கதைச்சரம்
➦➠ by:
ஸாதிகா
படிக்கும் செய்திகளை,சிறு நிகழ்வுகளை,சின்னஞ்சிறு அனுபவங்களை,நகைச்சுவையுடன் நம்மை சிரிக்க வைத்த நிகழ்வுகளை,செவி வழியாய் கேட்பவைகளை,விழி வழியே காண்பவைகளை,சிந்தனையில் உதித்தவைகளை,அக்கம் பக்கம் நடப்பனவற்றை கருவாய் எடுத்துக்கொண்டு அதில் கற்பனை கலந்து எழுதுவதுதான் சிறுகதை.
சிறுகதைகள் என்பது படிப்பினையை அடிப்படியாக கொண்டு உயர்ந்த குறிகோளை ,விழிப்புணர்வை வலியுறுத்தவதாக இருப்பின் அது முழுமை அடைகின்றது.படைப்பாளியின் கற்பனை சிறகு விரிய விரிய தன் எண்ணங்களை சுவாரஸ்யம் குறையாமல் படிப்பாளிக்கு அலுப்புதட்டாமல் எழுதப்பட வேண்டும்.
காந்தியடிகள் அரிச்சந்திரன் கதை மீது ஈடுபாடு கொண்டு சத்தியம் பேசுபவராக விளங்கினார்.
வீர,தீரக்கதைகளைக் கேட்டு சிவாஜி தீரனாகத் திகழ்ந்தார் என்று சரித்திரம் கூறுகின்றது.அதுபோன்று படிப்பாளியின் மனதினை கவரும் விதமாக ஒரு படைப்பாளின் படைப்பு இருந்துவிட்டால் அந்த படைப்பின் முழு பயனும் அனைவருக்கும் கிடைத்து விடுகின்றது.
தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை வாராந்திர, மாதந்திர இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இப்பொழுது இணையம் அதில் அசூர வளர்ச்சியைக்கண்டுள்ளது.
குடத்திலிட்ட விளக்கு போன்று திறமைகள் வெளிப்படாமல் அத்தனை திறமைகளையும் மறைத்துக்கொண்டு மறைந்து போனவர்கள் எத்தனையோ பேர்.இன்று அப்படி அல்ல.வலைப்பூ என்று ஒன்று தோன்றி பிரமாண்டாமாக வளர்ச்சி கண்டு நம்மை எல்லாம் ஆக்ரமித்துக்கொண்டுள்ளது.படைப்பிலக்கியத்தில் சிறிதே திறமை இருப்பினும் அதனை இணையம் மூலம் பந்தியிலிட்டு தங்களை செதுக்கிக்கொள்கின்றனர்.பட்டை தீட்டிக்கொள்கின்றனர்.
நம் வலையுக நட்புக்கள் தம் திறமைகளை வெளிப்படுத்தி தம் படைப்பிலக்கியங்களை படிப்பிலக்கியங்களாக வலைப்பூவில் பறிமாறிய சிலவற்றினை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1.யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல அதி முன் ஜாக்கிரதைக்காரான முகுந்தனின் அனுபவத்தை தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை ததும்ப அழகிய நடையில் வை.கோபாலகிருஷ்ணன் எழுதிய இந்த சிறுகதையை ரசித்து வாசித்தால் சிரித்து மகிழலாம்.
2.எழை விவசாயி படும் கஷ்டங்களை கிராமிய மணத்துடன்,ஊர் வழக்குசொற்களை சரளமாக உபயோகித்து ஸ்டார்ஜன் எழுதிய மனதினை நெகிழ வைக்கும்
3.கண் திருஷ்டி பட்டு விடும் என்பதற்காக ஒரு மனைவி கில்லாடித்தனமான வேலைகளை செய்கின்றாள் என்பதை வெகு சுவாரஸ்யமாக ஹுசைனம்மா இந்த சிறுகதையில் விவரிப்பதைப்பாருங்கள்.
4.பாட்டியைப்பற்றி நெகிழ வைக்கும் சிறுகதை.அதிராவின் கன்னி முயற்சியாயினும் இலங்கைதமிழில் வெகு சுவாரஸ்யமான நடையில் எழுதி மனதினை கவர்ந்து விட்டார்
5.முன்பெல்லாம் சங்கீதம் என்பது குரல் வளத்திற்கும் பாடகர்களின் அற்புதமான பாடும் திறமைக்காகவும் சபாக்களில் ரசிகர்கள் மெய் மறந்து பாடல்களை ரசிப்பார்கள்.இன்றோ பட படக்கும் வகை வகையான பட்டுகளுக்கும்,மினுமினுக்கும் டிஸைன் டிஸைனான நகைகளுக்கும் கூட்டம் கூடுகின்றது என்பதினை வெகு அழகாக யதிஷ்ர்டம் சிறுகதையில் அழகிய நடையில் வித்யாசுப்ரமணியன் எழுதியதை பார்க்கலாமா?
6.மனதில் மறவாது நிலைத்து நிற்கும் படியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அழகான சிறுகதையை படைத்திருக்கின்றார் செ.சரவணக்குமார்.
7.இவரை அறிமுகப்படுத்தும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும்,இவரது நகைச்சுவை மிளிரும் எழுத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டு இவரது தீவிர ரசிகையாகி விட்டேன். இவரது படைப்புகளை படித்து மனம் விட்டு சிரித்து மகிழலாம்.கடுகு என்ற பெயரில் எழுதும் முது பெரும் எழுத்தாளர் திரு.பி.எஸ்.ரங்கநாதன்அவர்கள் பத்திரிகை வாயிலாக அனைவரும் அறிந்த ஒருவர்.கமலா,தொச்சு,அங்காச்சிப்பற்றி எழுதும் இவரது படைப்புகளை படிப்பவர்களை கலகலப்பாக்கிவிடும்.
8.தங்கையின் திருமணத்திற்காக ஒரு அண்ணன் படும் செல்ல அவஸ்தையை வானதி இந்த சிறுகதையில் சொல்லி இருக்கின்றார் .
9.பாம்பு கடித்துப்பிழைத்தவனும் உண்டு,செருப்பு கடிச்சு செத்தவனும் உண்டு என்ற பழமொழிகொப்ப அப்பாவி தங்கமணி தனக்கே உரிய பாணியில் அருமையான கருவை கையில் எடுத்து அழகான சிறுகதையை பின்னி இருகின்றார்.
10.இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் சேர்த்து தனக்கேற்பட்ட கடும் பிணியை கதீஜா கடந்து வந்ததை இச்சிறுகதை மூலம் விழிப்புணர்வு ஊட்டும் வகையில்,மனதில் ஆழமாக பதித்து விட்டார் ராஜகிரி ஹாஜா மைதீன்.
11.”வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.” என்ற வாழ்க்கை தத்துவதை எத்தி வைக்கும் அழகிய சிறுகதை அவர்கள் உண்மைகள் எழுதிய இந்த சிறுகதை.
12.சுவாரஸ்யமான நிகழ்வுகளை கதையாக வடித்துள்ள ரிஷபனின் இந்த சிறுகதையை படித்துப்பாருங்களேன்.
13.“நான்கு மாடிகள் இறங்கிய பின்னரும் அந்த கதறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது..அவனுக்கு மட்டும்..” கதறல் சப்தம் அந்த மருத்துவருக்கு மட்டுமல்ல மயிலனின் இந்த சிறுகதையை படிக்கும் அனைவருக்கும்தான்.மனதை பிழிந்து விடும் சிறுகதை.
14.எதிர் பார்க்காத ஒரு முடிவை இக்கதையில் புகுத்தி கலா நேசன் எழுதிய அருமையான சிறுகதையை படித்துத்தான் பாருங்களேன்.
15.விளக்கின் வெளிச்சம் கண்களை விட்டும் மறைய இயலாத அளவிற்கு ஒரு அரிக்கேன்விளக்கை வைத்து மனதினை இந்த சிறுகதை மூலம் தொட்டு விட்டார் சே.குமார்
16."இன்னைய தேதியிலே கல்யாணத்த சிறப்பா நடத்துற தெம்பு என்னை விட நான் அனுப்புற ரூபாவுக்குத் தான் இருக்குங்குறப்ப நான் எப்புடி முந்திகிட்டு போறது "பெற்ற மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் பணம் ஈட்ட நாடு விட்டுநாடு சென்று இருக்கும் ஒரு தந்தையின் உணர்வை பளிசென்று படம் பிடித்து காட்டுகின்றார் நூருல் அமீன் இச்சிறுகதை மூலமாக.
17.மினி கதைகளிலேயேஅருமையாக டிவிஸ்ட் வைத்து அசத்தி விட்டார் செய்யத்.
18.சுண்ணாம்பும் வெண்ணையும் என்ற தலைப்பில் இர்ஷாத் எளிய நடையில் எழுதிய இந்த சிறுகதை கண்டிப்பாக படிப்பவரின் மனதினை தொடும்.
19.பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள நேசத்தை இச்சிறுகதையில் விவரித்து அம்மாச்சியை பேத்தி மட்டுமல்ல நாமும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதித்து விட்டார் கீதமஞ்சரி.
20.ஆயிரம்தான் வகை வகையான வெளிச்சாப்பாடு எளிமையான வீட்டு சாப்பாட்டுக்கு இணையாகாது என்பதை லக்ஷ்மியம்மா இந்த சிறு கதைமூலம் சொல்லி இருப்பது அருமை.
21.கதையை வாசித்து முடித்தும் டொக் ..டொக் .டொக் சப்தம் காதிலேயே ஒலிக்கும் படி செய்துவிட்ட வெங்கட் நாகராஜின் சிறுகதை இது.
22.கணவனை இழந்த மனைவின் உணர்வுகளை
கிராமிய மணம் தவழ இச்சிறுகதையில் அழகாக வடித்து நெகிழ்த்தி விட்டார் பிரியமுடன் வசந்த்.
23.மாமா,மச்சினன் என்றால் அநேக மாமாக்களுக்கு இளக்காரம்தான்.இந்த மாமா மட்டும் விதிவிலக்கா என்ன?பழனி கந்தசாமி சாரின் மாமாவை படித்து விட்டு சிரியுங்கள்.
24.வீட்டு வேலை செய்பவர்களை எப்படி டீல் பண்ணுவது என்று நல்லதொரு மெசேஜை காதோடு சொல்லிய கே.பி ஜனாவின் சிறுகதை இது.
25.லிப்ட்மாமா மனதினை விட்டு அகலாத மாமாவாகி விட்டார்.ஆர் வி எஸ் எழுதிய சிறு கதை இது.
26.இனிமையான முடிவுடன் மனம் மகிழ்ந்து ரசிக்க வைத்து அருமையான சிறுகதையை படைத்து கெளல்யா-தங்கப்பன் தம்பதிகளை கண் முன்னர் நிறுத்தி விட்டார் ஜீவி.
27.கதாபாத்திரங்களை கண் முன்னர் நிறுத்தி உண்மையான அன்புக்கு தடை ஏதுமில்லை என்பதை அழகாக இச்சிறுகதையில் வடித்திருக்கின்றார் தமிழ் உதயம்.
28.நட்பின் மகத்துவத்தை மென்மையாக சொல்லி இருகின்றார் கலையரசி.இந்த சிறு கதை மூலம்.
|
|
கதைச்சரத்தினால் அசரடித்து விட்டீர்கள் ஸாதிகா.28 கதைகளில் சில பல கதைகள் வாசிக்கப்படாதவை.பகிர்வு சூப்பர்.நேரம் கிடைக்கும் பொழுது அனைத்தையும் வாசித்து விடுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ஸாதிகாக்கா..
ReplyDeleteலிஃப்ட் மாமாவை வலைச்சரத்திற்கு ஏற்றி வந்ததற்கு நன்றிகள். :-)
ReplyDeletevaalththukal,photo collection super
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.
வலைச்சரத்தில் நான் அறிமுகமாவது இதுவே முதன்முறை.
சிறுகதை எழுதியதும் இது தான் முதன்முறை.
நன்றி, ஜசாக்கல்லஹ் ஹைரன்.
சுயச்சரத்தை தொடர்ந்து கதைச்சரமும் சூப்பர். மற்ற சரங்களும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோ
28 சிறுகதைகளை ஒரே சரத்தில் அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்.
ReplyDeleteஆஹா, நானும் வலைச்சரத்தில் இடம் பிடித்துவிட்டேன். ஸாதிகா அக்காவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநான் ஒரு மடையன், எல்லோரும் ஸாதிகாக்கா என்று பின்னூட்டம் போட்டிருக்கிறார்களே என்று நானும் என் பேத்தி மாதிரி இருக்கும் ஸாதிகாவை அக்கா என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.
கதைச்சரம் அருமை. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய சிறுகதைகளை சரமாக தொடுத்து அழகாக்கியிருக்கிறீர்கள் ஸாதிகாக்கா. எல்லாமே அருமையான சிறுகதைகள். நன்றி எனது சிறுகதையும் இந்த சரத்தில் தொடுத்திருப்பதற்கு. தொடருங்கள். வாழ்த்துகள் ஸாதிகாக்கா.
ReplyDeleteசிரத்தையுடன் தொகுத்திருக்கிறீர்கள் ஸாதிகா. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி ஆசியா.எங்கள் ஏரியாவில் நேற்று இரவு கேபிள் பால் ஆனதால் போன பவர் சற்றுமுன் தான் சரி செய்தனர்.நீங்கள் ஏன் இரண்டாம் நாள் வலைச்சரத்தில் ஏன் இன்னும் எழுதவில்லை என்று மெயிலும்,மெயிலுக்கு பதில் இல்லாததால் போனும் செய்து விட்டீர்கள்.உங்கள் அக்கரைக்கும்,ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் ,அன்புக்கும் மிக்க நன்றி.உடன் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தோழி.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அப்துல் காதர்.
ReplyDeleteமிக்க நன்றி ஆர் வி எஸ்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி திருமதி பி எஸ் ஸ்ரீதர்
ReplyDelete28 கதைகள்! இந்த நல்முத்துக்களை தேடி எடுக்க எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பம்மா ஸாதிகா? அருமையான நல்லறிமுகங்கள். நான் படிக்காத சிலவும் இருக்கின்றன. அவசியம் படிக்கிறேன். நல்லதொரு தொகுப்பிறகு என் இதய நன்றி.
ReplyDeleteபடம்லாம் போட்டு வித்தியாசமான முயற்சியா இருக்கு அக்கா
ReplyDeleteவாழ்த்துகள்
சிறுகதை எழுத்தாள நண்பர்களின் புகைப்படங்களை எல்லாம் சேகரித்து ஒன்றுசேரப்போட்டு அசத்துயுள்ளது புதுமையான முயற்சி தான். அதற்கு என் அன்பான பாராட்டுக்கள்.
ReplyDelete//1.யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல அதி முன் ஜாக்கிரதைக்காரான முகுந்தனின் அனுபவத்தை தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை ததும்ப அழகிய நடையில் வை.கோபாலகிருஷ்ணன் எழுதிய இந்த சிறுகதையை ரசித்து வாசித்தால் சிரித்து மகிழலாம்.//
ReplyDeleteஎன் சிறுகதை ஒன்றினை இன்று வலைச்சரத்தில் அடையாளம் காட்டி, அனைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எழுத்துலகில் மிகப்பிரபலங்களாக நான் நினைத்து இன்றுவரை மகிழ்ந்து வரும்
ReplyDeleteதிரு ஜீவி ஐயா அவர்கள்
திரு ரிஷபன் சார் அவர்கள்
திருமதி வித்யா சுப்ரமணியன் அவர்கள்
திருமதி அப்பாவி தங்கமணி அவர்கள்
திரு கே.பி.ஜனா அவர்கள்
திரு. ஆர் வீ எஸ் அவர்கள்
ஆகிய எழுத்துலக ஜாம்பவான்களுடன் என்னையும் இன்று நீங்கள் அடையாளம் காட்டியுள்ளது எனக்கு
பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் vgk
காலைலேந்து இன்னும் பதிவக் காணோமேன்னு ரிஃப்ரெஷ் பண்ணிப் பாத்து பாத்து விரல் தேஞ்சுப் போச்சு. கரண்ட் கட் காரணமா இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருந்தாலும், ’சென்னை என் செல்லம்’னு அம்மா செல்லங்கொஞ்சுற ஊராச்சேன்னும் ஒரு டவுட்!!
ReplyDeleteநல்லவேளை லைன் கிளியராச்சு!!
ஆமா, இத்தனை கதைகள், பட வேலைகள்னு ஷங்கர் படம் மாதிரி பிரமாண்டமா இருக்கு!! அடுத்த பதிவுகள் எப்படியிருக்குமோன்னு எதிர்பார்ப்பு கூடுது!!
அதிலும், அறிமுகம் செய்பவர்கள் பொதுவா லேட்டஸ்ட் பதிவையே பெரும்பாலும் சொல்லுவாங்க. நீங்க என் முந்திய பதிவை அறிமுகப்படுத்தியிருப்பதிலிருந்து, எவ்ளோ உழைச்சிருக்கீங்கன்னு தெரியுது!!
ரொம்ப நன்றி & சந்தோஷம்க்கா!!
ஸாதிகா அக்கா.. கலக்கலான தொகுப்பு... அசத்தலான 2ம் நாள். அறிமுகங்கள் அனைத்தும் சூப்பர்(என்னைத்தவிர:)). தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸாதிகா அக்கா, விடிய எழும்பினதும் பார்த்தேன், புத்துத்தலைப்பு இங்கு வரவில்லை, அப்போ நினைத்தேன், எந்த நாட்டு நேரத்துக்கு வரவேண்டும் என ஏதும் சட்டம் இருக்குதாக்கும், அதுதான் இன்னும் வரவில்லை எனப் போய் விட்டேன்.
ReplyDeleteஎன்ன ஸாதிகா அக்கா.. இப்பூடி சிம்பிளாச் சொல்லிட்டீங்க..:)).. பவர் கட் என:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
வரும் ஞாயிற்றுக் கிழமை வரை... ஒரு ஜெனரேட்டரை வாடகைக்காவது எடுத்து வச்சிருங்கோ சொல்லிட்டேன் ஆமா:)).
நாளைக்கு கவிதைச் சரமாக்கும்?:) எப்பூடி என் கண்டு பிடிப்பு?:) இன்று போய், கவிதைச்சரத்துக்கு வாறேன்.
ReplyDelete// எம் அப்துல் காதர் said...
வாழ்த்துகள் ஸாதிகாக்கா.//
ஸாதிகா அக்கா இவரை எங்காவது கண்டனீங்களோ?:)))
அருமையான கதைச்சரம் நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சரத்தில் என் எழுத்தை அறிமுகப்படுத்தியமைக்கு அன்புடன் என் நன்றி!
ReplyDeleteஆஹா.. புதுமையான வடிவமைப்பு..
ReplyDeleteஎத்தனை பேர் பதிவுகளை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்று அறிய பிரமிப்பாய் இருந்தது.
என்னையும் அறிமுகப்படுத்திய தங்களின் பேரன்பிற்கு நன்றி.
'வலைச்சர' நண்பர்களுக்கு என் பதிவுகளை எடுத்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி, சகோதரி! இதனால் மேலும் மேலும் நட்புச்சரத்தைத் தொடுக்க வாய்ப்பேற்படுவதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவை.கோ.சாரின் அன்பும் அரவணைப்பும் கிடைப்பது மேலும் அந்த மகிழ்ச்சியைக் கூட்டுகிறது.
வலைச்சர ஆசிரியக் குழுவிற்கும் தங்களுக்கும் மீண்டும் மிக்க நன்றி.
கதைச்சரம் மிக அருமை சகோ... புகைப்படங்களையும் கொலாஜ் செய்து போட்டது நன்று [என் படமும் இருக்கே :)]
ReplyDeleteநான் எழுதிய வெகு சில கதைகளில் இருந்து ஒரு கதையையும் இன்று அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சகோ.
சூப்பர் அறிமுகங்கள், அக்கா. படங்கள் அழகாக இருக்கு. என்னுடன் பூஸாரும் அறிமுகம். சூப்பர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
மீண்டும் நாளை சந்திப்போம்.
வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி அக்கா.
ReplyDeleteமீண்டும் ஒருமுறை வலைச்சரத்தில் நான்... எத்தனை முறை அறிமுகமானாலும் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் சந்தோஷம் குறைவதேயில்லை.
மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு மீண்டும் நன்றி.
ஸாதிகா அக்கா எத்தனை யோ முறைபார்த்தேன்,
ReplyDeleteஅப்பா அப்பபா இத்தனை கதை தொகுப்பா. ரொம்ப வே பொறுமை உங்களுக்கு .
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக மிக அருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteபடிக்கும் செய்திகளை,சிறு நிகழ்வுகளை,சின்னஞ்சிறு அனுபவங்களை,நகைச்சுவையுடன் நம்மை சிரிக்க வைத்த நிகழ்வுகளை,செவி வழியாய் கேட்பவைகளை,விழி வழியே காண்பவைகளை,சிந்தனையில் உதித்தவைகளை,அக்கம் பக்கம் நடப்பனவற்றை கருவாய் எடுத்துக்கொண்டு அதில் கற்பனை கலந்து எழுதுவதுதான் சிறுகதை.//
ReplyDeleteசிறுகதை விளக்கம் அருமை.
கதைச்சரத்தில் சில கதைகள் படித்து இருக்கிறேன் .
மற்றகதைகளையும் படித்து விடுகிறேன்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ரெம்ப நன்றிங்க ஸாதிகா, என்னையும் இதில் இணைத்து கொண்டதற்கு...;) நீங்க இங்க குறிப்பிட்டு இருக்கற எல்லாரும் நான் தொடர்ந்து படிக்கறவங்க தான்... எல்லாரோட இணைப்பும் ஒரே இடத்தில் கோர்த்து சரமாக்கினதுக்கு நன்றி உங்களுக்கு...:)
ReplyDeleteசிறுகதை எழுத்தாள நண்பர்களின் புகைப்படங்களை எல்லாம் சேகரித்து ஒன்றுசேரப்போட்டு அசத்துயுள்ளது புதுமையான முயற்சி தான். அதற்கு என் அன்பான பாராட்டுக்கள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஸாதிகா.
மிகுந்த தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும். மிக அழகாகத் தொகுத்தளித்துள்ளீர்கள். சிறுகதை இலக்கியம் பதிவர்கள் மூலம் செழித்து வளர்வது கண்டு சந்தோஷம். வை.கோ.சார், உங்கள் சாதனைகளுக்கு முன்னால் நான் சிறியவள்.
ReplyDeleteகாலையில் பார்த்தேன் வலைச்சரம் நேற்றையதே இருந்தது. நான் நினைக்கிறேன் அங்கு மின்சார வெட்டாக இருந்திருக்கும். மாலை வீடு வரத்தான் செவ்வாய் இடுகை இருந்தது. ஒன்று சொல்கிறேன் கோபிக்காதீர்கள். எனக்கு சிறுகதை வாசிக்க ஆர்வம் இல்லை. மிகக் குட்டிக் கதையானால் வாசிப்பேன். 16 வயதிலிருந்து விரித்த புத்தகம் மூடாமல் வாசித்தவள். இப்போ சிறுகதைகளில் ஆர்வம் இல்லை. ஆயினும் வாசிப்பதுண்டு. நீங்கள் அறிமுகப் படுத்தியவர்களிற்கு வாழ்த்துகள். படங்கள் போட்டது புது முயற்சி வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள். நாளை சச்திப்போம்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
ReplyDelete//வை.கோ.சார், உங்கள் சாதனைகளுக்கு முன்னால் நான் சிறியவள்.//
இது தங்களின் பெருந்தன்மையையும் தன்னடக்கத்தையும் காட்டுகிறது.
http://gopu1949.blogspot.in/2012/03/4-of-8.html
இந்த மேற்படி இணைப்பில் 15 ஆவது பத்தியில் மஹா வீர தீர பலசாலியான ஸ்ரீஹனுமாரின் விநயமும் அடக்கமும் சொல்லப்பட்டுள்ளது. அதுபோலவே உள்ளது தங்களின் இந்தச் சொற்கள்.
அன்புடன் vgk
அருமையான அறிமுகங்கள். அந்த அறிமுகங்களின் நானும் ஒருவனாக, என்னை அடையாளங் காட்டிய ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி. பிற அறிமுகங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteமிக அருமை,வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநீங்கள் என் வலைத்தளம் வந்து படித்திருப்பதை அறிந்தது மிக சந்தோஷம் அது மட்டுமில்லாமல் என்னையும் "நீங்கள்" வலைசரத்தி அறிமுகம் செய்ததில் டபுள் சந்தோஷம். மிகவும் நன்றி . எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல சந்தோஷத்தை கொடுக்கட்டும். வாழ்க வளமுடன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..
ReplyDeleteவ அலைக்கும்சலாம் ஹாஜாமைதீன்.கருத்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி சகோ நிஜாமுதீன்
ReplyDeleteமிக்க நன்றி பழனி கந்தசாமிசார்
ReplyDeleteமிக்க நன்றி கோவை 2 தில்லி
ReplyDeleteமிக்க நன்றி ஸ்டார்ஜன்
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி
ReplyDeleteகருத்துக்கு நன்றி நூருல் அமீன்
ReplyDeleteகருத்துக்கு நன்றி கணேஷண்ணா
ReplyDeleteமிக்க நன்றி ஆமினா
ReplyDeleteவிரிவான பின்னூட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வி.கோபாலகிருஷ்ணன் சார்.
ReplyDeleteகாலைலேந்து இன்னும் பதிவக் காணோமேன்னு ரிஃப்ரெஷ் பண்ணிப் பாத்து பாத்து விரல் தேஞ்சுப் போச்சு. //அட நீங்களுமா?அதான் இன்னிக்கு காலையிலேயே பதிவிட்டு விட்டேன்.மிக்க நன்றி ஹுசைனம்மா.
ReplyDeleteதேர்ந்த கதையாசிரியர்களுக்கு மத்தியில் என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஸாதிகா. படங்களின் தொகுப்புடன் அவற்றை வெளியிட்டவிதம் பிரமாதம். அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரும் ஞாயிற்றுக் கிழமை வரை... ஒரு ஜெனரேட்டரை வாடகைக்காவது எடுத்து வச்சிருங்கோ சொல்லிட்டேன் ஆமா//பூஸ் ரேடியோ மாதிரி பூஸ் ஐடியாவும் நல்லா இருக்கே.கவிதைச்சரமும் ரெடியாகத்தான் இருக்கு.விரைவில் வரும் கருத்துக்கு மிக்க நன்றி அதிரா.
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteமிக்க நன்றி ரிஷபன்
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி ஜீவி
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி வெங்கட்நாகராஜ்
ReplyDeleteமிக்க நன்றி வானதி.
ReplyDeleteமிக்க நன்றி செ.குமார்
ReplyDeleteமிக்க நன்றி ஜலீலா
ReplyDeleteநன்றி அமைதிச்சாரல்
ReplyDeleteமிக்க நன்றி கோமதி அரசு
ReplyDeleteமிக்க நன்ரி அப்பாவிதங்கமணி
ReplyDeleteமிக்க நன்றி சகோ வித்யா சுப்ரமணியம்
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.மறு சரங்களில் அறிமுகப்படுத்தப்போகும் பதிவுகளை கட்டாயம்ம்வாசியுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தமிழ் உதயம்
ReplyDeleteமிக்க நன்றி தமிழ் உதயம்
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி மேனகா
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த பிராத்தனைக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி
ReplyDeleteமுதற்கண் வலைச்சர ஆசிரியர்
ReplyDeleteபணி ஏற்றமைக்கு என் வாழ்த்துக்கள்
அறிமுகமும் மிகவும் அருமை!
பாராட்டுக்கள்!
புலவர் சா இராமாநுசம்
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
ReplyDeleteஎன் சிறுகதை பற்றிய குறிப்பும் வலைச்சரத்தில் இடம் பெற்றிருப்பது இன்று தான் தெரிந்தது. நல்ல பல படைப்புகளுடன் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதறிந்து மட்டிலா மகிழ்ச்சியடைந்தேன்.
ReplyDeleteபல்வேறு படைப்புக்கள் பற்றிய உங்களது பதிவினைப் பார்க்கும் போது உங்களது கடின உழைப்புத் தெரிகிறது. மிகவும் நன்றி ஸாதிகா.
எனது சிறுகதையும் இந்த சரத்தில் தொடுத்திருப்பதற்கு நன்றி. தொடருங்கள். வாழ்த்துகள்
ReplyDelete"கதைச்சரம் " சிறந்த பதிவர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கதை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.!! :-)
ReplyDeleteகருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDelete