பின் நவீனத்துவமும் சில கட்டுரைகளும்
பின் நவீனத்துவம் என்கிற பிரம்மாண்டம் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு கொடூரனைப் போல என்னை விரட்டி விரட்டி அடித்திருக்கிறது. 96ம் ஆண்டு வாக்கில் சில இலக்கிய கூட்டங்களில் எஸ். ராமகிருஷ்ணன், இது குறித்த பேச்சை ஆரம்பிக்க போதெல்லாம் ஒரு பூனை குட்டியாக நடுங்கியிருக்கிறேன். அந்த நடுக்கம்தான் தொடர்ந்து அது பற்றிய பயத்தைப் போக்கியது.
'உண்மையில் 'பின்நவீனத்துவம்' என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின் நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்' என்கிறது நடை வழிக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ள பின்நவீனத்துவம் ஓர் அறிமுகம் என்கிற கட்டுரை.
பின் நவீனத்துவ நாவல் என்பது என்ன? நாவல் கொண்டிருக்கும் வடிவ அமைப்பை பின்நவீனத்துவம் எப்படி எதிர்கொள்கிறது. அல்லது பின்நவீனத்துவ நாவல் என்பது எது என்கிற கேள்விக்குவளர்மதியின் இந்தக் கட்டுரை பதிலாக இருக்கிறது.
பின் நவீனத்துவ வாசிப்பு என்பது என்ன? அதன் கதையாடல் எப்படியிருக்கும் என்பதை இன்னும் கொஞ்சம் எளிமையாக விளங்க வைக்கிறது பைத்தியக்காரனின் இந்த கொத்துப்புரோட்டா.
பின் நவீனத்துவ சினிமா எப்படி இருக்கும்? கமலஹாசனின், 'ஹே ராம்' பற்றி புரியவில்லை/குப்பை என்ற விமர்சனங்கள் ஓங்கி எழுந்தன. கோட்சேவின் தம்பி கூட இந்தப் படத்தின் சில விஷயயங்களில் ஒத்தும் சிலவற்றில் மாற்றுக்கருத்தும் கூறியிருந்தார். இதுதொடர்பாக படம் வெளியான காலத்தில் பெரும் சர்ச்சை கிளம்பி அடங்கியது. ஆனால், பின் நவீனத்துவ கதை கூறல் முறைகளில் ஒன்றான, வரலாற்றை அழித்தெழுதுதல் (palimpsest) என்கிற பிரதியாக்க யுத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இது என்கிறார் நண்பர் ஜமாலன். அதாவது இதை பின்நவீனத்துவப் படம் என்கிறார் அவர். அவரின் விரிவான விளக்கமும் வரலாற்று நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கும் பாங்கும் அருமையாக இருக்கிறது. அந்த கட்டுரை இங்கே
பின் நவீனத்துவம் விடுத்து ஏகப்பட்ட நல்ல விஷயங்களை கொண்டிருக்கும் கட்டுரைகள் பல பதிவுகளில் காணக் கிடைக்கிறது.
பாரதி பற்றிய மேன்மைதாங்கிய கருத்துருவாக்கங்கள் ஒரு புறமிருந்தாலும் அவரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் மதிமாறன், ஏற்கனவே பாரதீய ஜனதா பார்ட்டியை எழுதியவர். பாரதி பற்றி தொடர்ந்து அவர் எழுதும் ஆய்வுகள் இன்னொரு கருத்துத் தளத்தைக் கொடுக்கிறது. பாரதியின்
நாலு வர்ண தேச பக்தியை பேசுகிறது இந்தக் கட்டுரை.
முரண்வெளி யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறலா.சா.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தலும் தளவாயின் நகுலன் பற்றிய கட்டுரையும் அவர்களுக்கான அஞ்சலியைத் தாண்டியும் நிற்கிறது.
|
|
nandri! book marked this article!
ReplyDeleteஇதில் குறிப்பிடப் பட்டுள்ள பல கட்டுரைகளை வாசித்துளேன். நல்ல அறிமுகம். நன்றி.
ReplyDeleteஓசை செல்லா, சுந்தர் நன்றி
ReplyDeleteநல்ல பொறுமையா அசை போடுங்க..ஆடு மாடு, அந்த இடைவெளியில்..இதுல படிக்காததை படித்துவிடுகிறேன்..
ReplyDeleteடிபிசிடி,
ReplyDelete//இதுல படிக்காததை படித்துவிடுகிறேன்...//
முதல்ல அதை பண்ணுங்க.