நளபாகமும்! நகை உணர்வும்!
➦➠ by:
தளிர் சுரேஷ்
வலைச்சரம் நான்காம் நாள்! நளபாகமும்! நகை
உணர்வும்!
அன்பார்ந்த வாசகர்களே! நேற்றைய
பதிவினை படித்திட்டு கருத்திட்டவர்களுக்கும் வாசித்தவர்களுக்கும் எனது நன்றிகள்! நேற்று
கொஞ்சம் வேலைப்பளு இருந்தமையால் பகல் பொழுதில் கணிணியிடம் வர முடியவில்லை! இரவில் வந்த
சமயம் கணிணி கொஞ்சம் முரண்டு செய்தமையால் அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை.
இன்றைய பதிவும் தயாரிக்க இயலவில்லை.
தாங்க முடியாத தலைவலி வேறு. அதனால் உறங்க சென்றுவிட்டேன்.
விடியலில் எழுந்து இந்தபதிவை தயாரிக்கின்றேன்.
சரி ஆரம்பிப்போமா?
வலைபதிவில் எழுத ஆரம்பித்துவிட்டோம் அடுத்து என்ன செய்வது? வலைபதிவில் நாம் எழுதுவதோடு
அடுத்தவர்களின் பதிவுகளை சென்று வாசிக்கவேண்டும். என்ன இது சொன்னதையே திருப்பி திருப்பிச்
சொல்கின்றானே என்று எண்ணாதீர்கள். பலபதிவுகளுக்குச் சென்று வாசிக்கையில் எப்படியெல்லாம்
எழுதுகின்றார்கள் என்று நமக்குத் தெரியும். ஒவ்வொருவரும் ஒரு பாணியில் எழுதுவார்கள்.
அவர்கள் எழுதும் விதத்தை கவனித்து வந்தோம் என்றால் நம்முடைய எழுத்துக்களை திருத்தி
மெருகேற்றிக் கொள்ளலாம்.
வலையில் எழுதிய பின் திரட்டிகளில் இணைக்க வேண்டும்.
ஒருகாலத்தில் நிறைய திரட்டிகள் இருந்தன. திரட்டிகள் மூலம் புதிய வாசகர்கள் நம் தளத்திற்கு
வருவார்கள். தற்போது தமிழ்மணம், இண்ட்லி போன்ற சில திரட்டிகளே இயங்குகின்றன. இவற்றில்
இணைய வேண்டும். எப்படி இணைந்து கொள்வது அதை பிறகு பார்ப்போம் வலைப்பூ எப்படி துவக்குவதுசொல்லித்தருகிறார்
தமிழ்வாசி இந்த தொடர் பதிவில், வலைப்பூ துவங்கி எழுதுவது எப்படி? இது
மிக உபயோகமாக உங்களுக்கு இருக்கும். முகநூல் டிவிட்டரில் நமது தளச்சுட்டியை கொடுத்து
பகிரலாம். இதனால் வாசகர் வருகை அதிகரிக்கும்.
உங்கள் தளம் அழகாக இருக்க வேண்டியதுதான்! ஆனால்
அதற்காக நிறைய கேட்ஜெட்டுக்களை இணைத்துக்கொண்டிருந்தால் அதுவே நமக்கு வினையாகிவிடும்.
தேவையற்ற கேட்ஜெட்களை நீக்குங்கள். அதே போல் நீங்கள் பதிவிடுகையில் வலது மூலையில் லேபிள்
என்று கேட்கும் அங்கு உங்கள் பதிவுக்கு ஏற்ப ஓர் லேபிளை எழுதுங்கள், நிறைய எழுதினால்
உங்கள் வலையின் இடத்தை அடைத்துக் கொண்டு தேடுபவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். அதே
போல நாம் இடும் இடுகைக்கு கூகுள் யூ.ஆர்.எல் கொடுக்கும். இது தானியங்கி. அங்கு நாமே
பெயர் இடலாம். நமது இடுகைக்கு சம்பந்தமான ஆங்கிலப்பெயரினை அதில் எழுதினால் கூகுள் தேடுபொறிகளில்
நமது இடுகை எளிதாக கிடைக்க வழி கிடைக்கும். இது போன்ற தொழில்நுட்பங்களை மட்டுமல்ல பதிவர்களின்
சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் செய்யும் உதவி
மலையினும் பெரிதாகும் நமக்கான திரட்டி எது? என்று சொல்லித் தருகிறார் இங்கே பதிவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறார் இங்கே பதிவர்களின் பிரச்சனைக்கு தீர்வு எது? அவரது இந்த பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்:
இன்றைய அடையாளப்பதிவர்களுக்கான
தலைப்பு நளபாகமும் நகை உணர்வும் ஆகும். பொதுவாகவே சமையல் ஓர் கலை! அது சிலருக்கு மட்டுமே
கைவரப் பெறும். என் அம்மா சமையல் மாதிரி வராது!
என் மனைவி சமைச்சா ஊரே வந்து நிற்கும்! எங்கப்பா ரசம் வச்சாருன்னா! இப்படி ஒவ்வொருவரும்
தங்கள் வீட்டினரை சமையலில் புகழ்வர். அதே சமயம் ஒரே உப்பை அள்ளிக் கொட்டிட்டான். புளி
அதிகம், காரம் அதிகம் உரைப்பு இல்லை என்றும் சொல்வார்கள். எனவே சமையல் நமது உணர்வில்
கலந்தது. அந்த சமையலில் மற்றவரை திருப்தி படுத்துவது
கஷ்டம். அப்படி கஷ்டமான ஒன்றை இஷ்டமாக செய்து திருப்தி படுத்துபவர்கள் கவுரவிக்க இணையத்தில்
சமையல் குறித்து எழுதுபவர்களை பார்ப்போம். அதற்கடுத்தது நகை உணர்வு. ஒருவனை அழவைப்பது
சுலபம். ஆனால் சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டம். அதற்கு நகைச்சுவை உணர்வு வேண்டும்.
எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் ஒருவர் நகைச்சுவை செய்து அந்த சூழலையே மாற்றிவிட முடியும்.
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போச்சு என்று சொல்லுவார்கள். இப்படி நோய்விட்டுப்
போகச்செய்யும் சிலரையும் இன்று கவுரவிப்போம்.
நளபாகத்தினர்:
1.
எங்கள்
பிளாக் தளத்தில் நண்பர்களாக சேர்ந்து எழுதுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு. அதில்
திங்கள் கிழமையை திங்கக் கிழமை என்று ஆக்கி விதவிதமான சமையல்களை சொல்லித் தருகின்றனர்.
இவர்கள் சொல்லித்தரும் விதம் அவ்வளவு எளிமை! நகைச்சுவையுடன் எல்லோருக்கும் புரியும்
படி சுவையாக சமைக்கின்றனர் இவர்கள். இதோ ஓர் துளி: பறங்கிகாய்
2.
உமையாள்
காயத்ரி அவர் பெயரிலேயே தளத்தினை நடத்துகின்றார். சாயி பக்தர். அருமையான கவிதைகள் எழுதுவார்.
எனினும் படத்துடன் அவர் பகிரும் சமையல் குறிப்புக்கள் எளிமை என்பதுடன் உடலுக்கு நலம்
பயப்பன. தோசைப்பிரியர்களுக்கு அவர் தரும் சத்தான தோசை இது: ஓட்ஸ் தோசை
மாங்காய் சீசன் முடியப்போகிறது
இதோ இவர் கற்றுத்தருகின்றார் பச்சடி செய்ய மாங்காய் பச்சடி
3.
சாஷிகா
கிச்சன் என்ற தளத்தில் எழுதிவரும் மேனகா சத்யா அவர்கள் வட இந்திய உணவுகள் அருமையாக
சொல்லித் தருவார். சத்தான உணவுகளும் அடிக்கடி பகிர்வார். சாம்பிளுக்கு இதோ! திணை அதிரசம் செய்கிறார் இங்கே! குஜராத்தி தாளி செய்து தருகின்றார்
4.
பெட்டகம்
என்ற தளத்தில் முகமது அலி அவர்கள் அழகுகுறிப்புக்கள் மருத்துவ குறிப்புக்கள் சமையல்
குறிப்புக்களை எழுதி வருகின்றார். இதோ 30 வகை விருந்தினர் சமையல்
5.
சுபா ஆனந்தி அவர்கள் தமது தளத்தில் பல பயனுள்ள தகவல்கள்
அன்றாடம் நமது வாழ்க்கைக்கு உபயோகமான தகவல்களை தந்துவருகின்றார். இதோ அவர் சமையல் டிப்ஸ் தருகின்றார்
6.
தழுவல்கள்
என்ற தளத்தில் எழுதிவருபவர் பெயர் தெரியவில்லை! சித்த மருத்துவக்குறிப்புகளுடன் சமையல்
குறிப்புக்களும் தருகின்றார் மாதிரிக்கு ஒன்று! சமையல் குறிப்புக்கள்
7.
நவற்கிரி
என்ற தளத்தில் ராஜா ஓட்ஸ் தோசை செய்ய கற்றுத் தருகிறார் செய்து பாருங்கள்! ஓட்ஸ் தோசை
8.
கலைக்கழகம்
என்ற தளத்தில் ஏராளமான தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. மாதிரிக்கு ஒன்று! சமையல் டிப்ஸ்!
9.
சமையல்
குறிப்புகள் என்ற தளத்தில் வெங்காயத்தாள் பச்சடிசெய்ய கற்றுத்தருகின்றார்
10. தாளிக்கும் ஓசை என்ற தளத்தில் கற்றுத் தரும் இந்த
இனிப்பை செய்து பாருங்கள் அசோகா
நகை உணர்வாளர்கள்:
1.
இன்று
இணையத்தில் நம்பர் ஒன் நகைச்சுவை பதிவாளர் இவர்தான். பலவகை நகைச்சுவைகளை இவர் எழுதும்
பாங்கே தனி ஜோக்காளி தளத்தில் எழுதி வரும் பகவான் ஜி அவர்களின் நகைச்சுவை பதிவுகள்
நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இதோ! தொப்பை பெண்களுக்கு மட்டும் அழகா?
பெண்டாட்டியை தேடிக்கலாம் நகையை?
2.
ஏகாந்தன்
தன்னுடைய தளத்தில் சொல்லும் சர்தார்ஜி ஜோக்கை படித்து சிரியுங்கள்!
3.
பிரபல
எழுத்தாளர் பத்திரிக்கையாளர் முகில் தன்னுடைய தளத்தில் தந்துள்ள நகைச்சுவை பதிவு இது! முகில்
4.
சைதை
அஜீஸ் தனது தளத்தில் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் சென்று பாருங்கள்! எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
5.
சிரிப்பு
போலீஸ் தளத்தில் ரமேஷ் தன்னைத் தானே ச்சீ இதெல்லாம் ஜோக்கா என்று தன்னைத் தானே துப்பிக்
கொள்கின்றார்
6.
ஜாபர்
அலி தன்னுடைய ஜோக்ஸ் தளத்தில் ஜோக்குகளை எழுதிவந்தார் தற்போது எழுதுவது இல்லை. இந்த
ஜோக்குகளை படித்து பாருங்கள்! ஜாபர் ஜோக்ஸ்
7.
இனியவை
கூறல் தளத்தில் அருமையான அறிவியல் தகவல்களை தரும் கலா குமரன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக ஜோக்ஸ்களும்
தருவார் இதோ அவரது சர்தார்ஜி ஜோக்ஸ்!
8.
வெள்ளிமேடை
என்ற தளத்தில் சாதக் மஸ்லாஹி தரும் முல்லா ஜோக்கை ரசிக்க செல்லுங்கள்
9.
ஹதீம்
ஷா தனது டிப்ஸ்-டிரிக்ஸ் என்ற தளத்தில் பயனுள்ள பல குறிப்புக்களோடு நகைச்சுவையும் தருகின்றார்.
இதோ அவரது மொக்கை ஜோக்ஸ்!
10. அரட்டை என்ற தளத்தில் எழுதி வரும் ராஜலட்சுமி
பரமசிவம் தன்னுடைய நகைச்சுவை கதைகளால் புகழ்பெற்றவர் இவரது டைமிங்க் நகைச்சுவைகள் பிரபலமானது.
இதோ அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு
12. விசுவாசம் அவர்கள் தனது நகைச்சுவை இடுகைகளால் மனதை கவர்பவர். சமீபத்தில் புத்தகம் வெளியிட்டுள்ளார். இவரது அன்னையின் தன்னம்பிக்கை நமக்கெல்லாம் ஓர் பாடம். இவரது ஓர் இடுகை சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்!
இன்றைய அறிமுகங்கள் தளங்களுக்கு சென்று படித்து ரசியுங்கள். உடனே படிக்க இயலாவிடில் புக்மார்க் செய்துகொண்டு பிறகு படியுங்கள். தலைவலி, உடல் வலி இருப்பினும் நிறைய தளங்களாக தேடிக் கொடுத்து இருக்கிறேன். அறிமுகத் தளங்களுக்குச் சென்று அழைப்பு விடுக்க நேரம் இல்லை! முடிந்தால் வாசகர்கள் அவர்களின் தளங்களுக்கு செல்கையில் வலைச்சரத்தில் அவர்கள் இடுகை அறிமுகம் ஆன தகவலை சொல்லி அவர்களை மகிழ்விக்கலாமே!
நாளை மீண்டும் ஓர் தொகுப்புடன் உங்களை சந்திக்கின்றேன்! மிக்க நன்றி!
|
|
முதலில் நன்றி...
ReplyDeleteவெள்ளிமேடை, ஏகாந்தன், நவற்கிரி, தழுவல்கள் ஆகிய தளங்கள் புதியவை...
பெட்டகம் தளம் செல்வதில்லை... காரணம் The site ahead contains harmful programs என்று வருவதால்...!
இன்றைய அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துகள்...
நன்றி நண்பரே! உங்கள் தளத்தில் நீங்கள் எழுதிய தொழில்நுட்ப குறிப்புக்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தினமும் ஒன்றிரண்டு புதிய தளங்களாவது அறிமுகம் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். பலதளங்களில் உங்களின் பின்னூட்டமும் பாலோயரில் இடம்பெற்றிருப்பது கண்டு வியக்கிறேன்! நன்றி!
Deleteஒரு சின்ன வேண்டுகோள் : நமக்கான திரட்டி எது...? இந்த இணைப்பு --> //https://www.blogger.com/.http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html#more//என்று உள்ளது... அதை http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html // என்று மாற்றி விடவும்...
Deleteவலைச்சர இணைப்புகள் அனைத்தையும் பார்த்து விடுவேன்... அதற்கு மிகவும் உதவுவதே (விரைவான தேடுதல்) மேலே பதிவில் சொன்ன reader-தான்... இன்று தகவல் தந்த நண்பருக்கு நன்றி...
லிங்க் மாற்றி விட்டேன் நன்றி நண்பரே!
Deleteநளபாகம் நன்று.
ReplyDeleteநன்றி நண்பரே!
DeleteArumai nanbare......
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவணக்கம்,
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
தங்களுக்கு அன்பின் நன்றிகள், தொடருங்கள்.
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஆஹா...வந்து பார்த்தால் என்னையும் அறிமுகம் செய்து இருக்கிறீர்கள். நன்றி சகோ.
ReplyDeleteஎன்னுடம் அறிமுகமான அனைத்து சகோக்களுக்கும் வாழ்த்துக்கள்.
நளபாகம் - உணவும் கொடுத்து
நகைச்சுவை - மனதிற்கு மருந்தும் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி
தம 2
நன்றி சகோ!
Deleteஎங்களையும் சொல்லியிருப்பதற்கு நன்றி சுரேஷ்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
மூத்தவர்கள் இடுகையிலேயே உங்களை சேர்த்திருக்க வேண்டும் விடுபட்டு போனது அதனால் சமையல் குறிப்புக்களில் சேர்த்துவிட்டேன். பல்சுவைப்பதிவராக இருப்பது எந்த வகையிலும் சேர்க்க உதவுகின்றது.
Deleteஅது எப்படி நண்பரே!
ReplyDeleteஒரே நேரத்தில் மனதையும், வயிற்றையும் மகிழ்ச்சியில் நிறைய வைக்க உங்களால் முடிந்தது?
1) நகைச் சுவை உணர்வாளர்களின் பதிவு
2) நள பாக நாயகியர்களின் பதிவு!
அருமையிலும் அருமை அனபரே!
இவ்விரு வகை பதிவாளர்கள் எண்ணற்றவர்கள் இருந்தாலும்,
எனது மனதுக்கு பட்டதை சொல்லி விடுகிறேன்!
கொஞ்சம் சிரிங்க பாஸ் - தளிர் சுரேஷ்
சாரதா சமையல்- திருமதி சாரதா
இன்றைய தலைப்புக்கு "நளபாகமும்! நகை உணர்வும்!"இவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள்!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
(சாஷிகா கிச்சன் என்ற தளத்தில் எழுதிவருபவர் மேனகா சாதிகா அல்ல அவரது பெயர் மேனகா சத்யா என்று இருக்க வேண்டும்! நன்றி)
என்னைப் பற்றி வலைச்சரம் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோ.
Deleteஎல்லாம் முயற்சிதான் நண்பரே! இன்றைய தினத்திற்கு முதலில் நான் தேர்ந்தெடுத்த தலைப்பே வேறு. நேற்றைய இரவில் உடல் நலம் பாதித்ததுடன் கணிணியும் மக்கர் செய்ய மனம் வெறுத்து போனாலும் இன்று அதிகாலை எழுந்திருந்து கணிணியை சீர் செய்து தலைப்பையும் மாற்றி தளங்களை தேடி பதிந்தேன். இதனால்தான் சாரதா சமையல் தளம் விடுபட்டது. அவரது தளத்திற்கு சென்றிருக்கிறேன். ஆனால் தேடும்போது விடுபட்டுவிட்டது. நகைச்சுவையில் நான் சிறந்தவனா? நம்ப முடியவில்லை! இப்போதுதான் எழுத பழகுகிறேன் நண்பரே! ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கு நன்றி! தங்களின் கணிணி பிரச்சனை சரியாகி விட்டதா?
Deleteஎன்னை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சுரேஷ். என்னுடன் அறிமுகமாகியுள்ள அனைத்து நன்பர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஓரிரு மாதங்களாக வேறு சில விஷயங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டதால் எழுதுவதில் , சற்றே தயக்கம் இருந்து வந்தது. உங்கள் பாராட்டுக்கள் என்னை மீண்டும் வலைப்பக்கம் இழுத்து வந்து விட்டது.
என்னையும், அப்பாவி விஷ்ணுவையும் அறிமுகப்படுத்தியதற்கு
மிக்க நன்றி சுரேஷ்.
உங்களின் நகைச்சுவை தொடர்களை மிகவும் ரசித்து படித்து இருக்கிறேன்! உங்களை அறிமுகம் செய்ததில் நானும் மகிழ்ச்சி அடைகின்றேன்! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
Deleteசுவைக்குக் சுவையான தளங்களின் அறிமுகம்..
ReplyDeleteஇன்றைய தொகுப்பும் அருமை..
வாழ்க நலம்!..
நன்றி நண்பரே! தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteஇன்றைய அடையாள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 4
நன்றி நண்பரே!
Deleteவலைச்சர ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்!! என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி சகோ! உங்கள் பெயர் பகிர்வில் ஏற்பட்ட பிழையும் திருத்திவிட்டேன்! நன்றி!
Deleteநளபாகமும் நகையும் அருமை தளிர் சுரேஷ் சகோ :)
ReplyDeleteநளபாகத்தினர் அனைவரையும் அநேகமாகப் படித்திருப்பேன். நகையாளர்கள் பலர் புதிது.. அறிமுகங்களுக்கு நன்றி :)
முதல் முறையாக எனது பகிர்வுக்கு வருகை தந்த சகோதரிக்கு நன்றிகள்! தொடர்ந்து ஊக்கமூட்டுங்கள்! நன்றி!
Deleteஎன்னை பத்தோடு ஒன்றாய் இல்லாமல் ,நம்பர் ஒன்றாய் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ,சுரேஷ் ஜி :)
ReplyDeleteஜி! என்றுமே நீங்கள் நம்பர் ஒன் தான்! வாழ்த்துக்கள்!
Deleteவணக்கம் சுரேஷ் சார்...
ReplyDeleteகொஞ்சம் பிஸி....
பலருக்கும் தொழில்நுட்பங்கள் உதவ இங்கு, இன்றைய பகிர்வில் என் தளத்தை குறிப்பிட்டமைக்கு நன்றி...
நன்றி நண்பரே! உங்களின் தொழில்நுட்ப உதவி அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Deleteநிறைவான அறிமுகங்கள் வயிறும், சிந்தையும் நிறைந்தது..
ReplyDeleteநன்றி , அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்...
நன்றி தளிர் அவர்களே,
ReplyDeleteஅறுசுவையோடு நகைசுவையையும் தந்தற்கு. ஒரு விண்ணப்பம். நீங்கள் அளித்த தொடர்பில் (லிங்க்) என்னுடைய பழைய வலைதளத்திற்கு அழைத்து செல்லும். நான் அங்கே பதிவிடுவதை நிறுத்தி விட்டேன். தமக்கு நேரம் இருந்தால் "சுந்தரி நீயும்" என்ற பதிவிற்கு இந்த தொடர்ப்பை மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
http://www.visuawesome.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/
வருகைக்கு நன்றி நண்பரே! நீங்கள் புதிய தளத்தில் எழுதுவது தெரியாது. உங்கள் பதிவுகளையும் தற்சமயம் என்னால் அதனால்தான் தொடர முடியவில்லை போலும். நீங்கள் கொடுத்த லிங்கை பதிவில் சேர்த்துவிட்டேன்! வாழ்த்துக்கள்
Deleteதிரட்டிகளைப் பற்றிய அறிமுகம் அருமை. வழக்கம்போல் அறிமுகங்கள் நன்று, நாளை சந்திப்போம்.
ReplyDeleteநகையும்,நளபாகமும் அருமை அருமை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள் ...! பயன் உள்ள பல தகவல்களுக்கும் நன்றி சகோ வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteஅறுசுவை படைக்கும் பதிவர்களோடு நகைச்சுவை தரும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநளபாகம் வ்லைத்தளங்கள், நகைச்சுவை தளங்கள், நம் நண்பர்களுடன் புதியவர்களையும் தெரிந்து கொண்டோம்...அனைவருக்கும் வாழ்த்துகள்...பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!
ReplyDelete