07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 17, 2012

நிலைமாறும் உலகில்…




அப்பப்பா என்ன வெயில்! உஷ்ஷ்…. அந்த விசிறியை எடு கோமளம்.

இப்படி வேர்த்து வடியுதே! கொஞ்சம் அங்க இங்க நிழல்ல நின்னுட்டுதான் வரது.

எங்க இருக்கு நிழல்பறவைக்கே நிழல் இல்லைங்கிறார் வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை வலையில் .தியாகு. எனக்குள் வாழும் வனம்னு   சர்வதேச வன ஆண்டான 2011 இல் இவர் எழுதி வாசித்த கவிதையில் வனத்தை பொன்முட்டையிடும் வாத்தாய் உருவகப்படுத்தியிருக்கார். எவ்வளவு பொருத்தம்! 

குளிரூட்டப்பட்ட சவப்பெட்டி ஒன்றுக்குள்
கைகால்கள் முடக்கி
நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
ஒரு கனவில்.

ஐயோஎன்னங்க இப்படியெல்லாம் சொல்றீங்க?

இதை நான் சொல்லல. மரம் வெட்டப்பட்ட இடத்தைப் பற்றிச் சொல்லும்போது கண்ணீர் ததும்பும் வேதனையோடு கவிதையில் அப்படிக் குறிப்பிட்டிருப்பார் கவிஞர் தேவதேவன்.

அந்த அளவுக்கு வெக்கையின் தீவிரம் கவிஞரைப் பாதித்திருக்கு.

வருகிற மார்ச் 21 உலக வனநாள். வனங்களை அழிச்சிட்டு போன்சாய் வளர்த்து பெருமைப்பட்டுட்டிருக்கோம். இந்த நிலையில் வனநாள் கொண்டாடுறது வேடிக்கைதான்.

போன்சாய்களின் ஏக்கம்   பத்தி வெயில்நதி இயற்கைசிவம் எழுதியிருக்கிற குறுங்கவிதைகளைப் படிக்கிற யாரையுமே பாதிக்கிற வரிகள்.

குச்சிகள்
வைக்கோல் இழைகள் சகிதம்
கடந்துக்கொண்டிருக்கும் பறவைகளை
அடர் நிசப்தத்திலிருந்து
வெறிக்கின்றன போன்சாய்கள்.

குருவியின் ஏக்கம் பற்றி கலியுகம் தினேஷ் எழுதியிருக்கார். சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இருக்க நாம்தானே காரணம்! அதனால்தான் அதற்கும் ஒரு தினம் வச்சிக் கொண்டாடுற நிலை இருக்கு.

அது எப்போ?

மார்ச் 20 சிட்டுக்குருவிகள் தினம். மார்ச் 21 வனதினம். மார்ச் 22 நீர்தினம். இப்படி எல்லாத்தையும் அழிச்சிட்டும் வீணாக்கிட்டும் தினம் மட்டும் வைத்துக் கொண்டாடறோம். கோநா எழுதிய ஒரு ஏரி, நிறைய நீர், நிறைய பறவைகள் கவிதையில் ஏரியைப் பாட்டிலில் அடைத்துவிட்டோம்கிற வரிகளைப் படிக்கும்போது  மனம் ஆயாசமாயிடுது.

பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நீரின் பின்புலமிருக்கும் வியாபார தந்திரம் பற்றியும் சுற்றுப்புற சூழல் சீர்கேட்டையும் நீரின்றி அமையாது உலகு என்னும் பதிவில் குறிப்பிட்டு பின்குறிப்புகள் பிரவீன் எச்சரிக்கிறார். அம்மா அப்பா வலைப்பதிவில் .ஞானசேகரன் குடிநீர் எப்படி மாசுபடுது? நிலத்தடிநீர் குறையக் காரணமென்ன? செயற்கை மழைன்னா என்னஇது மாதிரி பல தகவல்களைத் தந்து நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்  ஆற்றும் பங்கை பல பகுதிகளாகத் தந்திருக்கிறார்.

நிலங்களை எல்லாம்தான் ப்ளாட் போட்டு விக்க ஆரம்பிச்சாச்சேஒரு காணி நிலத்தையாவது உழுது பாத்துட்டு சாகணும்னு உழவுமாடு ஆசைப்படுதாம். கிராமிய மணம் மாறாத கவிதைகள் படைக்கும் வசந்தமண்டபம் மகேந்திரனோட இந்தக் கவிதையைப் படிக்கும்போது மனசைப் பிசையுது.

மின்தட்டுப்பாட்டால் நெசவுத்தொழில் நசிந்து கிடக்கும் அவலத்தைக் கவிதையாய்ப் பிழிந்திருக்கார் கரை சேரா அலை அரசன். நெசவே இல்லையென்றால் பருத்திக்கென்ன வேலை? கொய்தலும் நெய்தலும் இன்றி கொலைகாரப்பூக்களாய் மாறிய கொடுமையைக் கவிதையாய் பதிவு செய்திருக்கார் தொடுவானம் காளிதாஸ் முருகையா.

வீடு கட்ட தலையில் செங்கல் சுமக்கும் சித்தாளுக்கு சின்னதாய் ஒரு சொந்த வீடு வேணும் என்கிற ஆசை வரக்கூடாதா? வரக்கூடாதுங்கறாரே ஆறுமுகம் கொத்தனார். சிவகுமாரன் கவிதைகளில் வெளிப்படுது இவங்களுடைய ஆதங்கம்

உணவு, உடை, வீடு  இவைதானே மனிதனுக்கு அடிப்படை. அதை உருவாக்கித் தரவங்களுடைய வாழ்க்கை எவ்வளவு கொடுமையா இருக்கு. சமுதாயத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டால் அடுக்குமாடி வர்க்கம் எப்படி நிலைக்கமுடியும்? 

சிறுக சிறுக பணம் சேர்த்து அடுக்குமாடியிலாவது தங்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்கிடலாம்னு கனவு கண்டு கொண்டிருக்கும் பல நடுத்தர வர்க்கங்களின் னவெல்லாம் அரைகுறையா முடிஞ்சிப்போனா உண்டாகும் வலியை அமைதிச்சாரல் அப்படியே உணர்த்தியிருக்காங்க.

அவசரப்பட்டு சில இடங்களில் ஏமாந்திடறாங்க. அதுக்கு என்னதான் பண்றது?

வீடு, இடம் வாங்குறதுக்கு முன்னாடி எந்தெந்த விஷயங்களில் கவனமா இருக்கணும்னு  ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடண்ட் அருண் குமார் சொல்லியிருக்கும் பல நல்லக் கருத்துகளைப் பகிர்ந்திருக்காங்க தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். என்.ஆர்.ஐ. யாக இருந்தாலும் வீடுகளிலும் இடத்திலும் முதலீடு செய்யலாம்னு அவர் சொல்லியிருக்கார்.

பல பேர் வெளிநாட்டில் கஷ்டப்படுறதே தன் குடும்பத்தைக் கவலையில்லாம வைக்கத்தானே. ஆனால் ஒரு நாட்டின் விதிமுறைகள் பற்றியோ  சூழல் பற்றியோ எதுவும் தெரியாமல் அவசரப்பட்டுப் போய்ட்டு அப்புறம் அவதிப்படக்கூடாதில்ல? சவுதி நாட்டுக்கு வேலைக்கு வருவோருக்கான சட்ட திட்டங்கள் பற்றியும் வேலை ஒப்பந்தங்கள் பற்றியும்  வாங்க பழகலாம் வலையில் நெல்லி மூர்த்தி பதிவிட்டிருக்கார். 

என்ன சம்பாரிச்சு என்ன?  சொந்த மண்ணில் சொந்தங்களோடு இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கைன்னு உழவனின் நெற்குவியலில் உழவன் கேட்கிறது நூறு சதம் உண்மை. அதனால்தான் நான் வேலையிலிருக்கும்போது எனக்கு எவ்வளவோ வாய்ப்பு வந்தும் நான் வெளிநாடு போகலை. இருக்கிறது போதும்னு இருந்திட்டேன்.

இருக்க முடிஞ்சாதான் இருந்திடலாமேஉயிருக்கே உத்திரவாதம் இல்லாத சூழலில்? ஆறடிக்கும் குறைவான தெருவைக் கடப்பதற்காய் உயிரைப் பயணம் வைத்திருக்கின்றீர்களா அப்படின்னு டிசே தமிழன் கேட்கும்போது அடிவயிறு கலங்கிப்போகுதே. தன் தாய்நாட்டில் வாழ வழியில்லாமல் பரதேசம் புகுந்துவிட்டப் பல சகோதர்களின் வாழ்க்கைக்கும் ஒரு பருக்கை சோறு பதமாக எனக்கானத் தெருக்கள்  பதிவு இருக்கு.  

அட ராமா   நீ செய்தால் நியாயம்? நாங்கள் செய்தால் அநியாயமான்னு குமுறிக்கிடக்கிறாங்க அருணா செல்வம். உலக ஊனமுற்றோர் தினமான மார்ச் 15 -ஐ மன ஊனமுற்றோருக்காக அர்ப்பணிக்கும் இவரது கவிதை மனம் இளக்குது. உன்கிட்ட ஒரு கேள்வி. மனித உறுப்புகளில் சிறந்தது எதுன்னு நீ நினைக்கிறே? 

எதுன்னு சொல்ல? எல்லாந்தான். 

 மனித உடலுறுப்புகளில் சிறந்தது தோள்கள்தான்னு திண்டுக்கல் தனபாலன் சொல்றார். எனக்கும் மாற்றுக்கருத்து இல்ல. துன்பத்தில் துவள்பவர்களுக்கு நம் தோள்களைக் கொடுத்துதான் அவங்களுடைய துயரத்தைப் பகிரணும்.

நிச்சயமா செய்வோம். அப்படிச் செய்யலைன்னா வாழ்றதுக்கு அர்த்தம்தான் என்ன?

சரி, ஒரு மனிதன் இறந்தபின்னால் பயன் தரும் உடலுறுப்பு எது தெரியுமா?

இறந்தபின்னால் எப்படிப் பயன்தரும்?

தரும். ஒரு இழப்பு ஐம்பது உயிர்களைப் பிழைக்கவைக்கும்.

நிஜமாவா? அது எப்படி?

பிதற்றல்கள் அனு எழுதியிருக்கும் பதிவைப் படிச்சிப்பார். இது தெரியாம சில பேர் அற்ப விஷயங்களுக்காக தற்கொலை செய்துக்கிறதைப் பார்க்கும்போது பரிதாபமா இருக்கு. யவ்வனம் கதிர்பாரதியின் கவிதையில் அவசரப்பட்டு தற்கொலை செய்யும் சோகத்தை சுள்ளுனு சுட்டியிருப்பார்

தற்கொலை செய்துகொள்ளுமுன் சைக்கிள் மிருணாவின் வாழ்தல் நிமித்தம் வரிகளில் இருக்கும் யதார்த்தத்தை மனசுக்குள் ஓடவிட்டாலே போதும். தற்கொலைகள் நிறுத்தப்பட்டுவிடும்.

சரியா சொன்னே...

வாழ்ந்தா இப்படித்தான் வாழணும்னு நினைச்சிருந்தேன். செத்தாலும் இப்படித்தான் மத்தவங்களுக்கு பயன்படுறமாதிரி சாகணும்னு இப்ப நினைக்கிறேன்.

முதல்ல தலைக்கு சாயம் அடிக்கிறதை நிறுத்து. அப்புறமா சாவைப்பத்தி யோசிக்கலாம்.

ஏன்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

 தலைக்கு டை அடிக்கிறதால் வரும் பிரச்சனையை தகவல் மலர் குடந்தை மணி விலாவாரியா எழுதியிருக்கார். அதுவும் ஒருவகையில் தற்கொலை மாதிரிதானாம்.

நிஜமாவா?  

ஆமாம். அதை இதை பண்ணி  சீக்கிரமா என்னை விட்டுட்டுப் போயிடாதே..

அதெப்படி சீக்கிரம் போவேன். என் பேத்தி கல்யாணத்தைப் பார்த்துட்டுதான் போவேன்.

அதானே பார்த்தேன்....

24 comments:

  1. நாளுக்கு நாள் வலைச்சரத்தி்ல் தொடுக்கும் மலர்களின் ஜொலிப்பு கூடிக் கொண்டுதான் வருகிறது தோழி. வழமை போல தெரிந்த சிலருக்கிடையில் அறிந்திராத பலரின் அறிமுகங்கள்! நன்று! அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. டிசே தமிழன் வரை அலசல் தமிழின் ஆர்வம் மெய்சிலிக்க வைக்கிறது கீதா !

    ReplyDelete
  3. அத்தனையும் முத்துக்ககள்..

    அருமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

    ReplyDelete
  5. அனைத்து அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்... என்னுடைய கிறுக்கல்களும் சுவாசம் பெற்றது நன்றி சகோ....

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் ஒரு முக்கியமான இடுகையில் என் மற்றும் நண்பர்களின் படைப்பை அறிமுகபடுத்தியமைக்கு
    முதலில் என் அன்பு நன்றிகள் தோழி. இடுகை ஒரு நல்ல பதிவு. மனம் நெகிழ்ந்தேன், மீண்டும் நன்றி!

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நாள்தோறும் ஏராளமான பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் தொடுத்துதரும் சரம் வியப்பேற்படுத்துகிறது.

    ReplyDelete
  9. வலைச்சரத்துல அறிமுகமப்படுத்தினதுக்கு நன்றிங்க கீதா:) படித்ததில் பிடித்தவைகளை...நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு வழிதாங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. தொகுப்பு அழகாக பண்ணியிருக்கீங்க.
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. தலைப்பும், பதிவர்களின் பகிர்வும் மிக நன்றாக இருக்கிறது.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சூடிக் கொண்டு கொண்டாடத்தக்க அழகுச் சரம் உங்கள் வலைச் சரம்!

    இங்கு(சிட்னி) வருடம் ஒரு முறை இந்துசமயப் பாடசாலையில் சரம் கட்டுவது எப்படி,கோலம் போடுவது எப்படி,தோரனம் கட்டுவது எப்படி, பூரணகும்பம் வைப்பது எப்படி,கூந்தல் பின்னுவது எப்படி, சேலை உடுத்துவது எப்படி,கோயிலுக்குப் போவது எப்படி என்றெல்லாம் இங்கு பிறந்த இளம் சந்ததியினருக்குச் நாள் பூரா நின்று சொல்லிக் கொடுப்பார்கள்.

    வலையில் சரம் பின்னுவது எப்படி என்று தமிழ் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க கீதாவைக் கொண்டுவந்து இங்கு விடத்தோன்றுகிறது.

    அப்படி ஒரு லாவகம் புதுமை சுறுசுறுப்பு அழகு எல்லாம் கைவந்திருக்கிறது உங்களுக்கு

    மனமார்ந்த வாழ்த்துக்கள் கீதா!இந்த வலைச் சரத்தால் என் வீடும் அழகு பெறுகிறது இப்போது!

    ReplyDelete
  13. @ கணேஷ்.

    முதல் ஆளாய் வந்து உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி கணேஷ்.

    @ ஹேமா,

    வலைச்சர வாய்ப்பினை வழங்கியதற்காய் வை.கோ. சாருக்கும் சீனா ஐயாவுக்கும் மற்றும் வலைச்சர குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பு கிடைத்திராவிடில் நான் தேடிப்போய் இத்தனை வலைகளைப் பரிச்சயப்படுத்தியிருப்பேனா என்பது சந்தேகமே.

    ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  14. @ இராஜராஜேஸ்வரி,

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    @ விச்சு,

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி விச்சு.

    @ தினேஷ்குமார்

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தினேஷ்.

    ReplyDelete
  15. @ ப.தியாகு

    தங்கள் வருகைக்கும் நிறைவானக் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    @ லக்ஷ்மி,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.

    @ சத்ரியன்

    தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி சத்ரியன்.

    ReplyDelete
  16. ”நிலைமாறும் உலகில்” என்றும் நிலையாக இருக்கப்போகும், அழகான பதிவுகளைப் பற்றிய அசத்தலான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  17. @ திண்டுக்கல் தனபாலன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ அனு

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அனு.

    @ கோவை2தில்லி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.

    ReplyDelete
  18. @ கோமதி அரசு,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    @ மணிமேகலா,

    தங்கள் வருகையும் உற்சாகம் மிகு வார்த்தைகளும் கண்டு நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன் மணிமேகலா. தங்களைப் போன்றோரை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிட்டியதையே பெருமையாக நினைக்கிறேன். மிகவும் நன்றிபா.

    ReplyDelete
  19. @ வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்கள் ஆசியால் இதுவரை இந்த வாய்ப்பினை நல்லபடியாகவே பயன்படுத்தியுள்ளேன் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  20. வணக்கம்ங்க என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி... இன்னும் ஏராளமான பதிவையும் பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திள்ளீர்கள் வாழ்த்துகள்.... நேரம் கிடைக்கும்பொழுது அந்த தளங்களையும் பார்க்கின்றேன் நன்ற்

    ReplyDelete
  21. முக்கியமான அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. உங்கள் வலைச்சரத்தில் என் படைப்பையும் ஒரு மலராக நினைத்துத் தொடுத்தமைக்கு மிக்க நன்றி சீதமஞ்சரி!

    ReplyDelete
  23. என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது