1 முதல் 18 வரை.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (ரகசியக்) கணக்கு இதுதாங்க. வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருத்தரும் எத்தனை பதிவுகள் போட்டாங்கன்னுதான் இது சொல்லுது:-)
நம்ம சயந்தன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு பதிவைப் போட்டுட்டு, தடங்கலுக்கு வருந்துகிறேன்னு போயிட்டார்.
ஆனா களத்தில் நின்னு ஆடறதுன்ற முடிவோட இறங்குன நம்ம மங்களூர் சிவா 18 பதிவுகள் போட்டு முதலிடத்தில் நிக்கறார் (இப்போதைக்கு)
முதல் ஆசிரியர் பெருமை நம்ம பொன்ஸ்க்குப் போய்ச் சேருது. மூணே பதிவுகள்னு சொன்னாலும் ஒவ்வொண்ணும் ஒரு முத்து. துறை சம்பந்தப்பட்டப் பதிவுகளையும், புதுசா வந்து மின்னிக்கிட்டு இருக்கும் பதிவர்களையும் சொல்லி இருக்காங்க. 'கவிதை எழுதிக் காலத்தை வீணடிக்காதீங்க லட்சுமி:-))))'ன்னு நம்ம கயல்விழி முத்துலெட்சுமிக்குச் சொல்லி வச்சிருக்காங்க. பிடிச்சிருக்கு
ரெண்டாவதா வந்த நம்ம சிறில் அலெக்ஸ் சொன்னாரு பாருங்க இப்படி
//தமிழ் வலைப்பதிவுகள் அசுரத்தனமா வளர்ந்திருக்குது எனலாம்.//
இது அப்ப, கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முந்தின கதை. இப்ப இந்த அசுரத்தனம், பேய் அசுரத்தனம் ஆகிக்கிடக்கு. இன்னிக்குக் கணக்குலே தமிழ்மணத்துலே பதிவு செஞ்சுக்கிட்டது மட்டுமே
2642. ஒரு வாரத்துக்கு 1215. அதுலேயும் ஒரு நாளைக்குச் சராசரியா 165 பதிவுகளாம்.
இது இல்லாம தனியாத் தளங்கள் வச்சுக்கிட்டு இருக்கும் பதிவர்களும் ஏராளம். தமிழ்மணம், அடுக்ககமுன்னு சொன்னா இவுங்க எல்லாம் தனி பங்களாக்கள்,பண்ணை வீடுகள்.
எல்லாத்தையும் ஒண்ணுவிடாமப் படிக்கறது நடக்கிற காரியமா? எத்தனையோ அருமையான நல்ல பதிவுகள் கண்ணுலே விழாமக் காணாமப்போயிருது. இதுலே வலைச்சர ஆசிரியர்கள் நல்லதைக் குறிப்பிட்டுச் சொல்றதும்கூடக் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். நாம் எதையெதைக் கவனிச்சோமுன்ற லட்சணமும் தெரிஞ்சுருமே:-))))
மூணாவதா வந்த நெல்லை சிவா, பரபரன்னு சுட்டிகளை அள்ளித் தெளிச்சுட்டார். நான்காவது ஆசிரியரா வந்த நம்ம சுப்பைய்யா வாத்தியார் சுட்டிகள் கொடுத்தது மட்டுமில்லாம படமும் காமிச்சார். ரவிவர்மாவின் அருமையான ஓவியங்களையும், பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எடுத்த படங்களையும் பதிவுகளில் போட்டது அப்படியே மனசை அள்ளிக்கிட்டுப்போயிருச்சு. வலைச்சரத்தின் முதல் படங்காட்டி என்ற பெருமை நம்ம சுப்பையா வாத்தியாருக்குத்தான். என்னதான் சொல்லுங்க, பக்கா ஒரிஜனல் வாத்தியார் ஆச்சே அவர்.
//சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விரும்பும் ஆசையால் எழுதுபவர்களுக்கு,எழுத்து, வெறும் ஊட்டமல்லஎழுத்து, வெறும் சுவாசமல்லஎழுத்து, வெறும் நேசமல்லஎழுத்து வெறும் இயக்கமல்லஎழுத்து வெறும் ஆயுதம் அல்லஎழுத்து, ஒரு போராட்டம்.//
இப்படிச் சொல்லிக்கிட்டு வந்தார் நம்ம மலைநாடான்.
சென்ஷி, சிந்தாநதி, கயல்விழி முத்துலெட்சுமி ன்னு வந்துக்கிட்டு இருந்தவங்களில் வலைச்சரத்தின் 50-வது பதிவைப் போட்ட பெருமையைத் தட்டிக்கிட்டுப்போனாங்க நம்ம கயல்விழி முத்துலெட்சுமி.
அதுக்கப்புறம் வரிசையில் வந்து கைவரிசை காட்டுனாங்க மங்கை, விக்கி, வெட்டிப்பயல், அய்யனார், இராம் (வவாசங்கம்), ரவிசங்கர்.இவுங்களோட வாசிப்புகளைப் பார்த்து அப்படியே அசந்து போயிட்டேன். உண்மையைச் சொல்லணுமுன்னா அய்யனார், ரவிசங்கர் போன 'வீடுகளை' நான் எட்டிப்பார்த்ததே இல்லை(-:
சின்னப்பொண்ணா இருக்கும் சிநேகிதி ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்துட்டாங்க. சொல்வது ஒண்ணு, செய்யறது ஒண்ணுன்னு//எனக்குண்மையா சரம் கட்டத்தெரியவே தெரியாது.//
மெய்யாலுமா? கட்டத்தெரியாமலேயே இந்தப் போடு போட்டா......கட்டத்தெரிஞ்சுருந்தா எப்படி இருந்துருக்கும்?இளைய தலைமுறை மீது எனக்குள்ள நம்பிக்கையை உண்மையாக்கியவர். வலைச்சரத்தின் ஆசிரியர்களிலேயே வயதில் மட்டுமே சிறியவர்.
99 வது ரன் எடுத்தவர் சிந்தாநதின்னா, அதை 100 ஆக்குனவர் நம்ம சித்தார்த். வலைச்சரத்தின் நூறாவது கண்ணி. தொடர்ந்து வந்தவர்கள் வகைவகையா சரவெடி கொளுத்திப்போட்ட லக்கிலுக், 'ஆவி'வந்த பதிவுகளை எழுதுன வினையூக்கி, சரத்தைத் தொடுத்துப் பெட்டியில் வச்சுப் பூட்டிட்டு, சாவியில்லாமல் கவலைப்பட்ட அகிலன், பா.க.ச.வுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும் தல பாலபாரதின்னு அடிச்சு ஆடிட்டு போனாங்க.
சவுண்டுப் பார்ட்டின்னு வந்தவர் உதயகுமார், வலைச்சரத்தின் நாராக வந்தவர் மஞ்சூர் ராசா.விட்டேனா பார்ன்னு வலைச்சரத்தில் பூவாக வந்த தூயா, யாரும் மண்டபத்தில் எழுதித்தராமல் தானாகவே 'ஒரு சோம்பேறியின் ஒரு வாரம் 'னு அறிக்கை விட்டுவந்த தருமி......
ஸ்ஸ்ஸ்ஸ்.......ப்ப்ப்பா........... கண்ணைக் கட்டுதே (உங்களுக்கு)
பாக்கியை நாளைக்குப் பார்க்கலாம்.
|
|
துளசிம்மா
ReplyDeleteகேப்டன் கட்சியில் சேர்ந்துட்டீங்களா, புள்ளி விவரத்தோடு கள(ல)க்கிறீங்களே
கேப்டனின் பஞ்ச் ஐ விட்டுட்டேன்
ReplyDeleteஅங்ங்...
வாங்க பிரபா.
ReplyDeleteகேப்டன் எங்கூருக்காரர்தான். அதான்.........:-))))
உள்ளேன் அம்மா !
ReplyDeleteதுளசி, மங்களூர் சிவா கிட்டே சவால் விட்டேன் - நீ எழுதுற பதிவுகளெ விட ஒண்ணு கூட எழுதுறேன்னு - ஆனாப் பாருங்க - பணிச்சுமை - நேரமின்மை - ஊரிலின்மை - எனப் பல காரணங்கள். சவாலில் வெல்ல முடியவில்லை. சொல்ல நினைத்தது அனைத்தும் சொல்ல முடியவில்லை.
ReplyDeleteஆகா கலக்குறீங்களே - பொறுமையா அத்தனைப் பதிவுகளையும் படிக்கீறிங்களா ம்ம்ம்ம்ம்
மாணவர்கள் தான் பாடம் படிக்கனுமின்னு யார் சொன்னா? இங்கே பாருங்க.. நம்ம டீச்சர் பிரிச்சி மேய்ஞ்சிட்டு இருக்காங்க. டீச்சர்களும் படிப்பாங்க அப்படின்னு எனக்கு விளங்க வைத்த தெய்வ டீச்சர் ஆகிட்டீங்க. வளர்க உங்கள் தொண்டு.
ReplyDeleteபின்குறிப்பு:
கேப்டன் உங்கூருக்காரரா இருக்கலாம். அதுக்காக நீங்களும் அவரை மாதிரியே டுமில் எல்லாம் வேண்டாம்.
அடடே துளசி அக்கா, இந்த வார வலைசசர ஆசிரியர் நீங்களா?
ReplyDeleteசொல்லணுமா? வழக்கம்போல அசத்துங்க!
(அக்கா என்பது ஒரு விகுதி மற்றும் மரியாதைக்காக - கோபித்துக்கொள்ள வேண்டாம்)
எங்கே உங்கள் நண்பர் கொத்தனாரைக் காணோம்?
சூப்பரு!!!
ReplyDeleteபதிவுலேயே எனக்கு பிடிச்சது...
//அய்யனார், போன 'வீடுகளை' நான் எட்டிப்பார்த்ததே இல்லை(-://
:))))
ஏதாவது தெரியாத/புதிய பதிவரோட பதிவு படிச்சுட்டு, 'அட நல்லாருக்கே'னு பின்னூட்டம் போடலாம்னு போனா, அங்க உங்க பின்னூட்டத்தப் பார்த்து மிகவும் ஆச்சரியமாயிருக்கும்.
ReplyDeleteநீங்கள் தான் வலைச்சரத்தின் 50வது ஆசிரியராக இருப்பதற்கு பொருத்தமானவர்.
இதுவும் நல்லா தான் இருக்கு அக்கா. பொன்ஸ் எழுதத்தொடங்குனப்ப ரீடர்ல போட்டு வச்சது. வர்ற எல்லா இடுகைகளையும் ஒரு நோட்டமாவது விட்டிருவேன். பின்னூட்டம் போட்டது ரொம்ப குறைச்சல். இப்ப நீங்க எழுதுறது இன்னொரு தடவை எல்லாத்தையும் நினைவுக்குக் கொண்டு வருது. :-)
ReplyDeleteரீச்சர்! உங்க பதிவுகள் படிச்சாலும் பின்னூட்டம் போஒட முடியலை! காரணம் பாழாப்ப்போன வேலை!! இனிமே போடறேன்!:-)))))
ReplyDelete//
ReplyDeleteகானா பிரபா said...
துளசிம்மா
கேப்டன் கட்சியில் சேர்ந்துட்டீங்களா, புள்ளி விவரத்தோடு கள(ல)க்கிறீங்களே
//
//
கேப்டனின் பஞ்ச் ஐ விட்டுட்டேன்
அங்ங்...
//
ROTFL
//
ReplyDeletecheena (சீனா) said...
துளசி, மங்களூர் சிவா கிட்டே சவால் விட்டேன் - நீ எழுதுற பதிவுகளெ விட ஒண்ணு கூட எழுதுறேன்னு
//
டீச்சர் எழுதுவாங்க.
அக்கா,
ReplyDeleteகடகடன்னு கலக்கிட்டீங்க :)
வாழ்த்துக்கள்!
வாங்க மக்கள்ஸ்.
ReplyDeleteவணக்கம். நலமா?
கோவியாரே,
வெறும் அட்டெண்டன்ஸா? நல்லா இருங்க.
சீனா,
( நான் படிக்காம இதுவரை)விட்டதைப் புடிக்கிறேன்.
காட்டாறு.
தெய்வமே டீச்சரா வந்தாலும் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கணும். நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதவேணாமா? :-))))
வாத்தியார் ஐயா,
விகுதியை மறக்காம இருந்ததுக்கு நன்றி:-)
வகுப்பு லீடரைக் காணோமேன்னு நானும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்.
ஒருவேளை மட்டம் போட்டுட்டு ஊர் சுற்றும் மக்களைப் பிடிச்சுக்கிட்டு வர ரவுண்ட்ஸ் போயிருக்காரோ என்னவோ?
குசும்பரே,
இப்படி என்ன சிரிப்பு? உண்மையைச் சொல்லவிடமாட்டீங்களே:-)))
வெயிலான்,
பொருத்தம் பார்த்ததுக்கு நன்றி:-))))
குமரன்,
கொசுவத்தி ஹோல்சேல் நம்ம கடையில்தான்:-)
அபி அப்பா,
இன்னுமா பின்னூட்டம் போட யோசனை?
மங்களூர் சிவா.
நீங்களே ரெக்கார்ட் ஹோல்டரா இருக்கணுமுன்னு என் ஆசை:-))))
தஞ்சாவூரான்,
வாழ்த்துகளுக்கு நன்றி.