07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 26, 2008

"நச்"ன்னு பத்து முத்து!!!!

துபால்ல வெள்ளின்னாதானே ரெண்டு அப்படின்னா இன்னிக்கு என்ன வெள்ளிகிழமைன்னு எல்லாம் கேக்கப்பிடாது. உங்களுக்காக நான் ஓடா உழைச்சு மாடா தேய்கிறேன் அய்யா தேய்கிறேன். இந்த பதிவில் நான் சுடப்போவது பத்து சுட்டிகளை. பத்தும் முத்து. அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்.

இதை எழுதிய அந்த நண்பர் எனக்கு அறிமுகம் இல்லாதவர் இந்த நிமிடம் வரை. ஒரு முறை தம்பி லக்கி இந்த பதிவை போய் பாருங்க செம சூடுன்னு சொன்னார். போய் பார்த்தேன். அவ்வளவுதான், அன்னிக்கு 3 மணி நேரம் ஓவர் டைம் பார்த்தேன்ல ஆபீஸ்ல. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த பதிவுகளில். அவர் ஒரு புகைப்பட பிளாக் ஒண்னும் வச்சிருக்காருங்க. அதிலே தலையை விட்டு பார்த்தேன் அன்னிக்கே. அப்போதுதான் நான் மாயவரம் பாதிரி மாம்பழம் பத்தின ஒரு பதிவு தயார் பண்னி வச்சிருந்தேன். (அந்த நேரத்தில் தான் மைஃபிரண்டு தங்காச்சி டுரியான் பழம் பதிவு போட்டிருந்துச்சுங்க) ஆனா அப்போ எனக்கு பாதிரி மாம்பழ போட்டோ கிடைக்கலை. மத்த மாம்பழம் மாதிரி இல்லை இந்த பாதிரிபழம். பச்சை கலரில் தான் இருக்கும். கிழவி மாதிரி(சரி கிழவன் மாதிரியும் தான்) நாளுக்கு நாள் சுருங்குமே தவிர அழுகாது. சுருங்க சுருங்க வாசமும், டேஸ்ட்டும் தூக்கும். மாயவரத்துகாரங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லார் வீட்டு பீரோவிலும் பாதிரியை பழுக்க வைப்பாங்க. அடுத்த நாள் சட்டை எல்லாம் பாதிரி வாசனையா இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் அவரின் போட்டோ பிளாக்கிலே ஒரு கிழவி போட்டோ பார்த்தேன். அப்படியே பாதிரி மாம்பழம் மாதிரி சுருங்கி. நான் லக்கிகிட்ட கேட்டேன் அதை சுட்டுக்கவான்னு. அவரை கேக்காம சுட்டா திட்டுவார்ன்னு சொன்னார். அப்படீன்னா கேட்டுட்டு சுட்டுக்கவான்னு கேட்டேன். அதுக்கு லக்கி அப்படி கேட்டா நேர்ல வந்து திட்டுவார்ன்னு சொன்னார். சரி அவருக்கு எதுக்கு செலவு வைக்கணும்ன்னு அந்த பதிவையே இன்னும் டிராப்ட்டிலே வச்சிருக்கேன்.

சரி அவர் எழுதினதுல என்ன என்ன சுட்டி தந்திருக்கேன் தெரியுமா? அஃப்கோர்ஸ் தீபாவெங்கட் பத்தின பதிவுங்க. நான் இந்த பதிவை படிக்காமல் சுட்டி மாத்திரம் தருகிறேன் என நிலாகுட்டி, பேபிபவன் கூட சொல்ல மாட்டாங்க.(நழ நழ – இப்படிக்கு நட்டு)

அடுத்து அடுத்து பதிவுகளில் நரிக்குறவர் வாழ்க்கை, அவங்க வீரசிவாஜியின் படை வீரர்கள் என்கிற விஷயம், தற்போதைய அவர்களின் வாழ்வு முறை எல்லாம் இருக்கின்றது. அந்த பதிவிலே பாருங்க ஜோதிகா என்கிற 3 வயசு நரிக்குறத்தி பாப்பா போட்டோ போட்டிருக்கார் பாருங்க கொள்ளை அழகு. அந்த கண் இப்பவும் கண் முன்னே நிக்குது. அந்த உதட்டு சாயம் ஜூப்பரோ ஜூப்பர். அதுவும் இப்படித்தான் சொல்லியிருக்குமோ “ழீங்கல்லாம் ழென்நோழ நொழந்தைங்க”ன்னு தோணுச்சு.

பின்ன குடுகுடுப்பைகாரங்க பத்தின பதிவு. அவங்க பூர்வீகம், வாழ்க்கை அமைப்பு, ஒரு ஆடு மாடு வளர்த்து தன் பிள்ளை குட்டிங்க படிக்க வைக்க முடியாத அவலம்…ஊப்ஸ்ஸ்ஸ்.. படிங்க

பின்ன ஒரு சேதி படிச்சேன், சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வேயில் 50% டிக்கெட் விலைக்குறைப்புன்னு. ஆனா நான் கொடுக்கும் இந்த சுட்டியிலே பாருங்க பாவம்ங்க அந்த தாத்தா.

அடுத்து சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளிகளின் வாழ்க்கை அவலம். கொடுமையே கொடுமைங்க.

நம் வலைச்சகோதரி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு ஆதரவாக ஒரு நச் பதிவு. அதிலே ஒரு பின்னூட்டம் அனானியாக “இந்த பதிவை தமிழக முதல்வருக்கோ, ஜனாதிபதிக்கோ அனுப்ப வேண்டும்” என்று. செய்தார்களா என தெரியவில்லை. இதை படிக்கும் நாமாவது அனுப்ப வேண்டும்!

அடுத்து பாலியல் அறிவு பற்றிய ஒரு சூப்பரோ சூப்பர் பதிவு! அதை படிங்க படிங்க படிங்க கூச்சம் தேவையில்லை. எல்லோருக்கும் அவசியம். ஒருமுறை தருமிசார் பதிவிலே டாக்டர் டெல்பினம்மா “கன்னித்தாய்” பற்றி குறிப்பிட்டு இருந்தது எனக்கு மட்டுமல்ல தருமி சாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. தெரிஞ்சுக்க வேண்டியது ஆயிரம் இருக்குங்க!!

அதனால இப்ப லைப்ரரி கதவை திறங்கப்பா. வழக்கம் போல இங்க வந்து கும்முங்க!

நன்றி திரு. மரக்காணம் பாலா அவர்களே! உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பர்மிஷன் கேக்க! ஆனாலும் உங்கள் கருத்துக்கள் எல்லோருக்கும் இன்னும் அதிகமாக போய் சேர்ந்து எல்லோரும் பயன் பெறவே இப்படி செய்துவிட்டேன்!

19 comments:

  1. ரீச்சர்\கீதாம்மா, நெம்ப கஷ்ட்டப்பட வேண்டாம் ஒரு இடத்திலே பண்ணி பண்னியாகிடுச்சு:-))பதிவை படிங்க!!!!:-))

    ReplyDelete
  2. ஜீப்பரு ஆனா ஒரு லிங்க் கூட கண்ல படலயே சரி பதிவு படிக்க போறேன்...

    ReplyDelete
  3. வாங்க சிவா!டெஸ்ட் தான் சக்ஸஸ் ஆகிடுச்சே இனி என்ன ராக்கெட் விட வேண்டியதுதானே!!

    ReplyDelete
  4. இம்சை! வாய்யா வா என்னது லிங் தெரியலையா! என்ன கொடுமை பிலிகேசி!:-))

    ReplyDelete
  5. பாலாவோட லேட்டஸ்ட் பதிவு வரைக்க்கும் கலக்கலா லிங்க் கொடுத்திருக்கீங்க. ஆனாலும் அபி பாப்பா சித்திக்கு முதல் மரியாதை கொடுத்தது தான் பயமா இருக்கு :))

    ReplyDelete
  6. வாங்க தமிழ் பிரியன்! சித்தின்னா சித்திதான் ஆனா கொடுமை பாருங்க பாலா பதிவெலே சித்தி போட்டோ எனக்கு தெரிய மாட்டேன்னு அடம் பிடிக்குது:-)))

    ReplyDelete
  7. அபிஅப்பா நிஜமாவே வெரைட்டி கொடுக்கறீங்க. ஆன்லைன்ல வர நேரம் முழுசும் குறைந்தது 15 பேர் கூட சாட் பண்றீங்க. அப்புறம் எப்படி நேரம் கிடைத்து இத்தனையும் படிக்கறீங்க?

    ஆச்சர்யம்தான்

    ReplyDelete
  8. அப்புறம் தீபாவெங்கட் பதிவ நிலாப்பாப்பாதான் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணீ சொல்லிச்சாமே :P

    ReplyDelete
  9. அபி அப்பாவுக்காக தீபா வெங்கட்டின் போட்டோ (பாலா பதிவில் இருந்து)
    http://bp3.blogger.com/_gaIf9zcqBkQ/R8RUl6h-xAI/AAAAAAAAAG8/5px3Uov_ADU/s1600-h/deepa.JPG

    ReplyDelete
  10. வாங்க நந்து! இப்புடித்தான், வேலை அதிகம் வேலை அதிகம்ன்னு சொல்லிகிட்டு தமிழ்மணத்துல உழைக்கனும்:-))

    ஆமாப்பா ஆமா பசங்களுக்கு நெம்ப குசும்பு அதிகமா போச்சு! இனி குசும்பன் கூட பழக விடக்கூடாதுப்பா!:-))

    ReplyDelete
  11. வாங்க தமிழ் பிரியன்! என் ஜென்மசாபல்யம் ஆச்சு! பத்தீங்கலா, ஒரு காதுக்கு 5 முத்துன்னு பத்து முத்து!! தலைப்பு ஓக்கேவா!:-))

    ReplyDelete
  12. //அபி அப்பா said...வாங்க தமிழ் பிரியன்! என் ஜென்மசாபல்யம் ஆச்சு! பத்தீங்கலா, ஒரு காதுக்கு 5 முத்துன்னு பத்து முத்து!! தலைப்பு ஓக்கேவா!:-))//
    அபி அப்பா நல்லாவே 'கணக்கு' பாக்கிறாருங்க! :))))))

    ReplyDelete
  13. //பத்தீங்கலா,//
    இது யாருக்கு? டீச்சருக்கும், கீதாம்மாவுக்குமா? வாய்ப்பை அ'ல்லி' அ'ழ்ழி' வழங்கும் அபிஅப்பா வாழ்க

    ReplyDelete
  14. ஆஹா! தமிழ் பிரியன்! அவங்க பாட்டுக்கு வந்துட்டு பதிவிலே பிழை இருந்தா திட்டிட்டு போவாங்க, நீங்க என்னடான்னா பின்னூட்டம் வரை அழைச்சுகிட்டு வந்து திட்டு வாங்கி தர்ரீங்களே! எதுக்கு இந்த கொல வெறி:-))

    ReplyDelete
  15. ஜீப்பர் = ஜூப்பர்

    இம்சையோட இம்சை தாங்கலைப்பா....

    அதான் இங்கேயே பிழைத் திருத்தம் போடவேண்டியதாப் போச்சு:-)

    ReplyDelete
  16. \\நந்து f/o நிலா said...
    அபிஅப்பா நிஜமாவே வெரைட்டி கொடுக்கறீங்க. ஆன்லைன்ல வர நேரம் முழுசும் குறைந்தது 15 பேர் கூட சாட் பண்றீங்க. அப்புறம் எப்படி நேரம் கிடைத்து இத்தனையும் படிக்கறீங்க?

    ஆச்சர்யம்தான்
    \\\\

    ரீப்பிட்டேய்ய்ய்

    ReplyDelete
  17. //எல்லார் வீட்டு பீரோவிலும் பாதிரியை பழுக்க வைப்பாங்க. அடுத்த நாள் சட்டை எல்லாம் பாதிரி வாசனையா இருக்கும்.//

    எங்கம்மா பூச்சி உருண்டையை பீரோவில் வைப்பாங்க. அதுக்கு பாசக் கட்டினு பேர் சொல்வாங்க. துணியெல்லாம் செம வாசனையா இருக்கும்.

    ReplyDelete
  18. நல்ல வேளை நீங்களெல்லாம் ஒரு ஆசிரியராகவில்லை. ஆகியிருந்தால் வீட்டுப்பாடம் கொடுத்தே கையை ஒடிச்சிருப்பீங்கய்யா!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது