என் பூவுக்கு மணம் சேர்த்தவர்கள் !
➦➠ by:
சாமானியன் சாம்
அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு வலைபதிவர்களின் சார்பில் வலைச்சரம் அஞ்சலி செலுத்துகிறது.
தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, இந்திய இளஞர்களின் லட்சியக் கனவு சிறகுகளை விரிக்கச் செய்ய வாழ்வின் இறுதி வரை உழைத்த மாமனிதர் கலாம் அவர்கள்.
நாட்டின் மிகச் சிறந்த புத்திசாலிகள் வகுப்பறையின் ஆகக் கடைசி வரிசையில் கூட வீற்றிருக்கலாம் !
-அப்துல் கலாம்.
" சொந்தக்காலில் நின்று சாதித்தேன் " என்பது ஒரு முயற்சியில் வெற்றிப்பெற்ற பெரும்பாலானவர்களின் மார்தட்டுக் கோஷம் !
உற்று கவனித்தால் " யாரும் உதவவில்லை " என்ற ஒருவரின் வார்த்தைகளுக்குப் பின்னால் அவரின் ஏமாற்றம் ஒன்று நிழலாடுவது தெரியும். ஒரு முயற்சியின் போது, சொந்தம், நட்பு, சுற்றம் சார்ந்த யாராவது நமக்கு உதவுவார்கள் என நினைத்திருப்போம். அவர்களை நாடியும் இருக்கலாம். அவர்களிடம் நாம் எதிர்பார்த்த உதவி ஏதோ ஒரு காரணத்துக்காகக் கிடைக்காமல் போயிருக்கலாம்...
அதுவே அந்த நிழலாடும் ஏமாற்றம் !
மற்றப்படி ஜடப்பொருட்கள் கூட ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இந்த உலகில் சுயம்பு என்பது சரிதானா ? உண்மையில் தன்னந்தனி மனிதனின் சாதனை என்று ஒன்று உண்டா ?...
சாதாரணமான ஒரு வேலைக்கான நம் முயற்சியில் நம்மை ஏற்றுக்கொள்ளும் முதலாளி தொடங்கி அங்கு நமக்கான வேலை கற்றுத்தருபவர் வரை நமக்கு உதவுபவர்கள் எத்தனை பேர் ?...
நம் வாழ்க்கையில் நம்முடன் நெருங்கி நடந்த... நமக்கு வழி காட்டிய... வழுக்கியபோது கை கொடுத்த... நின்றபோது தோள் தொட்ட... வென்றபோது கட்டியணைத்த... கற்றுக்கொடுத்த, இடமளித்த, வளர வாழ்த்திய நெஞ்சங்கள்தான் எத்தனை ? எத்தனை ?
நாம் தனியாக மார்த்தட்டும் சாதனைக்கு இவர்கள் அனைவருமே காரணம் அல்லவா ?
ஒரு ஜனவரி முதல் தேதியின் சோம்பலான மாலை பொழுதில் ஏதோ ஒரு உந்துதலில் வலைப்பூவினை ஆரம்பித்துப் புத்தாண்டு வாழ்த்தும் பதிப்பித்தேன்... உடனடியாகப் பார்வையாளர்கள் நிறைவார்கள் பின்னூட்டங்கள் குவியும் என நினைத்த எனக்கு ஏமாற்றம் ! வலைப்பூவின் நுனுக்கங்கள் தெரியாத அன்று சோர்ந்து போனேன் !
அதற்குப் பிறகு என்ன எழுதுவது என்ற குழப்பத்திலேயே ஒன்றும் எழுதாமல் ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியது ! அந்தச் சமயத்தில் இந்தியா டுடே இதழில் வெளியான தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றும், நான் படித்த, என்னைப் பாதித்த ராஜுமுருகனின் " வட்டியும் முதலும் " நூலும் என்ன எழுதுவது என்ற என் கேள்விக்குப் பதிலாய் அமைந்தன !
என் வலைப்பூவுக்கு வந்த முதல் கருத்தான ஈரோடு விஜய் பதிந்த கருத்தை கண்டபோது என் பதிவு பிரபல பத்திரிக்கையில் பிரசுரமான பரவசம் ! ஈரோடு விஜயின் மூலம் என் பால்யத்தின் காமிக்ஸ் கதவுகளை மீன்டும் திறந்த வலைப்பூக்கள் அறிமுகமாயின !
என் பால்யத்துடன் ஒன்றிய லயன் காம்க்ஸின் எடிட்டர் திரு விஜயன் அவர்களின் தளமான Lion-Muthu Comics
கிருஷ்ணா.வா.வெயின் இரவுக்கழுகு
கனவுகளின் காதலன் பிரான்ஸ் சங்கர் விஸ்வலிங்கம் !
ஹாய் தமிழா ராஜ் முத்து குமார்...
இந்த வலைப்பூக்கள் அத்தனையும் காமிக்ஸ் கருவூலங்கள் !
கார்த்திக் சோமலிங்கா... என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டமிடும் இவரும் ஒரு காமிக்ஸ் காதலர் ! ப்ளேடோடு தேடு என்ற நகைச்சுவையுடன் ப்ளேடப்ப்பீடியா நடத்தும் இவரின் பதிவுகள் சுவாரஸ்யமானவை.
" Hi, My Bad. Do write more.... " என்ற சிக்கனமான பின்னூட்டத்துடன் என் வலைப்பூவினுள் பிரவேசித்த கிங் விஸ்வா என் பதிவுகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பவர். தமிழ்காமிக்ஸ்உலகம் தளம் நடத்தும் இவருக்குத் தமிழ் காமிக்ஸின் வரலாற்றிலிருந்து உலகக் காமிக்ஸ்கள் வரை அனைத்தும் அத்துப்படி ! நள்ளிரவில் எழுதும் கருத்தில்கூடத் தமிழ் காமிக்ஸ் தகவல்களைத் துல்லியமாகக் கொடுப்பார் !
என் தளம் கண்ட நாள் முதலாய் என் எழுத்தின் தரம் கூட்ட உதவிய, உதவும் இருவரில் ஒருவர் நண்பர் காரிகன் ! எழுதும் பாணி தொடங்கிப் பதிவை எப்படி அதிகம் பேரிடம் சேர்ப்பது என்பது வரை ஆலோசனைகளும் ஊக்கமும் கொடுப்பவர்.
தமிழ் சினிமா இசையின் வரலாறு இவரது விரல் நுனியில் ! எம் எஸ் வியின் மெல்லிசை காதலர் என்றாலும் அன்று முதல் இன்றுவரை சினிமா கண்ட இசையமைப்பாளர்கள் ஒருவரையும் விடாமல் தன் எழுத்தில் பொறிப்பவர் ! தமிழ் திரையிசைக்கு ஈடாக மேற்கத்திய இசை வரலாற்றையும் நுனுக்கங்களையும் அறிந்தவர் ! இசைக்கு ஈடான மனதை கவரும் மாய எழுத்துக்குச் சொந்தக்காரர் ! இசை ரசிகர்கள் மட்டுமின்றி இசை ஆராய்ச்சியாளர்களும் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத தளம் இவரது வார்த்தைவிருப்பம் !
என் படைப்புகளின்பால் அக்கறை கொண்ட மற்றொருவர் , அண்ணா எனப் பாசத்தோடு அழைக்கும் ஜோசப்விஜு... என் எழுத்தை மட்டுமின்றி என் வாசிப்பையும் செம்மை படுத்தும் சகோதரர் !
இவருக்கு வாசிப்பு நேசிப்பு எல்லாமே பழந்தமிழ் ஆராய்ச்சிதான் ! தோசையில் கூடத் தமிழைத் தேடுபவர் ! இணையத் தமிழ் சங்கம் ! இவரது பழந்தமிழ் வரலாற்றுபெட்டகமான ஊமைக்கனவுகளின் பதிவுகள், கவிதைகள், வாழ்வனுபவங்கள் என எதை வாசித்தாலும் எனக்கு வியப்பே மிஞ்சும் !
தில்லைஅகத்து ஆசானான துளசிதரன் அவர்களைப்பற்றி நான் தான் எழுத வேண்டும் என்பதில்லை ! மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, ஆச்சரியப்பட வைத்தவை, அதிசயப் பட வைத்தவை, அமைதி தந்தவை, என அற்புதமாய் எழுதும் இவர் தன் ஆழமான பின்னூட்டங்களின் மூலம் என்னை ஆதரிப்பவர் !
திண்டுக்கல் தனபாலன்... " இன்னும் ஏன் அழைக்கவில்லை " என என்னைத் தமிழ்மணத்தில் இணைய அன்பாய் அதட்டிக்கொண்டிருப்பவர். திருக்குறளுக்கு பெருமை சேர்த்து, தமிழ் திரையிசை பாடல்களுக்குப் புத்தம் புதிய பரிமாணம் கொடுக்கும் இவரை அறியாத வலைப்பதிவாளர்கள் யாரும் கிடையாது என அடித்துச் சொல்வேன் ! வலைப்பூ நுட்பத்தைக் கற்றுத்தருவதுடன் இரவு பகல் பாராமல் உதவவும் செய்யும் இந்த வலை சித்தரின் சேவை நவீன தமிழுக்குத் தேவை !
நண்பா எனப் பாசமாய் அழைத்துப் பின்னூட்டமிடும் மீசைக்கார அண்ணாச்சி... கில்லர்ஜீயின் பெயரும் மீசையும் மட்டுமே பயமுறுத்தும் ! தனக்கென ஒரு வித்யாசமான எழுத்தை அமைத்துக்கொண்டு சமூக அவலங்களைச் சாடும் கில்லர்ஜீ வலைப்பதிவர் அனைவருக்கும் இனிய நண்பர்ஜீ !
மைதிலி கஸ்துரி ரெங்கன்... மகிழ்நிறையின் குதூகலமான எழுத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விப்பதுடன் சமூக அக்கறையில் முன்னணியில் நிற்கும் வலைப்பூ சகோதரி !
அண்ணா என விளித்துத் தொடங்கும் இவரின் பின்னூட்டங்களை வாசிக்கும் போதெல்லாம் மூத்த அண்ணன்களின் அன்பிலும், அரவணைப்பிலும் குதூகலமாய்த் துள்ளி திரியும் கடைக்குட்டி தங்கையின் பிம்பம் என் மனதில் நிழலாடும் !
மது... நான் பதிவில் குறிப்பிட்ட ரோஜா பதியன்கள் பூத்தனவா என்பதில் தொடங்கி என் உடல்நலம் வரை பின்னூட்டத்தில் வாழ்த்தும் அக்கறை மனிதர் ! மலர்த்தரு மூலம் கல்வி, இலக்கியம், சமூகம், சினிமா, சினிமா, தொழில்நுட்பம் என எதையும் மிகத் தரமான கண்ணோட்டத்தில் பதிபவர் !
வருண்... ரிலாக்ஸ்ப்ளீஸ் என்று கூறி விட்டு எந்தப் பதிவாக இருந்தாலும் " மாற்றி யோசி " எனப் பிடறியை உலுக்கி கருத்து பதிந்து என்னை வேறு கோணத்தில் திருப்பிவிடுபவர்... சூடான எழுத்தினாலும் காட்டமான பின்னூட்டங்களாலும் கோபக்கார " இளம் துருக்கியராக " வலையுலகில் அறியப்படும் இவரின் மனிதநேய மறுபக்கத்தை, காணாமல் போன ஒரு வலைப்பதிவரை பற்றி இவர் பதிந்த பதிவின் மூலம் அறிந்தேன் !
யாதவன் நம்பி எனும் புதுவை வேலு... என் வலைப்பூ பணி அறிந்த நாள் முதலாய் என் பதிவுகளை நேசிப்பவர்... என் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூத்தவராய் ஆலோசனை வழங்குபவர்.
பத்திரிக்கை துறை அனுபவம் வாய்ந்த இவரது குழலின்னிசை கவிதை, கதை தொடங்கிச் சமூகச் செய்திகள் வரை அனைத்தையும் அழகுபடச் சொல்லும் பல்சுவை களஞ்சியம் !
... இப்படி இன்னும் பலர் ஊற்றிய கருத்து நீரினால்தான் என் வலைப்பூ ஏதோ கொஞ்சம் மணம் வீசுகிறது !
சிந்திக்க ஒரு தகவல்...
சென்ற ஆண்டு ஊர் சென்றிருந்த போது பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு வீட்டுமனை விற்பனையைப் பற்றித் திரும்பியபோது அவர் சொன்னது...
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்புவரை வசதியான குடும்பங்களின் முக்கியச் சொத்தாக இருந்தது விளைநிலங்கள். சாலையோர நிலங்களின் விளைச்சல் உள்ளடங்கிய நிலங்களைவிட மிகவும் கம்மி.
பாகப்பிரிவினையின் போது வயதில் இளையவனுக்கோ அல்லது சகோதர சகோதரிகளில் " கொடுத்ததை வங்கிக்கொள்ளும் " ஏமாளிகளுக்கோ சாலையோரநிலங்களை எழுதிவைத்துவிடுவார்களாம் !
ஆனால் விளைநிலங்களெல்லாம் " விலை " நிலங்களாக மாறிவிட்ட இன்றைய வீட்டுமனை யுகத்தில் சாலையோர நிலங்களுக்குத்தான் மதிப்பு பலமடங்கு அதிகம் ! அன்று ஏமாந்த சகோதர சகோதரிகளின் காட்டில் இன்று மழை !
" தெய்வம் நின்று கொல்லும் " என்பது இதுதானோ ?!
தொடருவோம்...
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
|
|
அறிவியல் ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலியில் நாங்களும் பங்கேற்கின்றோம் நண்பரே!
ReplyDeleteஎன் பூவுக்கு மணம் சேர்த்தவர்கள் ! -வரிசையில் இடம்பெற்ற அனைத்து சக வலைப் பூ நண்பர்களுக்கும் நல்வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!
"சித்திரைச் செவ்வானம் முத்திரைச் சிரிப்பை சிந்தியது போன்று சிறப்பாய் அமைந்தது" இன்றைய பதிவு!
நன்றி
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
முத்தான முதல் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ !
Deleteசாம்: அதிசயமாக இருக்கு! என்னேரமும் பிஸியா இருக்கும் உங்களுக்கெப்படி நேரம் கிடைத்தது? ஒரு வாரம் விடாமல் தொடர்ந்து பதிவெழுதனுமே! ஒரு வேளை ஒரு சின்ன வெக்கேஷன் எடுத்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருக்கீங்களா? :)
ReplyDelete"என்னை பலர் அறிமுகம் செய்துவிட்டார்கள்! யாராவது புதியவர்களைப் பற்றி எழுதலாமே?"னு நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னதுபோல் எல்லாம் நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன்.
என்னைப் பற்றி நாலு வார்த்தை சொன்னதுக்கு நன்றி சாம்!
**"என்னை பலர் அறிமுகம் செய்துவிட்டார்கள்! யாராவது புதியவர்களைப் பற்றி எழுதலாமே?"னு நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னதுபோல் எல்லாம் நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். **
Delete:)
முத்தான முதல் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ !
வாருங்கள் வருண்...
" ஒரு வேளை ஒரு சின்ன வெக்கேஷன் எடுத்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருக்கீங்களா? :) "
வர வர நீங்களும் என்னை மிக சரியாக " படிக்க " கற்றுக்கொண்டுவிட்டீர்கள் ! உண்மையே அதுதான் நண்பரே ! குடும்ப் நிகழ்ச்சி ஒன்றுக்காக எடுத்த வெக்கேஷன் வலைச்சரத்திலும் பாய்கிறது...
ஆனால் அப்படி இருந்தும் மூன்றாவது நாளே மூச்சிரைக்கிறது !
தொடருங்கள் தோழரே !
நன்றி
சகோதரி...
Deleteவருணும் நீங்களும் கீதா சாம்பசிவத்தை இப்படி கலாய்க்கிறீர்களே....
ஏம்மா... இப்படி பண்றீங்களேம்மா !!!
நன்றி
முதலில் இன்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் நம் நண்பர்கள். தொடர்பவர்கள். அருமையாக எழுதும் அவர்களில் நாங்களும் ஒருவர் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteநேற்று இரவு நடு நிசி நெருங்கும் சமயம் தான் சகோதரி மைதிலி அவர்கள் வாங்கண்ண வணக்கம்ணா என்று தாங்கள் வலைச்சரத்தில் ஆசிரியப் பணி ஏற்றிருப்பதைப் பெருமையுடன் சொல்லி எங்கள் மனதையும் பிரதிபலித்து உங்களை வரவேற்று அவர் தளத்திலேயே பதிவு ஒன்று இட்டு வாழ்த்தியிருந்தார்.
அப்துல்கலாம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி என்பது தான் அடிப்படை. ஆணிவேர். அந்தக் கல்வியால் இந்தியா உயர வேண்டும் என்று கனவு கண்ட மாமனிதரின் மரணம் இந்தியாவிற்கு மட்டுமல்ல மாணவச் செல்வங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. நாமும், நமது தலைமுறையினரும் அவர் கனவை நனவாக்க நம்மால் இயன்றவரை செய்ய முடிந்தால் அதுவே நாம் அவருக்கு அளிக்கும் அஞ்சலி, மரியாதை! ஆழ்ந்த இரங்கல்கள்!
இறுதியில் சொல்ல அந்த விளை நிலம் ..ம்ம்ம்ம் விளை நிலங்கள் எல்லாமே விலை நிலங்களாக மாறி வருவது மனதிற்கு மிகவும் வேதனை தரும் விஷயம்....
மிக்க நன்றி நண்பரே! அனைவருக்கும் வாழ்த்துகள்!
தொடர்கின்றோம்!
வாருங்கள் ஆசானே...
Deleteஆமாம் ! சகோதரி மைதிலி அவர்களின் அறிவிப்பு என் மனம் நெகிழ செய்தது !
கலாம் அவர்களை பற்றி நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் சத்தியமான வார்த்தைகள். வரலாற்றில் மட்டுமே படைக்க கிடைத்த தன்னலமற்ற மாமனிதர்களில் ஒருவர் எங்கள் காலத்திலும் இருந்தார் என சொல்லி பெருமைபட தக்க உயர்ந்த மனிதர் !
வழக்கம் போலவே இறுதிவரை வாசித்து பதிந்த பின்னூட்டத்துக்கு நன்றி
கலாம்ஜிக்கு எங்கள் அஞ்சலிகள்.
ReplyDeleteஇன்று சொல்லப் பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே அறிந்தவர்கள், நண்பர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாருங்கள் நண்பரே...
Deleteஉங்கள் அஞ்சலியில் பங்கேற்கிறேன்...
வாழ்த்துக்கு நன்றி
ஹலோ சாம்ஜி
ReplyDeleteநலம்தானே.
நேற்று ஒரு அறிவியல் பதிவை எழுதி முடித்தேன் ...
தங்கை போனில் அழைத்து அண்ணா கலாம் என்று துவங்கி விசயத்தை சொன்னாள்.
பேரிழப்பு நமக்கு
இருப்பினும் நிறைவானதோர் வாழ்வே ...
ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்
என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள். (எங்களையும் என்று இருக்கவேண்டும் இல்லையா :-)
தம +
வாருங்கள் மது...
Deleteஆமாம் ! பிரிவு துயர் தருவதுதான் என்றாலும் தான் நினைத்ததை போலவே, தனக்கு கிடைத்த தருணங்கள் அனைத்தையும் தன்னலமற்ற தொண்டுக்கு செலவிட்டு, எளிமையாய், நிறைவாய் வாழ்ந்து முடித்துக்கொண்டார் !
" எங்களையும் என்று இருக்கவேண்டும் இல்லையா :-) "
அட ஆமா இல்லையா ? எனக்கே தோன்றவில்லை நண்பரே ! நான் ரொம்ப டியூப் லைட்... பாருங்கள்... காரிகனை டி எம் எஸ் ரசிகராக்கி... காமிக்ஸ் பூக்களை குழப்பி... இத்துடன் வலைச்சரத்திலிருந்து என்னை கட்டம் கட்டி விடுவார்கள் என நினைக்கிறேன் ! :-) :-) :-)
நன்றி
இந்த காமிக்ஸ் க்ரூப் எனக்குத் தெரியாது அண்ணா!
ReplyDeleteகாரிகன் சார் பத்தி சொல்லவே வேணாம். அவ்ளோ மோஸ்ட் வாண்டட் :)
அதற்கு பிறகு நீங்க லிஸ்ட் பண்ணிருக்க எல்லோரும் என்னோட க்ளோஸ் friends:) so, அதுக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே :)
அந்த விளை நிலம் நிகழ்வை படித்தபோது சாமர்செட் மாம் எழுதிய"Ant and the grass hopper" சிறுகதை நினைவுக்கு வருகிறது அண்ணா!
**அண்ணா என விளித்துத் தொடங்கும் இவரின் பின்னூட்டங்களை வாசிக்கும் போதெல்லாம் மூத்த அண்ணன்களின் அன்பிலும், அரவணைப்பிலும் குதூகலமாய்த் துள்ளி திரியும் கடைக்குட்டி தங்கையின் பிம்பம் என் மனதில் நிழலாடும் !** இதுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்:)
வாருங்கள் சகோ !
Deleteஅழிவிலிருந்த தமிழ் காமிக்ஸ் கலையை வலைப்பூவின் மூலம் மீட்டெடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்... அது ஒரு தனி உலகம் ! விஜயன் அவர்களின் வலைப்பூவுக்கு சென்றாலே அனைவரையும் பிடித்துவிடலாம்
பெற்றுக்கொண்டேன் போக்கேயை !
படித்திருக்கிறேன் சகோதரி... அவரின் எழுத்து பற்றிய பொன்மொழி ஒன்றினையும், " மரண தேவைதை " கதையையும் பதிய இருந்தேன்.... அமையவில்லை ! அது எப்படி நேற்று நினைத்தவரை பற்றி இன்று குறிப்பிடுகிறீகள் ?!
என் மனதில் தோன்றியதையே எழுதினேன் ! :-)
நன்றி
ReplyDeleteT H A N K S Dear....
Vous méritez ça mon cher ami !
Deleteஅப்துல் கலாம் அவர்களை உங்களுடன் நாங்களும் சேர்ந்து நினைவுகூர்கிறோம். பதிவர்கள் பெரும்பாலும் அறியப்பட்டவர்களே. அறிமுகத்திற்கு நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDeleteஐயா...
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நன்றி... நன்றி...
ReplyDeleteஅப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...
மற்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
மொத்தமாய் படித்து முத்தாய் பின்னூட்டமிட்ட வலைசித்தருக்கு நன்றி !
Deleteசாம்,
ReplyDeleteமிக்க நன்றி.
உங்களின் பிற அறிமுகங்களும் எனக்குப் பரிச்சயமானவர்களே. இன்னும் வர இருக்கும் நாட்களில் நீங்கள் அடையாளம் காட்டப் போகும் பதிவர்களைக் குறித்து ஆர்வமாக இருக்கிறேன். தொடருங்கள்.
ஒரு சிறிய திருத்தம் -- டி எம் எஸின் மெல்லிசை காதலர் என்றாலும் அன்று முதல் இன்றுவரை சினிமா கண்ட இசையமைப்பாளர்கள் ஒருவரையும் விடாமல் தன் எழுத்தில் பொறிப்பவர் ! ----- டி எம் எஸ் அல்ல எம் எஸ் வி என்பதே சரி. நான் எம் எஸ் வியின் தீரா இசைவிரும்பி. மற்றபடி தமிழ்த் திரையிசை எனக்கு அத்துப்படியெல்லாம் கிடையாது. கொஞ்சம் தெரியும். என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.
காரிகன்,
Deleteஎம் எஸ் விதான் சரி ! என்னையும் அறியாமல் டி எம் எஸ் என பதிந்ததோடு நில்லாமல் பல முறை படித்தபோதும் இது என் புத்தியில் ஏறாதது ஆச்சரியம் ! திருத்திவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.
காரிகன்...
Deleteஅதிகம் தெரிந்தவர்கள் இருக்கலாம்... ஆனால் எழுதவதில்லை என்பதைவிட தெரிந்த அனைத்தையும் நியாயமாய் எழுத விரும்பாதவர்களும் உண்டு !
நன்றி
வணக்கம் சகோ !
ReplyDeleteஅப்துல் கலாம் அவர்களுக்கு என் அஞ்சலிகள்!
மற்றும் அறிமுகமானவர்கள் அனைவரும் என் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...! தங்கள் ஆசிரியப் பணி மேலும் சிறக்க என் மன மார்ந்த வாழ்த்துக்கள் ...! தொடர்கிறேன் ...!
வாழ்த்துக்கு நன்றி சகோதரி...
Deleteஒன்றாய் தொடருவோம்.
சிந்திக்க ஒரு தகவல்... யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்....
ReplyDeleteஆமா நண்பரே... காலம் ஒவ்வொருவருக்கும் சரிசமமான வாய்ப்பை வழங்கியே இருக்கிறது... முன் பின் தாமதங்கள்... அவ்வளவுதான் !!!
Deleteநன்றி
@ சாமன்னியன்
ReplyDeleteகாமிக்ஸ் வலைதளங்கள் பற்றிய உங்கள் தகவல்கள் தவறாக உள்ளன..!
//
Lion-Muthu Comics, இரவுக்கழுகு, கனவுகளின் காதலன், ஹாய் தமிழா என நான்கு வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர் ஈரோடு விஜய் . காமிக்ஸ் கருவூலம் !//
Lion-Muthu Comics- எடிட்டர் திரு விஜயன் அவர்கள் தளம்.
இரவுக்கழுகு- நண்பர் கிருஷ்ணா.வா.வெ
கனவுகளின் காதலன்-பிரான்ஸ் சங்கர் விஸ்வலிங்கம்
ஹாய் தமிழா-ராஜ் முத்து குமார்
ஈரோடு விஜய்- காமிக்ஸ் தளங்களை தேடி பாராட்டும் நல்ல மனதுக்கு சொந்தகாரர்.
தகவல்களை சரிபார்த்து மாற்றினால் நலம்..!
வணக்கம் மாயாவி சிவா,
Deleteஎனது கவன குறைவினால் நிகழ்ந்த தவறுகளுக்கு வருந்துகிறேன்...
தவறுகளும் சுட்டிகளும் சரி செய்யப்பட்டுவிட்டன.
சரியான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றிகள் பல
ஆஹா நண்பர்களின் அறிமுகத்தில் வலைச்சரம் மேலும் மணக்குதே :-)
ReplyDeleteமுதல் மூன்றும் எனக்குப் புதியவை, பார்க்கிறேன்
நன்றி சகோ
வாருங்கள் சகோ !
Deleteஉங்களுக்கு காமிக்ஸ் பிடிக்கும் என்றால் அவர்களை தவர விட்டுவிடாதீர்கள் !
நன்றி
அப்துல்கலாம் அவர்களின் மறைவு குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிரிவைப்போல வாட்டுகிறது... :(
ReplyDelete@ நண்பர் சாமானியன்
காமிக்ஸ் தொடர்பான தளங்களுக்கு எட்டிப் பார்த்து ஓரிரு பின்னூட்டங்களைப் பதித்துச் செல்வதோடு என் உலகம் முடிந்துவிடுகிறது என்ற நிலையில் 'களஞ்சியம்' என்ற புகழ்மாலைகளுக்கெல்லாம் எந்தவகையிலும் தொடர்பில்லாதவன் நான்! ( இந்த வகையில் உண்மையான 'சாமானியன்' நானே!). ;)
தவறான தகவலே என்றாலும் நான்கு வலைப்பூக்களுக்கு என்னை ஏகபோக வாரிசாக்கி அழகு பார்த்த உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நண்பரே! ;)
உங்களது எழுத்துக்கள் இன்னும் பலரைச் சென்றடைய என்னுடைய வாழ்த்துகள்!
தவறை எடுத்துரைத்து பெரும் ஆபத்திலிருந்து எனைக் காத்த மாயாவி சிவாவுக்கு நன்றி! :)))
வாருங்கள் நண்பரே...
Deleteஎனது வலைப்பூவில் முதல் கருத்திட்ட உங்களை மறக்க முடியுமா ?...
உங்களின் கூகுள் கணக்கின் மேலிருந்த நீங்கள் தொடரும் வலைப்பூ பட்டியலை நீங்கள் தொடங்கிய தளங்களாக தவறாக புரிந்துக்கொண்டேன்... ( நள்ளிரவிலும் உஷாராக விழித்திருக்க மாயாவியால்தான் முடியும்...:-) அர்த்த ராத்திரியில் பதிவிட்டதால் உண்டான தவறு ! ) வருந்துகிறேன்...
" தவறான தகவலே என்றாலும் நான்கு வலைப்பூக்களுக்கு என்னை ஏகபோக வாரிசாக்கி அழகு பார்த்த உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நண்பரே! ;)"
கடனுக்கு பிரதியுபகாரமாய் என் பதிவுகள் அனைத்துக்கும் பின்னூட்டமிட வேண்டும் ! ;) ;) ;)
உங்களுக்கும் உடனடியாக சுட்டிக்காட்டிய மாயாவி ரவிக்கும் நன்றிகள் பல
வணக்கம்,
ReplyDeleteமாணவர்களை நேசித்த மகத்தான மாமனிதருக்கு நம் அஞ்சலி செலுத்துவோம்,
தாங்கள் பதிவில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஇளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர்...
இந்தியாவை 2020 -இல் வல்லரசாக்கக் கனவு கன்டவர்...
இந்திய குடியரசுத் தலைவராகியும் எளிமையாகவே வாழ்ந்து காட்டியவர்...
பாரத ரத்னாவிற்கு பாமரனின் இறுதி அஞ்சலி...!
இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
த.ம.8
வாருங்கள் அய்யா...
Deleteநலமா ?
தங்களின் அஞ்சலிக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நலமுடன் தொடருங்கள்
இப்போது தான் வலைச்சர ஆசிரியராக நீங்கள் பணியேற்றிருப்பதைக்கண்டேன்! மிகவும் மகிழ்ந்தேன்! இனி சிறிது நாட்களுக்கு வலைச்சரம் உங்களீன் அழகு தமிழாலும் அறிவார்ந்த சிந்தனைகளாலும் பிரகாசித்துக்கொன்டிருக்கும்! என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅம்மா !
Deleteதங்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு பெருமகிழ்ச்சி...
இந்த வாரம் உங்கள் வாழ்த்து போலவே அமையட்டும்.
நன்றி
காமிக்ஸ் தளங்கள் சிலதை நான் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய போது அறிமுகம் செய்ய நினைத்திருந்தேன். இறுதியில் விட்டுப்போனது. அந்த குறையை இன்று போக்கிவிட்டீர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாம் இருவருமே காமிக்ஸ் தலைமுறை என்பதால்... நீங்கள் விட்டதை நான் சேர்த்துவிட்டேன் !
Deleteநன்றி நண்பரே
அண்ணா!
ReplyDeleteவணக்கம்.
முதலில் ஒரு நல்ல மனிதருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியின் நானும் இணைகிறேன்.
என் பூவுக்கு மணம் சேர்த்தவர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் அனைவரும் முற்றிலும் அதற்குத் தகுதிவாய்ந்தவர்கள்தான்.
என்னைப் பொருத்தவரை இந்தப் பூக்களோடு சேர்ந்தால் எனக்கும் ஒருவேளை உங்களுக்குக் கிடைத்த அந்த மணம் கிடைக்கலாம்.
தங்கள் அன்பினுக்கு நன்றிகள்.
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்.
நன்றி.
வாருங்கள் சகோதரரே...
Deleteவணக்கம் !
நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர் என்றாலும் இழப்பு துயர்தான் !
சில பூக்கள் தங்கள் மணத்தை தாங்களே அறியா ! உங்களின் கனவுப்பூ அந்த வகை !!!
தொடருவோம் !
மறைந்த தலைவர் கலாமிற்கு நானும் என் பங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறேன்! அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்களின் அஞ்சலிக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி
Deleteடாக்டர் அப்துல் கலாம் பற்றிய தங்கள் வரிகள் நெகிழ்வு!
ReplyDeleteமற்ற பதிவர்களைப் பற்றிய தங்கள் வர்ணனைகள் ஆர்வமூட்டுகின்றன...
அந்த வரிகளில் இருப்பது அனைத்தும் உண்மை !
Deleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteநாட்டின் மிகச் சிறந்த புத்திசாலிகள் வகுப்பறையின் ஆகக் கடைசி வரிசையில் கூட வீற்றிருக்கலாம் !
-அப்துல் கலாம்.
அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html
வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே! அறிமுகங்கள் என்பதைத் தாண்டி, உங்கள் வலுவான எழுத்துக்களால் வலைச்சரத்தை அலங்கரியுங்கள்!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே... என்னால் இயன்றவரை முயற்சிக்கிறேன்...
ReplyDeleteகலாமுக்கு நானும் அஞ்சலி செலுத்துகிறேன். அடையாளப்படுத்தப் பட்டுள்ள சில பதிவர்கள் தவிர ஏனையோர் அறிந்தவர்களே. காமிக்ஸ் பதிவுகளில் சென்றால் குக்கிகளைப் பற்றிய எச்சரிக்கை வருகிறது. மீறித் தொடர தயக்கமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅய்யா...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.