கதம்பச்சரம்
➦➠ by:
ஸாதிகா
தனக்குள் சிரிப்பவன் ஞானி
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்
தன்னை நினைத்து சிரிப்பவன் காதலன்
பிறரை பார்த்து சிரிப்பவன் கர்வி
பிறருக்காக சிரிப்பவன் கயவன்
பிறர் நோக சிரிப்பவன் கொடியவன்
பிறர்காண சிரிப்பவன் கோமாளி
சிரித்துக்கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
சதா சிரிப்பவன் வேடிக்கையாளன்
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்
மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்
விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை
அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை
காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்
அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
பிறரை மனதார சிரிக்க வைப்பவன் படைப்பாளி
நகைச்சுவை மட்டுமல்ல பல சுவைகளும் கலந்த கதம்பச்சரமாக மணக்கின்றது இறுதியாக பிறந்திருக்கின்ற கதம்பச்சரம்.
1.பதிவுலகம் வந்த புதிதில் என்கண்களில் மாட்டிய கொன்றைவேந்தன்.படிச்சு படிச்சு அப்ப மட்டுமில்லை இப்பவும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டுள்ளது. சீனா ஐயாவுக்கு பிடித்த கொன்றை வேந்தன்.பெரிசுங்க ஒதுங்குங்கப்பா என்று சீனா சார் பயம் காட்டினாலும் பெர்சுங்களும் படித்து ஜாலியாக சிரிக்கலாம். வாய் விட்டு படிங்க.மனம் விட்டு சிரியுங்க.நோய் விட்டுப்போகும்.
2.நிஜாம் ரசித்த ஜோக்குகளை நாமும் ரசித்து நகைப்போமா?
3.கொறுக் கொறுக் என்று பித்தனின் வாக்கு சுதாகர் பக்கத்தில் இருந்து சப்தம் வருகின்றதே.போய் பார்த்தால் வேறொன்றுமில்லை.சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே பயங்கரமாக ஜோக் அடிக்கின்றார்.
4.சிரித்து ரிலாக்ஸ் பண்ண வேண்டுமா?ஆயிஷா அபுல் பதிவிட்ட நகைச்சுவையை படித்து சிரியுங்கள்.
5.பழரசத்தை இப்படி கூட தயாரிக்கலாமா?சைட் எஃபக்ட் எதுவும் இல்லாமல் ஆயுர்வேதிக் முறையில இதை வெற்றிகரமா செய்ததுவேறு யாராக இருக்க முடியும் ?ஜெய்லானியேதான்.
6.களுக் என்று பதிவர் சர்புதீனை சிரிக்க வைத்த ஜோக் கண்டிப்பாக நம்மையும் படக் என்று சிரிக்க வைக்கும்.
8.”மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.”
நாட்டாமை ஐயூப் உத்தரவு போட்டு விட்டார்.ஜோக்கை படிச்சுட்டு சிரிச்சுடுங்க.சிரிக்கா விட்டால் இதற்கும் வன்மையா தண்டனை கொடுத்து விடுவார்.
9.நிஜப்பூக்களா என்று வியக்கும் படி ஸ்டாகின்ஸில் மின்னும் பூக்கூடையை செய்து அசத்தியவர் பாயிஜா காதர்.
10.பணத்தாணி..என்ன வென்று பார்க்கின்றீர்களா?பதிவர் ஷஃபி ஏ டி எம் மெஷினைத்தான் இங்ஙனம் தமிழாக்கம் செய்து அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
11.பிளாக் தொடங்குவது எப்படி என்று அக்கு வேறு ஆணி வேறாக விபரமாக எழுதி இருக்கும் பிளாக்கர்களின் நண்பரான அப்துல்பாஸிதின் இடுகையை அவசியம் படிங்க.மிகவும் உபயோகமாக இருக்கும்.
12.போட்டோ ஷாப் பற்றி தெளிவான விளக்கம் ஸ்ரீதர் தந்து இருக்கின்றார்.
13.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.ஆமாமாம்.டவுசர் பாண்டியின் இடுகையில் உபயோகமான டெக்னிக்கையும் கற்றுக்கொள்ளலாம்.அதனை நகைச்சுவையாக சொல்லும் விதத்தில் சிரித்தும் மகிழலாம்.கூடவே மெட்றாஸ் பாஷயையும் கற்றுக்கொள்ளலாம்.
14.கற்பனை உருவங்களை கணினியில் உருவாக்கும் வித்தையை வேலனின் இந்த இடுகை மூலம் கற்றுக்கொள்ளலாம்.
15.ஊரில் 30% மக்கள் வெளிநாடு,வெளியூர்களில் புலம் பெயர்ந்து விட்டதால் இந்த ஊரில் நடக்கும் எந்த சிறு நிகழ்வுகளையும் படங்களுடன் உடனுக்குடன் தந்து அசத்தும் கீழக்கரை செய்திகள் வலைத்தளம் கீழை வாசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
16.கீழை இளையவன் தளமும் அதே சேவையை அளிக்கின்றது.சேவையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
17.நகராட்சியின் சேர்மனுக்காக ஒரு வலைப்பூ .நகராட்சியின் ஒவ்வொரு நடப்புகளையும் அவ்வப்பொழுது அப்டேட் செய்து வருவது கீழக்கரை சேர்மன் வலைப்பூவின் சிறப்பு
18.தமிழ் மீரானின் தேடலில் நட்பின் ஆழம் நன்றாகவே தெரிகின்றது.
20.ஆடைகளில் படிந்த கறைகளை எவ்வாறு போக்குவது என்ற அருமையான டிப்ஸ்களை வழங்கியவர் வனப்பு - சந்திரக்கெளரி.
21.நகராட்சித்தலைவருக்கு மட்டுமல்ல உதவித்தலைவரின் செயல் முறை குறித்தும் அவ்வப்பொழுத்து சுடச்சுட தகவல்கள் தரும் நேற்று ஜனித்த புத்தம் புது வலைப்பூ இது.
22.பிளாகின் தலைப்பு போல் இவரது இடுகைகளும் சூடாக இருக்கும். சிராஜின் அறிமுக ஆரம்பமே அட்டகாசமாக இருப்பதை பாருங்கள்.
23.வரவேற்பரை சுவரை அலங்கரிக்க அழகான முறையில் படம் வரைந்து காட்டி இருப்பவர் பிரியா.
24.டெல்லி குளிரைப்பற்றி வாய் தந்தி அடிக்க அழகாய் சொல்லி இருப்பவர் ஜிஜி .
25.உள்ளத்தில் நம்பிக்கை கொண்டால் செயலில் வெற்றி பெறலாம் என்ற தத்துவத்தை அருமையாக பகிர்ந்திருப்பவர் ஆயிஷா பேகம்.
26.தில்லி ஜனாதிபதி மாளிகையைப்பார்த்திருக்கின்றீகளா?ஆதி வெங்கட் நம்மை எல்லாம் அழைத்துச்செல்கின்றார் .போய் பார்க்கலாமா?
l
27.தமிழில் போர்ட் எழுத வேண்டுமென்ற அரசாங்க ஆணை குறித்து ஐயராத்து மாமி என்னமா பொலம்பறா பாருங்க.ஐயராத்து மாமியை அறிமுகப்படுத்தியவர் பக்கோடா பேப்பர் விதூஷ்
28.மாமிச உணவு மனித இனத்திற்கு உகந்ததா இல்லையா என்பதை அலசி கட்டுரையை தந்திருப்பவர் பாத்திமா ஜொஹ்ரா.
29.ஆம்னி பஸ்,வோல்வோ ,பஸ்,புளூ லைன் ,பஸ் எல்லோ லைன் பஸ்,ஏஸி பஸ்,எக்ஸ்பிரஸ் பஸ் என்று பஸ் வகைகளை அறிந்திருக்கின்றோம்.சூப்பர் பஸ் பார்த்திருக்கின்றீர்களா?சூப்பர் பஸ்ஸை கண்காட்சிக்கு வைத்திருப்பவர் ரஜின்.
30.அமீரகத்தில் கோடைகால மதியத்தினை பற்றி கண் முன் கொணர்ந்து நிறுத்துகின்றார் ராஜகிரி ஹாஜா மைதீன்.
31.டிஷ்யூ பேப்பரில் அருமையான பூ செய்து காட்டி இருக்கும் ஏஞ்சலினின் அழகிய கைவண்ணத்தைப்பாருங்களேன்.
32.எவரால் இந்தியப்பொருளாதாரம் உயிரோடு இருக்கிறது என்று யாரை ஸ்ரீ குறிப்பிடுகின்றார் தெரியுமா?
32.மன அழுத்தம் மூளையை பாதிக்கும் என்ற விஞ்ஞான உண்மையை பட விளக்கத்துடன் துரைடேனியல் பகிர்ந்திருக்கும் இந்த இடுகை அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய ஒன்று.
விடை பெறுகின்றேன்.
ஒரு வாரகாலமாக வலைச்சரத்தில் கிடைத்த ஆசிரியர் பணியில் பெரிதும் உவகை அடைகிறேன்.வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா,மற்றும் வலைச்சரகுழுவினருக்கும்,பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
பிரிக்கப்படாமல் இருந்த நாளிதழ்கள்,அருந்தப்படாமல் ஏடு படிந்த தேநீர் கோப்பை,சார்ஜ் செய்யாது விட்ட கைபேசி,”த்சோ..என்னம்ம்ம்ம்ம்மா”என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் என் செல்லங்களின் செல்லச்சிணுங்கல்கள்,”சண்டே,மொறு மொறு வென்று மசால் தோசையும்,சட்னி சாம்பாரும் வேண்டும் ”என்று கேட்கும் பிள்ளைகளுக்கு பிரட்டில் ஜாமை தடவி பவ்யமாக தட்டில் வைத்து நீட்டி சமாளிக்கும் சாதுர்யம், மடிக்கப்படாமல் சலவை செய்து மலையாய் குவிந்த துணிகள்,”என்ன ஊரில் இல்லையா?ஆளையே காணும்”எதிர் வீட்டுத்தோழியின் கேள்விக்கணைகள் எல்லாம் என்னை சுற்றிலும் நடக்க நானோ கணினியும் கண்ணுமாக வெகு சுவாரஸ்யமாக பொழுதைப்போக்கிக்கொண்டிருந்தேன்.
நட்புக்களிடம் இருந்து வந்த பின்னூட்டங்களும்,மெயில்களும் என்னை மிகவுமே உற்சாகம் கொள்ள வைத்தன.தினமும் தவறாது வந்து பின்னூட்டம் இட்டு எனக்கு எனர்ஜி கொடுத்த அன்புள்ளங்கள்,நாளை என்ன சரம் என்று வினா எழுப்பும் இனிய உள்ளங்களின் ஆர்வம்,குறையே காணாது தட்டிக்கொடுத்து பின்னூட்டமிட்ட கருத்துக்கள் அத்தனையும் என் அலுப்பையும் சோர்வையும் விரட்டி அடிக்கும் விட்டமின் டானிக்குகளாக இருந்தன.
பொதுவாக நான் இடும் இடுகையில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனித்தனியாக பின்னூட்டம் இட்டு நன்றி தெரிவிப்பதையே விரும்புவேன்.ஒரு இடுகை எழுதுவதை வேண்டுமானால் தாமதப்படுத்தலாம்.பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதிலளிக்க தவறிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன்.ஆனால் இந்தவலைச்சரத்தில் நேரமின்மை காரணமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை.சரத்தில் தொடுக்க மறந்த விடுபட்ட பதிவர்களும்,சரத்தில் தொடுத்தும் படத்தில் வர மறந்த பதிவர்களும் தயவு கூர்ந்து மன்னிக்கவேண்டுகிறேன்.
மொத்தத்தில் இந்த வாரம் எனக்கோர் மறக்கவியலாத மகிழ்வான வாரம்.இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்வுடன் விடை பெறுகின்றேன்.நன்றி!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
|
|
இறுதிப் பதிவு மிகவும் அருமை..நிறைய பதிவர்களை தெரிந்து கொள்ள முடிந்தது.தங்களின் இந்த வார ஆசிரியப்பணி சிறப்பாய் அமைந்தது..மிகவும் சிறப்பாக பணியாற்றினீர்கள்..வாழ்த்துகள்.
ReplyDeleteகதம்பச்சரத்தில் என் வலைப்பூவையும் கோர்த்துக் கொண்டமைக்கு நன்றி! தங்கள் அளப்பரிய சேவைக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக!
ReplyDeleteசிரிப்பிலும் சிரிப்பவர்களிடமும் இவ்வளவு வகையறாக்களா?
ReplyDeleteபடித்ததும் வியப்பில் என்னையறியாமல் சிரிப்பு வந்தது. பாராட்டுக்கள்.
உங்களுடைய ஒரு வார அறிமுகங்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
ReplyDeleteஅனைவரின் போட்டோக்களையும் அன்றாடம் போட்டு எல்லோரையும் மிகவும் மகிழச்செய்து விட்டீர்கள்.
அது தாங்கள் செய்த ஒரு புது முயற்சியாகவே இருந்தது.
ஏற்கனவே ஒருசிலர் இதுபோலச் செய்திருக்கிறார்கள் என்றாலும் அவை தனித்தனியாக ஒவ்வொரு பதிவரின் போட்டோக்களுமாக சிறப்பாகவே இருந்தன.
தாங்கள் போட்டோக்களின் மூலமாக பதிவர்களுக்குள் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவந்து சிறப்பித்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
ReplyDeleteசகோதரி உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய இறுதி இடுகை என் கண்கள் பனிக்க வைத்தன. ஒருவேளை குடும்பத்து சூழல் கேள்விகளோ தெரியாது. நிறைந்த அறிமுகங்கள்..அம்மாடியோ! வாழ்த்துகள் சகோதரி. அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
இன்றைய கதம்பச்சரம், தஞ்சாவூர் கதம்பம் போல நல்ல நறுமணம், நல்ல ஜோரான நிறம்.
ReplyDeleteஅனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
19. திருமதி ஆச்சி அவர்களால் [மிகச் சமீபத்தில் கரடி விடப்பட்ட] கரடி பற்றிய பதிவு தொடர்ந்து இரண்டாவது முறையாக வலைச்சரத்தில் இடம் பெற்றுவிட்டது.
எனவே அது மிகச் சிறந்ததோர் படைப்பு என்பது நிரூபனம் ஆகி விட்டது.
படைப்பாளியான திருமதி ஆச்சி மேடத்திற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
//ஒரு இடுகை எழுதுவதை வேண்டுமானால் தாமதப்படுத்தலாம்.பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதிலளிக்க தவறிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன்.//
ReplyDeleteநல்ல கொள்கை தான். நானும் இதுபோல விரும்புவது உண்டு. பல சமயங்களின் அவ்வாறு செய்வதும் உண்டு. சில சமயங்களின் நேரமில்லாமல் ஒட்டு மொத்தமாக நன்றி கூறி விடுவதும் உண்டு தான்.
//பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.//
ReplyDeleteதங்களின் தனித்திறமைக்கும் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரம் தான் இந்த வார வலைச்சர ஆசிரியர் பதவி.
மிகப்பொருத்தமான ஒருவரை பரிந்துரை செய்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. பரிந்துரைத்தாலும் அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டு வாய்ப்பு அளித்து உதவிய நம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் தான் நான் நன்றி கூற வேண்டும்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஸாதிகா அக்கா.. கலக்கிட்டீங்க...
ReplyDeleteபச்சைப்பூவின் பெயர் இருக்கு பூவைக் காணல்லியே என கிளறிக் கொட்டித் தேடிய இடத்தில் புதையலே கிடைத்ததே டும்..டும்..டும்...
ஸாதிகா அக்கா.. இன்றுதான் உங்களுக்கு நல்லிரவு... நிம்மதியாக உறங்குங்கோ... நினைச்சபடி நாளைக்கு கீழக்கரை மட்டின் பிர்ராஆஆஆணி செய்து அசத்திடுங்கோ:))...
ReplyDeleteநல்லபடி நடாத்தி முடித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள். நானும் விடைபெறுகிறேன் நன்றி.
மிக மிக அருமையான வாரம்
ReplyDeleteதங்கள் பணியை மிக விரிவாகவும் ஆழமாகவும்
அனைவரும் ரசித்து மகிழும்படியாகவும்
மிக நேர்த்தியாக செய்து முடித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
உங்கள் கஷ்டம் புரிகிறது. இனி ஜாலியாக குழந்தைகளுடன் கொண்டாடுங்கள். ஒருவாரம் திகட்டும் அளவுக்கு அறிமுகங்கள் தந்து அசத்திவிட்டீர்கள்.
ReplyDeleteஒரு வாரத்தில் அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஉண்மையில் மிகமிக மனமகிழ்வு தந்த வலைச்சர வாரமாக அமைந்தது ஸாதிகா. நல்ல நல்ல அறிமுகங்களைத் தந்ததற்குப் பின்னால் எத்தனை உழைப்பு இருந்திருக்க வேண்டும் என்பது தெரிந்திருந்தாலும் நீங்கள் சொன்ன விதம் அருமை. இத்தனை சிரத்தையுடன் செயல்பட்ட உங்களுக்கும், உங்களால் செய்யப்பட்ட அத்தனை அறிமுகங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகடும் உழைப்பு. ஆனால் களைப்பில்லை; மாறாக கலக்கி விட்டீர்கள். பாராட்டாமல் இருக்கவே முடியாது.
ReplyDeleteநான் இரசித்த( நகைச்சு)வைகளை தாங்களும் இரசித்து இங்கு அறிமுகம் கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள்.
ReplyDeleteசூப்பரா கதம்பச்சரம் நல்லாவே இருந்த்தது. வழக்கம் போல் உங்களின் எழுத்து நடை சூப்பரோ சூப்பர். எனக்கு நிறய்ய பதிவர்களை இது வழி போய் அவங்க வலைப்பூவை பார்வையிட ஒரு நல்ல சந்தர்பம் ஏற்படுத்தி குடுத்திங்க.
ReplyDeleteநன்றி நாங்களும் உங்களுக்கு இது போல் நல்ல நட்புள்ளங்கள் மேலும் கிடைக்க வாழ்த்துக்கள்.
நன்றி வலைச்சரம்.
மறக்க முடியாத மிக அருமையான வாரம்.கோடி கொடுத்தாலும் கிடைக்காத வாரம்.முத்தாய்ப்பாய் சிரிப்பையே சிந்திக்க வைத்து விட்டீர்கள். உங்கள் வலைச்சர வாரத்தை சேமித்து வைத்தால் தொடர்ந்து வாசித்து மகிழலாம்.
ReplyDeleteஎல்லாப் புகழும் இறைவனுக்கே.
சிரிப்பு கவிதை அருமை.
ReplyDeleteஎன் பதிவின் அறிமுகத்திற்கு நன்றி.மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நன்றி.
என்னையும் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ. தங்களின் அத்தனை அறிமுகங்களுமே அசத்தல்தான். அப்புறம் அந்த கொன்றைவேந்தன் இருக்கே. அப்பப்பா...சிரிச்சு மாளலே..!
ReplyDeleteஒரு வார வலைச்சரப் பணியை அழகாக முடித்ததற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
- நன்றி மீண்டும் ஒருமுறை.
தமஓ 5.
ReplyDeleteஎல்லோரையும் மணக்க செய்து மகிழ்வித்த உங்கள் முயற்சி மிகவும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
ReplyDeleteஅழகிய பூமாலையில் எங்களையும்(கீழக்கரை செய்திகள்) இணைத்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி !
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தொடருட்டும் உங்கள் வெற்றி பயணம்.
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
ReplyDeleteஇரண்டாவது முறையாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.
அப்புறம் உங்க கதம்பச்சரத்தில் பல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அதிளே குறிப்பா சிரிப்பின் வகைகளை வகைப்படுத்தி அதிலும் கவிதையாக சொன்னது நச்.
வலைச்சர பணியை சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துக்கள் சகோ.
அப்புறம் வலைச்சரத்தில எழுதுனதுனால தான் குழந்தைகளுக்கு மொறு மொறு தோசை சுட்டு தரவில்லையா? அல்லது சுடவே தெரியாதா ?? :)
கலக்கீட்டேள் போங்கோ!!
ReplyDeleteஒரு வாரமும் அருமையா இருந்துச்சுக்கா. நீங்க சொன்ன மாதிரி இது ரொம்பக் கடின உழைப்புத் தேவைப்படுற பதவிதான்க்கா. நட்சத்திரமா இருப்பதைவிடக் கஷ்டமாந்து, இல்லையா.
உங்க குடும்பத்தாரும் ஒத்துழைத்தது மகிழ்ச்சி. அவங்களையும் மறக்காமச் சொல்லி நன்றியைத் தெரிவிச்சதும் அருமை.
சிரிப்பில்
ReplyDeleteஒ.... இத்தனையா
ஏக்கப் பெருமூச்சு பின்
சிந்தனையை சற்று அலசியது
அதன் அர்த்தங்கள்
அந்த வரிகளுக்காக சல்யூட் சகோ
கதம்பச்சரத்தில்
கோர்த் தெடுக்கப்பட்ட
பலவண்ண வலைப் பூக்கள்
பல்சுவை
கொடுத்த பணியை
சிறப்பாய் முடித்த
மனநிறைவில் நீங்கள்
இன்னும் கொஞ்சம் நீடிருக்கலாம்
சிறு சங்கடத்தில்
வலைச்சரம் பூக்கள்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த வாரம் முழுவதும் அருமையான பதிவுகளாய்க் கொடுத்து இந்த வலைச்சர ஆசிரியர் பணியை மிகச் சிறப்பாக செய்து விட்டீர்கள் ஸாதிகா! என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமிக நிறைவான ஏழு நாட்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
ReplyDeleteஉங்கள் மணக்கும் கதம்பசரத்தில் இந்த சிறியவளின் வலைப் பூவையும் சேர்த்து மணம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
உங்கள் மூலமாக நல்ல பல பதிவுகளையும்,பதிவர்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.தனக்கு கொடுத்த வேலையை மிக அழகாகவும்,நேர்த்தியாகவும்,அனைவரும் கற்றுக் கொள்ளும் விதமாக பகிர்ந்து அளித்தமைக்கு பாராட்டுக்கள்.
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே.
என்னை இங்கே அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி
ReplyDeleteஉங்கள் வலை என் கண்ணில் படவில்லையே என்று இன்று என்னுள் ஒரு ஏக்கம். அழகான எழுத்து நடை. சிரிப்பின் வகைகள் இத்தனையா? அதில் சிரிப்பவர்கள் பண்பு இப்படியா? அறியத்தந்த பண்பிற்கு அக்கறையுடன் நன்றி. என்னை அறிமுகப்படுத்தியிருக்கும் பண்பிற்கும் மிக்க நன்றி
ReplyDeleteவிதவிதமான சரங்கள் கோர்த்து கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து விடைபெறும் ஸாதிகாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்!
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகா....
ReplyDeleteகதம்பச் சரத்தில் கீழக்கரை நகராட்சித்தலைவர் வலை பக்கம் உட்பட மற்றும் கீழக்கரை சார்ந்த மூன்று வலைபக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு கீழக்கரை சமூகத்தின் சார்பில் கோடானு கோடி நன்றிகள். தங்களின் எழுத்துக்களின் மூலம் வலைச்சரம் மீண்டும் மெறுகேறி இருக்கிறது, சென்று வாருங்கள் .... பதிவர் உலகில் உங்கள் ஆக்கங்கள் வின்மீன்களாய் என்றும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
ReplyDelete1 வாரம் முழுவதும் தங்கள் பணியை சிறப்பாக செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா....
ReplyDeleteசலாம் ஸாதிகா அக்கா.
ReplyDeleteசிரிப்பின் விதங்களைக் கொண்டே ஆட்களை எடை போட்ட விதம் அருமை! படங்களின் தொகுப்புகளும் அழகு! அத்துடன் இந்த வலைச்சரத்தில் உங்கள் மூலமாக (ஐந்தாவது முறையாக) அறிமுகப்படுத்தப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஸாதிகா அக்கா :) நெட் கனெக்க்ஷன் இல்லாததால் இந்த வாரத்தின் உங்களின் முந்திய பதிவுகளைக் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்.
/ மறக்கவியலாத மகிழ்வான வாரம்/
ReplyDeleteஎல்லோருக்குமே. ஒவ்வொரு பதிவுக்குப் பின்னாலும் இருந்த அயராத உழைப்பும் அறிமுகங்களைத் தந்த விதமும் பாராட்டுக்குரியது ஸாதிகா. என் மனமார்ந்த வாழ்த்துகள்!
கருத்த்ளித்த அனுபுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!
ReplyDeleteகருத்த்ளித்த அனுபுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!
ReplyDeleteஎதிர்க்குரல் தளம் ஆஷிக் அஹமத் அ . அவர்கள் எனது உடன் பிறந்த அண்ணன் பேரன் . ப்ளாகர் நண்பன் அப்துல் பாசித் எனது சகோதரியின் பேரன்.நண்பர் கிளியனூர் இஸ்மத் மற்றும் பல நண்பர்களின் அறிமுகம் காண மிக்க மகிழ்வடைகின்றேன் .உங்களுக்கும் வலைச்சரதிற்கும் மற்றும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்
ReplyDeletekalakkal shadika akkaa ithu thaan nija kalakkal///
ReplyDeleteகதம்பச்ச்ரத்திற்கு வாழ்த்துகள்..
ReplyDeleteசகோதரி ஸாதிகவுக்கும், வலைச்சர நிர்வாகத்தும்,
ReplyDeleteஎனது பக்கம் சொன்ன உங்களுக்கும், சொலவதற்குப் பக்கம் தந்த வலைச்சரத்தும் மனமார்ந்த நன்றிகள்! தங்களது அறிமுகங்கள் அபாரம்!
ஸ்ரீ....
சகோதரி ஸாதிகவுக்கும், வலைச்சரத்தும் என் உளமார்ந்த நன்றிகள். தற்போது வலைப்பூவில் அவ்வளவாக எழுத முடிவதில்லை. எங்கும் யாருக்கும் கமெண்ட்ஸ் கூட போடறதில்லை. அப்பிடி இருந்தும் பக்கோடாவை நினைவு வைத்திருந்து பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி. :-)
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஎன்னையும் அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. தாமதமாக பதில் கொடுத்தமைக்கு வருத்தம் வேண்டாம் . இன்ஷா அல்லாஹ் போனில் விபரம் ...
மறக்கவியலாத மகிழ்வான வாரம்./
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் இது மறக்கவியலாத மகிழ்வான வாரம் இல்லை ஸாதிகா.
எல்லோருக்கும் அப்படித்தான்.
உங்கள் வலைச்சர பணியை மறக்க முடியாது.
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த சகோ சாதிக்கா அவர்களுக்கு ஸலாம் உரித்தாகுக.
ReplyDeleteநான் சில மாதங்களாக வலை பூவில் வலம் வருவது அரிதாகிவிட்டது ஆகையால் உங்களின் அறிமுகம் என் கண்களுக்கு புலப் படவில்லை மன்னிக்கவும்.
என்னை அறிமுக படுத்தியமைக்கு நன்றிக்கா
//athira said...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஸாதிகா அக்கா.. கலக்கிட்டீங்க...
பச்சைப்பூவின் பெயர் இருக்கு பூவைக் காணல்லியே என கிளறிக் கொட்டித் தேடிய இடத்தில் புதையலே கிடைத்ததே டும்..டும்..டும்.//
நான்ன்ன்ன்ன்ன்ன் அவன்ன்ன்ன் இல்லைஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-))).
எனக்கு தெரிந்ததெல்லாம் ஒரு :-). ஆனால் இதில் ஏகப்பட்ட :-))))))))))))))) இருக்கே :-)
ReplyDeleteஇந்த கதம்ப சரத்தில் என்னையும் இனைத்ததுக்கு டாங்ஸுங்கோவ் :-). மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் .:-)
ReplyDeletemikka nanri sathika
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteசலாம் ஸாதிகா,
ReplyDeleteசாரி. இவ்ளோ நாளா நான் கவனிக்கலை. இன்று தான் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்ததருக்கு நன்றி.
ஹி..ஹி..ஹி.. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..... அப்டின்னு நெனச்சு மனச சமாதானம் பண்ணிக்கங்க....
கலக்கலா எழுதுறீங்க... போட்டு தாக்குங்க.....