நான் ஏன் கதைக்கின்றேன்!
➦➠ by:
ஜெ.பி ஜோசபின் பாபா
என் வலைப்பதிவை வலைச்சரம்வழியாக அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன். 2009 ல் ஒரு பாடப்பகுதியாகஅறிமுகமாகிய வலைப்பதிவுகள் இன்று என்னுடைய ஒரு மாற்று ஊடகமாக மாறி விட்டது.
தற்போது நான் பாளைதூய சவேரியார் கால்லூரியில் காட்சி தொடர்பியல்த் துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றேன். திருமணம் பொழுது வெறும் பட்டாதாரியாக இருந்த நான், கணவரின் முயற்ச்சியால் என் அயராத உழைப்பால்மற்றும் இறைவனின் அருளால் முதுகலை பட்டம் 2009 லும் மற்றும் இளம் முனைவர் பட்டம் 2010 லும் பெற்றேன். என்னவரின் பெயரின்பகுதியான பாபா என்ற பெயரை என்னுடன் இணைத்து ஜெ.பி ஜோஸபின் பாபா என்று எழுதி வருகின்றேன்.
என் வலைப்பதிவில் தலைப்புவிளக்கம் போலவே என்னை பாதிக்கும் விடயங்களை அமைதி காக்க இயலாத சூழலில் அதை பதிவாக பதிந்துவர முயல்கின்றேன். என்னுடைய சுய விருப்பு வெறுப்பு கடந்து சமூக கருத்தாக்கங்கள், என்னைபாதித்த விடயங்கள், வாழ்வில் சந்தித்த நபர்கள், சிந்திக்கவைத்த நிகழ்வுகள், என் தனிப்பட்டவாழ்க்கையில் நான் சந்தித்த சவால்கள் என் என் வலைப்பதிவு முன் செல்கின்றது.
என் வலைப்பதிவின் தலைப்பான“கதைக்கிறேன்” என்ற சொல்லாடல் ஈழ வலைப்பதிவின் ஆராய்ச்சியில் இருந்த போது ஈழ தமிழின் மேல் கொண்டுள்ள என் பாதிப்பால் சேர்த்து கொண்டது. மேலும் ‘கதைக்கிறேன்’ என்ற சொல்லாடல் நட்புஅன்பு பாசம் கலந்த பேச்சு, கதை சொல்லலை குறிப்பதாக இருப்பதால் மிகவும் பிடித்து போகஎன் வலைப்பதிவு தலைப்பாகவே சேர்த்துள்ளேன். ஈழ தமிழர்களை போலவே கேரளா தமிழர்களான எங்கள் வாழ்க்கையும் எங்கள் சுயத்தை அடையாளத்தை தேடிய பயணமாகவே அமைகின்றது. வலைப்பதிவும் இதன் பரிணாமமாகவே ப்ல பொழுதும் உள்ளது.
வாரம் ஒரு பதிவு இருந்தநிலை வேலைப்பழு மற்றும் தமிழக மின் தடையால் பாதித்திருப்பினும் வலைப்பதிவு எழுதுவதுஎன்பது இனம் புரியாத மன மகிழ்ச்சியும் உணர்வு பூர்வமான நிம்மதியும் மட்டுமல்ல ஒரு அடையாளத்தையும்தருவதாக உணருகின்றேன். சிறப்பாக பெண்களுக்கு தங்கள் கருத்துக்களை எந்த அச்சுறுத்தலும்தடையும் கட்டுபாடும் இல்லாது திறம்பட வெளியிட ஒரு தளமாக அமைகின்றது. வலைப்பதிவால் பல அறிய நட்புகள் உறவினர்கள் போன்றஉறவுகளை பெற்று தருகின்றது என்றால் மிகை அல்ல!நம் தன்னம்பிக்கை வளருவதற்க்கும் துணை செய்கின்றது.
என் வலைப்பதிவுகளில்எனக்கு பிடித்த பதிவு எது என்ற முடிவுக்கு வர இயல்வது இல்லை! ஏன் என்றால் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பின் புலனில்நான் பெற்ற மறக்க இயலாத அனுபவத்தினால் எழுதப்பட்டது தான். http://josephinetalks.blogspot.in/2011/11/11.htmlhttp:
என் பால்ய பள்ளி நண்பர்கள் என் முதல் ஆசிரியை நினைவுகள்அலையாக மனதில் அடித்து கொண்டிருந்த போது எழுதப்பட்டதே http://josephinetalks.blogspot.in/2010/08/blog-post_27.htmlஇதுவே என் வாசகர் வட்டத்திலும் மிகவும் விரும்பிய பதிவாக இருந்து வருகின்றது.
கூடன்குளம் அணு உலையால்மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பாதிப்பு அதுவும் மிகவும் கோரமான ஆபத்து என்று அறிந்தபோது என் ஆதங்கம் வருத்தம் கவலையை வெளிப்படுத்திய பதிவே http://josephinetalks.blogspot.in/2010/12/blog-post_03.html
என் பிறந்த வீட்டிற்க்குஒரு முறை சென்ற போது நான் வாழ்ந்த வீடு, நான் நேசித்த என் அறை சன்னல்கள் எனக்கு சொந்தமல்லஎன்று அறிந்த போது உணர்ச்சி கொந்தளிப்பால் நொறுங்கிய நிலையில் எழுதப்பட்டதே “வீடு" http://josephinetalks.blogspot.in/2010/10/blog-post_30.html என்றபதிவு .
http://josephinetalks.blogspot.in/2010/11/blog-post_13.htmlஎன் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்த மகிழ்ச்சியில்என் மகிழ்ச்சியை என் நண்பர்களிடமும் சிறப்பாக எனக்கு ஆராய்ச்சிக்கு உதவிய ஈழ சகோதரர்களையும்நினைத்து எழுதப்பட்டதே.
என் குழந்தைப்பருவத்தில்என் பாசத்திற்க்கு உரிய என் அப்பா வழி தாத்தா- பாட்டி, பெரியப்பா சித்தப்பா மரணத்தைநினைத்த போது எழுதப்பட்ட பதிவை இதுhttp://josephinetalks.blogspot.in/2011/01/blog-post_18.html
கேரளா தமிழச்சி என்று சில மனித நேயமற்ற மனிதர்களால் அச்சுறுத்தலுகளுக்குஉள்ளாக்கப்பட்டபோதும் என் சொந்த ஊர் ‘முல்லைப்பெரியார்’ பகுதி உண்மை அற்ற செய்திகளால் மறைக்கப்பட்டு; மறுக்கப்பட்டசெய்தியால் ஊடக வெளிச்சத்தில் இருந்த போது எழுதப்பட்டதே http://josephinetalks.blogspot.in/2011/12/blog-post_20.html
பெண்கள் மன அழுத்தத்தால்பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்ற பாதிப்பால் எழுதப்பட்டதே மனஅழுத்தம்இப்பதிவு. இதை பெரிதும் விரும்பி பலர் வாசித்துள்ளனர்.
3 பேருக்கு தூக்குஎன்ற செய்தி சட் டம் தீட்டி மனிதனை இன்னொரு மனிதன் பலியாக்கலாமா என்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவு http://josephinetalks.blogspot.in/2011/09/blog-post_07.htmlஅமைந்துள்ளது.
நெல்லையில் மிகவும்சிறப்பாக கொண்டாடும் தசராhttp://josephinetalks.blogspot.in/2011/10/blog-post_14.html திருவிழாவை நேரடியாக கண்டு 3 பதிவுகள் தொடர்ந்து எழுதினேன்.
மேலும் என் கணவர் குழந்தைகளுடன்பயணித்த விடுமுறை நாட்களை கொண்டு பல பதிவுகள்http://josephinetalks.blogspot.in/2011/04/blog-post_15.html எழுத வாய்த்தது.
நான் ரசித்து வெறுத்து பார்த்தசினிமா படங்களை என் நண்பர்களுடன் பகிர வேண்டும் என்ற ஆற்வத்தில் சில பதிவுகள் எழுதியுள்ளேன் http://josephinetalks.blogspot.in/2011/06/blog-post_28.htmlமேலும்
நான் ருசித்து சமைத்த சில சமையல் http://josephinetalks.blogspot.in/2011/09/fish-curry.htmlநுணுக்கங்களையும்பகிர்ந்துள்ளேன்.
இப்படியாக என் வலைப்பதிவுகள் நான் காணும் சமூக நிகழ்வுகள், மகிழ்ச்சிகள், என் மகிழ்ச்சிகள் என் வருத்தங்கள் என பதிவாக மாற்றுகின்றேன். என் வாழ்வின் வலைப்பதிவுகள் சிறப்பான அங்கமாக பயணிக்கின்றது.உங்களையும் என்னுடன் என் வலைப்பதிவுடன் பயணிக்கஅழைக்கின்றேன் மேலும் உங்கள் கருத்துக்களையும் எதிர் நோக்குகின்றேன்.பாசமுடன் கதைக்கும்உங்கள் ஜோஸபின் பாபா!
|
|
வாழ்த்துக்கள் Josephine Baba.
ReplyDeleteவாழ்த்துகள் ஜோசபின் பாபா
ReplyDeleteசுருக்கமான, சுவையான
ReplyDeleteசுய அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
vaazhthukkal!
ReplyDeleteungal blogspottil inainthullen
ini vimarsanam ezhuthuven!
தோழி ஜோஸபின் உங்களது முயற்சிக்கு எப்போதும் எனது வாழ்த்துக்களும் ஆதரவும் எப்போதும் உண்டு
ReplyDeleteதாங்கள் கதைத்த சுய அறிமுகங்கள் யாவும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன.
ReplyDeleteவாழ்த்துகள்.
இனி எழுச்சியுடன் நாளை முதல் மற்ற அறிமுகங்களைக் கதைக்கத் தொடங்குங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
வாழ்த்துகள்.....
ReplyDeleteஅன்பின் ஜோஸஃபின் பாபா - சுய அறிமுகம் அருமை. பதிவுகளைச் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteரசித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஅனைத்தும் உணர்வுப்பூர்வமான பதிவுகள்.
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி!
''..என்னவரின் பெயரின் பகுதியான பாபா என்ற பெயரை என்னுடன் இணைத்து ஜெ.பி ஜோஸபின் பாபா என்று எழுதி வருகின்றேன்...''
ReplyDeleteHats off sister. வெள்ளிக்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கம் வர முடிந்தது யோசபின். வாழ்த்துகள். நிச்சயம் உங்கள் முன்னைய வலைச்சர இடுகையை மாலையில் பார்த்து கருத்திடுவேன். இவ் அறிமுகம் கூட மறுபடி வாசிப்பேன். இப்போ அவசரத்தில் எழுதுகிறேன். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வணக்கங்கள் தோழமைகளே!
ReplyDelete