கதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)
இன்று வலைச்சரத்தின் 3-வது நாள். எனக்குப் பிடித்த பதிவுகளை நேற்று பட்டியலிட்டிருந்தேன். இன்றும் அதைத் தொடர்கிறேன். போலாம்...ரைட்...!
1. இவர் ஒரு ஆல்ரவுண்டர். கதை, கவிதை, கட்டுரை, படத்தோடு கூடிய அற்புத செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்று எல்லாப் பகுதியிலும் அசத்தக் கூடியவர். பிரபலமான பதிவரும் கூட. வேற யாரைச் சொல்றேன்னு நினைக்கறிங்க... நம்ம சென்னைப் பித்தன் அவர்களைத்தான். அருமையான பதிவர். சும்மா சாம்பிளுக்கு ஒண்ணு.
நேரம் போதவில்லை!
2. தோழி சசிகலா அவர்கள் எல்லா கருப்பொருள்களையும் கொண்டு அழகழாய் கவிதை படைத்து வருகிறார்.அவரது சமீபத்திய கவிதையான தொடர்ந்திடுவோம் பயணமதை என்ற கவிதையை படித்துப் பாருங்கள்.
3. சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அறிவுபூர்வமான அருமையான கட்டுரைகளை அற்புதமாய் படைத்தளித்து வருகிறார். ஆக்கபூர்வமான இவரது படைப்புகள் தவறாமல் படிக்க வேண்டியவை. இவரது சமீபத்திய கட்டுரையான தொடாமலேயே ஷாக் அடிக்கும் கூடங்குளம் படித்துப் பாருங்கள். எத்தனை வித்தியாசமான அணுகுமுறை. இதைவிட அற்புதமான கட்டுரைகள் நிறைய உண்டு இவரது தளத்தில். படிக்கத தவறாதீர்கள்.
4. புதிதாக வலைப்பூ உருவாக்கம் செய்ய விரும்புவர்களுக்கும். வலைப்பூவை உருவாக்கிவிட்டு எப்படி அதை மேம்படுத்துவது என தொழில்நுட்பத் தகவல்கள் தெரியாதவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொடர்தான் இந்த பிளாக் எழுதுவது எப்படி? என்கிற தொடர். எழுதியது நம்ம அப்துல் பாசித் அவர்கள். அற்புதமான தொழில்நுட்ப பதிவராவார். இவரது தளத்தைப் போய் பாருங்களேன்.அசந்து விடுவீர்கள்.அத்தனை அருமையான தொழில்நுட்பத் தகவல்கள். பிளாக் ஆரம்பிக்கணும்னா இவரது தளத்தை ஒரு விசிட் அடிச்சா போதுங்க. உதாரணத்துக்கு பிளாக் தொடங்குவது எப்படி - பகுதி 1 படித்துப் பாருங்கள்.
5. நண்பர் ஹாஜாமைதீன் அருமையான கட்டுரைகளை படைத்தளித்து வருகிறார். பிரயோஜனமான தகவல்கள் இவரது தளத்தில் ஏராளம் உண்டு. அதிரடி ஹாஜாதான் இவர். ஆபத்தை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் என்ற இவரது பதிவை படித்துப் பாருங்களேன்.
6. அடுத்து பதிவர் வெங்கட் நாகராஜ். இவர் பல்சுவைப் பதிவுகள் எழுதினாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் இவரது பிரயாணப் பதிவுகள். அந்நகரை நாமே சுற்றிப் பார்த்தது போல உணரச் செய்வன. மத்தியபிரதேசம் அழைக்கிறது என்ற தலைப்பில் ஒரு அருமையான தொடரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். சாம்பிளுக்கு கீழே லிங்க்.
ஜான்சியில் ரயில் எஞ்சின்
7. அடுத்து ரஹீம் கசாலி. இவர் அரசியல் பதிவுகளை அட்டகாசமாய் எழுதி வருகிறார்.
சங்கரன்கோவிலில் ஜெயித்தது யார்?
மற்றவை அடுத்த பதிவில்.
|
|
கதம்பமாக அறிமுகப்படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்..
ReplyDeleteநீங்கள் அறிமுகப் படுத்திய அறிமுகவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். அவர்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டும் உங்களிற்கும் பாராட்டுகள் பணி இனிமையாகத் தொடர.
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
கதம்பத்தில் ஒரு மலராக என்னையும் தொடுத்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteகதம்பத்தில் தென்றலுக்கும் வரவேற்பு கொடுத்தது கண்டு மகிழ்ந்தேன் . நன்றி தங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeletenalla pathivarkal !
ReplyDeletearimukangal!
அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகமாகியுள்ள அனைவரும் அட்டகாசமானவர்கள்தான்!
ReplyDeleteமீண்டும் சிறப்பான அறிமுகங்கள்.தொடருங்கள் டானியல் !
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகதம்பம் மணம் மணக்குது...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteஅனைவரும் நான் தொடரும் பதிவுகள் என்
நினைக்க பெருமையாகத்தான் உள்ளது
பகிர்வுக்கு நன்றி
இன்றைய கதம்பத்தில் எனது வலைப்பூவையும் தொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே.....
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சிறப்பான ஆசிரியர் பணி....
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்.
ReplyDeleteதொடருங்கள்.
சில தெரிந்த பதிவர்கள். சிலர் புதியவர்கள். அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசில தெரிந்த பதிவர்கள். சிலர் புதியவர்கள். அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட, ஹாஜா மைதீன் தவிர எல்லாருமே என் நண்பர்கள்! வலைச்சரம் மிக மகிழ்ச்சிதரும் அனுபவமாகக் கொண்டு செலகிறீர்கள் துரை! உங்களுக்கும், உங்களால் அறிமுகம் பெற்றவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!
ReplyDelete@ இராஜராஜேஸ்வாரி
ReplyDelete- உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.
@ Kovaikkavi
ReplyDelete- நன்றி.
@ சென்னைப்பித்தன்
ReplyDelete- உங்களை அறிமுகப்படுத்தாமல் வலைச்சரம் நிறைவு பெறுமா? நன்றி.
@ சசிகலா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
@ Seeni
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@ கடம்பவன குயில்
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@ Koodal Bala
ReplyDelete-வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாலா சார்.
@ ஹேமா
ReplyDelete- நன்றி சகோ.
@ கோவை 2 தில்லி
ReplyDelete- தொடரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@ தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார். எல்லாம் உங்களால்தானே? இல்லையெனில் இப்பெருமை எனக்குக் கிடைத்திருக்குமா? உங்கள் அழைப்புதானே எனக்கு இந்த புகழை ஈட்டிக்கொடுத்தது. நன்றி.
@ Ramani
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- நீங்கள் தரமான பதிவரல்லவா? நீங்க இல்லாம வலைச்சரமா? நன்றி.
@ Lakshmi
ReplyDelete- தொடரும் ஆதரவுக்கு மிக்க நன்றி மேடம்.
@ Nizamudeen
ReplyDelete- தொடரும் ஆதரவுக்கு நன்றி சார்.
@ விச்சு
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
@ கணேஷ்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
@ Abdul Basith
ReplyDelete- தங்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியமா? உங்களால் பலன் அடைந்தவனல்லவா நான்? நன்றி.