பல்சுவைப்பதிவர்கள்
➦➠ by:
மெக்னேஷ்
அனைவருக்கும் வணக்கம் ,
இன்றைய பதிவை எழுதும்முன் ஒரு பெரிய சந்தேகம் எனக்குள் வந்துவிட்டது . பதிவர்களை எளிமையாக , இவர் இப்படி எழுதி வருகிறார் , இந்தந்த பதிவுகளை எழுதியுள்ளார் என்றெல்லாம் அறிமுகப்படுத்திவிடலாம் . ஆனால் தலைப்பு மற்றும் முன்னுரை என்ன எழுதுவது என்று புரியாமல் குழம்ப ஆரம்பித்துவிட்டேன் . அட ! அதுக்குள்ள நம்ம சரக்கு தீர்ந்துடுச்சா ? என்று கடைசியில் அந்த சந்தேகம் வந்தது . அதனால் இன்றைக்கு கருத்துரை பற்றிய என் அபிமானத்தைக் கூறுகிறேன் . சரியா ? தவறா என்று எனக்குத்தெரியவில்லை . தவறாய் இருக்கும்பட்சத்தில் அனைவரும் பொறுத்துக் கொள்ளவும் .
சாருவைப் பற்றி உங்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ; நான் இங்கே குறிப்பிடப்போவது அவரின் புத்தகங்களைப் பற்றியோ , எழுத்தாற்றலைப் பற்றியோ அல்லது இணையத்தில் அவர் செய்யும் வசூலைப் பற்றியோ அல்ல . அவரின் ஒரே ஒரு கருத்தினை மட்டும் கூறிவிடுகிறேன் . அதாவது இன்றைய நிலையில் ஒரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு மற்ற எழுத்தாளர்களே கருத்துரை இடும் நிலைக்கு தமிழ் எழுத்துச் சமுதாயம் பின்தள்ளப்பட்டுள்ளது என்கிறார் அவர் . கிட்டத்தட்ட ப்ளாக்கரிலும் அதே நிலை தான் . கருத்துரை என்பது வாசகர்கள் நம்முடைய பதிவினைப் படித்து , அதில் இருக்கும் நிறை குறைகளைக் கூறுவது என்ற நிலை மாறி , சக பதிவர்களே கருத்துரை இட்டு (பெரும்பாலும் அப்பதிவைப் பாராட்டும் தோணியில்) , அதற்கு மறுமொழியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் .
அதற்காக பதிவர்கள் , மற்ற பதிவர்களுக்கு கருத்துரை இடுவது தவறு என்று நான் சொல்லவில்லை ; புதிதாக அறிமுகம் ஆகும் பதிவர்களுக்கு மூத்தபதிவர்கள் ஆலோசனை வழங்கி , அவ்வப்போது அவர்களை வழிநடத்தவேண்டும் . அப்போதுதான் பதிவுலகம் செழிப்புடன் வளரும் . பிற பதிவர்களின் பதிவுகளில் கருத்துரை இடுவது என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிகோளவேண்டுமே தவிர , நான் ப்ரசன்ட் சார் எனும் ரீதியில் கருத்துரை இடுவது எதற்கு என்று புரியவில்லை . நான் உட்பட அனைத்துப் பதிவர்களும் வாசகர்கள் நம்மைக் கவனிக்கவேண்டும் என்ற ரீதியில்தான் பதிவிடுகிறோம் . இம்மாதிரியான கமென்ட்கள் , போகப்போக கமெண்ட் பாக்ஸினைத் திறந்துகூட பார்க்க விடாதபடி மனம் அடைத்துவிடும் என்பது என் கருத்து . தவறிருப்பின் பெரியோர் அனைவரும் பொறுத்தருள்க .
சமையல்
இன்றைக்குக் காலையில் ஒரு மீன்பிரியரின் பதிவுகளைக் கவனிப்போம் . அசைவ உணவுகளிலேயே சிறப்பானது மீன் என்பது உலகறிந்த உண்மை . சிலர் மீனை சைவம் என்றும் கூறுகிறார்கள் . எப்படியாயினும் மீன் சிறப்பானதொரு உணவுப்பொருள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் . மீனு மீனேய் எனும் தளத்தில் நாடோடி இலக்கியன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் , மீன்களில் எதெது சிறந்தது ,மீனை எப்படி வாங்கவேண்டும் ? மார்க்கெட்டில் எவ்வளவு விலை வரை இருக்கும் ? எப்படி சமைக்கலாம் ? கெட்டுப்போனதா ? நல்லதா என கண்டுபிடிப்பது எப்படி ? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பதுடன் , மீன்களைப் பற்றிய விலாவரியான தகவல்களை புகைப்படத்துடன் கொடொத்து அசத்தியுள்ளார் . இவரின் சில பதிவுகள் ,
வணிகம்
என் நண்பர்கள் பலரிடம் என்ன வேலை மச்சான் ? எனக்கேட்டால் எக்ஸ்போர்ட் பிஸனஸ்டா என்று கூறுவார்கள் . அப்படினா என்னடா ? எனக்கேட்டால் இங்கிருக்கும் பொருட்களை வேறு இடங்களுக்கு ஷிப்பிங் பண்றது மச்சி என்று சொல்லுவார்கள் . நானும் ‘சரி , சரக்க வாங்கரோம் ;கஸ்டம்ஸ்கு அமௌன்ட் கட்டரோம் ; வெளிநாட்டுக்கு விக்கரோம் ‘ என்று அப்போதைக்கு டி.ஆர் போன்று அடுக்குமொழி வசனங்கள் பேசிவிட்டு அடுத்த நாளே மறந்துவிடுவேன் . ஆனால் உண்மையில் , ஏற்றுமதி இறக்குமதி போன்ற விஷயங்களைச் செய்துவரும் சேதுராமன் சாத்தப்பன் என்பவர் , மிக எளிமையாக , இப்போதைய நிலையில் ஏற்றுமதியாகும் பண்டங்கள் , எப்படி செய்வது ? என்னென்ன பின்விளைவுகள் வரும் என்பதையெல்லாம் தன் பதிவுகளில் மட்டுமின்றி அவ்வப்போது கலந்தாய்வு கூட்டம் நடத்தியும் பயிற்வித்து வருகிறார் . இவரின் சில பதிவுகள் ,
நாட்டுப்புறவியல்
வானமாமலை என்றொருவர் மாத்திரம் இல்லையெனில் நம் பாரம்பரிய இசை மற்றும் பாட்டு வடிவங்களான , ஏட்டில் எழுதா இலக்கியம் அப்படியே மறைந்திருக்கும் . அப்பணியை , பல்வகை நாட்டுப்புற பாடல்கள் எனும் வலைத்தளத்தில் ரதினா புகழேந்தி மிகச்சிறப்பாக செய்துவருகிறார் . எங்கள் ஊரில் இன்னும் தாலாட்டுப் பாடல்கள் , திருமணப்பாடல்கள் , தொழில்பாடல்கள் மற்றும் ஒப்பாரிப் பாடல்கள் வழக்கொழியாமல் இந்தத் தலைமுறை வரை வந்துவிட்டது . ஆனால் என்தலைமுறைக்கடுத்து இந்த நாட்டுப்புறப்பாடல்களின் நிலையை யோசித்தால் தான் தொண்டையைக் கவ்வுகிறது . இனிமேல் வெறும் ஆடியோ சிடியில் போட்டுத் தான் கேட்கவேண்டும்போல . அதைக் கேட்டாலும் நம்முடைய நாகரீகத்தமிழ் அடிமைகள் பட்டிக்காட்டான் என்றும் ஊர்நாட்டான் என்றும் தான் அழைப்பார்கள் . ஏதோ பிறந்ததுமுதல் மொசார்ட்டின் இசையும் பீத்தோவனின் இசையையும் கேட்டு வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளவதைத்தானே நம் தமிழ் சமூகம விரும்புகிறது !! சரி , பதிவரைப் பற்றி கவனிப்போம் . இவர் வெறும் நாட்டுப்புறப்பாடல்கள் மட்டுமின்றி விடுகதைகள் , கிராமப்புறங்களில் வழங்கி வரும் கதைகள் , பழமொழிகள் போன்றவற்றையும் தன் பதிவுகளில் எழுதி வருகிறார் . இவரின் சில பதிவுகள் ,
சினிமா
சிவிகை எனும் தளத்தில் எழுதிவரும் அரவிந்த் அண்ணா , தமிழ் சினிமாக்கள் மட்டுமின்றி அவ்வப்போது உலக சினிமாக்கள் , தன் அனுபவக்குறிப்புகள் , இசைச்சார்ந்த பதிவுகள் என தொடர்ந்து எழுதி வலையுலகைக் கலக்கி வருகிறார் . இவரின் பதிவுகள் சிம்பிள் அன்ட் பெஸ்ட்டாக இருப்பதால் படிப்பவர்கள் அயர்ச்சியின்றி படிகமுடியும் . மேலும் தனக்குத் தோன்றுவதை அப்படியே எழுதிவிடும் தன்மை , இவரிடம் வாசகர்களை இழுத்துவிடுகிறது என்று நினைக்கிறேன் . இவரின் சில பதிவுகள் ,
நன்றி ,
மீண்டும் நாளைச் சந்திப்போம் .
அன்புடன்,
மெக்னேஷ் திருமுருகன் .
|
|
யோசனை நன்று... நாடோடி இலக்கியன், Rathinapugazhendi Pugazhendi - இரு தளங்களும் புதியவை... நன்றி தம்பி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்...
இன்றைக்கு நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் தளங்கள் எனக்கு புதிது! சென்று பார்க்கின்றேன்! கருத்துரை குறித்த உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன்! நன்றி!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஇன்று அளிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒருவர் வலைத் தளத்துக்குச் சென்று கருத்திடுவது பெரும்பாலும் புகழுரைகளாகவே இருக்கிறது, எழுத்தைப் பற்றிய கருத்துரைகள் என்றால் இடுகையின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு பிரமாதம் என்னும் நிலையிலேயே கருத்திடப் படுகிறது. நான் அறிந்தவரை பெரும்பாலான பதிவர்களதையே விரும்புகிறார்கள், இல்லை என்றால் மறு எல்லைக்குப் போய் ஒரேயடியாக எதிர் மறை கருத்துக்களைப்பதிக்கின்றனர். கருத்தாடல்களுக்கு வாய்ப்பே குறைவு, இது பற்றி ஒரு நீள இடுகையே இடலாம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசில புதிய (அதாவது எனக்கு) தளங்களும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சென்று பார்க்கிறேன்...
ReplyDeleteஎன் வலைப்பூ பற்றிய அறிமுகம்/விமரிசினம் அளிக்க வேண்டுகிறேன்.
ReplyDeletewww.philosophyofkuralta.blogspot.in
www.tamilinkural.blogspot.in
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபதிவர்கள் அறிமுகத்திற்கு நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDeleteநல்லதொரு கருத்தை முன்மொழிந்துள்ளீர்கள் மெக்னேஷ்! நாங்களும் இதை அவ்வப்போது பேசிக் கொள்வதுண்டு. பெரும்பாலும் இரண்டு துருவங்கள்தான்..அதாவது ஒன்று புகழ் இல்லை என்றால் சர்ச்சை...நல்ல கருத்துரையாடல் இல்லை என்பதே உண்மை...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!