07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 22, 2014

தூரிகையில் துலங்கும் ஓவியனின் எண்ணம்.


வணக்கம் ! வலையுலக நட்புகளா ! எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். நலம் தானே ! அது சரி எல்லோரும் வந்துவிட்டீர்களா?. அடடா எல்லோரும்  ஏன் எழுந்து நிற்கிறீர்கள். சரி சரி முதல்ல எல்லோரும் உட்காருங்கப்பா. நான் கதை தான் சொல்லப் போகிறேன்! !. சும்மா இல்லங்க நிஜமா தான். என் சொந்தக் கதை தான்.  என்ன தலையை சொறியிறீங்க. அப்பிடி செய்வேனா போரடிக்கமாட்டேன். நம்புங்கப்பா ! இதென்ன கொட்டாவி யாருஸ்கூல் பையன் னா நினைச்சேன். இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே, அதுக்குள்ளே ...... மூட் அவுட் பண்ணாதீங்கப்பா அப்புறம் சொல்ல வந்ததை மறந்திடுவேன்ல. ம்...ம்...ம்...ம் சரி...



என்னன்னா எனக்கு மனசு கொஞ்சம் சரி இல்லங்க எப்ப பார்த்தாலும் சமைக்கிறது சாப்பிடுகிறது தூங்கிறது வேலைக்கு போகிறது. இதையே எவ்வளவு நாளைக்கு செய்கிறது சொல்லுங்க இல்லைன்னா வலைத்தளங்களை பார்வை இடுகிறது கருத்து போடுகிறது ரொம்ப போர் அடிச்சு போச்சுங்க. ஒரு வாரம் எங்கேயாவது போகலாம் என்றால்.எங்க போறது. ம்..ம்... எனக்கு இந்த . பாண்டியன் க்கு கல்யாணமாமே அதாங்க நம்ம பையன் போன வாரம் வலைச்சரத்தில வந்து சூரியனுக்கு டோச் அடிக்க போறதாக  சொல்லிச்சில்ல ஆ அந்தப் புள்ள தாங்க நல்ல மரியாதையான அன்பு நிறைந்த பிள்ளைங்க. அவர் எனக்கு கல்யாணத்திற்கு சொல்லலைன்னாலும். போகாம இருந்தா நல்லா இருக்காதுங்க. எனக்கும் பார்க்கணும் போலதாங்க அதுவுமில்லாமா அம்முகுட்டியையும் பார்க்கணும் அதாங்க நம்ம .இங்கிலீஷ் டீச்சர் Mythily kasthuri rengan ஆனா தமிழில பின்னுதுங்க. ஒரு செப்பரைஸ் கொடுக்கலாமேன்னு தோணிச்சுதுங்க. ஒரு ஆசை தான் ஷ்... ஷ் சத்தம் போடாதீங்க அவங்களுக்கு தெரிஞ்சிடப் போகுதில்லை.


என் வீட்டுக்காரர் வரலை என்னிட்டார் அப்போ யாரை கேட்கலாம் யார் வருவாங்க, நம்ம இளமதி யை கேட்க முடியாது ரொம்ப சோகமா இல்ல இருக்காங்க இப்பதான் வலைதளத்தையே எட்டிப் பார்க்கிறாங்க தொந்தரவு கொடுக்க வேணாம் அதுவும் இல்லாமல் கைவேலையும் அதற்கேற்ப கவிதையும் தயார் செய்து கொண்டிருப்பாங்கல்ல. அடேங்கப்பா என்னமா எழுதுது அந்தப் பொண்ணு .ம்...ம்.. அப்புறம் அம்பாளடியாள் நோவே ம்ஹு கவிதை புனையிறதை விட்டு வலைதளத்தை விட்டு வரமாட்டாங்க. இந்தப் பொண்ணும் அப்பிடித் தாங்க கங்கை பிரவாகம் எடுத்து பாய்வது போல வருகுதுங்க கவிதை.  kovaikkavi அவரும் இப்பதானே ஊருக்கு போய் வந்தவர் ஆகையால் நான் நினைக்கவில்லை. வேறு யார் மதுரை தமிழன் அது தாங்க சும்மா கலாய்சிக்கிட்டே இருப்பாரே அவர்  பக்கம் தான் பமிலியோடு வரக்கூடும் வேணாம் வேணாம் அது  சோலிங்க பூரிக் கட்டையோடு நின்றாலும் அம்மாடியோவ். . வேணா...வேணா. ஆமா பாண்டியனோட தோஸ்து இல்ல ரூபன் அது தாங்க
அந்த போட்டி எல்லாம் வைக்கிற ....அவோர்ட் எல்லாம் குடுக்குமே, தமிழ் வளர்க்க அந்தப் புள்ள தாங்க. டிரிங்.... ட்ரிங்க..... யாரு போன்ல அம்மா நான் தான் ரூபன் ஆஹா 100 வயதுப்பா உனக்கு. என்னையா என்னவிடயம். சும்மா தான் எப்பிடியம்மா இருக்கிறீங்க. எதோ இருக்கிறன் அப்பு. பாண்டியனை உங்களுக்கு பிடிக்குமெல்லாம்மா..... அப்ப போகலியா கல்யாணத்திற்கு அது தான் யோசித்துக் கொண்டு இருக்கிறன். நான் போறன் நீங்களும் வாங்கம்மா போவோம். என்ன உண்மையாவா. சரி ஆனா நீங்க ஒரு திசையில நான் ஒரு திசையில எப்பிடி தம்பி. நீங்க இங்க வாங்கம்மா மலேசியாவும் பார்த்தது போல் இருக்கும்  அப்புறம் இருவரும் அங்கு போகலாம். என்றார் அதுவும் நல்ல ஐடியாதான் என் கணவரிடம் பிளைட் டிக்கட் புக் பண்ணுங்கள் என்று சொல்லிட்டேன்.
அவரும் போய்விட்டார். இதற்கிடையில் நம்ம வீட்டுக்கு விருந்தளிகள் வந்து விட்டார்கள். அவர்கள் ஓவியக் கண் காட்சி நடக்கிறது போவோம் வாருங்கள் என்றார்கள். என்ன செய்வது என்று மறுக்க முடியாமல் அனைவரும்  சென்றோம். அங்கு நான் பார்த்து அசந்த ஓவியத்தை நீங்களும் தான் ஒரு முறை பாருங்களேன்.

கதை தொடரும்.....

தூரிகையில் துலங்கிடும்
ஓவியனின் எண்ணம்
வார்த்தைகள் வாக்கியமாய்
வடித்திடும் வண்ணம் .


1.   தன்னைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்று சொல்லியுள்ளார் ஆனால் அவரிடம் உள்ள திறமைகள் எம்மை வியப்படைய வைக்கின்றன அதாவது பிரபல்யமான ஓவியங்கள் பற்றிய தொகுப்பு ஒன்று உங்களின் பார்வைக்கு. அதிலும் ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குஷெவ் ஓவியம் பற்றி சொல்லியுள்ளார் பாருங்கள் வலைப்பூ முகவரி.eniyaoviya.blogspot.com இனிய ஓவியா என்ற தலைப்பில் எழுதி வருகிறார்பெயர்-

2.  ஓவியங்களை பென் பென்சில்கொண்டுதான் வரைவதை கேள்விப்பட்டிருப்போம் இருந்தாலும் ஒரு வித்தியாசமான முறையில் ஓவியத்தை வரைந்திருக்கின்றார்கள் அதுவும் அமெரிக்காவில் தமிழ்க்கதிர்     என்ற வலைத்தளத்தில் பாருங்கள். tamilkathir.com

3       .பார்பதற்கு ஒரு ஓவியம் போல இருக்கும் இந்த ஓவியத்திற்குள் பல உருவங்கள் உள்ளன. ஓவியக்கலைஞரின் அற்புதமான படைப்பை நீங்களும் பார்த்து ரசியுங்கள் .தமிழ் உலகம் என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்    tamilfuntime.blogspot.com

4.       பார்ப்பதற்கு ஒரு ஓவியம் போல இருக்கும் இந்த ஓவியத்திற்குள் பல உருவங்கள் உள்ளன. ஓவியக்கலைஞரின் அற்புதமான படைப்பை நீங்களும் பாருங்கள் .jaffna Net work
என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.

5.   இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அன்பர் பொதிகை என்ற புனைப்பெயரில் பலவிதமான படைப்புக்களை வலையுலகில் பகிர்ந்துள்ளார் அதில் ஒன்றுதான் மிக அழகான ஓவியங்கள் ரசிக்கும் படி பலவிதங்களில் அமைந்துள்ளது அவரின் வலைத்தளத்தின் பெயரும் பொதிகைதான்

6.   கவிப்பிரியன் கலிங்கநகர் என்ற சகோதரன் மறக்கமுடியாத நினைவுகள்
என்ற வலைப்பூவில் 3D ஓவியங்கள் பற்றிசொல்லியுள்ளார் அந்த ஓவியங்கள் இதோ தங்களின் பர்வைக்கு. http://kavipriyanletters.blogspot.com/2014/04/3d.html

7.   இலக்குவனார் திருவள்ளுவன் என்ற வலைப்பதிவாளார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஓவியம் இந்தியாவில் விழுப்புரம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவலை மிக அருமையாக எழுதியுள்ளார்.இதோ தங்களின் பார்வைக்கு. தமிழ் அறிஞர்கள்  என்னும் பெயரில்  http://thiru2050.blogspot.com/2014/05/5000.html

8.   வாரப் பத்திரிகைகளை படித்து வளர்ந்த எல்லாருக்கும் தெரிந்த பேர் மணியன் செல்வன். அவருடைய அழகிய ஓவியங்களை பார்க்காத தமிழர்கள் குறைவே. பொன்னியின் செல்வனுக்கு இவர் தந்தை மணியம் வரைந்த ஓவியங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சிவகாமியின் சபதத்திற்கு இவர் வண்ணத்தில் வரைந்த ஒவியங்கள் நினைவிருக்கலாம் அவரும் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார் அந்த வலைப்பூ Artistmaniam

.என்ற பெயரில் எழுதி வருகிறார் இதோ அழகிய ஓவிங்களை கண்டு ரசிக்கலாம்.

9.   கவிதாயினி என்ற பெயரில் எழுதிவரும் வலைப்பதிவர் ஒவ்வொரு ஓவியம் பற்றி மிக அருமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார் சங்க காலப்பாடல்களையும் ஓவியத்துக்கு ஏற்ப குறிப்பிட்டுள்ளார் சித்திரம் பேசுதடீ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்
அவரின் வலைப்பகம் செல்ல இதோ முகவரி  kavithaini.blogspot.com

10.   பிரான்சு கம்பன் கழகம் மகளீர் அணி என்னும் வலைப்பூவில் ஓவியத்தின் இறைமை என்ற தலைப்பில் மிக அருமையாக விளக்கம் தந்துள்ளார்கள் பாருங்கள் francekambanemagalirani.blogspot.com  


வருகைதரும்அன்பான உறவுகளே ஒவ்வொருடைய வலைப்பக்கமும் சென்று தங்களின் கருத்துக்களை இட்டு அவர்களை சிறப்படையச் செய்யுங்கள். என்னையும் தான் நட்புகளே.

வேறுதலைப்பில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.


அன்பு-இனியா


70 comments:

  1. ஓவியங்களாய் வந்த பகிர்வு இனித்ததும்மமா இனியா. அதிலும் மணியம் செல்வன் அவர்களின் தளம்.... எக்ஸ்ட்ரார்டினரி. அருமையான பகிர்வோட அடிச்சு ஆடத் தொடங்கிருக்கீங்க. கலக்குங்க....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ! ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க குரல் கண்ணீரென்று கேட்டுச்சு காது குளிர. முதல் வரவு அமர்க்களம். தூள் கிளப்பிட வேண்டியது தான் தங்கள் ஆசியோடு. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ !

      Delete
  2. ஓவியர்களை அறிமுகம் செய்தவிதம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்.
    அது சரி கல்யாணத்துக்கு போகாமலேயே போயிட்டு வந்ததுபோல நல்லா பில்டப் கொடுத்தது அசத்தல்.

    ReplyDelete
    Replies
    1. வேறு எப்பிடி உங்களை எல்லாம் சமாளிக்கிறது. சொல்லுங்க கஷ்டப்பட்டது வீண் போகலை. அது தான் அசத்தல் என்று சொல்லிட்டீங்கல்ல. அப்பாடா இதை வாங்க படும் பாடு இருக்கே ......அப்பப்பா! மிக்கநன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  3. புதிய தளங்களுக்கு செல்கிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! எங்கே காணோம் என்று பார்த்தேன். மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்துக்கும் ...! சரி சரி சென்று வர வாழ்த்துக்கள் .....!

      Delete
  4. சகோதரி இனியா ஓவியம் என்று சொல்லி மிக அருமையான வலைத்தளங்களைக் கொடுத்துள்ளீர்கள். மட்டுமல்ல அருமையான தொகுப்புரை....மணியம் செல்வன்....அவர் மிக அற்புதாமான ஒவியர்! எங்களுக்கு மிகவும் பிடித்தவர்......மற்ற வலைத்தளங்கள் பல புதிது சென்று பார்க்கின்றோம்!

    எல்லா அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்! சரி கடைசியில் தம்பி பாண்டியன் கல்யாணத்திற்குச் சென்றீர்களா! ஆஹா!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மணியன் செல்வன் ஓவியங்களை பார்த்து அசந்தே போனேன். புதிய தளங்கள் உள்ளனவா .....ok ok ம்...ம்...ம்...
      பாண்டியன் கல்யாணம் தானே அது சஸ்பென்ஸ், கதை தான் தொடருதில்ல பொறுத்திருந்து பாருங்கள் சரியா.
      மிக்கநன்றி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ....

      Delete
  5. வாருங்கள் சகோ ! எங்கே காணோம் என்று பார்த்தேன். மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்துக்கும் ...! சரி சரி சென்று வர வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
  6. ஓவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! மிக்க நன்றி! வரவுக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  7. ஆர்டிஸ்ட் மணியம் தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் ,ஓவியங்களை ரசிக்க மொழி எதற்கு ?அறிமுகம் செய்ததற்கு நன்றி !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அதானே மொழி எதற்கு ஹா ஹா அது தானே அறிமுகம் செய்தேன். மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாக்கிற்கும்.

      Delete
  8. அருமையான அறிமுங்கள், அட்டகாசமான முறையில் அறிமுகம். வாழ்த்துக்கள்,

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்.தொடருங்கள் ....

      Delete
  9. அறியாத பல தளங்களை அறியச் செய்தற்காக பாராட்டுக்கள்....... உங்களால் எனக்கு இன்று 50 டாலர் செலவு ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. அறியாத தளம் என்று சொன்னது சந்தோஷம் தான். அதென்ன செலவு பாட்டில கையில எடுக்க வச்சிட்டனா என்ன. அல்லது ஓவியத்தை விலை கொடுத்து வாங்கிட்டீங்களா? சொல்லிடுங்க.... இல்லைன்னா மண்டை வெடிச்சிடுமில்ல.ம்..ம்..ம்.. பாராட்டுக்கு நன்றிகள் பல ! சகோ.

      Delete
    2. நேற்று நீங்க பாட்டிலை கையில தொடக் கூடாதுன்னிடிங்க அதனால் என் குழந்தையை அழைத்து கொண்டு மெக்ஸிகன் ரெஸ்டரெண்ட் சென்றேன் அது பார் அட்டாச்சுடு ரெஸ்டரெண்ட் அதனாலதான் 50 டாலர் ஹும்ம்ம் நான் நல்லபிள்ளையாட்டம் உங்க சொல் பேச்சு கேட்டதற்கு செலவை பாத்தீங்களா? 50 டாலர் அனுப்பிச்சுடுங்க

      Delete
    3. உங்களுக்கு 50டாலர் வேணுமின்னா நேரடியா கேளுங்கள் சரியா இப்படி சுத்திவளைச்சு கேட்கப்படாது. சரியா நான் என்ன சொன்னேன் தொடப்படாது என்று தானே சொன்னேன். ஓஹோ நான் இதை சொன்னபோது தெளியவில்லை போலும் அது தானா இந்தக் குழப்பம். பரவாய் இல்லை. இப்படி கேட்ட பிறகு தராம இருந்தா சரியில்ல. நான் அடிக்கடி அந்தப் பக்கம் உலாவிறனான். ஆகையால் முகவரியை தாருங்கள் நேரில் வந்து தருகிறேன் சகோ ok வா ம்...ம்...ம்..

      Delete
    4. //நான் அடிக்கடி அந்தப் பக்கம் உலாவிறனான்./
      பேய் பிசாசுங்கதான் உலாவுங்க. அப்ப நீங்க? நல்ல வேளைடா சாமி நான் விலாசம் ஏதும் அனுப்பல

      Delete
  10. முத்தான அறிமுகங்கள்

    ReplyDelete
  11. முத்தான அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜிம்மா! வருகைக்கும் கருத்துக்கும .

      Delete
  12. வணக்கம்
    அம்மா.
    கற்பனை கலந்த உரையாடலுடன் மிகவும் இரசிக்கவைக்கும் உரையாடல் அம்மா. நானும் அறியாத தளங்கள்அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.. எல்லாம் சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்ன ! ரூபன் ! நீங்க அறியாததா ஆச்சரியம் தான் உங்க அண்ணனுக்கு எப்பிடி? நீங்க அறியாததாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி எடுத்தேன் தெரியுமா ...ஹா... ஹா.. மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் ரூபன்.

      Delete
  13. வணக்கம்
    அம்மா.
    எல்லாத்தளங்களுக்கும் தகவலை சொல்லி வந்திட்டேன்.... அறியாத தளங்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளேயேவா ரொம்ப ஸ்பீடு பார்த்துப்பா மிக்க நன்றி ரூபன்....!

      Delete
  14. அன்பு இனியா!..

    சாற்றினீர் என்னையும் சான்றோர் நடுவிலே!
    ஏற்றினேன் நன்றியை ஈங்கு!

    உங்களின் அசத்தல் பதிவும்
    பதிவர்களின் அறிமுகமும் மிக அருமை!
    இங்கு என்னையும் ஒருவராக
    இணைத்தமை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்!

    மிக்க நன்றி தோழி! அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
    நேரம் கிட்டும்போது அறிமுகப் பதிவர்களிடமும் சென்று பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் அருமை தோழியே ! நலம் தானே! நீங்கள் மலை நான் மடு நான் யாரம்மா தங்களை அறிமுகம் செய்ய அது தான் இந்த ஏற்பாடு தாங்கள் ஊற்றிய நீரில் அல்லவா நான் இது வரை வந்தேன். அதை நான் மறக்க முடியுமா. இல்லையேல் நானே என்னை தொலைத்திருப்பேனே தோழி ! மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்துக்கும்...!

      Delete
  15. தங்களுக்கு வித்தியாசமான ரசனை சகோ.
    ஓவியர்களை அறிமுகப் படுத்தி என்னைப் போன்றோர்க்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி .

    தொடரட்டும் தங்களின் வித்தியாசமான பணி .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! இன்னும் சுவாரசியம் காத்திருக்கிறது. தொடருங்கள் ...!
      மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும்...சகோ

      Delete
  16. எனது வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ...! மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  17. சிறந்த அறிமுகங்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் பாராட்டுக்கும். தொடருங்கள்...

      Delete
  18. அன்புடையீர்..
    ஓவியங்களான தளங்கள்!.. அருமை..
    வித்தியாசமான சிந்தனையுடன் தொகுப்பு..
    சிறப்பாக தொடரட்டும் தங்கள் பணி..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள் .

      Delete
  19. அருமையான ஓவிய தளங்களை பகிர்ந்தமைக்கு நன்றி! பல புதியன! சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள்....

      Delete
  20. ***இங்கிலீஷ் டீச்சர் ஆனா தமிழில பின்னுதுங்க.***

    அதான் அவங்க தமிழ்லகூட கொஞ்சம் ஆங்கிலமணம் அடிக்கிதாக்கும்? ஆக, Englishல கவிதை எழுதுவதை தவிர்த்து தமிழ்ல "poem" எழுதுறாங்களாக்கும்! :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ரர்ர்ர்ர்:((

      Delete
    2. இன்னொரு ப்லாக் open பண்ணுறேன். இங்கிலிஷ்ல கவிதை...ச்சே..ச்சே poem எழுதுறேன். ஆகாங் :)

      Delete
    3. என்ன இன்னொரு ப்லாக்கா அதுவும் இங்கிலீசிலா. அம்மோய் நம்மக்கு எல்லாம் வடிவேலு ஸ்டைல் இங்கிலீஷ்தான் தெரியும் அதாவது கன் ரீ ப்ரூட் நான்சென்ஸ் ப்ளடி பெக்கர் என்று மட்டும்தான்...

      ஒரு வேளை அப்படியே நீங்க இங்கிலீஷில் ஆரம்பித்தால் பதிவின் கிழே மொழி பெயர்த்து மதுரை தமிழ்னுக்காக என்று போடுங்க டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    4. என்ன இங்க ஒரே சத்தம் ஐயையையைய...இந்தப் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கிறதுக்குள்ள போதும் போதும்மின்னு இருக்குப்பா.அடடடா ...கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டீங்க ஏழு கழுதை வயசாச்சு இன்னும் குழந்தைப்பிள்ளைங்க மாதிரி.

      Delete
    5. மைதிலி சந்தடி சாக்குல உங்களுக்கு ஏழு கழுதை வயசாச்சுன்னு சொல்லுறாங்க பாருங்க ஆங் அது யாருங்க என் வயதை கேட்பது ? சரி உண்மையை சொல்லிடுறேன் எனக்கு என்றும் 16 தானுங்க...

      Delete
    6. அடடா ! ஸ்கூலுக்கு போகாம இங்க என்னப்பா செய்கிற ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல ஓடுப்பா.....

      Delete
  21. நான் பதிவர்களைப் பற்றி கற்றது கைமண்ணளவுதான்..

    திறமை மிக்க ஆனால் பரிச்சயமில்லாத பல பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கீங்க!

    கமல் நல்லா நடிப்பாரு..ரஜினிகாந்த் ஸ்டைல் நல்லாயிருக்கும்னு எல்லாருக்கும் தெரிந்த பிரபலங்களைப் பத்தி சொல்லாமல் ஓவியப் பதிவர்களையும், பலர் அறியாத திறமைமிக்க கவிஞர்களையும், இங்லிஷ் டீச்சர்களின் தமிழ் தொண்டுகளையும் அறிமுகப்படுத்தியது சிறப்பு! தொடருங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கப்பனே என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பயந்திட்டே இருந்தேன்.. மிக்க நன்றி ! வருண் வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  22. தீக்கதிரை ஓவியத்திற்கு தான் தேர்ந்தெடுத்தீர்களா இல்ல பக்கத்தில் இருக்கும் நம் தலைவனுக்காகவா:)
    அருமையான உழைப்பு தோழி!! எவ்ளோ கஷ்டபட்டுருபீங்கன்னு புரியுது:))
    இனியா செல்லம் என்னோட பேர் உள்ள லிங்க் மட்டும் வேலைசெயலடா :((
    so வாட்? இனியா பேரை சொன்னா போதாதா?

    ReplyDelete
    Replies
    1. னோ னோ அப்பிடியெல்லாம் விடமுடியுமா. வந்தவுடனும் முதல்வேலை அது தான். உடனேயே சரிப்படுத்தி விட்டேனே. sorrymma எப்பிடி நடந்திச்சு தெரியலையே.
      என்ன தமிழ்கதிரை இப்போ தீக்கதிரா மாத்தியாச்சா எதுக்கு கோபமா இருக்காரோ.....
      மிக்க நன்றிடா அம்முக்குட்டி! வருகைக்கும் அன்புக்கும்.

      Delete
  23. நீங்கள் சொன்னவர்கள் அனைவருமே அறிய வேண்டியவர்கள் தான்.
    உண்மையில் இது தான் உண்மையான அறிமுகம்.
    பாராட்டுக்கள் இனியா அம்மா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! பாராட்டுக்கும் வருகைக்கும். தொடருங்கள் ....

      Delete
  24. அழகிய ஓவியங்களை அறிமுகம் செய்து ரசிக்க வைத்ததற்கு அன்பு நன்றி இனியா!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வருகைக்கும் கருத்திற்கும் தோழி ! தொடருங்கள் ....

      Delete
  25. அழகிய ஓவியங்களின்
    இனிய அறிமுகம்
    அருமை
    தொடருங்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள் .....

      Delete
  26. Replies
    1. மிக்க நன்றி சகோ!

      Delete
  27. அறிமுகங்களைக் கண்டேன். தொடர்ந்து காண்பேன். வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்கள் ஆதரவிற்கு. தொடருங்கள் ....

      Delete
  28. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள் சகோ....

      Delete

  29. வணக்கம்

    கம்பன் கழக மகளிர் அணிவலையை
    இம்மண் அறிய இசைத்துள்ளீர்! - எம்மினிய
    நன்றி நவில்கின்றேன்! இன்று பதித்தவைக்
    குன்றின் விளக்கெனக் கொள்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே! தங்கள் வருகை என் பாக்கியம். இன்னும் இருக்கிறதே நிறைய இப்பவே சொல்லி முடித்து விடவேண்டாம்......
      மிக்க நன்றி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் .....தொடருங்கள் ....

      Delete
  30. அறிமுகங்களின் வலைப்பூ முகவரிகளை பத்திரப்படுத்திகொண்டேன் ! நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் வாசிப்பேன்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  31. நன்றி தோழியே காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது இன்று தான்
    வீடு திரும்பினேன் விரைவில் வருவேன் .அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  32. அடடா இது தெரியாம எங்கடா இந்தப் பொண்ணு ன்னு தேடிடிட்டு.
    sorryம்மா. இந்தக் கோல் எல்லாம் முக்கியம் இல்லடா கால் தான் முக்கியம் நீங்க மெதுவா வாங்கம்மாஆசை ஆசையா .உங்களை எல்லாம் வைத்து கதை பின்னினேனா அது தான் பின்ன தேடமாட்டேனா?ஆண்டவன் அருளால் விரைவில் குணமடைய என் வாழ்த்துக்கள் தோழி ....! மிக்க நன்றிம்மா உடனே வந்ததற்கு.மனதுக்கு கஷ்டமா இருக்குடா

    ReplyDelete
  33. வணக்கம் இனியா !

    நல்லோர் பதிவுகள் நன்றே உரைத்தவுன்
    நல்மனத் துக்கெங்கே ஈடு !

    அத்தனை பதிவர்களும் அறிந்தவர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  34. ஆஹா வந்தாச்சா ஒரு மாதிரி ரொம்ப busy யா?

    இனிய கருத்துக்கள் நிறைத்தது நெஞ்சை
    நிறைவுடன் வாழ்க என்றும்....!
    மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது