ்வினி யின் நம்பிக்கை!  

23. இது தமிழ் என்ற தளத்தில் செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் இரட்டை கோபுரம்சரிந்த கதையும் அவர்கள்   நம்பிக்கை உயிர்த்தெழுந்ததையும் விவரிக்கிறார் லதா 

24. கவிதாயினி சசிகலாவின் வலைப்பூ தென்றல். இதில்   நம்பிக்கை குறித்து அவரது கவிதையை ரசியுங்கள்!  

25. மதுரை சரவணன் அவர்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க கற்றுத்தரும் வழிமுறைகள் எதிர்காலம் மேல் நம்பிக்கை கொள்ளவைக்கிறது. இவரது கவிதை   நம்பிக்கை

26. from Bala’s desk என்ற தளத்தில் இலக்கிய பீடத்தில் தான் எழுதிய ஆடிட்டர்  NRK யின் கதையை பகிர்கின்றார் இவர். 

27. என்னில் உணர்ந்தவை தளத்தில் எழுதி வரும் காயத்ரி தேவியின் எழுத்துக்கள் எளிமையானவை அதே சமயம் வலிமையானவை கேன்சர்  பாதித்த ஒருவரை மீட்டெடுத்ததை சொல்கிறார் இங்கே!   எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா? என்கிறார் 

28. பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்ற தளத்தில் எழுதிவரும் ஜாக்கி சேகர் தன் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளை கடந்து இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இந்த   பதிவைப் பாருங்கள்! 

29. தேவியர் இல்லம் வலைப்பூவில் எழுதிவரும் ஜோதிஜி அவர்கள் ஓர் தன்னம்பிக்கை மனிதர். இதுவரை ஐந்து மின் நூல்கள் வெளியிட்டுள்ளார். பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுவரும் அவரது அனுபவங்கள் பதிவுகளாகின்றன   நமக்கு பாடங்கள் ஆகின்றன

30.  உயிர்மொழி என்ற தளத்தில் வந்துள்ள இந்த மனதைத் தொடும் கவிதை உங்கள்  பார்வைக்கு

பதிவுகளை படிக்கையில் உங்கள் மனதிலும் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது இல்லையா? ஊற்றெடுத்தால் வறண்டு கிடந்த கிணற்றில் தூர் வாறி நீர் சுரக்க வைத்த திருப்தி கிடைக்கும் எனக்கு! துவளாமல் துணிவோடு நம்பிக்கையோடு உயிர்த்தெழுங்கள்! உலகம் உங்கள் வசமாகும். நாளை சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! நன்றி!


  

21 comments:

  1. அனைத்தும் பாடங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete

  2. தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளை அழகாக இன்றைய வலைச்சரத்தில் தொடுத்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களில் பலரின் வலைத்தளங்கள் எனக்கு பரிச்சயமானவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தளிரே! மிளிரும் உமது!
    "தன் நம்பிக்கை" நாரினில்...
    தொடுத்த புகழ் பூக்களில்
    குழலின்னிசை குறும் பூவும்
    நிழலில் நிற்கிறதே-நின்
    அழகிய பதிவுகளை
    ஆர்ப்பரித்து மகிழ்கின்றேன்!
    நன்றி!

    அனைத்து அன்பு அடையாளப் பதிவாளர்களுக்கும்
    குழலின்னிசையின் நல் வாழ்த்துகள்!
    வாழ்க நலம்! வளர்க வலைப் பதிவர் குலம்!
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. எனக்குத் தெரிந்தவரையில் அதிக எண்ணிக்கையில் பதிவர்களை அறிமுகப்படுத்துபவர் நீங்களே என நினைக்கிறேன். தன்னம்பிக்கை பற்றிய அறிமுகங்கள் மிகவும் அருமை. தங்களது பதிவைப் படிக்கும் புதியவர் கூட எழுத ஆரம்பித்துவிடுவர். நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  5. வணக்கம் ஆசிரியரே,
    இன்றைய தங்கள் அறிமுகப் பதிவர்களில் ஒரு சிலரைத் தான் தெரியும்,
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    தாங்கள் தொகுத்த விதம் அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தன்னம்பிக்கை பற்றிய இவளவு பதிவுகளா!.
    ஜம்புலிங்கம் ஐயா சொல்வதை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  7. ஜோதிஜியை படித்திருக்கிறேன், மற்றவர்களையும் வாசிக்கிறேன்,

    வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அசத்தலான தொகுப்பு - தன்னம்பிக்கை!..

    வாசகர்கள் பயனடைய வேண்டும் என்ற ஆர்வம் - தொகுப்பினில் பளிச்சிடுகின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  9. வலைப் பதிவுகளைத் தேடி அடையாளப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. உலகம் உங்கள் வசமாகும் என்று தங்களின் உற்சாக வரிகளும் ஒரே நாளில் 30 பதிவர்கள் அறிமுகமும் கண்டு வியந்தேன். அயராத உற்சாக உழைப்பே சொல்கிறது தன்னம்பிக்கை பற்றி. தென்றலின் அறிமுகம் கண்டும் மகிழ்ந்தேன். நன்றிங்க.

    ReplyDelete
  11. அருமையான தொகுப்பு.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. முதலில் எங்களையும் அடையாளப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சுரேஷ்!

    பதிவில் சொல்லிய கருத்துகளும் அருமை! இன்றைய அடையாளங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. நம்பிக்கை தான் வாழ்கைக்கு நல்ல உரம். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள் !
    அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  15. தன்னம்பிக்கையளிக்கும் பதிவுகள் தொகுப்பும் அதன் அறிமுக விளக்கங்களும் அருமை!!!

    ReplyDelete
  16. எளியேனையும் அறிமுகப்படுத்தியமைக்கு
    மனமார்ந்த நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  17. மிக்க நன்றி.... தளிர் சுரேஷ்... இத்தனை அறிமுகம்... எனக்கு தெரிந்து நீங்கள்தான் அதிகம் செய்தவர் என்று நினைக்கின்றேன்.. அதை விட அத்தனை பேரையும் அவர்கள் எழுதிய பதிவுகளை தேடி எடுத்து தொகுக்க... நிறைய மெனக்கெடவேண்டும்... வாழ்த்துகள்.. என்னையும் புதியவர்களுக்-கு அறிமுகப்படுத்தியமைக்கு...

    ReplyDelete
  18. வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது