கட்டுரைச்சரம்
➦➠ by:
ஸாதிகா
அனுபவம்,வாழ்கைபாடம்,விழிப்புணர்வு,மருத்துவம்,ஜெயித்தது,தோற்றது,பயணம்,விருந்து,ஷாப்பிங்,அவஸ்தை,நகைச்சுவை,இன்னல்களைத்தவிர்த்தல் இப்படி பற்பல நிகழ்வுகளின் கோர்வைகளை பதிவர்கள் தங்கள் எழுத்துத்திறமையால் அழகிய வார்த்தைக்கோர்வைகளுடன் சுவாரஸ்யம் தாண்டவமாட கட்டுரை வடிவில் தொகுத்து தந்திருக்கும் பதிவுகளை இன்றைய கட்டுரை சரத்தில் பட்டியலிடுகின்றேன்.
1.குடல்வால் நோயைப்பற்றி தெளிவாக கூறுகின்றார் எதிர்க்குரல் ஆஷிக் அஹ்மத்.அனைவரும் அறிந்து வைத்திருக்கக்கூடிய பகிர்வு.
2.சென்னையில் இருந்து நாகூர் போகின்றீர்களா?மறக்காமல் அப்துல்காதர் சொல்லும் இந்த ஹோட்டலுக்கு போய் டேஸ்ட் பண்ணிப்பாருங்கள்.பர்ஸ் அதிகம் பழுக்காதாம்.
3.தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிப்பற்றிய விபரத்தை தங்கம்பழனி தொகுத்து தந்திருப்பது மிகவும் உபயோகமான பகிர்வு.
4.ரயிலில் பயணம் செய்து வெறுத்துப்போய் சபித்து இருக்கும் நாஞ்சில் மனோவின் புலம்பலை கேளுங்கள்.
5.மங்களகிரி,கத்வால்,கலம்காரி,பாந்தினி,தர்வார் சூளூர்பேட் ,நாரயண்பேட்,வெங்கடகிரி இப்படி உடுத்திக்கோண்டால் ரிச் ஆகத்தெரியும் புடவை வகைகளை விலாவாரியாக சொல்லி அசத்துகின்றார் புதுகைத்தென்றல்.சேலைகட்டும் மாந்தர்களுக்கு கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.
6.கோடை தொடங்கிவிட்டது.உபயோகமான குறிப்புகளை அள்ளித்தருகின்றார் ராஜகிரிஆன்லைன்.இக்குறிப்புகள் கோடையின் கொடும் பிடியில் இருந்து நம்மை தற்காக்கும்.
7.ஒரு மனிதன் நேர்வழியை தேர்ந்தெடுக்க இறைவனின் கிருபை தேவைப்படுகிறது. அடுத்து அவனின் சுற்று சூழல் சீரிய முறையில் அமைந்தால்தான் அந்த நேரிய வழி தொடர்கதையாகிறது.-அழகிய கருத்துக்களைச்சொல்லி அசத்துகின்றார் சுவனப்பிரியன்.
8.”உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...” இப்படி கதைப்பது யார் தெரியுமா?பதிவர் என்றென்றும் 16
9.மின்சாரத்தட்டுப்பாடினை தடுக்கும் உபயோகமான குறிப்புகளை தந்திருப்பவர் வீடு கே.எஸ் சுரேஷ்குமார்.
10.மாபெரும் புரட்சியாளர் சே குவாரா பற்றிய கட்டுரையை தந்திருப்பவர் கே எஸ் எஸ் ராஜ்
11.நியூஜெர்ஸிக்குப்போய் நினைவுகளை பொக்கிஷமாய் சேகரித்து வைத்து பேரனைப்பற்றி மகிழ்ச்சி பொங்க உகப்பாக சொல்பவர் கோமதிஅரசு
12.கனவாகிப்போன அடுக்களை உபகரணங்களை படங்களுடன் காண்பித்து நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்துச்செல்பவர் சின்னு ரேஸ்ரி மாதேவி
13.பிளஸ்டூ பொதுத்தேர்வு நடந்து வருகின்றது.ஆண்டுவாரியாக வெளியிட்ட வினாத்தாள்களைப்பற்றிய விபரத்தை தந்து அசத்துகின்றார் என் ராஜபாட்டை ராஜா.மாணவமணிகளுக்கு மிகவும் உபயோகமான பகிர்வு.
14.நெருங்கிய உறவுக்குள் மணம் வேண்டாம் என்பது மருத்துவர்களின் வேண்டுகோள்.இதனையே படவிளக்கங்களுடன் ரத்னவேல்நடராஜன் சார் பகிர்ந்த பதிவைப்பாருங்கள்.
15.பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம் பீரிடம் ஷிப்பைப்பற்றி படங்களுடன் காட்டி இராஜஇராஜேஸ்வரி பிரமிப்பை தருகின்றார்.
16.மனிதனுக்குவேண்டிய முதன்மை குணம் என்ன என்று திண்டுக்கல்தனபாலன் எதனை சொல்லிக்காட்டி எழுதி இருக்கின்றார் தெரியுமா?படித்துப்பாருங்கள்.
17.முட்டை சைவமா அசைவாமா என்று முட்டை தோன்றிய காலத்தில் இருந்து விவாதம் நடப்பது முடிவுக்கு வரவில்லை.எம் ஆர் ரமேஷ் முட்டைகளின் குணநலன்களைபற்றி இக்கட்டுரையில் கூறி இருக்கின்றார்.
18.லிப்ட் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்திருக்கும் முஹம்மதுஆஷிகின் கட்டுரை உபயோகமானது.
19.மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது.”என்ற வாதத்தினை அழகுபட விவரித்திருப்பவர் குலாம்.
20.மரபணுக்கள் பற்றியும், அவற்றில் நடைபெறும் செயல்கள் பற்றியும் படவிளக்கங்களுடன் விபரமாக இக்கட்டுரையில் சொல்லி இருப்பவர் கார்பன்கூட்டாளி.
21.சென்னை சைதாபேட்டைக்கு நம்மை அழைத்து செல்பவர் பதிவர் விக்கி.
h
22.தனது அமெரிக்க பயணத்தை சுவாரஸ்யமாக படங்களுடன் பதிவிட்டு காட்டுவது முத்துலட்சுமி.
h
23.சதா பிளே ஸ்டேஷனிலும் கம்பியூட்டரிலும் மூழ்கி இருக்கும் இக்கால சிறுவர்கள் விளையாட்டுக்களையே இழந்து விட்டனர் என்பதை விஜயன் கூறுவது மலரும் நினைவுகளை பூக்க வைக்கின்றன.
24.கார்ட்டூனிலேயே களை கட்டுகின்றது நெல்லி முர்த்தியின் வலைத்தளம்.
25.”ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.”இப்படி காராசாரமாக கேட்பவர் முதுபெரும் பதிவர் நீடூர் அலி அவர்கள்.இன்றைய பெண்ணைபெற்றவர்கள் படும் பாட்டினை அருமையான கட்டுரையாக தொடுத்திருகின்றார்.
26.சிங்காரச்சென்னையில் வாழ்ந்து கொண்டே சென்னையைப்பற்றி புகழன் புலம்பும் பீலிங்ஸை சற்று கேளுங்கள்.
27.பெண்களின் வலைப்பூக்களை தொகுத்து தந்து கொண்டு இருக்கும் மங்கையர் உலகம் வலைப்பூ பதிவுலகின் புதுவரவு.பெண் பதிவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம்.
28.தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று ரெவரி குறிப்பிடும் சூப்பர் ஸ்டார் யார் என்று காண ஆவலா?
29.கீழை இளையவன் தொகுத்துத்தரும் ஐ ஏ எஸ் வழிகாட்டி ஐ ஏ எஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
30.எல்லாம் மேலே இருக்கின்றவன் பார்த்துக்குவான் என்று சொன்ன சிறிது நாட்களிலேயே மேலே போய் விட்ட பதிவர் மாயா என்ற ராஜேஷ் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் பதிவுலகம் இருக்கும் வரை அவரிட்ட பதிவுகள் இருக்கும்.
31.நான் பதிவுலகம் வந்த புதிதில் என் கண்களில் பட்ட இடுகை.ஒரே மூச்சாக எல்லா இடுகைகளையும் படித்து விட்டு என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அடக்க இயலவில்லை.இப்போழுது அனுராதா அம்மா நம்முடன் இல்லாவிட்டாலும் அவரிட்ட இந்த பதிவுகள் காலத்தால் அழியாது.முகம் தெரியாத அனுராதா அம்மாவை இப்பொழுது நினைத்துக்கொண்டாலும் மனம் கனத்துப்போய் விடுகிறது.அனைத்துப்பெண்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வை தரும் என்பது திண்ணம்.
32.நிககொள்ள போய் பார்க்கறீங்களா?அப்படி என்றால் என்ன என்கின்றீர்களா? முஹம்மது ஃபாகீயின் சொந்த ஊரைப்பற்றித்தான் நம்முடன் பகிர்ந்திருக்கின்றார்.
33.சுற்றுலாவுக்கும் இவருக்கும் செம பொருத்தம்.துளசிகோபால் நம்மை தாய்லாந்துக்கு அழைத்துச்செல்கின்றார்.புறப்பட ரெடியா?
34.வல்லிசிம்ஹனின் ஸ்விஸ் பயண அனுபவத்தை படங்களுடன் பகிர்ந்து இருக்கின்றார்.
35.”அய்யய்யோ.....எங்க ஊரை தமிழ்நாட்டிலிருந்து தூக்கிட்டாங்க..”ஒருவர் ஏன் இப்படி சப்தம் போடுகின்றார் யார்?ஏன்?எதற்கு?என்பதை அறிய ஆவலா?ரஹீம் கஸ்ஸாலி தளத்திற்கு வாங்க.
36.என் குழந்தை கொழு கொழு என இல்லையே என்று விசனப்படும் இளம் பெற்றோர் அவசியமாக படிக்க வேண்டிய இடுகை.குழந்தைகள் வயதிற்கேற்ற எடைதான் இருக்க வேண்டும் என்பதினை இக்கட்டுரை மூலம் தமிழ்வாசி பிரகாஷ் அருமையாக சொல்லி இருக்கின்றார்.
37.வெடிதேங்காய் என்ன ருசி?அதிலும் தமிழ் பிரியன் கூறும் மெதடில் வெடிதேங்காய் செய்தால் எப்படி இருக்கும்?
38.இப்பொழுது கிரீன் டீயின் மகத்துவத்தைப்பற்றிய பேச்சு நிறைய காதில் விழுகின்றது.எடக்குமடக்கு விபரமாக சொல்லி இருப்பதை பாருங்கள்.
39.முதல் முறையாக எஸ் கே தயாரித்த இட்லியை எவ்வளவு பெருமிதத்துடன் நம்முடன் பகிர்ந்திருக்கின்றார் பாருங்கள்.
40.கல்வித்தந்தைகள் எப்படி எல்லாம் கல்லா கட்டுகின்றார்கள் என்ற உண்மையை படம் பிடித்துக்காட்டுகின்றது பதிவர் சேகர் எழுதிய இந்தக்கட்டுரை.
41.உலக அதிசயங்களின் பட்டியல் உருவானது எப்படி என்பதினை இக்கட்டுரை மூலம் விவரித்து இருப்பவர் வரலாற்று சுவடுகள்.
42.குழந்தைகளுக்கு படிப்பு சுமையை அதிகரித்து அவர்களுக்கு இயந்திர வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் படிப்பு முறையை நியாயமாக சாடும் உன்னைப்போல் ஒருவனின் வாதத்தினை கேட்போமா?
|
|
அதிகபட்ச பதிவர்களை அறிிமுகப் படுத்தியதும்
ReplyDeleteமிக மிக அழகாக படங்களுடன் அறிமுகப்படுத்தியதும்
தாங்களாகத்தான் இருப்பீர்கள்
வலைச்சர ஆசிரியர் பணியும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
தேடிப்பிடித்து ஒவ்வொரு நாளும் பல பேரை அறிமுகப்படுத்தும் உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள். இடம்பெற்றிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தொகுப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteமுடிஞ்சா தமிழ் மீரான் பக்கம் வந்து போங்க
உங்க உழைப்புக்கு பாராட்டுக்கள்..என்னயும் மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவேலைபளு...மின்சார தட்டுப்பாடு காரணமாக...கொஞ்சம் வலைச்சரம் பக்கம் வரஇயலவில்லை...படங்களுடன் வலைச்சரம் வித்தியாச முயற்சி...வாழ்த்துகள் சகோ!என் கட்டுரையை அறிமுகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஎத்தனை எத்தனை வித்தியாசமான ரசனை மிக்க கட்டுரைகள். வலைச்சரம் தொடுக்கும் ஒவ்வொரு தினமும் உங்கள் உழைபபு பிரமிக்க வைக்கிறது சிஸ்டர். என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...
ReplyDelete.பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம் பீரிடம் ஷிப்பைப்பற்றி படங்களுடன் காட்டி இராஜஇராஜேஸ்வரி பிரமிப்பை தருகின்றார்.'
ReplyDeleteஎமது பதிவை அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
மிகுந்த ரச்னையுடன் தொகுத்தளித்த அத்தனை பதிவுகளும் பிரமிக்கத்தான் வைக்கின்றன்..
ReplyDeleteபாராட்டுக்கள்..இனிய வாழ்த்துகள்..
அசுர உழைப்பா இருக்கே!!!!!!
ReplyDeleteஎத்தனையெத்தனை பதிவுகளை அறிமுகம் செய்ஞ்சுருக்கீங்க!!!!!!
இதுலே சிலரை நான் முதன்முதலா வாசிக்கப்போறேன்.
நினைவில் வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி.
சலாம் அக்கா
ReplyDeleteஅம்மாடி
எவ்வளவு பதிவுகள்! ஆச்சர்யம் தான் போங்க :-)
வாழ்த்துகள் அக்கா
அனைவருக்கும்,
ReplyDeleteஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
@ சகோதரி ஸாதிகா,
அறிமுகத்திற்கு மிக்க நன்றி. உங்களின் ஆசிரியர் பணி வியக்க வைக்கின்றது. எவ்வளவு உழைப்பு மற்றும் தகவல்கள்..மாஷா அல்லாஹ்
இறைவனின் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை அதிகரித்து தருவானாக..ஆமீன்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
உங்க் கடின உழைப்பு தெரிகிரது அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநிறைய அறிமுகங்கள் ! பிசினஸ் காரணமாக ஐந்து நாட்கள் வலைச்சரம் பக்கம் வர இயலவில்லை ! எமது பதிவை அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ! பாராட்டுக்கள் ! படங்களின் தொகுப்பு சூப்பர் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மிக்க நன்றி சகோதரி !
ReplyDeleteஎன்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுக படுத்தியமைக்கு நன்றி
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.. கடுமையா உழைச்சு தேடிப் பிடிச்சு அறிமுகப்படுத்தும் உங்கள் சிரத்தைக்கு பாராட்டுகள்..
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்யதமைக்கு நன்றிகள் அக்கா
ReplyDeleteஏனையவர்களுக்கு வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் உங்கள் பணி சிறக்கட்டும்
தோழி கட்டுரைச்சரம் சாதனை படைத்து விடும் போல.அத்தனை முத்தான அறிமுகங்கள்.அடுத்து போட்டிக்கு(பார்வைக்கு) வரப் போகும் சரம் எதுவோ!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteபல்சுவைக் கருத்துக்கொண்ட பதிவர்களை ஒருங்கே இணைத்து அறிமுகப்படுத்திய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
உங்களின் பணித்தொடர பிரார்த்தித்தனவனாக...
உங்கள் சகோதரன்
குலாம்.
ஸலாம் சகோ. ஸாதிகா,
ReplyDeleteபடங்கள் ரொம்ப வித்தியாசமாக அமைத்து இருக்கிறீர்கள்..!
பதிவுக்குள் உள்ள பதிவுகள் அனைத்தும் அருமை. கூடவே என் லிஃப்டுக்கும் அப்படியே உங்கள் பதிவுத்தொடர்வண்டியில் ஒரு லிஃப்ட் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோ.
மேலும் கலக்குங்கள் சகோ... கங்கிராட்ஸ்.
சொல்ல வார்த்தைகள் இல்லை ஸாதிகா அக்கா
ReplyDeleteகட்டுரைச்சரத்தை, சரம் சரமாக தொகுத்து விட்டீர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வயதானான பின் வருத்தப் படும் பெற்றோர்கள்.
ReplyDeleteபெண் குழ்ந்தை பெறுவதால் தாங்க முடியாத செலவுகளும் பாரங்களும் வந்து சேர்ந்ததே என்று புலம்பிய பெற்றோர்கள் வயதானபின் நமக்கு மகள்கள் இருந்திருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும் என வருந்தும் பெற்றோர்கள் அதிகம்.
ஆண் பொருள் ஈட்டி தரலாம் அதன் காரணமாக வெளிநாடும் சென்றிருக்கலாம் . உடனிருந்து சேவை சேவை செய்ய முடியுமா! மருமகளும் அதில் முழுமையாக மகிழ்வுடன் ஈடுபட விரும்புவாளா! அப்படியே விரும்பினாலும் நாம் நிறைவடைவோமா!
குழந்தைகளை வளர்ப்பதில் ஆண், பெண் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் வேறுபடுத்தி வளர்க்கக் கூடாது
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
“Allâh will reward you [with] goodness.”
சலாம் சகோ.
ReplyDeleteபல வேலைகளுக்கு நடுவே இது போன்று ஒரு பதிவுக்கு நேரம் எடுத்துக் கொள்வது உங்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது. மென்மேலும் உங்களின் அறிவு விசாலமடைய அந்த ஏக இறையை இறைஞ்சுகிறேன். இடையில் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
கட்டுரைச் சரத்தில் கட்டியுள்ள அறிமுகப் பூக்களிங்கும் தங்கள் சிரம ஆசிரியப் பணிக்கும் நிறைந்த வாழ்த்துகள். இவைகளை வாசிக்கவே எவ்வளவு நேரம் தேவை சகோதரி. தொகையான அறிமுகம். நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.
ReplyDeleteVetha. Elangathilakam.
மிகுந்த ரச்னையுடன் தொகுத்தளித்த அத்தனை பதிவுகளும் பிரமிக்கத்தான் வைக்கின்றன்.
ReplyDeleteதேடிப்பிடித்து ஒவ்வொரு நாளும் பல பேரை அறிமுகப்படுத்தும் உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள்.
இனிய வாழ்த்துகள.
தங்களது அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள்.
நீண்ட அறிமுகங்கள்.. தேடித் தேடிப் போடிருக்கிறீங்க வாழ்த்துக்கள்....
ReplyDeleteபஞ்சவர்ண ரோசாவையும் போட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
என்னை அறிமுக படுத்தியமைக்கு நன்றி சகோ...பல கல்விநிறுவனங்கள் லாப நோக்கத்தில் இயங்கிகொண்டிருகிறது.கல்விக்கான மதிப்பும் பணமாக கருதபடுகின்றது.. பல கல்விநிறுவனங்கள் எனது படிப்புக்கு உதவ முன்வரவில்லை.பணமே முக்கியம் என்று என்னையும் என்னை போன்ற பலரின் படிப்புகளுக்கு உதவ முன்வரவில்லை..அன்று நான் யோசித்து எழுதியது.. இன்று என்னையும் ஒரு பதிவராக அறிமுக படுத்தியமைக்கு நன்றி சகோதரி அவர்களே.....
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteநான் அறிந்து என் பதிவுக்கு வலைச்சரத்தில் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இது.
ஹாஹா என் பெயரைத்தான் மாற்றிவிட்டீர்கள்.
உன்னைப்போல் ஒருவன்
Thank you Saadhika!!!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!! நேரமிருக்கும்போது படிக்கனும்..வாழ்த்துக்கள் அக்கா!!
ReplyDeleteதினமும் நீங்க வலைச்சரத்தை அழகு படுத்துவதே அருமையாக இருக்குங்க.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஸாதிகா
ReplyDeleteஅன்பு ஸாதிகா,
ReplyDeleteமிகுந்த சிரமம் எடுத்து அனைத்து வலைக்களங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து அத்தனையையும் வகைப் படுத்திக் கொடுத்துத் தொடுத்திருக்கிறீர்கள். என் வலைப்பூவையும் இங்கே சரத்தில் அமைத்ததில் மிக நன்றி.
அருமையான பதிவர் கொலாஜ்...
ReplyDeleteஉங்க உழைப்புக்கு பாராட்டுக்கள்...
என் மூலம் உதவும் கரங்களை மறுபடியும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...
வாழ்த்துக்கள்...
என் கட்டுரையும் தங்கள் இடுகையில் இணைத்து பதிவிட்டமைக்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கும் தான்......
தொடருங்கள்....
மீண்டும் ஒரு முறை வலைச்சர ஆசிரியர்களால் எனது பதிவுகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அங்கீகரித்த ஆசிரியர் ஸாதிகா அவர்களுக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறேன்..!!!!
ReplyDeleteஏனைய அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்..!
மிக அரிய தகவல்களை, அறியத் தரும் பதிவுகளின்
ReplyDeleteதொகுப்பு.
தெரிகின்றது உங்கள் கடும் உழைப்பு.
எத்தனைப் பதிவர்கள்,,,?
ReplyDeleteஎப்படித் தொகுத்தீர்...?
அருமை! பெருமை! உரிமை!
உமக்கே!
புலவர் சா இராமாநுசம்
செமத்தியான உழைப்பு உங்களிடம். எனக்கு நிறைய அறியாத பதிவர்கள். படித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகாக்கா,
ReplyDeleteபதிவுகளை தேடி தேடி எடுத்து, வகை தொகையாய் வார்த்தை தொடுத்து + கொலாஜ்... அம்மாடியோவ் அசத்தலோ அசத்தல். அனைவருக்கும் வாழ்த்துகள்.
// பஞ்சவர்ண ரோசாவையும் போட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). //
ReplyDelete:-))))))))))))))
ஒவ்வொரு தினமும் மிகுந்த சிரத்தை எடுத்து அக்கறையுடனும் பொறுமையுடனும் சக பதிவர்கள் நிறைய பேரை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு இனிய பாராட்டுக்கள்!!
ReplyDeleteஅன்புள்ள சகோதரி ஸாதிகா அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த இளையவனின் பாராட்டுக்கள்.... இங்கு பதியப பட்டிருக்கும் பாராட்டுகளுக்கு மத்தியில், என்னுடைய வாழ்த்துக்களும் சிறு துரும்பாய் இருந்து தங்கள் சிறப்பான பணிகள் செழித்தோங்க செய்ய ஏதுவாகலாம் என்று எண்ணியவனாக, இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
'மாணிக்க விளக்காயினும், அது பிரகாசிக்க தூண்டு கோல் வேண்டும்' என்பார்கள்.. என்னுடைய "கீழை இளையவன் IAS வழிகாட்டி" துவங்கிய.. முதல் நாள், முதல் பாராட்டாக, என்னை உற்சாகப் படுத்திய தங்களுடைய வாழ்த்துப் பதிவுகள் என் நெஞ்சில் நீங்காத கீதங்கள்.....
தங்களின் comments:
ஸாதிகா (Jan 24, 2012 01:46 AM)
"அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சிறப்பான முயற்சி.தங்கள் முயற்சி வளர்ச்சி பெற்று வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்!நமதூர் மாணவச்செல்வங்கள் எதிர் காலத்தில் // வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.// என்ற தங்களின் கூற்றுக்கு இயம்ப நல்ல தொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வாழ்வாதாரமும்,சமுதாயமும் உயர தங்களின் நோக்கம் கண்டிப்பாக உதவும்.எனது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்."
மேற்கண்ட வரிகள் என்னை இன்றும் உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது தங்கள் வலைச் சரம் பகுதியிலும் என் வழிகாட்டி வலை தளத்தை அறிமுகப்படுத்தி, என்னை மென் மேலும் ஊக்கப் படுத்தும் தங்கள் முயற்சியின் மூலம், இறைவன் நாடினால், நிச்சயம் ஒரு ஆவது விரைவில் வருவார்கள் என்பதில் எனக்கும் எள்ளளவும் ஐயமில்லை. இன்னும் என்னை போன்ற பலரின் சிறப்பான வலைத் தளங்களை, நீங்கள் வெளிக்கொண்டு வரும் முயற்சிக்கு, இறைவன் நிச்சயம் அருள் புரிவான். ஆமீன்.
அன்புடன்
கீழை இளையவன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
பெரிய ஜாம்பவான் பதிவர்களுடன் என்னையும் அறிமுகம் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஸாதிகா அவர்களே...
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஸாதிகா....
கட்டுரை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...!! :-)
ReplyDeleteகருத்திட்ட அனைவருக்கும் இதய நன்றிகள் உரித்தாகட்டும்.
ReplyDeleteபடங்களுடன் அறிமுகம் வித்தியாசமானது அருமை சகோ , தாமதத்திற்கு மன்னிக்கவும் . வலைப்பக்கம் அதிகம் வரவில்லை ,அதனால் தாமதம் .எம்மையும் ,சகோதரன் ராஜேஷையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteதொடர்ந்து நல்ல அறிமுகங்கள் செய்ய வாழ்த்துகள்.
ஐய்யய்யோ நான்தான் ரொம்ப லேட்டு, மன்னிச்சுக்கோங்க, அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம், மற்றும் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteஎன்னுடைய தொடர்பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஸாதிகா அவர்களே..!!
ReplyDeleteவலைச்சரம் மணப்பதோடு மட்டுமல்லாமல் இனிக்கவும் செய்கிறது.!!
அழகாய்ச் சரத்தை தொடுத்தமைக்கு வாழ்த்துகளும், நன்றி பாராட்டுதல்களும்..!!!
அன்பு ஸாதிகா, இன்று தான் ஊரிலிருந்து வந்தேன். கட்டுரைச்சரத்தில் என் பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு மிக மகிழ்ச்சி. நன்றி ஸாதிகா.
ReplyDeleteஎவ்வளவு பதிவுகள் படித்து அவைகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்!
உற்சாகமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஸாதிகா.
அம்மாடி... எத்தனையெத்தனை அறிமுகங்கள்... இத்தனை சிரத்தையெடுத்து அழகான முறையில் பூக்களை என்றும் வாடாத (வலைச்)சரத்தில் தொடு(கு)த்து வழங்கியதற்கு மிக்க நன்றி. என்னுடைய பூச்செண்டும் மாலையில் ஒரு பக்கம் எட்டிப்ப்பார்க்க வைத்ததில் மிக்க நன்றிக்கா.
ReplyDeleteநன்றி சகோ. ஸாதிகா..
ReplyDeleteஅருமையான தொகுப்பு. தற்பொழுதுதான் தங்கள் வலைப்பதிவை முதன் முறையாக பார்வையிடுகிறேன். சிறப்பு...
ReplyDelete