அனுபவங்கள் பேசுகின்றன!
➦➠ by:
தளிர் சுரேஷ்
வலைச்சரம் 5ம் நாள்! அனுபவங்கள் பேசுகின்றன!
அன்பார்ந்த வலைச்சர வாசகர்களே
தொடர்ந்து வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
வலைப்பூ புதிதாக துவக்கியிருப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி வருபவர்களுக்கும் சில ஆலோசனைகள்
கடந்த பதிவுகளில் தந்தேன். இன்றும் கொஞ்சம் பார்ப்போம்.
உங்கள் தளத்திற்கான டெம்ப்ளேட்
என்னும் வார்ப்புரு மிகவும் முக்கியமானது. பிளாக்கர் தவிர நிறைய டெம்ப்ளேட்களும் கிடைக்கின்றது.
அதில் எது நமக்கு பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் சில டெம்ப்ளேட்களில்
எழுத்துக்கள் சரியாக தெரியாது. அதுபடிப்பவர்களை சிரமப்படுத்துவதால் மூடிவிட்டு அடுத்த
பக்கம் சென்றுவிடுவார்கள்.
எனவே கூடியமட்டும் அழகை மட்டும் பார்க்காமல் படிக்க
வசதியாக உள்ள டெம்ப்ளேட்களை தேர்வு செய்யவேண்டும். ஏற்கனவே சொன்னபடி தமிழ்வாசியின்
தளத்திற்கு சென்று எப்படி டெம்ப்ளேட் மாற்றவேண்டும் என்று படித்து மாற்றிக் கொள்ளுங்கள்.
டெம்ப்ளேட் எப்படி இருந்தாலும் படிக்கும் பக்கம் பேக் கிரவுண்ட் கலர் வெள்ளையாகவும்
எழுத்துருவின் கலர் கருப்பாகவும் இருப்பது மிகவும் நல்லது. எழுத்துருவின் அளவு மிகச்சிறியதாகவும்
இல்லாமல் மிகப்பெரியதாகவும் இல்லாமல் நார்மல் சைசில் இருத்தல் நல்லது. என் பதிவுகள்
இப்படித்தான் அமைத்துள்ளேன். அதே போல பதிவுகளில் நகரும் பூக்கள் போன்ற அனிமேஷன்கள்
இணைப்பதானால் தளம் திறக்க நேரமாகும் இணையம் மெதுவாக இயங்கினால் சீக்கிரம் திறக்காது.
இதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்துவிட்டு நல்ல எழுத்துக்களை பதிவுகளை தந்தாலே போதும் வாசகர்கள்
தேடிவருவார்கள்.
எழுதும் போது தவிர்க்கவேண்டியவை! ஆபாசமான வார்த்தைகள்
நாகரிகமற்ற வார்த்தைகள்! கடுஞ்சொற்கள் போன்றவை தவிர்த்தல் மிகவும் நல்லது. முகநூல்
போன்று திட்டி எழுதுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள்
பெற்ற அனுபவங்களை நீங்கள் ரசித்ததை, நீங்கள் செய்த சாகசம், நீங்கள் செய்த சமையல் என்று
எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் அவை படிப்பதற்கும் புரிந்து கொள்ளவும் எளிமையாக
இருக்க வேண்டும். நவீன இலக்கியவாதிகளின் தரத்தில் உங்கள் எழுத்துக்கள் இருக்குமானால்
சாமானியர்கள் வரமாட்டார்கள். எனவே எதையும் எளிமையாகவும் புரியும் படியும் எழுதுங்கள்.
இணையத்தில் அதிகம் ரசிக்கப்படுவது, நகைச்சுவைகள் மற்றும் சினிமா, அதன்பின்னரே மற்றவை
எனவே நமது இடுகைக்கு வருகை இல்லையே என்று வருந்தாமல் தொடர்ந்து எழுதுங்கள் வாசகர்கள்
வருவார்கள்.
இதையெல்லாம் நான் உங்களுக்குச்
சொல்கிறேன் என்றால் என்னுடைய அனுபவங்களை வைத்துதான். தீ சுடும் என்றால் தெரியாது. விரலை
வைத்து பார்க்கையில் ஆ என்று வலி பின்னியெடுக்கும். நம் வாழ்க்கை பாதை நிறைய அனுபவங்கள்
நிறைந்து கிடக்கின்றன. பிறந்தது முதல் இறக்கும் வரை ஏன் இறப்பு கூட ஓர் அனுபவம்தான்.
ஆனால் அதை நம்மால் எழுத முடியாது. இப்படி வாழ்க்கையில் தாங்கள் கற்ற பெற்ற அனுபவங்களை அனுபவசாலிகளான பதிவர்கள் பதிந்து வைத்துள்ளனர்.
அவற்றில் சில பதிவுகளை இன்று உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றேன். ஆம் இன்றைய தலைப்பு
அனுபவங்கள் பேசுகின்றன!
1.
பாலஹனுமான்
தளத்தில் பல்சுவை தகவல்களை பகிர்ந்து கொள்பவர் பால ஹனுமான். காஞ்சி மஹாப் பெரியவா அனுபவங்கள்
பற்றி இங்கே பகிர்ந்து கொள்கின்றார்
2.
இந்த
தளத்தின் பெயரே என் அனுபவங்கள், தளத்தில் எழுதிவரும் லதா குப்பா அவர்கள் 2012 முதல்
எழுதுகின்றார். எலுமிச்சை ரசம் ருசித்த அனுபவத்தை எத்தனை அழகாக சொல்கின்றார் பாருங்கள்
3.
தமிழ்
ஆவணம் என்ற தளத்தில் எழுதி வரும் தினேஷ் பாபு கண்ணதாசன் குறித்து நிறைய எழுதி உள்ளார். கண்ணதாசன் அனுபவம் குறித்த ஓர் பதிவை இங்கே தந்துள்ளார்
4.
நிகழ்காலம்
என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி எழில் சிறந்த சமூக சேவையாளர், பெரியாரியல் சிந்தனையாளர்,
தற்சமயம் முகநூலில் அதிகம் எழுதும் இவர் மாதாந்திர இதழ்களிலும் கட்டுரைகள் படைக்கின்றார்.
இவரது காதல் அனுபவங்கள்
5.
ஸ்டார்ட்
மியுசிக் என்ற தளத்தில் எழுதும் பன்னிக்குட்டி ராமசாமி இப்போது அதிகம் எழுதுவதில்லை!
இவரது பாணியே தனி. ஆவி யோடு இவருக்கு நேர்ந்த அனுபவம் இது!
6.
அவர்கள்
உண்மைகள் தளத்தில் எழுதி வரும் டி.ஜே துரை அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர். வித்தியாசமான
தலைப்புக்களில் எழுதுவார். போட்டோஷாப்பில் அசத்துவார். ஆனால் இதையெல்லாம் கூட எழுதுவார்?
7.
எழுத்தாளர்
நாஞ்சில் நாடன் தன்னுடைய தளத்தில் தனக்கேற்பட்ட பேருந்து பேருந்து பயண அனுபவத்தை நாஞ்சில் மொழியில்
விவரிப்பதை ரசியுங்கள்!
8.
ஆன்மீகக்
கடல் என்ற தளத்தில் எழுதிவரும் பதிவர் பெயர் தெரியவில்லை! ஆன்மீக சோதிட தகவல்கள் விரிந்து
கிடக்கின்றன. அவருடைய ஜோதிட அனுபவங்கள் பற்றி பகிர்கின்றார்
9.
தமிழில்
புகைப்படக் கலை என்ற தளத்தில் போட்டோ ஆர்வலர்கள் பலர் கூட்டாக எழுதி வருகின்றனர். பூச்சிகளை படம் பிடித்தல் பற்றிய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளனர்
10. தமிழ் உலா என்ற தளத்தில் எழுதி வருகின்றார்
என்றும் அன்புடன் பாலா. எ. அ பாலா இவரது பதிவுகளை இட்லி வடை தளத்திலும் படித்திருக்கலாம்.
2004 முதல் எழுதி வரும் மூத்த பதிவர். தன்னுடைய திகில் அனுபவங்களை பகிர்கின்றார்
11. ஹரிஹரனின் உலகங்கள் தளத்தில் எழுதி வந்த
ஹரிஹரன் தன்னுடைய அமானுஷ்ய அனுபவங்களை பகிர்கின்றார்
12. ஆம்னி பஸ் என்றொரு தளம். இங்கே இலக்கியவாதிகள்
கூட்டாக எழுதுகின்றனர். ஓர் இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற ஜெயகாந்தனின்
நூல் விமர்சனம்
13. பிரபல மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் பூரணச்சந்திரன்
தம்முடைய மொழிபெயர்ப்பு அனுபவங்களை பகிர்கின்றார்
14. வலையுகம் என்ற தளத்தில் எழுதி வரும் ஹைதர்
அலி துணிக்கடையில் வேலை செய்த போது ஏற்பட்ட அனுபவங்கள் சுவையாக சொல்கிறார்
15. தேடல் என்ற தளத்தில் எழுதிவரும் சரவணக்குமார் மரணவிளிம்பில் என்ன நடக்கும் என்று படித்ததை பகிர்ந்து கொள்கின்றார்
16. கிரி ப்ளாக் என்ற தளத்தில் எழுதி வரும் கிரி
தன்னுடைய பாஸ்போர்ட் வாங்கிய அனுபவங்களை பகிர்கின்றார்
17. மெட்ராஸ் பவன் தளத்தில் எழுதிவரும் சிவக்குமார்
தன்னுடைய முதல் விமானப் பயண அனுபவத்தை பகிர்கின்றார்
18. உண்மையின் பக்கம் என்ற தளம் தற்போது தீயாய்
பரவி வரும் செல்ஃபி எடுப்பவர்களுக்கான சில அனுபவங்களை கூறுகின்றது
19. சயந்தன் தனது தளத்தில் தனது வானொலி அனுபவங்கள்
சிலவற்றை சுவையாக பகிர்கின்றார்
20. பதாகை என்ற இணைய இதழில் அரைப்புள்ளி அரசி
ஒருவரின் எடிட்டிங் அனுபவங்களை ரசியுங்கள்!
21. எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் தன்னுடைய தளத்தில் தனக்கேற்பட்ட ஓர் அமானுஷ்யம் பற்றி சொல்கிறார்
22. நெல்லை நண்பன் என்ற தளத்தில் எழுதி வந்த
ராம்குமார் விஸ்வரூபம் படம் பார்க்க ஆந்திரா சென்ற அனுபவம் பகிர்கின்றார்
23. அதிஷா தனது தளத்தில் சினிமாவிமர்சனங்கள்
எழுதுவார். அவருக்கு ஏற்பட்ட ஆழ்கடல் அனுபவம்
24. உங்களுக்காக என்ற தளத்தில் எழுதி வரும் வயல்
மெட்ரோ ரயில் பயண அனுபவத்தை வீடியோவாக பகிர்கின்றார்
25. வேடந்தாங்கல் தளத்தில் எழுதி வந்த கருண்
ஆனந்தி டீச்சருக்கு ஏற்பட்ட சோக அனுபவம் சொல்கின்றார்
26. நிசப்தம் தளத்தில் எழுதி வரும் எழுத்தாளர்
வா. மணிகண்டன் எனக்கு எவ்வளவு அனுபவம் தெரியுமா? என்கிறார்
27. சேம்புலியன் தளத்தில் எழுதி வரும் ரூபக்
ராம் மழைச்சாரலில் பஜ்ஜி சாப்பிட்ட அனுபவத்தை சுவையாக பகிர்கிறார்
28. சிவகாசிக்காரன் தளத்தில் தனது எழுத்துக்களால்
நம்மைக் கட்டிப்போடும் ராம்குமார் தனது பால்ய வயது மழை அனுபவங்கள் கூறுகின்றார்
29. சுஜாதா தேசிகன் தனது தளத்தில் ஓர் மழைநாளில்
பிரபல எழுத்தாளர் ரா.கி.ர வுடன் தனக்கேற்பட்ட அனுபவத்தை பகிர்கின்றார்
30. என் ராஜபாட்டை தளத்தில் எழுதிவரும் கணிணி
ஆசிரியர் மேலையூர் ராஜா அவர்கள் உபயோகமான கணிணி டிப்ஸ்கள், மின்நூல்கள், செல்போன் தகவல்களை
பகிர்வார். தன்னுடைய குழந்தை வளர்ப்பு அனுபவங்களை இங்கு பகிர்கிறார்
31.
சினிமா
சினிமா தளத்தில் எழுதும் ராஜ் அவர்கள் தனக்கு வந்த ஓர் மெயிலில் இருந்து ஆன்சைட் அனுபவங்களை
பகிர்கிறார்
32.
ரவிசங்கர்
பேஜசில் எழுதிவந்த ரவி சங்கர் தனக்கேற்பட்ட இனிமா இனிமா அனுபவங்களை பகிர்கிறார்
33.
கவிதாயினி
குட்டி ரேவதி தனது தளத்தில் மெட்ராஸ் சினிமா பார்த்த அனுபவம் பகிர்கின்றார்
34.
பிரபல
பதிவர் நாய்-நக்ஸ் நக்கீரன் அவர்கள் டீன் ஏஜில் பார்த்த சினிமா ஏற்படுத்திய அனுபவங்களை
பகிர்கிறார்
35 யாவரும் நலம் தளத்தில்
சீன் கிரியேட்டர் தனது ஆங்கில சினிமா அனுபவங்களை பகிர்கிறார்
என்ன நண்பர்களே! எத்தனை எத்தனை அனுபவங்கள்! அத்தனையும் நமக்கு ஓர் பாடம் கற்றுத் த்ருகின்றது அல்லவா? உங்கள் பொன்னான கருத்துக்களை பதிவிட்டு ஊக்கப்படுத்துங்கள்! நாளை மீண்டும் சந்திப்போம்! நன்றி!
|
|
எவ்வளவு தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைத்தும் அறிந்த தளங்கள்... சில தளங்களில் மற்றும் அனுபவங்கள் தொடர்கின்றன... அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteஎழுதுவது எப்படி என்ற உத்தி அருமை. நண்பர்களின் தளங்களுக்குச் சென்றுபார்த்தேன். அதிகமான தளங்களை அருமையாக அறிமுகப்படுத்தும் தங்களின் பாணி வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteஆஹா.... அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்!
ReplyDeleteஆஹா வலைத்தள குறிப்புகளுடன் இத்தனை தளங்களை அறிமுகப் படுத்தியது அருமை சகோ. பல நாட்களுக்குப் பின் இன்று தான் வலைச்சரம் வருகிறேன். வாழ்த்துகள் சகோ
ReplyDeletePiramandam.
ReplyDeleteஅனுபவப் பதிவுகள் நிச்சயம் பார்க்க வேண்டியவை மிக்க நன்றி!அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஎத்துனைத் தளங்கள் தங்கள் தேடல் அருமை,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
நன்றி.
அடேயப்பா...!!! ஒரே நேரத்தில் 35 பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு புதிய சாதனையை படைத்துவிட்டீர்கள். உங்களுக்கும், இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteயப்பா எத்தனைத் தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
ReplyDeleteஇனி அடுத்து வரும் ஆசிரியர்கள் ஆட்களைப் பிடிப்பதில் திணறி வேண்டியிருக்கும்...
ReplyDeleteஅம்புட்டுப் பேரையும் அறிமுகப்படுத்தியாயிற்று...
உங்கள் உழைப்பு தெரிகிறது... வாழ்த்துக்கள் சகோதரா...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனுபவங்கள் என்றைக்கும் புதியவை தான்..
ReplyDeleteகடும் உழைப்பு.. சிறப்பான தொகுப்பு..
வாழ்க நலம்!..
இத்தனை பேரை அடையாளம் காட்டினால் யாரைப் படிக்க யாரை விட.? வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... இங்களின் பதிவுகளை படித்து பார்த்தேன் நீங்கள் அறிமுகப்படுத்தியதைவிட பதிவில் சொல்லி இருக்கும் விஷயங்கள் எல்லாம் புதிதாக வருபவர்களுக்கு மிக முக்கியம். இந்த வலைசர்த்திற்காக நீங்கள் அதிக நேரம் செலவழித்து இருக்கிறீர்கள் என்பது உங்களின் கடந்த பதிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது. வாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteதேடல்கள் பிரமிக்க வைக்கின்றது இத்தனை அனுபவங்கள் படிக்கவே தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் உங்கள் பணிக்கு நீங்கள் வாசிக்கும் வேகம் அதிகம்தான் அண்ணாச்சி! இன்றைய அடையாள வலையுறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் பதிவும் அதில் சொல்லப்படும் கருத்தும் மிகவும் உபயோகமானவை. அறிமுகங்களிலும் அசத்துகிறீர்கள்! எத்தனை பதிவர்கள், எத்தனை அனுபவங்கள். வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteத ம 6
எத்தனை தளங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே.... மலைப்பாக இருக்கிறது!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
த.ம. 7
வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-
தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி, திரு. சுரேஷ்.
ReplyDelete