புதையலா ? அல்லது படுகுழியா ??
➦➠ by:
மெக்னேஷ்
அனைவருக்கும் வணக்கம் ,
வாழ்க்கை என்றால் என்ன? இதற்கான விடையை ஆளுக்கொரு தத்துவமாக உலகின்பல பெரும் சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில், தோலாமொழித்தேவர் வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் .
திக்கற்ற காட்டில், யானையால் துரத்தப்பட்ட ஒருவன் அருகிலிருக்கும் பாழுங்கிணற்றுக்குள் குதிக்கும்போது, கிணற்றுக்குள் இருக்கும் நஞ்சுப்பாம்புகளைக் கண்டு பயந்து. கிணற்றின் ஓரத்தில் இருக்கும் புல்லைப் பற்றிக்கொண்டு இருக்கிறான். மேலே யானை; கீழே பாம்பு. அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு கறுப்பு எலியும் (இரவு), வெள்ளை எலியும் (பகல்) ஒன்றிணைந்து அவன் பற்றியிருக்கும் புல்லைக் கடிக்க ஆரம்பிக்கின்றதாம். சற்று நேரத்தில் புல் அறுந்து பாம்பிடம் கடிபட்டுச் சாகலாம் அல்லது மேலேறி யானையிடம் மிதிபட்டுச் சாகலாம். இந்நிலையில் இருக்கும் அவனுக்கு மேலே மரத்தின்கிளையிலிருக்கும் தேன்கூட்டிலிருந்து தேன் சிந்துகிறது. இவ்வளவு துன்பங்களுக்கிடையில் நாக்கை நீட்டி, அத்தேனைச் சுவைக்க அவன் முற்படுவது போன்றதுதான் உலக வாழ்க்கை என்கிறார் தோலாமொழித்தேவர் . சரி, இன்றைய பதிவர்களைக் காண்போம் .
வெல், தலைப்பிலேயே தெரிந்திருக்கும் இவரின் தளத்தைப் பற்றி . இவரின் தளத்தில் ஸ்பெசல் என்னவென்றால் புத்தக விமர்சனம். தெளிவாக, வழவழவென்று என்போல் இழுக்காமல் சுருக்கமாக புத்தகத்தை விமர்சித்துவிடுவார் . மேலும் ஏதேனும் ஒரு குட்டியூண்டு விஷயத்தை எங்காவது பார்த்து கவன ஈர்ப்பு பெற்றுவிட்டால், அதை அலசி ஆராய்ந்து , அதன் முடிவை கண்டுபிடித்து கடாசி விட்டுத்தான் அடுத்தவேலை பார்ப்பார். எடுத்துக்காட்டாக, அனேகன் திரைப்படத்தில் பர்மாவிலிருந்து ஹீரோவும், ஹீரோயினும் தப்பித்துச் செல்ல ஒரு கப்பலில் ஏறுவார்கள் . அந்த கப்பல் பற்றி ஆராய்ச்சி செய்து பிரபா அண்ணன் எழுதியிருக்கும் எஸ்.எஸ். ரஜுலா பதிவினைப் படித்துப் பாருங்கள் .
அவ்வப்போது சிறுகதைகளை எழுதிவரும் இவரின் கைவண்ணத்தில் உருவான ப்ராய்ட் தந்த முத்தம், ஒரு அட்டகாசமான நான் லீனியர் சிறுகதையாகும். ஒரு நான் – லீனியர் சிறுகதை எவ்விதத்தில் தொடங்கி எவ்விடத்தில் முடியவேண்டும் என்பதை மிகச்சரளமாக, சாதாரணமாக தன் சிறுகதையில் பயன்படுத்தியுள்ளார். ஏனோ, இப்போதெல்லாம் முன்போல் இவர் எழுதவில்லை. இவ்வலைச்சரத்தின் வழியே அவரை மீண்டும் எழுதும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
இத்தளத்தில் எழுதிவரும் கார்த்திக் அண்ணா, ஒரு காமிக்ஸ் பிரியர்; ஏன், வெறியர் என்றே சொல்லலாம். தமிழ் மட்டுமின்றி, பிறமொழிக் காமிக்ஸ்களைப் பற்றியும் தெளிவாக எழுதிவருகிறார். அவ்வப்போது தன் சொந்த அனுபவங்களையும் எழுதிவரும் இவர் தன் சூப்பர்சிங்கர் அனுபவத்தை கார் சிங்கர் எனும் பதிவின்வழியே நமக்குக்கூறுகிறார். மேலும் துரோக தேசங்கள் எனும் பதிவில் THE GRAND DUKE காமிக்ஸ் மற்றும் அதன் பிண்ணனியில் உள்ள வரலாற்றையும், இரண்டாம் உலகப்போரையும் இவர் எடுத்துரைக்கும்விதம் மிக அழகு. இவரும் இப்போது தன் தளத்தில் எழுதுவதைக் குறைத்துவிட்டார். இவ்வலைச்சரத்தின் வழியே அவரை மீண்டும் எழுதும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்; இந்த தளத்தினைப் பற்றி . இருந்தாலும் நானும் ஏதாவது சொல்லியாகவேண்டுமல்லவா ?
‘உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடல் வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’
உடல் வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’
என்று தமிழ்ச்சித்தர் திருமூலர் கூற்றுக்கேற்ப நம் உடலை எவ்வாறு எளிய பயிற்சிகளால் பேணிக்காப்பது என்பதை விளக்குகிறது இந்தத்தளம். இப்போதுள்ள துரிதகாலச் சூழலில் அனைவராலும் ஜிம்முக்குப் போய்விடவமுடியாது. அதனால் அவ்வப்போது சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து நம் உடலை வலுப்படுத்த வேண்டும்; உடலை வலுப்படுத்தினாலே உள்ளம் வலுவாகும் . இந்த தளத்தின் சில பதிவுகள் ,
பழம்பெரும்பதிவர் எனினும், தன் கவிதைகளை காலத்துக்கேற்ப மாற்றி எழுதி, இன்றுள்ள இளம்தலைமுறையினரையும் ஈர்க்கும் சக்திபடைத்தவர் இவர் என்றால் மிகையாகா! எனக்கு புதுக்கவிதையின்பேரில் பெருநாட்டமில்லை; உரைநடை தான் என் முழுவிருப்பம். பழஞ்செய்யுளும், பாக்களுக்கும் அடிமை . ஒருவேளை இலக்கணச்சுத்தமாக இருப்பதை நான் விரும்புவதாலோ என்னவோ! என்னை ஈர்த்த கவிதைகள் என்றால் ஒருசில தான். நான் ஒரு கவிஞரைப் படிக்கிறேன் என்றால், அவரிடம் நான் படித்த முதல்பதிவே என்னை கவர்ந்திழுக்கவேண்டும். அப்படியில்லாவிடில் அத்துடன் அக்கவிஞரின் தளத்திற்குச் செல்லமாட்டேன். இவ்வகையில் வலையுலகில் முதன்முதலில் என்னைக் கவர்ந்தவர் அரசன் அண்ணா; அதன்பின் இவர் தான். ஒரே கவிதையில் ஈர்த்துவிட்டிருந்த இவரது எழுத்தாற்றல் எங்களையும் மயக்குமென்பதில் சந்தேகமே இல்லை . இவரின் சில கவிதைகள் ,
பங்குச்சந்தை RAMACHANDRAN WRITES எனும் தளத்தில் தன் பெயரையே கொண்டு எழுதிவரும் ராமச்சந்திர அவர்கள், தொடர்ந்தாற்போல் மிகச்சிறப்பாக பங்குச்சந்தை குறித்த பதிவுகளை எழுதிவருகிறார். நானே சிலமுறை பங்குச்சந்தையில் குழப்பத்தில் உட்கார்ந்திருக்கும்போது எனக்கு இவரின் பதிவுகள் கைக்கொடுக்கும் . இவரின் சில பதிவுகள் ,
|
|
VAZTHUKAL.
ReplyDeleteஅறிமுகங்கள் பதிவுகளை தொடர வேண்டும்... அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteசிலர் புதியவர்கள்! சிலர் எழுதுவதே இல்லையே! விரைவில் தொடரட்டும் புதுப்பதிவுகளை!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி.நாளை சந்திப்போம்.
ReplyDelete