பெண்- சில புரிதல்கள்
மனித உடம்பின் உறுப்புகளின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டிருக்கிற அடையாளங்களின்
காரணமாகவே பெண் என்பவள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள். ஆண் என்பவன் தன்னிடமுள்ள ஆண் அடையாளம் பெண்ணிடம் இல்லை என்பதாலேயே அவளை முழுமையடைய வேண்டியவள் என்கிற ஆதிக்கக் கருத்துக்களைப் படைக்கிறான்.
உடல் உறுப்புகளை வைத்து கட்டப்பட்டிருக்கும் பால் வேறுபாடுகளை உடைக்கும் போது, அல்லது அது பற்றிய புரிதல் வரும்போது, ஒரு அடிப்படை தர்க்கமே உடைபடும் என நினைக்கிறேன். அதாவது ஆண்களை வானமாகவும் பெண்களை பூமியாகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்து மதக் கோட்பாடுகளை உடைத்தெறிவதற்கான வழியாகக்கூட கொள்ளலாம்.
இந்தியாவின் சக்தியாக விளங்குகின்ற சாதி அமைப்பும் இந்து மதச் சிந்தனையும் மேல்நாட்டு பெண்ணியவாதிகளால் அறிய முடியாததாக இருக்கிறது. ஐரோப்பிய பெண்ணிய சிந்தனைக்கும் இந்திய பெண்ணிய சிந்தனைக்கும் எட்டமுடியாத வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த புரிதல் இன்றி , அங்கிருந்து இறக்குமதியாகின்ற பெண்ணிய சிந்தனைகள் இங்கே பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
''பெண்ணியம் மேற்கத்திய சிந்தனைதான்; இதை ஆண் பெண் உடல்சார்ந்த பிரச்னையாக நான் பார்க்கவில்லை. அது கருத்தியல் சார்ந்த பிரச்னை. பெண் இல்லாமல் அலலது பெண்ணுடன் வித்தியாசப்படாமல் ஆணை எப்படி வரையறுப்பீர்கள்?" என்று கேள்வி கேட்கிற ஜமாலனின் இந்தக் கட்டுரை முக்கியமானப் பதிவு
பெண்களுக்கான அடக்குமுறையை, குடும்பம் சார்ந்திருக்கிற நமது சமூக அமைப்பு எவ்வாறு செய்கிறது என்கிற ஆதவன் தீட்சண்யாவின் கருத்தை பதிவிட்டிருக்கும் செல்வநாயகியின் இந்தக் கட்டுரை , பெண்களுக்கு, சாதி கட்டிப்போட்டிருக்கிற பெரும் சங்கிலி பற்றி பேசுகிறது.
பெண் என்பவள் யார் என்று கேட்கும் கிருத்திகா, இந்த கேள்விவிக்கு ஆணை அளவு கோலாக வைக்க முடியுமா? என்று கேட்கிறார் இந்தப் பதிவில் .
லஷ்மியின் மலர்வனத்தில் இடப்பட்டிருக்கும் கனிமொழியின் இந்தக் கட்டுரை பெண் உரிமை என்பது என்ன என்பததை விரிவாகப் பேசுகிறது.
|
|
//ஆண் என்பவன் தன்னிடமுள்ள ஆண் அடையாளம் பெண்ணிடம் இல்லை என்பதாலேயே அவளை முழுமையடைய வேண்டியவள் என்கிற ஆதிக்கக் கருத்துக்களைப் படைக்கிறான்.//
ReplyDeleteபெண்களிடம் உள்ள பெண்மையின் அடையாளங்கள் ஆண்களிடமும் இல்லை; அதனால் பெண் ,ஆணைக்
குறைந்தவன் எனக் கொள்ளலாமா??
இன்னும் முழுமையடையாதவன் எனக் கொள்ளலாமா??
யோகன் பாரிஸ் நன்றி. உங்கள் கேள்விக்கு நான் இட்டிருக்கும் சுட்டிகளை படித்தாலே பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஎன்ற அடிப்படையில் சகோதரி
ReplyDelete''பெண்ணியம் மேற்கத்திய சிந்தனைதான்." சரி தான் ஆனால் அட்டதைய மேற்க்கத்திய சிந்தனை கொண்ட ஒரு பெண்ணின் வாய்மொழி இந்த அழகான உரையாடலுக்கு நன்றாய் இருக்கும் என்பதற்காக இதனை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.அந்த பெண்ணின் பெயர் ஸாரா போக்கேர்.அமெரிக்காவை சேர்ந்தவர்.
இன்னும் படிக்க விரும்பினால் இந்த பக்கத்தில் பார்க்கவும்
http://ithuyenulagam.blogspot.com/
நல்ல பதிவு. நல்ல சுட்டிகள்.
ReplyDelete//அதாவது ஆண்களை வானமாகவும் பெண்களை பூமியாகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்து மதக் கோட்பாடுகளை ...//
ReplyDeleteஇந்து மதத்தில் மட்டுமில்லைங்க. இங்கே நியூஸிப் பழங்குடிகள் மவோரிகளும் 'வானம் தந்தை, பூமி தாய்'ன்னுதான் சொல்றாங்க.
//அதாவது ஆண்களை வானமாகவும் பெண்களை பூமியாகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்து மதக் கோட்பாடுகளை ...//
ReplyDeleteஇந்து மதத்தில் மட்டுமில்லைங்க. இங்கே நியூஸிப் பழங்குடிகள் மவோரிகளும் 'வானம் தந்தை, பூமி தாய்'ன்னுதான் சொல்றாங்க.
இறை அடிமை நன்றி
ReplyDelete//இந்து மதத்தில் மட்டுமில்லைங்க. இங்கே நியூஸிப் பழங்குடிகள் மவோரிகளும் 'வானம் தந்தை, பூமி தாய்'ன்னுதான் சொல்றாங்க.//
ReplyDeleteதகவலுக்கு நன்றி டீச்சர்.
அருமையான பல சுட்டிகள், கொடுத்து இருக்கீங்க சார்!
ReplyDeleteகுசும்பன் இதுல ஒண்ணும் குசும்பு பண்ணலையே...
ReplyDelete