றிக்கியை காணவில்லை!
➦➠ by:
ஜெ.பி ஜோசபின் பாபா
றிக்கியை காணவில்லை! நாங்கள் நாலும் பேரும் நாலுவாறு தேடி கொண்டே இருக்கின்றோம்.நான் வீட்டு வாசல் கதவை ஒவ்வொரு தடவை திறக்கும்போதும் நுழைவு வாசலை உற்று நோக்குகின்றேன். அவனுக்கு கொடுக்கும் பால் அவன் விரும்பி உண்ணும்சோறு எல்லாம் மிஞ்சி கிடைக்கின்றது. நாங்கள்வழிப்பயணம் கிளம்பும் போது வருத்ததுடன் எங்களை வழிஅனுப்புவதும் திரும்பி வரும் போது மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து வரவேற்பதற்க்கும் அவன் மட்டுமே இருந்தான். நாலும் பேரும் நாலு திசையில் அவரவர் வேலைக்குசென்றதும் ஏங்கள் வீட்டு வாசலை விட்டு நகருவதில்லை அவன். பொறுப்பான காவலாளியை போல்வாசல் படியிலே இருந்து காத்து கிடந்தான்.
நாலு வருடம் முன்பு ஒரு மழையோடு தெருவில் நடந்துபோனவனை அழைத்து வந்தான் எங்கள் இளைய மகன். அதனால் என்னவோ எங்கள் சிறிய மகனிடம் அவனுக்கு அதீத பாசம் இருந்தது. பக்கத்துவீட்டு பிளைகளுடன் விளையாடும் போது விளையாட்டுக்கு அடித்தால் கூட உறுமி தன் கோபத்தைவெளிப்படுத்துவான். அவன் வரும் போது வீட்டு படி கூட ஏற இயலாத ஒரு சிறு குட்டியாக இருந்தான். மழை முடியுமட்டும்இருக்கட்டும் என்ற அனுமதியில் ஒரு மரப்பேட்டியில்கம்பிளி விரித்து பழைய சாக்கு விரித்து குளிராது தூங்க இடம் கொடுத்தோம். அன்று முதல்எங்களை காலையில் தன் குரலால் எழுப்பி விடுவதும் அவனாகவே இருந்தான் . அவனை தினம் குளிப்பித்து பக்கத்து தெருவில் குடியுருக்கும்நாய்- விரும்பி பேராசிரியரிடம் நாய் வளர்க்கும் வழிமுறைகளைகேட்டு வந்தனர் எங்கள் பிள்ளைகள்.
வீட்டில் அவனை வளர்க்க முடிவு செய்த போது அத்தானுக்குகொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எல்லாமே சிறு குட்டியாக இருக்கும் போது அழகாக தான் இருக்கும்வளர்ந்த பின்பு அதன் முசடு நாற்றம் பிடிக்காது என்று தன் முதல் எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு சாம்பார் சாதம் என்றால் அவன்பட்டிணியே என்று அறிந்து அவனுக்கு பிடித்த புரோட்டா வாங்கி கொடுப்பதும் அவராகவே இருந்தார். அவனும் அத்தான் வீட்டில் உள்ள போது ரொம்ப நல்லபிள்ளையாக பணிவன்புடன் நடந்து கொல்வான்.
அவன் இருக்கும் போது அவனை நினைத்ததாக நினைவு இல்லைஆனால் அவன் காணாமல் போன முதல் தேடிகொண்டே இருக்கின்றோம். குழந்தைகளுடன் பந்து விளையாடுவது,பள்ளி வாகனம் சத்தம் கேட்டதும் முதல் ஆளாக வரவேற்க நிற்பது, எங்களுடன் நடைபயணம் வருவதுஅவன் உண்ணும் உணவு தட்டு, திட்டும் போது அவன் நிற்பது, வீட்டு நுழைவு வாசல் பக்கம்வந்து நின்று எங்களை அழைப்பது என எங்கள் நினைவில்வந்து கொண்டே இருக்கின்றான். 5 வது நாளாக அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் றிக்கியை தேடி கொண்டே இருக்கின்றோம்.
|
|
This comment has been removed by the author.
ReplyDeleteறிக்கியை கண்டு பிடிக்க நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஓர் உயிருடன் உண்மை அன்பு செலுத்தி பழகிவிட்டால் பிரிவு என்பது தாங்க முடியாத வருத்தத்தையே அளிக்கும்.
ReplyDeleteவிரைவில் தங்கள் றிக்கி தங்களிடமே திரும்ப வந்துசேர பிரார்த்திப்போம்.
விரைவில் தங்கள் றிக்கி தங்களிடமே திரும்ப வந்துசேர பிரார்த்திப்போம்
ReplyDeleteதங்கள் றிக்கி தங்களிடமே வந்துசேர பிரார்த்திப்போம்.
ReplyDeleteVetha. Elangathilakam.
றிக்கி விரைவில் கிடைக்கட்டும்...
ReplyDeleteசோகம் நீங்கட்டும்.
ReplyDeleteநன்றி மகிழ்ச்சிகள்!
ReplyDelete