கதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)
வலைச்சரப் பணியின் தொடக்கமான முதல் பதிவில் என்னைப் பற்றி, என் பதிவுகளைப் பற்றி பேசியாச்சு. இனி நேரா பதிவுகள் அறிமுகத்துக்குப் போயிரலாம். பதிவுகளை ஒரு கதம்பம் போல தொகுத்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். போலாமா ரைட்...!
1. முதலில் கடவுள் வாழ்த்துலருந்து ஆரம்பிச்சுருவோமா? கடவுள் வாழ்த்துன்னவுடனே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது திருக்குறள்தான் இல்லையா. அந்த திருக்குறள் பதிவை வாசிச்சிருங்க. இந்த தளத்துல 1330 குறளும் அழகா வரிசைப்படுத்தப்பட்டு ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ளது. படிச்சா பிரமிச்சு போயிருவீங்க. உடனே போங்க.
2. நம்ம பதிவர் சந்தானம் என்ன சொல்ல வர்றார்னா அட இப்படியா சங்கதி னு சொல்றார். இவரோட தளத்துல என்ன விசேஷம்னா நம்ம தென்கச்சி சுவாமிநாதன் இன்று ஒரு தகவல் என்று தினமும் சொல்வாரே அதைப் போல அருமையான தகவல்களை இவரும் என்றும் ஒரு தகவல் அப்படின்னு சொல்றார். அத்தனையும் அருமை. படிச்சுத்தான் பாருங்களேன்.
3. நம்ம பதிவர் இளங்கோ அழகழகா கவிதை எழுதறார். என்னைக் கவர்ந்த கவிதை ஒன்னு கொஞ்சம் சொற்கள் மட்டுமே. மீதி கவிதைகளையும் நீங்களே போய் படிங்க. ஓ.கே.வா?
4. நம்ம தோழர் தமிழன் தன்னோட ஒரு பதிவில் கூகுளில் எப்படி நேர்த்தியா சர்ச் பண்றது (அதாவது வித்தியாசமான முறையில்) அப்படின்னு சொல்றார். கேளுங்க. கூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்.
5. பதிவர் சிவகுமார் தன்னுடைய உள்ளத்தை திறந்து சுவையான நடையில் சொல்லும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதையைக் கேளுங்கள். மறுபரிசீலனை.
6. சர்க்கரை வியாதிக் கட்டிகளுக்கும், சூட்டினால் வரும் கட்டிகளுக்கும் பதிவர் டாக்டர் குயீர்ஷ்யூர் (Curesure) ஒரு எளிய ஆயுர்வேத மருத்துவ தீர்வு படியுங்கள். இந்த தளத்தில் எல்லா வியாதிகளுக்கும் அருமையான தீர்வுகள் உள்ளன. விசிட் பண்ணத் தவறாதீர்கள். அருமையான தளம்.
7. பதிவர் பிரபாதமு (பேரு தமிழ்ல கரெக்டான்னு அவர்தான் சொல்லணும்) ஓட்ஸ் சாப்பிட்டா முதுமைய விரட்டலாமா அப்படின்னு ஒரு அருமையான பதிவு இட்டிருக்கிறார். மற்ற அவரது அத்தனை மருத்துவ பதிவுகளும், பல்சுவைப் பதிவுகளும் அருமை. போய்ப் பாருங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!
|
|
புதிய அறிமுகங்களுக்கு நன்றி. பதிவுகளைப் பார்வையிட்டேன். பல்வேறு ரசனைகளைக் கொண்ட பதிவுகளைக் கதம்பமாய் வெளியிட்டதை பாராட்டுகிறேன். அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல கதம்பம் சார்...
ReplyDeleteகதம்பம் மணக்கின்றது.
ReplyDelete@ கீதமஞ்சரி
ReplyDelete- நன்றி சகோ. கீதா! தங்களின் தொடரும் ஆதரவுக்கும் அருமையான அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி! தாங்கள் வலைச்சரத்தில் இருக்கும்போதுதான் என்னால் வரமுடியவில்லையே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. என்ன செய்வேன்?
@ விச்சு
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.
@ ஸாதிகா
ReplyDelete- தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.
தங்கள் கதம்ப அறிமுகங்களிற்கும், நிகழ்வு சிறப்புறவும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@ Kovaikkavi
ReplyDelete- தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரம்.
மணக்கும் கதம்ப மாலை.
ReplyDeleteநல்ல ஆரம்பம் துரை. அழகான பதிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. தொடரட்டும் உங்கள் அசத்தல்! அறிமுகமான அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@ கலையன்பன்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ கணேஷ்
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் நன்றி.
வாழ்த்துகள் டானியல்.நேற்று இரவே பார்த்தேன்.உங்கள் பதிவு சரியாக வெளிவரவில்லை.எனவே பிந்தினாலும் மனம் நிறைந்த வாழ்த்து.பணி சிறப்பாக அமையட்டும் !
ReplyDeleteகதம்பத்திற்கு வாழ்த்துகள்.இன்னும் சிறப்பாகத் தொடருங்கள் டானியல் !
ReplyDeleteவலைச்சரத்தில் என் பதிவை வெளி இட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி நண்பா......
ReplyDeleteகதம்பத்திற்கு வாழ்த்துகள் நண்பா....
//// பதிவர் பிரபாதமு (பேரு தமிழ்ல கரெக்டான்னு அவர்தான் சொல்லணும்) ////
ஆனால் ஒரு வருத்தம் என் பெயர் பிரபாதாமு.....
nalla arimukangal!
ReplyDeletevaazhthukkal!
வலைச்சரப்பணி சிறப்புட ஆற்ற வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பான ஆரம்பம்.....
ReplyDeleteஎனக்கு அனைவரும் புதிய அறிமுகம்...
மிக்க நன்றி.
மணக்கும் கதம்பத்தில் புதிய மலர்கள்!நன்று
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி துரை டேனியல்.
ReplyDelete@ Prabhadamu
ReplyDelete- அப்படியா? ஓ.கே.பிரபாதாமு. இப்ப பேரைக் கரெக்டா சொல்லிட்டனா? நன்றி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ Seeni
ReplyDelete- வருகைக்கும வாழ்த்துக்கும் நன்றி.
@ ஸாதிகா
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
@ சென்னைப்பித்தன்
ReplyDelete- நன்றி சார்.
@ Lakshmi
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.
@ சிவகுமார் மா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும நன்றி சார்.