இது புதுசு கண்ணா..புதுசு .......புத்தம் புதுசு..
தெனாலியிலே தனக்கு என்னெல்லாம் பயமுன்னு ஒரு பெரிய லிஸ்ட் போடுவாரு பாருங்க. அதே போல என்னெத்தையெல்லாம் தொலைச்சாருன்னு அத்திவெட்டி ஜோதிபாரதி சொல்றதைப் பார்த்துட்டு, நீங்களும் இதுவரை தொலைச்சதை எழுதுங்க மக்கா............
நம்ம வலைச்சரத்துக்குக் கதம்பம் கட்டலாமுன்னா இங்கேயே இவர் திறந்திருக்கும் பிராஞ்சு ஆஃபீஸில் வாங்கிக்கலாம் போல. வலைப்பூவில் தமிழ்ப்பூ விக்கறார்.
விலைகூட ரொம்ப மலிவா இருக்கான்னு பார்க்கணும்:-))))
சிங்கைப்புள்ளி போல இவர். ஒரு பதிவோட இல்லாம இன்னொரு இடத்தில் (அத்தி)வெட்டியா அலசிக்கிட்டு இருக்கார் . அங்கே ஒரு பறவையோட படம் போட்டுருக்கார். அட்டகாசமா இருக்கு அதோட வர்ணம். ஆளுக்குக் கவிதை(யில்) கண் இருக்கு.
கவிதைக் காதலர்கள் இங்கே போகலாம். எல்லாம் அளவாத்தான் இருக்கு.
அதென்ன அளவான்னு சொல்றேன்னா.............. நம்ம உண்மைத்தமிழனின் ஞாபகம் வந்துச்சு:-) இன்னொரு புதியவர் மெட்ராஸ் தமிழனாம். எக்ஸ்பேட் குருன்னு தன்னைச் சொல்லிக்கிறார். கூடுதல் சிறப்புன்னா சென்னைத்தமிழைச் சிறப்பா பேசுவாராம். ஒரு பத்துப் பதிமூணு இடுகைவரை போட்டுருக்கார். ஒண்ணேயொண்ணை உங்களுக்குச் சாம்பிள் கொடுக்கலாமுன்னா லிங்க் எடுக்க முடியலை( தொழில்நுட்பக் கோளாறு?)
எவ்வளவோ தாங்கினோம், இதைத்தாங்க மாட்டோமா?
அதென்னவோ பேரே ஒரு வித்தியாசமா இருக்கோ? மூளப்பாளையம் நட்புகள்.
ஒருவேளை மூளைப்பாளையமோன்னு மூளையைக் கசக்கிப்பார்த்தேன், நட்புகள்னு இது ஒரு கூட்டுப்பதிவு. 12 பேர், ஒரு 10 இடுகையில் இப்ப நிக்கறாங்க. தொழில்நுட்பக்கோளாறு ஒண்ணும் இல்லைன்னாலும் பத்துதானேன்னு பசங்களைப் புடிச்சுப் போட்டுருக்கேன் பாருங்க.
தமிழ்க்குன்னு வந்தவர் டிஆர்தாசன்.பப்ளிஷிங்லே இருக்காராம். மனசில் ஒரு மூலையில் போட்டு வச்சுக்குங்க. 'குச் காம் கோ ஆயேகா':-))))
மூணே இடுகை. தமிழ்மணத்துலே சேர்ந்துருக்கார். ஹைக்கூஊஊஊஊ எழுதறார்.
வாழ்வில் ஓரு முறைன்னு கவிதைகளா எழுதித்தள்ளிக்கிட்டு இருக்கார் இன்னொருஇ புதுவரவான முத்துக்குமார் கோபால கிருஷ்ணன்.( அட! நம்ம கோபால கிருஷ்ணன். பேரே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஏன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?:-)))))) பறவைகள் விற்பவனும் நானும்!!!
இவரும் இதுவரை பத்துக்கவிதைகள் போட்டுருக்கார். போய்ப் பாருங்களேன். உங்களுக்குப் பிடிச்சுப்போச்சுன்னா............. படிச்சுட்டு ஒரு பின்னூட்டி ஆதரவு கொடுங்க மக்கா.
எல்லாரும் கவிதைன்னே ஆரம்பிச்சுக்கிட்டு வந்தாலும், நிறையப் புதியவர்கள் தமிழ் (தமிழில்) எழுத வந்திருப்பது கவனிக்கப்படவேண்டும். இதுவே தமிழுக்கு ஒரு வெற்றிதானே?
|
|
இது என்ன சோதனை துள்சி?
ReplyDeleteஎல்லாம் தமக்குத் தாமாய் வைத்துக்கொண்டதுதான்:-)
//அதென்ன அளவான்னு சொல்றேன்னா.............. நம்ம உண்மைத்தமிழனின் ஞாபகம் வந்துச்சு:-)//
ReplyDeleteவரும்ல..
டீச்சரம்மா இதுலதான் என் ஞாபகம் உங்களுக்கு வரணுமா?
என்ன இது சரவணனுக்கு நேர்ந்த கொடுமை..?
பிறந்தநாளுக்கப்பறம் எல்லாரும் புதுசா மறுபடியும் பிறந்தமாதித்தான் உணருவாங்க. பொருத்தமா புதுசா ஆளுங்களப்புடிச்சு போட்டிருக்கிங்க.
ReplyDeleteதுளசி, இவ்வளவு புது வரவுகள் இருக்கா.
ReplyDeleteஅடி சக்கைன்னானாம்.
நன்றிப்பா.
எல்லாத்தையும் படிக்கலாம்.
பின்னூட்டிடலாம்.
கவலைப்படேல்.
வாங்க உண்மைத்தமிழன்.
ReplyDeleteடீச்சருக்கு மாணவர்களை நினைவில் வச்சுக்க இப்படி(யும்) ஒரு காரணம் இருக்கே:-))))
ச்சும்மா.............
ரொம்ப ஃபீல் ஆகிட்டீங்களா? :-)
வாங்க சின்ன அம்மிணி.
ReplyDeleteஆளுகளைப் புடிக்கறது இப்பெல்லாம் வலை வீசித்தான்:-))))
வாங்க வல்லி.
ReplyDelete//எல்லாத்தையும் படிக்கலாம்.
பின்னூட்டிடலாம்.
கவலைப்படேல்//
மனசில் மோர் வார்த்ததுக்கு நன்றிப்பா.