நுழைவதற்கு முன் மூச்சை நல்லா இழுத்து விட்டுக்குங்க.
நேத்து மூடுன கண்ணை, நானும் இன்னைக்குத்தான் தொறந்தேன். பார்த்தா.....
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதமுன்னு பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு.
'நான் ரவா உப்புமா மாதிரி'ன்னு சொல்லிக்கிட்டே வந்த பெரியார், ப்ரின்ஸ் என்னார் சாமா ஒரு காரைக்குடிக்காரர்னு தெரிஞ்சதும் மனசு முந்தாநாள் பார்த்த ஒரு படத்துக்குப் போயிருச்சு. இவர் சுட்டிய பதிவுகளில் ஒண்ணு உடனே என் கவனத்தை இழுத்துச்சு. அட! மொதல்லேயே தெரியாமப்போச்சே
வாசுகி என்பது தமிழ்ப் பெயரில்லையா? போச்சுரா........
நான் சின்னப்பையன். இவ்வளோதான் ஞாபகம் இருக்குன்னு சொல்லித் தாளிச்சவர் ஜி. வெட்டிட்டு வான்னா வெட்டுனதோடு இல்லாம அதைக் கட்டிட்டு வந்தமாதிரி, சரம் தொடுக்கக் கூப்புட்டா..... . பக்தியிலே ஆரம்பிச்சுத் தமிழ்,சிறுகதை,கதம்பம், கவிதைன்னு வண்ண மாலை தொடுத்துட்டார் நம்ம கோவிகண்ணன். இந்த வண்ணமாலையைத் தூக்கி யாருகையிலே கொடுத்தாங்கன்னு நீங்களே பாருங்க. பழமொழி பொய்க்கவில்லை.:-))))
வெறும் கைகாட்டுற வேலைன்னு மண்டையை ஆட்டிக்கிட்டே வந்தேன்னு சொல்றவங்க நம்ம லக்ஷ்மி. இவருக்கு, நகைச்சுவை, லேடீஸ்,ஜெண்டில்மேன், இளைஞர், இப்படி எல்லாமே ஸ்பெஷல்:-)
கவிஞர் கென் வந்தாருங்க. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம் என்றதால் இவர் பக்கமெல்லாம் போகாமக் கொஞ்சம் ஒதுங்கி இருந்துட்டேன்(-:
ஜாலியா நம்மையெல்லாம் ஜம்ப் பண்ண வைக்கறதுக்குன்னே ஜாலிஜம்பர்னு பெயர் வச்சுக்கிட்டு இருக்காரோன்னு ஒரு நினைப்பு. எழுத்துச் சண்டைன்னு வந்துறக்கூடாது.......வேடிக்கைப் பார்க்கப்போயிருவாராம்:-)))) சீரியஸ்ஸான பதிவர்.ஆனா பெயரில் இருக்கும் ஜாலியை ஜஸ்டிஃபை பண்ணணுமேன்னு காமெடிப் பதிவையும் சுட்டிட்டுப் போயிருக்கார். அடுத்துவந்த மா.சியைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமாக்கும்?
எக்ஸ்ப்ரெஸ் வந்துக்கிட்டு இருக்கு, ஆறுவகையில். ஓடிப்போய் ஏறிக்குங்கப்பா, கிழுமத்தூர் போகலாம்.
கவிதைகளின் காதலி,காலில் சக்கரம் கட்டிக்கிட்டு ஓடும்போதும் கும்மிகளை மறக்கலை!!!
காமெடி, கதை கவிதை,சீரியஸ், புதுசுன்னு கலக்கிட்டுப்போன இந்தப் பாசக்கார குடும்பத்து மைஃப்ரெண்ட், இப்ப ஏன் மலாய் சொல்லிக் கொடுக்க வர்றதில்லைன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.
கூட்டாஞ்சோறு ஆக்கிவச்ச கும்மி ஸ்பெஷலிஸ்ட் காயத்ரி, அவுங்க பங்குக்கு வெறும் கும்மியா இல்லாமத் தமிழ்மணத்துலே இல்லாத பதிவுகளைச் சுட்டிச்சுட்டி நல்லாவே ஆடுனாங்க. அதுக்குப்பிறகு,அக்குளில் அணுகுண்டு வச்சுட்டாங்கன்னு அலறிக்கிட்டே வந்தாருப்பா புலி. புலிக்கும் அக்குள் இருக்குன்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சது! தெரிவெல்லாம் 2006லே வந்தவை.
பத்துக்குப் பழுதில்லை, எல்லாமே முத்து( ச்சும்மா ஒரு எதுகைமோனைதான்)போறபோக்குலே புத்திமதியொண்ணைச் சொல்லிட்டுப்போனார். எல்லாம் நமக்குச் சாதகமாத்தான்:-)))) படிங்க. படிச்சுட்டு பின்னூட்டுங்கன்னு!
சத்தமே இல்லாம அமைதியா ஓடும் தமிழ்நதியில் ஆட்டம்போட ஒரு வாய்ப்புக் கிடைச்சது. அமைதின்னு நாந்தான் தப்பா நினைச்சுட்டேன்போல....
ரொம்ப ஆழமான வாசிப்பு. இப்படி ஒரு இடத்துலே சொல்லி இருக்கறதைப் பாருங்க.
//வலைச்சரம் என்றால் சும்மா வேலையில்லை. படிப்பை நிறுத்தியபிறகு 'பள்ளிக்கூடம் போ' என்பது மாதிரி கொஞ்சம் பழைய பதிவுகளுக்குள் சுற்றியலைந்து திரும்பவேண்டியிருக்கும். //
நமக்கு இருக்கும் ஒரு சந்தேகம் இவருக்கும் இருந்துருக்கு பாருங்களேன்
//வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட சிலர்தானா... அல்லது.... ? ஒன்றும் புரியவில்லை//
கூடல்நகர் கவிஞர் முத்துக்குமரன் கைதட்ட வந்தாராம். அப்படியே பிடிச்சுப்போட்டு, அதே கையால் சரத்தைத் தொடுக்கச் சொல்லியாச்சு. இது ஒரு விசேஷச் சரம். 250வது பதிவு. புதுமைப்பெண்களைப் பற்றிச் சொன்னது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. என்ன இருந்தாலும் நான் பெண்ணினத்தை விட்டுக்கொடுப்பேனா?:-))))
பதிவரா இல்லாம வாசகரின் அனுபவத்தோடு வலைச்சரம் தொடுக்க வந்த நம்ம பாலராஜன்கீதாவுக்கு எதை விடுவது எதைத் தொடுப்பதுன்னு ஒரு மனக்குழப்பம். ஏன்னா....... எதையுமே விட்டுவிடாமப் படிக்கும் பழக்கம்தான்:-)))
அய்யோடா...அப்படியா ஆச்சுன்னு பேரன்போடு வந்தார் தங்கக்கம்பியான நம்ம தம்பி. பதிவர்களையே சரஞ்சரமாத் தொடுத்துட்டாருன்னா பாருங்க! வருசக்கடைசியும் வந்தது ரசிகனும் வந்தார். பாசக்காரக் குடும்பத்துப் பயபுள்ளெ(அப்படிச் செல்லமாச் சொல்றதுதான்)
புரியலென்னு கன்ஃப்யூஸ்ட் திராவிடியன் வந்தார். நம்ம டிபிசிடிதான்:-)ஒரே
ஃபீலிங்ஸ் ஆகிப்போச்சு. எப்படி இருக்கவேண்டிய நாம் ஏன் இப்படி ஆயிட்டோமுன்னு! அதுக்கு அடுத்துக் களம் இறங்குனவர் வலைச்சர டெண்டூல்கரா இல்லே காவாஸ்கரான்னு எனக்கே ஒரு குழப்பம். இந்த ஏழரை கெடுக்காம, கொடுத்துட்டுப்போச்சு,18 நாட் அவுட்:-) இதுவரை இவரோட ரெக்கார்டை யாரும் முறியடிக்கலை. வெல்டன் மங்களூர் சிவா!
நண்பரே நண்பனா வந்தார். திரைப்படங்கள் குறித்த தேடுதல்,ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்னு எல்லாமே கனம் கூடிய பதிவுகள். (அதான் பின்னூட்டம் ரொம்ப வரலை போல!)
சில்லுன்னு ஒரு சீனா வந்து, சரத்தை உண்டு இல்லைன்னு ஆக்கிப்புட்டார். சிவாவுக்குப் போட்டியா இருப்பேன்னு (சீனாச் )சபதம் போட்டுக்கிட்டு 19 ஆவது போடணுமுன்னு இருந்தாராம். 15ன்னு கணக்குலே ஆச்(சி)சு:-))) பிரிச்சு மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து ,
ஆடுமாடு வந்து அழகா மேய்ஞ்சிட்டுப்போனதும் தெக்கிக்காட்டான் ஆட்டையைப் புடிச்சதும் சமீபத்திய நிகழ்வுகள். நினைவிருக்குல்லே:-))))
லிங்க் கொடுக்கணுமுன்னு பொறுப்பாசிரியர் கூப்புட்டுச் சொன்னாங்கதான். ஆனா முதல் ஆறுமாசமாச் சரம் பின்னுன கைகளுக்குக் கொடுக்காததை,
அடுத்த ஆறுமாசத்துக்கும் கொடுக்காம ஜஸ்டிஃபை செஞ்சுருக்கேன்.
அதுக்காக பொறு[ப்பாசிரியர் சொல்லை மீறலாகுமா? ஒரு ரெண்டு லிங்க் அதோ....மேலே போட்டுருக்கேன் பாருங்க.
இனி, நாளை முதல் லிங்கோ லிங்குதான்:-))))))
|
|
டிரைய்லரே...... பாட்சா படத்தில தலைவரு என்டரி மாதிரி இருக்கு...
ReplyDeleteபடம் சீக்கிரம் போடுங்க..டீச்சர்!! ;)
இதில் உள் குத்து ஏதும் இல்லையே.. ;)
ReplyDelete///
புரியலென்னு கன்ஃப்யூஸ்ட் திராவிடியன் வந்தார். நம்ம டிபிசிடிதான்:-)ஒரே
ஃபீலிங்ஸ் ஆகிப்போச்சு. எப்படி இருக்கவேண்டிய நாம் ஏன் இப்படி ஆயிட்டோமுன்னு!
///
//நம்ம கோவிகண்ணன். இந்த வண்ணமாலையைத் தூக்கி யாருகையிலே கொடுத்தாங்கன்னு நீங்களே பாருங்க. பழமொழி பொய்க்கவில்லை.:-))))//
ReplyDeleteஅவ்வ்வ் டீச்சர் நீங்களுமா?:(((
//
ReplyDeleteதென்றல் said...
டிரைய்லரே...... பாட்சா படத்தில தலைவரு என்டரி மாதிரி இருக்கு...
படம் சீக்கிரம் போடுங்க..டீச்சர்!! ;)
//
அதானே!!!
//
ReplyDeleteஎனக்கே ஒரு குழப்பம். இந்த ஏழரை கெடுக்காம, கொடுத்துட்டுப்போச்சு,18 நாட் அவுட்:-) இதுவரை இவரோட ரெக்கார்டை யாரும் முறியடிக்கலை. வெல்டன் மங்களூர் சிவா!
//
அதில் எதாவது உருப்படியா இருந்ததா??
//
ReplyDeleteஅதுக்காக பொறு[ப்பாசிரியர் சொல்லை மீறலாகுமா? ஒரு ரெண்டு லிங்க் அதோ....மேலே போட்டுருக்கேன் பாருங்க.//
(மீட்டருக்கு ) மேல போட்டு குடுத்திருக்கிங்க !!
அருமை அருமை துளசி - கலக்குறீங்க - அத்தனை வலைப் பதிவரெயும் பின்னிட்டீங்க. கோவி கண்ணன் அழகான மாலை தொடுத்து பழமொழியெ நினைவில் வைச்சிக்கிட்டு யார் கிட்டே கொடுத்தாருங்க ? உலகத்துக்கே தெரியுமே ........
ReplyDeleteவாங்க மக்கள்ஸ்.
ReplyDeleteதென்றல் & மங்களூரார்
ஒருவேளை ட்ரெயிலர்ன்னு நீங்க நினைச்சுக்கிட்டு இருப்பதே படமாக இருக்குமோ? :-))))))
டிபிசிடி,
உ.கு. இனிமேத்தான் கத்துக்கணும்:-))))
குசும்பரே,
அது உங்க தன்னிலை விளக்கமில்லையா? :-))))
மங்களூர் சிவா,
அந்தப் பதினெட்டு(உரு)ப்படி நல்லாவே இருக்கு.
சீனா,
நீங்க எல்லாம் கலக்கி வச்சது இன்னும் தெளியலை. அதான் மசமசன்னு இருக்கு பார்வை. தெளியட்டுமுன்னு இருக்கேன் அடுத்து எதாவது எழுதறதுக்கு:-)
Search in தமிழ் http://www.yanthram.com/ta/
ReplyDelete