கவிதை 2
கவிதைகளை அந்தரக்க கவிதை, சமூகக்கவிதை என்று பார்க்கிற தன்மை இங்கே இருக்கிறது.
பொதுவாக எல்லோருடனும் பகிர்வதற்கு கூச்சப்படும் கவிதைகள் அந்தரங்க கவிதைகளாகக் கொள்ளப்படுகின்றன. தனிமனிதனின் சொந்த ஆசாபாசங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் சமூக கவிதைகளைவிட அதிக அரவணைப்பை பெறுவதாகவே நினைக்கிறேன்.
மரணம் என்கிற உயிர்கொல்லி எல்லோருக்கும் பயத்தை தருவதாகவே இருக்கிறது. மரணத்துக்குப் பின் ஆன வாழ்க்கை இன்னும் புதிர்தான். 'மரணத்தின் அழைப்பைக் கேட்டவர்களுக்குத் தெரியும் வாழ்வின் வசீகரங்கள்' என்கிற இளையபாரதியின் கவிதை ஞாபகத்துக்கு வந்துபோகிறது. ஆனால் மணிகண்டனின் மரணம் பேசும் இந்தக் கவிதையும் அப்படியானவைதான். மரணத்தை எதிர்கொள்ள துணிகிறவனின் மனம் நம்மை அழைப்பது உயிர் பிரியும் ஓசையை ரசிக்க.
துப்பாக்கிகளும் போர்விமானங்களும் ஈழத்து மண்ணை ரத்தமாக்கிய பிறகு அந்நாட்டு கவிதைகள் அலங்காராங்களை அப்படியே போட்டுவிட்டு திட்டவட்டமான மொழியை கையாளத் தொடங்கிவிட்டன. வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்து அகதி என்கிற சொல்லை தாங்கும் போது ஏற்படுகின்ற வலி கொடூரமானது. அந்த வலியை, அனுபவிப்பவரால் மட்டுமே உணரமுடியும். ஆனால் மிதக்கும் வெளியில் சுகுணா , 'உன் வலியை என்னால் உணரமுடிகிறது' என்கிறார். அப்படி உணர்பவரால்தான் இப்படியும் சொல்லமுடியும்: 'உனது எதிர்பார்ப்பு உன் தேசத்திற்கான விடுதலை. எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை" .அந்தக் கவிதை இங்கே.
ஆற்றுமணலை சோறாகவும் சோற்றை ஆற்றுமணலாகவும் ஆக்கும் சக்தி காதலுக்கு உண்டு. அது ஆழ்மனதை கிள்ளியெடுக்கும் நுண்ணுயிரி. காதலித்து பின்னர் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் துவங்குகின்றவர்களின் எண்ணங்கள் தமிழ்நதியின் கூட வராதவன் போலத்தான். இப்படியானதொரு கவிதையை எழுதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தாலும் அவரவர்களுக்கான நிகழ்வுகளும் அனுபவமும் வெவ்வேறானவை. அதனால்தான் அம்மாதிரியான கவிதைகள் இன்னும் அழுத்தமாய் மனதில் நிற்கின்றன.
நிவேதாவின் கவிதைகளில் வலி நிறைந்த வாழ்க்கையின் அனுபவங்கள் விரவி கிடக்கின்றன. அவரது காத்திருக்காத தேவதைகள் நினைவுகளைக் கனக்கச் செய்கிறார்கள்.
|
|
நீங்கள் இதில் அறிமுகப் படுத்தியிருக்கும் அத்தனைக் கவிதைகளும் அருமை. சில ஏற்கனவே படித்தது தான்.
ReplyDeleteதொடருங்கள், வாழ்த்துகள்.
நன்றி சுந்தர்
ReplyDeleteஉங்களது ஆழ்ந்த வாசிப்பை வெளிப்படுத்துகிறது இப்பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete//உங்களது ஆழ்ந்த வாசிப்பை வெளிப்படுத்துகிறது//
ReplyDeleteஜமாலன் சார் நன்றி