இணைய வெளியில் யாத்ரீகர்கள்!
➦➠ by:
தளிர் சுரேஷ்
வலைச்சரம்
மூன்றாம் நாள்! இணைய வெளியில் யாத்ரீகர்கள்!
அன்பார்ந்த
நண்பர்களே! இரண்டாம் நாள் அறிமுகம் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டது என்று தோன்றுகிறது. தேடத்
தேட குவிந்து கிடக்கிறார்கள் பதிவர்கள். சிலர் தற்சமயம் இயங்காமல் இருந்தாலும் அன்று
அவர்கள் எழுதிக் குவித்த பதிவுகள் ஏராளமாய் கதை சொல்லும். அதை படிக்கவும் பகிரவும்
வலைச்சரம் நல்லதொரு வாய்ப்பை வழங்கியது. இந்த வாய்ப்பினை வழங்கிய வலைச்சர குழுவினருக்கு
எனது நன்றிகள்.
இணையத்தில்
எழுதும் போது கவனிக்க வேண்டியவை!
இணையத்தில் எழுத ஆரம்பிக்கும் புதியவர்கள் மளமளவென
எழுதிக் குவிக்கின்றார்கள் ஒரே நாளில் இரண்டு மூன்று, ஐந்து என்று கூட பதிவுகள் எழுதி
வெளியிடுகிறார்கள். எத்தனை நாள் இது தொடர்கின்றது ஓர் ஆறு மாதம் இல்லை ஒருவருடம் அப்புறம்
சரக்கு தீர்ந்துவிடுகின்றது. இல்லை நீர்த்து விடுகின்றது. இது தவிர்க்கப் பட வேண்டுமானால் பதிவர்கள் நாள்தோறும்
அப்டேட் ஆக வேண்டும். புதிய சிந்தனைகளை புதிய தகவல்களை அறிந்து அதற்கேற்ப எழுதப் பழக
வேண்டும்.
குறிப்பாக
ஒரு பதிவு எழுதினால் அதன் ஆயுட்காலம் ஒன்று முதல் ஒன்றரை நாட்கள் வரை இருக்கும்.
ஒரே நாளில் மூன்று பதிவுகள் எழுதினால் நாம் எழுதிய முதல் பதிவின் ஆயுள் குறை ஆயுளாகிவிடும்.
நாம் வேண்டுமானால் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதிக் குவிக்கலாம். ஆனால்
வாசகர்கள் அலுத்துப்போவார்கள்.
மேலும் பெரும்பாலான வாசகர்கள் அலுவலக கணிணியை
உபயோகிப்பதால் அந்த நேரத்தில் எந்த பதிவுகள் கண்ணில் படுகின்றதோ அதை வாசித்து கடந்து போவார்கள். நமது படைப்புக்கள்
அப்படிப்பட்ட வாசகர்களின் கண்களுக்கு கொண்டு செல்வதைத்தான் திரட்டிகள் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக தமிழ்மணம் திரட்டி பதிவுலக எழுத்தாளர்கள் வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கின்றன.
எனவே பதிவர்கள் தாங்கள் எழுதும் பதிவினை திரட்டிகளில் இணைப்பது அவசியம் ஆகும். தற்சமயம் தமிழ்மணம், இண்ட்லி என்ற இரண்டு திரட்டிகளே
இயங்குகின்றன. ஒரு காலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் இருந்தன.
பதிவின் ஆயுள் நீட்டிக்க பதிவை ஒரு நாளைக்கு ஒன்று
அல்லது வாரத்திற்கு நான்கு என்று குறைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் வளர்ந்தபின் நிறைய
எழுதலாம். ஆனால் தமிழ்மணத்தில் ரேங்க் முன்னேற வேண்டுமானால் தினம் ஓர் பதிவு எழுதப்பட
வேண்டும். அதே போல் உங்கள் பதிவுகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் வெளியிடப்படவேண்டும்.
அந்த நேரத்தில் அதிகமாக பதிவுகள் அலுவலகங்களில் வாசிக்கப் படுகின்றன.
பதிவுகள் பழமையான மொழியில் நடையில் இல்லாமல் எளிமையாகவும்
கவரும் படியும் நகைச்சுவையாகவும் இருந்தால் அதிக வாசகர்களை சென்றடையும். வாசகர்களை
தக்க வைத்துக் கொள்ள செய்யப்படும் பழமையான தந்திரம் மொய்க்கு மொய் என்பதாகும். நீங்கள்
அவர் தளத்திற்கு சென்று கருத்தும் வாக்கும் இட்டால் அவரும் உங்கள் தளத்திற்கு வருவார். இப்படி முதலில் ஈர்க்கப்படும் வாசகரை நீங்கள் தொடர்ந்து
தக்க வைத்துக் கொள்ளவேண்டுமானால் உங்கள் எழுத்து அவரை ஈர்க்க வேண்டும். அது உங்கள்
பொறுப்பு.
இனி
இன்றைய வலைச்சர அறிமுகத்தில் இணைய வெளியில் யாத்ரீகர்கள் என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள்
எழுதும் பதிவர்கள் சிலரை பார்க்கப் போகிறோம்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை பயணம் என்றாலே ஓர்
ஈர்ப்பும் ரசனையும் உண்டு. நடை பயணம் தொடங்கி, பேருந்து, கார், விமானம் கப்பல் என்று
பல்வேறு வசதிகள் பயணத்திற்கு உண்டாகிவிட்டன. நமது வாழ்க்கை கூட ஓர் பயணம்தான். தினம்
தினம் புதுப்புது அனுபவங்களுடன் வாழ்நாளை பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த இணைய வெளி யாத்ரீகர்கள் வாழ்நாளில் தாம் சென்று
ரசித்த பல்வேறு சுற்றுலாத் தலங்கள் ஆலயங்கள், ஊர்கள் போன்றவற்றை நமக்கும் அறிமுகம்
செய்து நம்மை அவர்களுடன் பயணிக்க செய்கின்றனர். பயணம் மட்டும் இவர்களது பதிவுகள் கிடையாது
என்றாலும் பயணக் கட்டுரைகளில் இவர்கள் மிளிர்கின்றனர். நம்மையும் அந்த பயணப்பகுதிக்கு
பிரயாணிக்க செய்கின்றனர் என்றால் மிகையாகாது.
இந்த பயணக்கட்டுரையாளர்கள் பெரும்பாலும் அனைவருக்கும்
தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர்களுடன் பயணிப்பதில்
உங்களுக்கு சுகமாகவே இருக்கும்.
1.
திடம்கொண்டு
போராடு என்ற வலைதளத்தில் எழுதி வருகின்றார் மென்பொருள் பொறியாளர் சீனு என்ற சீனிவாசன்.
தற்சமயம் ஷைனிங் ஸ்டார் என்றால் எல்லோருக்கும் தெரியும். குறும்பட ஹீரோவாக ப்ரமோஷன்
கிடைத்தாலும் பதிவுகள் எழுதுவதை தவற விடுவதில்லை. சிறுகதைகள், அனுபவங்கள், சினிமா விமர்சனங்கள்
என்று பலதும் எழுதினாலும் நாடோடி எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் இவர் எழுதும் பயணக்கட்டுரைகள்
கிளாசிக். அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்தது இவரது தனுஷ் கோடி பயண அனுபவம். அந்தக்
கால தனுஷ் கோடியை கண் முன்னே நிறுத்திய இவரின் பயணக் கட்டுரைகள் சில. மாஞ்சோலை பயண அனுபவம் மாஞ்சோலை ஓர் திகில் இரவு அருவிக் குளியல் என்றாலே ஆனந்தம் தானே! இதோ இந்த அருவியில் குளியுங்கள்! ஞாயிறு பொழுதை இனிய்மையாக கழிக்க உதவும் குமரகம் படகு இல்லம் பற்றி இங்கே! பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் இவரோடு பயணிக்க பிச்சாவரம் சதுப்புநில காடுகள்
2.
சந்தித்ததும்- சிந்தித்ததும் என்ற தளத்தில் எழுதி
வருகின்றார் வெங்கட நாகராஜ். திருவரங்கத்தை சேர்ந்த இவர் பணி சார்ந்து புதுடெல்லியில்
வசிக்கின்றார். இவரது மனைவி, மகளும் பதிவர்களே என்பது கூடுதல் சிறப்பு. இவரும் பல்சுவை
பதிவுகளை தருவார். அதே சமயம் தானே எடுத்த புகைப்படங்களுடன் இவர் எழுதும் பயணக் கட்டுரைகள்
அசத்தல். அதில் வட இந்திய சுற்றுலாத்தளங்கள்
பற்றி எழுதியவை என்னை மிகக் கவர்ந்தது இதோ சில ஏரிகள் நகரம் நைனிடால் பற்றி இவர் எழுதிய
தொடர் மிகவும் ரசிக்கவைத்தது இதோ நைனிடால் ஏரி
தற்சமயம் எழுதி முடித்த பயணக்கட்டுரை
தேவ் பூமி ஹிமாசல்! தேவ் பூமி ஹிமாசல் வட இந்திய கடவுள்களைப் பற்றி சொன்ன ஓர் சிறப்பான
பதிவு! அய்யர் மலையில் குரங்குகளுடன் கழித்த ஓர் காலைப்பொழுது இங்கே! அய்யர்மலை
3.
கடல்
பயணங்கள் என்ற வலைத்தளத்தில் எழுதி வருகின்றார் சுரேஷ் குமார். கோவையைச் சேர்ந்தவர்.
இவரும் பல இடங்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். ஓரிடத்தின் ஸ்பெஷல்
இவர் காதுக்கு வந்தால் அங்கே சென்று அந்த பொருள் தயாராகும் விதத்தை விவரிக்கும் விதமே
தனி. இவர் சுற்றுலா தளங்களை அறிமுகம் செய்வதை விட இப்படி ருசியான பொருட்களை அறிமுகம்
செய்ய வெளிநாடு எல்லாம் சென்றுள்ளார் சொந்த பொருளை செலவழித்து தகவல்கள் ஈட்டித்தருகிறார்
என்பது பெருமையான விஷயம். இவரின் பதிவுகள். ஓடத்தில் பயணித்த அனுபவம்இதோ கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் சென்றது குறித்த பதிவு பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் சொகுசு கப்பலில் பயணித்த அனுபவங்கள் ஸ்டார் குரூஸ் என்ற பதிவில்.
4.
காணாமல்
போன கனவுகள் என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி காந்திமதி என்ற ராஜி புண்ணியம் தேடி
சில பயணங்களை மேற்கொண்டு நம்மையும் புண்ணியம் தேடச் சொல்வார். ஓர் தலத்தினைப் பற்றி
எளிமையாக இவர் சொல்லும் வரலாறுகள் நம்மை அந்த பதிவின்பால் மட்டுமல்ல அந்த இடத்தின்பாலும்
ஈர்க்கும். சமீப காலமாக எழுதாமல் இருந்த இவர் சென்றமாதம் மீண்டும் எழுதினார் பின்பு
தளத்தின் பெயர் போல காணாமல் போனார். நாயக்கர் மஹால் ஒளி-ஒலி காட்சி அனுபவங்களை இங்கே
சொல்கின்றார் நாயக்கர் மஹால் ஒலி ஒளி காட்சி அழகாக அழுகுன்னி சித்தர் தவமிருந்த இடம் பற்றி தகவல்களை
அள்ளிவீசுகின்றார் இங்கே மறைமலைநகர்
5.
கோவை
நேரம் என்ற வலைப்பூவில் எழுதி வரும் கோவையைச் சேர்ந்த ஜீவானந்தம் கொஞ்சம் குறும்புப்
பேர்வழி! நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். இவர் தன் பணி சார்ந்து பல இடங்களுக்கு பயணிப்பார்
அந்த ஊர் ஸ்பெஷல் தகவல்களை படங்களுடன் பகிர்வார்
சுற்றுலாத் தலங்கள் மட்டுமல்ல வழிபாட்டுத் தலங்கள் பலவற்றையும் பற்றி எழுதி உள்ளார்.
கொடைக்கானல் ஒரு பார்வை! பாருங்களேன். தளச்சேரி கோட்டை சென்று வாருங்களேன்
திராட்சைத் தோட்டங்களில் ருசிபார்க்க இங்கே சுருளிப்பட்டி, தேனி
6.
வீடு
திரும்பல் என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர் மோகன் குமார் சென்னையில் சாட்டர்ண்ட் அக்கவுண்ட்
துறையில் பணிபுரிந்து கொண்டு சுற்றுலா பதிவுகள் பல எழுதி உள்ளார். தமிழ்மண முன்னனி
பதிவராக ஒருவருடம் இருந்த இவர் தற்சமயம் நிறைய எழுதுவதில்லை! இவரது சுற்றுலா குறிப்புக்களில்
அந்த சுற்றுலாமையம் குறித்த பல தகவல்கள், தங்குமிடம் ஆகும் செலவு, உணவுவிடுதிகள் போன்றவை
இடம்பெறுவது மிகச்சிறப்பு. இவர் எழுதிய கேரளா பயணக்கட்டுரை சிம்லா சென்று வந்த அனுபவம் இங்கே வெளிப்படுகின்றது
சிம்லா சிரபுஞ்சிக்கு டிரெக்கிங் சென்ற அனுபவம் இங்கே! சிரபுஞ்சி மலையில் டிரெக்கிங்
7.
புள்ளி
என்ற தளத்தில் எழுதி வருகின்றார் சித்ரன் ரகுநாத்.2004 முதல் எழுதிவருகின்றார் என்பதால்
முன்னவரும் கூட! பல்சுவை விஷயங்கள் எழுதும் இவர் எழுதிய ரோம் பயணக்கட்டுரை மிகசுவாரஸ்யம்
அருமையான டிவிஸ்ட் ஒன்று.இந்த கட்டுரையில் உண்டு இதோ ரோம் பயண அனுபவம்!
8.
bluehils
book என்ற தளத்தில் எழுதி வருகின்றார் கோகுல கிருஷ்ணா 2011 முதல் எழுதி வந்தாலும் நிறைய
பேருக்கு தெரியாது என்று நினைக்கின்றேன். திருப்பதிக்கு போனா காசு செலவாகாது என்று
தாத்தா சொன்னதை நம்பி திருப்பதி பயண அனுபவம் பகிர்கிறார்
9.
கால்கரி
சிவா கனடாவிலிருந்து என்ற தளத்தில் எழுதி வருகின்றார் 2006 முதல் எழுதி வரும் இவர் டோரண்டொ நயாகரா சென்று வந்த அனுபவத்தை தமக்கே உரிய நடையில் அழகாக பகிர்கின்றார்
1.கோவை ஆவி பயணம் என்ற தளத்தில் எழுதி வருகின்றார். குறும்பட இயக்குனர்,
சினிமா ஆர்வலர், நடிகர் என பன்முக கலைஞர் இவர் முன்பெல்லாம் நிறைய பயணக்கட்டுரைகள்
எழுதுவார் இப்போது பிஸியாகிவிட்டார் இவரது மயாமி பீச் பயண அனுபவம் இங்கே! மயாமி பீச்!
11. தமிழ் ஸ்டிடியோ என்ற தளத்தில் எழுதி வருகிறார் சக்தி
ஜோதி 2012க்கு பின் பதிவுகளை காண முடியவில்லை! இவரது சீனப்பயணக் கட்டுரை மிக சுவாரஸ்யம்!
சீனப் பயணம்!
12. இணையத்தமிழன் என்ற தளத்தில் எழுதி வருகின்றா
விஜய் பெரியசாமி சிவ சமுத்திரம் அருவிக்கு சென்று வந்த அனுபவத்தை படங்களுடன் விவரிக்கையில்
நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றார்
13.வத்திக்குச்சி என்ற தளத்தில் எழுதி வரும் இவரது புனைப்பெயரும்
அதுவே! எல்லோரும் எங்கெங்கோ சுற்றிக் காட்ட இவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை
சுற்றிக் காட்டுகிறார் பாருங்கள்!
14. என் கடல் பயணக்கட்டுரை என்று எழுத துவங்கிய ஹரிக்குமார்
ஏனோ தொடர்ந்து எழுதவில்லை! என்ன ஆச்சு? என்ற கேள்விகளுடன் இதை படித்து முடித்தேன் என் கடல் பயணம்
15. பத்ரி சேஷாத்ரி தன்னுடைய வலைப்பூவில் பல்சுவை
பதிவுகளை தருவார் கவிதைகளும் கொட்டிக்கிடக்கும் இவரது வலைப்பூவில் பிரம்மகிரி மலையேற்றம் பற்றி சொல்கிறார்
16. மலரின் நினைவுகள் என்ற தளத்தில் மலர்வண்ணன்
எழுதி வருகின்றார் இவரது முதல் பயண அனுபவத்தை அழகாக நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றார்
இங்கே! ஹிமாச்சலில் உள்ள வாகமான் என்ற அழகிய இடம் இவரால் அடையாளம் காட்டப்படுகின்றது
17. அகப்புறம் என்ற வலைப்பூவில் எழுதி வரும்
ஹரீஷ் இரண்டு வருடங்களாக எழுதி வருகின்றார் அனுபவங்கள் இலக்கியங்கள் என்று கலந்து கட்டும்
இவரின்நியுயார்க் பயண அனுபவம் இங்கே!
18. ரைட் கிளிக் வைத்தீஸ்வரன் என்ற தளத்தில்
எழுதி வரும் வைத்தீஸ்வரன் ஓர் பல்சுவைப் பதிவர் இவர் பயணிக்க சொல்லும் ஐடியாக்களை பாருங்களேன்! அவலாக்குறிச்சிக்கு பயணம்
19. கோவை டு தில்லி என்ற வலைப்பூவில் எழுதி வரும்
திருமதி ஆதி வெங்கட் பிரபல பதிவர் வெங்கட நாகராஜின் மனைவி இவரும் ஓர் பிரபல பதிவரே!
இவர் எழுதிய கோவை- கேரளா பயண அனுபவம் ரசியுங்களேன்!
21. நிவேதிதா தமிழ் எண்ணங்கள் தளத்தில் எழுதி வரும் சாம் திரு சீனா சென்று வந்த அனுபவங்களை பகிர்கிறார் சீனப்பெண்ணுக்கு அலைபேசி கொடுத்த சுவையான சம்பவம் இங்கே! சீனப்பயணம்!
22. வரலாற்றுப் புதையல் என்னும் தளத்தில் எழுதிவரும் சசிதரன் அவர்கள் வரலாறு சம்பந்தப்பட்ட பழமையான இடங்களுக்குச் சென்று தகவல்கள் சேகரித்து ஆவணப்படுத்துகின்றார் இதோ பழையாறை அரண்மனை பற்றி படியுங்கள்
23. மின்னல் வரிகள் தளத்தில் மின்னலாக தமது பதிவுகளை வழங்கி வரும் வாத்தியார் பாலகணேஷ் நகைச்சுவையுடன் எழுதுவதில் வல்லவர் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். புத்தக வடிவமைப்பாளராக பணியாற்றும் இவர் சகாக்களுடன் கொடைக்கானல் சென்றுவந்த அனுபவங்களை பகிர்கிறார் ரசியுங்கள்.
24. ஒரு முழு மடையனின் குறிப்புகளும் வரைவுகளும் என்ற தளத்தில் எழுதிவரும் சிவகுமார் சதாசிவன் தனது கொல்கத்தா பயணம் பற்றி பேசுகின்றார் .
25. பச்சை மண்ணுப்பக்கம் என்ற தளத்தில் எழுதி வருகின்றார் ரம்யா ரவீந்திரன் 2011 முதல் எழுதிவரும் இவரின் எழுத்துக்கள் சுவாரஸ்யம். இவரின் நியுசிலாந்து பயண அனுபவம் படியுங்கள்
26. கலையும் மவுனம் என்ற தளத்தில் எழுதி வருகின்றார் ஆரூர் பாஸ்கர்.
கலிபோர்னியா சென்று வந்ததை இங்கே பகிர்கின்றார்.
27. தமிழ் நண்பர்கள் தளத்தில் டி.எல் பாஸ்கர் தனது பஹமாஸ் பயண அனுபவங்களை பகிர்கிறார் படித்துப் பாருங்கள்!
28. மைக்ரோ விழிகள் என்ற தளத்தில் சிறப்பாக பலபதிவுகள் தந்த கிருபாளினி தற்போது எழுதுவதில்லை! இவரது இந்திய பயண அனுபவங்கள் இங்கே திருவண்ணாமலை!
பட்டியல் குறைக்க நினைத்தாலும் நீண்டு விட்டது! சில புதியவர்களையும் அடையாளம் காட்டியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சிறப்பான கட்டுரைகள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்ற ஆர்வமே சுட்டிகள் அதிகம் கொடுக்க காரணம். ஒரே நாளில் வாசிக்க முடியாதுதான். ஆனால் புக் மார்க் செய்துகொண்டு நேரம் கிடைக்கையில் வாசித்து மகிழுங்கள்! சுற்றுலா தளங்களின் அழகு உங்கள் மனதை அமைதி படுத்தி புத்துணர்ச்சி தரும்.
சுற்றுலா தலங்களை நிறைவாக சுற்றி பார்த்தீர்களா? நாளை மீண்டும் ஓர் தொகுப்புடன் சந்திக்கிறேன் நன்றி!
|
|
அறிந்தவர்களை விட அறியாதவர்கள் அதிகம்!
ReplyDeleteபுதியவர்களும் இருக்கிறார்கள்.. நன்றி....
ReplyDeleteபயணப் பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி
ReplyDeleteவெங்கர் நாகராஜ் பயணக் கட்டுரை மன்னன் என்று சொல்லலாம். இந்தியாவில் எங்காது செல்ல வேண்டுமென்றால் அவரது வலை தளம் ஒரு பயணக் கையேடாக விளங்கும்.நல்ல அறிமுகங்கள்
தினம் ஒரு பதிவு என்பதே அதிகம்தான். வாரம் இரண்டு பதிவு என்று வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் எழுதலாம்.
ReplyDeleteதமிழ்மண திரட்டியின் உதவி இன்றியே அதிக வாசகர்களைப் பெற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துகள்
bluehillsbook, தமிழ் ஸ்டுடியோ, பச்சை மண்ணு பக்கம் - இந்த தளங்கள் புதியவை... நன்றி...
ReplyDeleteடி.எல் பாஸ்கர் அவர்களின் இணைப்பை மட்டும் சரி செய்ய வேண்டும்...
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
Not
ReplyDeleteS.P. Dinesh kumar
S.P. Senthil kumar
Thanks
ReplyDeleteஇன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள்! இவர்களது பதிவுகளைப் படித்தாலே பல ஊர்களுக்கு இலசமாக பயணித்துவிடலாம் போல.
கூட்டாஞ்சோறு என்ற வலைதளத்தில் எழுதி வருபவர் திரு எஸ்.பி செந்தில் குமார் அவர்கள். அவரது பெயர் தவறாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன்
இன்றையை பயணக் கட்டுரை பதிவர்களின் பதிவுகளை படு அழகாக தொகுத்து வழங்கியமைக்கு பாரட்டுக்கள். இன்றைய அடையாளப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteநண்பரே!
கூட்டாஞ்சோறு என்னும் வலைத் தளத்தின் பதிவாளரின் பெயர் S.P. செந்தில் குமார் என்பதாகும். தினேஷ் குமார் என்பது திருத்தம் செய்யப் பட வேண்டும். நன்றி!
பதிவாளர்களின் எண்ணிக்கை எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த விளக்காக தெரிகின்றது. நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அறிமுகங்கள் அதிகம். நன்றி
ReplyDeleteஎத்தனை அறிமுகப்பதிவர்கள் இவர்களை தேடிப்பிடித்த தங்கள் ஆர்வமும் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுரேஷ் நண்பரே அறியாதவர்கள் பலர். நல்ல தளங்கள்....பலரை அறிந்திருந்தாலும் தளம் சென்றதில்லை...எல்லாம் நேரம் பிரச்சனையால்...இனியாவது லேட்டாகவாவது செல்ல வேண்டும்...
ReplyDeleteபதிவுகள் எழுதுவது பற்றிக் குறிப்பிட்டமை சிறப்பு...
கூட்டான்சோறு தினேஷ் அல்ல அவர் எஸ் பி செந்தில் குமார்....பெயரை மாற்றிவிடவும் நண்பரே!
வாழ்த்துகள் அனைவருக்கும்!
அறிமுகத்திற்கு நன்றி நண்பா !
ReplyDeleteபதிவுகளின் ஆயுசே ஓரிரு நாட்கள் என்னும் போது இத்தனை அறிமுகங்களையும் படிப்பது மிகவும் சிரமம், புக் மார்க் செய்து கொண்டு வாசிப்பது எல்லாம் நடந்து விட்டால்...... ஆர்வமுடன் செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் தளிர்,
ReplyDeleteஅப்பா இவ்வளவு தேடலா?
எத்துணை தளங்கள், தெரிந்தது கொஞ்சம், தெரியாத தளங்கள் ஏராளம் தாங்கள் சொன்னது போல் மெதுவாகத்தான் பின் செல்லனும்,
அருமையான தொகுப்பு,
பதிவின் தன்மையின் விளக்கமும் அருமை,
வாழ்த்துக்கள். நன்றி.
இருந்த இடத்திலிருந்தே - பல ஊர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இனிய தொகுப்பு..
ReplyDeleteவாழ்க நலம்!..
பதிவர்களின் பட்டியல் நீளத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன். இதில் பலரும் நான் அறியாதவர்களே!
ReplyDeleteபயணப் பதிவர்களில் என்னையும் ஒருவனாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
அதில் இருக்கும் சிரியப் பிழையை சுட்டிக்காட்டலாம் என்று நினைத்த போதே எனக்கு முன்பாக நண்பர் கில்லர்ஜி, நடனசபாபதி சார், நண்பர் யாதவன் நம்பி, கீதா மேம் ஆகியோர் சொல்லிவிட்டார்கள்.
மிக்க நன்றி நண்பரே!
த ம 5
எதை உடனே படிப்பது எதை காலம் தாழ்த்தி படிப்பது என்பது வாசகர் நிலையாக இருக்கும் எதை எப்போது எழுதும் போது தொடர்ந்து எழுதுவது என்பது வலைப்பதிவாளரின் கொள்ள்கையாக இருக்க வேண்டும் என்பதே என் நிலை ஆனாலும் நேரம் இணையத்தின் சூழல் புறச்சூழல் நன்றாக இருந்தால் தொடர்ந்தும் தொடர் எழுத முடியும் தினமும் என்பதுக்கு மூத்த பதிவர் செங்கோவி நாற்று நிரூபன் என எனக்கும் உந்துசக்தி தநதால் தான் தனிமரமும் முன்பு தினமும் தொடர் எழுதி அதை மின்நூல் ஆக்கியதும் வலையுறவுகளின் ஊக்கிவிப்பாள் தான்!
ReplyDeleteபயணப் பதிவர்கள் பட்டியல் நன்று!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் சிலர் நான் விரும்பிப்படிப்பது! சிலர் இனித்தான் படிக்க வேண்டும்! பணி தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎத்தனை அறிமுகங்கள்...
ReplyDeleteஅருமை.. அருமை...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இன்றைய அறிமுகங்களில் என்னையும், என் கணவரையும் குறிப்பிட்டுள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி. மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வலைச்சர வாரம் சிறக்கவும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇரவு நேரத்தில் டைப்பிங் செய்தமையால் பெயர்க்குழப்பம் ஏற்பட்டுவிட்டது. காலை முதல் வேலை அதிகம் இருந்தது மாலையில் மின் தடை அதனால் பிழை உடனடியாக களைய முடியவில்லை! தற்போது களையப்பட்டுவிட்டது. கருத்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteதங்கள் அறிவுரைகள் வரவேற்கத் தகுந்தது. எத்தனை தளங்கள் எல்லோரும் புதியவர்கள் எனக்கு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...! அறிமுகப் படுத்திய தங்களுக்கு என் நன்றிகள் !
ReplyDeleteஅப்பப்பா....எத்தனை பதிவர்கள் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்...வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteதங்கள் பணி சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது சகோ. நன்றி வாழ்த்துக்கள்.
ஒரே நாளில் எவ்வளவுஇடங்கள். எவ்வளவு அறிமுகங்கள். அப்பப்பா. முழுமையாக அனைத்தையும் படிக்கமுடியவில்லை. தொடர்ந்து படிப்பேன். நாளை சந்திப்போம்.
ReplyDeleteவருகை தந்து கருத்தளித்து ஊக்கமூட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDelete