தமிழுக்குத் தலை வணங்குகிறது பைங்கிளி
➦➠ by:
தென்காசித் தமிழ்ப் பைங்கிளி
தமிழை நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் வேளையில் இங்கொருவர் வேர்களைத்தேடி அலைகிறார்.
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்கிறார் .
"வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம் "
தமிழ் மொழி மேல் இவர் அன்பு கொண்டிருந்தாலும் எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி என்று கூறுகிறார் உண்மைதான்.
சிந்திக்கவும் சிரிக்கவும் கூட வைக்கிறார் இவர் கவிதைகளினால்.
அகப்பொருள் என்றாலே அகம் குளிர்ந்து தான் போகிறோம் யாருக்கும் தெரியாமல் .
"வெட்கப் பட்ட ஆறு" இங்கே தலைவி அருவியிடம் பேசுவது சிரிக்கவைக்கத்தான் செய்கிறது.
தங்கத்தை விட மதிப்பு மிக்கது என்று எதைச் சொல்கிறார் பாருங்கள்.
தங்கத்திற்கு உயிரில்லை
உணர்வில்லை
அறிவில்லை
மக்களை மாக்களை மதிப்போம் என்கிறார் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம்.
உயிரோடு செத்தவர்கள் யாரென்று இவரிடம்தான் கேட்க வேண்டும்.
இங்கு முல்லை மலர் யாரைப் பார்த்து சிரிக்கிறது யாருடன் பேசுகிறது.
அதே சிரிப்பூ...என்று எதைச் சொல்கிறார் பாருங்கள் .
தாம் எழுதிய பாடல்கள் மூலமே பெயர் பெற்ற புலவர்களையும் இங்கே பெருமைப் புடுத்தியுள்ளார்
தும்பிசேர்கீரனார்
கல்பொரு சிறு நுரையார்
இப்படி தமிழுலகமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் வேர்களைத் தேடி வலைபதிவர்.
தமிழுக்காக வலைபூக்கள் தோன்றவேண்டும்.இவரைப் போன்ற வலைப்பதிவர்களை ஆதரிப்போம் வலைச்சரம் போன்ற இணயங்கள் மூலமாக.
ஈழச் சிந்தனைகளை நம்முள் விதைக்கும் பதிவர்கள்
வெள்ளை மனமும் சிவப்புச் சிந்தனையுமாக இவர் ஈழத்தில் சிவப்புப் பூக்கள் என்று எதைச் சொல்கிறார் பாருங்கள் "வெட்கப் பட்ட ஆறு" இங்கே தலைவி அருவியிடம் பேசுவது சிரிக்கவைக்கத்தான் செய்கிறது.
தங்கத்தை விட மதிப்பு மிக்கது என்று எதைச் சொல்கிறார் பாருங்கள்.
தங்கத்திற்கு உயிரில்லை
உணர்வில்லை
அறிவில்லை
மக்களை மாக்களை மதிப்போம் என்கிறார் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம்.
உயிரோடு செத்தவர்கள் யாரென்று இவரிடம்தான் கேட்க வேண்டும்.
இங்கு முல்லை மலர் யாரைப் பார்த்து சிரிக்கிறது யாருடன் பேசுகிறது.
அதே சிரிப்பூ...என்று எதைச் சொல்கிறார் பாருங்கள் .
தாம் எழுதிய பாடல்கள் மூலமே பெயர் பெற்ற புலவர்களையும் இங்கே பெருமைப் புடுத்தியுள்ளார்
தும்பிசேர்கீரனார்
கல்பொரு சிறு நுரையார்
இப்படி தமிழுலகமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் வேர்களைத் தேடி வலைபதிவர்.
தமிழுக்காக வலைபூக்கள் தோன்றவேண்டும்.இவரைப் போன்ற வலைப்பதிவர்களை ஆதரிப்போம் வலைச்சரம் போன்ற இணயங்கள் மூலமாக.
ஈழச் சிந்தனைகளை நம்முள் விதைக்கும் பதிவர்கள்
அகதி என்ற சொல் எவ்வளவு வலியைத் தருகிறதென்று முல்லை மண்ணின் மீள் குடியேற்றம் மீண்டும் அகதியாய் கவிதைவரிகள் நம்மையெல்லாம் வருந்தச் செய்கிறது.
தாய் மண்ணுக்காகவும் உலக மானுடத்திற்காகவும் இந்த செஞ்ச்சோலைத் தமிழவன்சே குவேராவின் வரலாற்றை தெரியாதவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
ஈழத்தைப் பாடாய்ப் படுத்துகிறது என்று இந்தியாவைச் சாடுகிறார் இங்கே.
ஊர் தோறும் எமது அவலம் உரைத்திடுவோம் என்று இங்கொரு வலைபூ எழுதுகிறது.
வெற்றிநடை போடும் புதிய பதிவர்கள்
வேப்பந்தோப்பு மழைக் காலத்தைப் பற்றிச் சொல்கிறது இங்கே தன் அனுபவமாய் .
வேலிகள் தொலைத்த ஒரு படலையின்கதையில் இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது படைப்பு படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது.
வருத் தலைவிளான் எழுதிய ஈரம் கவிதையைப்படிக்கும்பொழுது
வெற்றிநடை போடும் புதிய பதிவர்கள்
வேப்பந்தோப்பு மழைக் காலத்தைப் பற்றிச் சொல்கிறது இங்கே தன் அனுபவமாய் .
வேலிகள் தொலைத்த ஒரு படலையின்கதையில் இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது படைப்பு படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது.
வருத் தலைவிளான் எழுதிய ஈரம் கவிதையைப்படிக்கும்பொழுது
கண்களில் ஈரம் கசிகிறது.
இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழ வயல் .
ஏதோ சொல்றேங்க என்று இந்தக் காட்டான் உண்மையைச் சொல்கிறார்.
இதேபோல் நாளையும் இறுதி நாளாக எண்ணங்களுக்கெல்லாம் சொந்தக் காரன் இவன்தானோ என்று எண்ணத் தோன்றும் வலைப்பதிவருடன் புதிய பதிவர்களையும் பார்க்க அழைத்துச் செல்வாள் பைங்கிளி.
|
|
அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். வாழ்த்தியவருக்கும், வாழ்த்து பெற்ற்வர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகங்களும் அதனை சொன்னவிதமும் அருமை.
ReplyDeleteதமிழின் சுவையோடு அறிமுகங்கள் களைகட்டி நிற்கின்றன.பணியைச் சரிவர நிறைவேற்றுகிறீர்கள்.அருமை.வாழ்த்துகள் !
ReplyDeleteபெருமகிழ்ச்சி அடைந்தேன் பைங்கிளி..
ReplyDeleteபெரிய விருதுகிடைத்தது போன்ற மனநிறைவடைந்தேன்.
இத்தனை இடுகைகளைத் தாங்கள் சென்று வாசித்தமைக்கே முதலில் நன்றி சொல்லவேண்டும்.
தங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் இருக்கும் வரை தமிழ் உயிருள்ள செம்மொழியாகவே சாகாவரம் பெற்று வாழும்.
தமிழ் வலையுலகம் என்பது எனக்கு இன்னொரு உலகம்..
இத்தனை நண்பர்களையும்,உறவுகளையும் எனக்குப் பெற்றுத்தந்தது என் தமிழே.
இலக்கியங்களுள் எனக்குப் பிடித்தது சங்கத்தமிழே. இதில் சொல்லப்பட்டுள்ள உயர்ந்த கருத்துக்களை நடைமுறைத்தமிழில் இன்றைய தலைமுறைக்குச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுத வந்தேன்.
ஐந்தாண்டுகளாக இதே ஆர்வத்தோடு எழுதிவருகிறேன்..
இயல்,இசை, நாடகம் என தமிழ் இதோடு முடிந்துவிடக்கூடாது என்னைப் போன்ற கல்விப்புலம் சார்ந்தவர்களும் இணையப் பரப்புக்குள் வரவேண்டும் என்பதையே முடிந்தவரை எடுத்துரைத்துவந்திருக்கிறேன்..
http://blogintamil.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.
இயன்றவரை இனிய தமிழில் நம் இருத்தலை - இயக்கத்தைப் பதிவுசெய்வோம் பைங்கிளி..
அன்புக்கும், அறிமுகத்துக்கும் நன்றிகள் பல...
முனைவரின் தமிழை நீண்ட நாட்களாக ரசித்து வருபவன் நான். வலைச்சரத்தில் ஒரு பூவாக அவர் மலர்ந்ததைக் கண்டு மகிழ்ச்சி. மற்ற அறிமுகங்களும் அருமை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் பைங்கிளி.. நல்ல அறிமுகங்கள். எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவுகள். கண்டிப்பாக படிக்கிறோம்.
ReplyDeleteவித்தியாசமான தலைப்பில் தமிழின் அமுதை பருகச் செய்தமைக்கு நிச்சயம் உங்களை பாராட்ட வேண்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
குணா தமிழ் எனக்கும் பிடித்தது. வாழ்த்துகள் அறிமுகங்களிற்கும், தங்களிற்கும். மிக வேகமாக ஓடியே விடுகிறது தங்கள் ஆசிரியம். மிக சிரமப்பட்டு நாம் எமக்குப் பிடித்த புது வலைகளைப் பர்த்ததுக் கருத்திட்டாலும் அவர்கள் எங்கள் பக்கம் வர விரும்புவதில்லை. இதுவும் ஒரு துயர நிலை தான். ஆயினும் பயணம் தொடரும். நாளை சந்திப்போம்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
thanks for sharing so many good blogs
ReplyDeletethanks for sharing so many good blogs
ReplyDeleteபெருமகிழ்ச்சி அடைந்தேன் பைங்கிளி நன்றி. என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு தங்களை போன்றவர்கள் வாழும் வரை தமிழ் அழியாது வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.!
புதுமையான முறையில் பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுதுமையான முறையில் பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள்
ReplyDeleteதென்காசி தமிழ் பைங்கிளி .. என்னை மதித்து .. அதுவும் கவித்துவமாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ..
ReplyDeleteஅத்தனை பதிவர்களையும் ஒரு கவி நடையில் அர்த்தத்துடன் அறிமுகப்படுத்துவது ரொம்ப கஷ்டம் .. மிக இயல்பாக செய்திருக்கிறீர்கள் .. நன்றி
நீங்கள் கவனிக்கும் படி எழுதவேண்டும் என்ற அழுத்தம் இப்போது வருகிறது மீண்டும் மீண்டும் நன்றி ..