07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 5, 2008

சினிமா

பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் வளர்ந்த, பழங்கலைகள் மீது சினிமா என்கிற அந்நிய தொழில்நுட்பம் கை வைத்து, இன்று பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது. சினிமா என்கிற பேக்டரியிலிருந்துதான் நம் அரசியல் தலைவர்கள் வர வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது என்பதே அதன் தாக்கத்தை இன்னும் புரிந்துகொள்ள உதவும். எல்லா மக்களின் கனவுகளோடு உறவாடி சக்தி மிக்க கலையாகியிருக்கிறது சினிமா.

1913ம் ஆண்டு 'ராஜா அரிச்சந்திரா' என்கிற முதல் இந்திய சினிமாவைத் தயாரித்த தாதா சாகேப் பால்கே, '57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி...ஒரு திரைப்படத்தின் நீளம், 2000 மைல்கள்...எல்லாம் 3 அணாவுக்கு' என்று விளம்பரப்படுத்தினார்.

இன்று?

''இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, மக்களை கவரும் கருவிகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த கருவி சினிமாதான்" என்ற நிலையில் அது தன் வேரை விரித்திருக்கிறது.

வலைப்பதிவை தொடங்கி சில வாரங்கள் ஆன பிறகுதான், தமிழ்மணம் என்ற ஒன்று இருப்பது தெரிய வந்தது. புதிதாக ஒன்றை அறியும்போது/தெரியும் போது வருகின்ற ஆச்சர்யங்களும் மகிழ்ச்சியும் அதிகாலை அருந்தும் இளநீர் போல இனிமையானது. இதில் வரும் பதிவுகளைப் படித்துவிட்டு எப்படி இணைப்பது என்பதில் குழம்பிய நேரத்தில்தான், மதி கந்தசாமி தனது பதிவில் கிராமம் பற்றி சிலாகித்து எனது கட்டுரையை இட்டிருந்தார். இதை நண்பர் வெயிலான் மூலமாக தாமதமாக அறிந்து படித்தபோது உச்சிக்குள் வேர்த்திருந்தது.

யாராலும் அறியப்படாத ஒரு பதிவை ஒரு வலைப்பதிவில் பார்க்கும் சந்தர்ப்பம் கிளர்ச்சியை ஏற்படுத்துமென்றே நினைக்கிறேன். இவரின் பதிவை, தொடர்ந்து வாசித்ததில் சினிமா பற்றிய இவரது விமர்சனங்கள்/விளக்கங்கள் ஆச்சர்யத்தை அளித்தன. கடமைபட்ட ஒருவனின் மனநிலையில் இவர் எழுதிவரும் விமர்சனங்களை வாசிக்க, கடமை பட்டதாகவே இருக்கிறது மனசு. இந்த ஒரு விமர்சனம் உங்களுக்கு சாம்பிள்.

சினிமா என்கிற காட்சி ஊடகத்தை அதன் மொழியிலேயே எடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமா பகீரதப் பிரயத்தனங்கள் செய்துவருகின்றன. அவ்வாறு எடுக்கப்படாவிட்டாலும், சினிமா படங்களை அதன் கண்ணோட்டத்தில், செவ்வகத் திரையில் வைக்கப்படும் அந்த படத்தின் நீள அகலங்களை விலாவாரியாக பார்க்கின்ற ஆய்வுகள் முக்கியமானவை. படம் பேசும் அரசியலும், சொல்லப்படுகின்ற விஷயமும் காட்சி ஊடகத்தின் மூலமாக வெளிப்படும் போது, அது பரவலான ஆக்கிரமிப்பை பெறுகின்றன. அவ்வாறு பெறப்படும் படங்கள், மேலோட்டமாக பேசும் விஷயங்களை மட்டும்தான் சாதரண பார்வையாளனால் உணரப்படுகிறது. அதற்கு அவனது ரசனையும் தளமும்தான் காரணம். இப்படி அறியப்படாத பல விஷயங்களைப் பேசுகிறது ஜமாலனின் அந்நியன்.அவரது
கல்லூரி்யும் அப்படித்தான்.


வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட அல்லது படம் சொல்கின்ற பொருளின் பின்னணிகளை அறிந்துகொண்டால் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளின் சினிமாக்கள் புரியவரும். ஏனென்றால் அந்த சினிமாக்களின் முன்னால் வரலாற்றுக் கடமை இருப்பதாகச் சொல்கிறார்கள். வெளிநாட்டு ஆட்சியின் ஆதிக்கத்தால் தங்கள் கலாச்சாரம், பண்பாட்டை இழந்து நிற்கிற அந்த நாடுகளின் சினிமாக்கள், தங்கள் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இப்படியான படங்களின் விமர்சனங்களை நீர் தேடும் வேர் போல வலைப்பதிவில் தேடிக் கொண்டிருக்கிறேன். பார்த்தவர்கள், எழுதியவர்கள் தெரியப்படுத்தலாம்.

சமீபத்தில் வலைச்சரத்துக்காக சினிமா விமர்சங்களைத் தேடிய போது, டிஜே தமிழன் எழுதியிருக்கும் மைக் நெவல்லின் லவ் இன் தி டைம் ஆப் காலரா கண்ணின் பட்டது. நல்ல விமர்சனம். இந்தக் கதைதான் தமிழில் சமீபத்தில் வந்த, ஆக்ரா படத்தின் கதை. அழகாகத் திருடியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், ஆக்ராவில் காயப்படுத்தப்பட்டிருந்தது.

அய்யனாரின் மொழி நடையில் வோல்வர் படமும் தாரே ஜமின் பர் , தருமியின் இந்த விமர்சனமும் சன்னாசியின் டாக் டே ஆஃப்டர்னூன்' விமர்சனமும் அழகாக விமர்சிக்கப் பட்டிருப்பதாகக் கருதுகிறேன். தெகாவின் ஒன்பது ரூபாய் நோட்டு வேறொரு பார்வையை காட்டுகிறது.

உருப்படாததுவின் உருப்படியான பல பதிவுகளில் ஜாலியாகச் சொல்லிவிட்டுப் போகும் இந்தப் பதிவு சுவாரஸ்யமானது.


இன்னும் வாசிப்புகளும், அறியப்படாத வலைப்பதிவுகளும் இருக்கிறது.

11 comments:

  1. என்னாது ஒரு ஆட்டையும் (மாட்டையும்) கானோம்..

    ReplyDelete
  2. மாடூ பிடிக்க வரதா யாராச்சும் சொல்லிட்டாங்களா...

    டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யியோய்...

    நான் வண்டியக் கிளப்பிட்டுப் போய் பாத்தாறேன்..

    ReplyDelete
  3. //என்னாது ஒரு ஆட்டையும் (மாட்டையும்) கானோம்...//

    அதான் வந்திருக்கீங்களே...

    ReplyDelete
  4. ஆடுமாடு,

    உங்கள் மேய்ச்சல் நன்றாக இருக்கிறது. மேய்ச்சல் நிலங்களை தேடித் தேடி அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.

    உங்கள் போஷாக்கின் ரகசியம் இப்போது புரிகிறது!

    ReplyDelete
  5. //உங்கள் மேய்ச்சல் நன்றாக இருக்கிறது//

    நன்றி பைத்தியக்காரன்...ம்மே...

    ReplyDelete
  6. வித்தியாசமான விமரிசனங்கள். நல்லா இருக்கு

    ReplyDelete
  7. சின்ன அம்மணி நன்றி

    ReplyDelete
  8. இதில் உள்ள சில கட்டுரைகளை இன்னும் படிக்கவில்லை. இந்த வாரத்திற்குள் படித்து விட வேண்டும்.

    உங்களுக்கு சினிமாவிலும் இவ்வளவு ஆர்வம் உண்டு என்பது எனக்குச் செய்தி. :)

    ReplyDelete
  9. //உங்களுக்கு சினிமாவிலும் இவ்வளவு ஆர்வம் உண்டு//

    சுந்தர் நான் சினிமா பைத்தியாமாக்கும்.

    ReplyDelete
  10. //
    TBCD said...
    என்னாது ஒரு ஆட்டையும் (மாட்டையும்) கானோம்..
    //
    கம்பெனிக்கு நானும் வந்துட்டேன்.


    நல்ல தொகுப்பு ஆடுமாடு.

    ReplyDelete
  11. மங்களூர் சிவா வருகைக்கு நன்றி. மந்தையிலே சேத்துக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது