கும்மாச்சி - சுய அறிமுகம்
➦➠ by:
கும்மாச்சி
அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம்.
வலைச்சரத்தின் இந்த வார (07/07/2014-13/07/2014) ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளேன், இந்த வாய்ப்பை எனக்களித்த வலைச்சர குழுமத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வரும் நாட்களில் எனக்குப்பிடித்த வலைப்பூக்களை அறிமுகம் செய்ய உள்ளேன், அதற்கு முன் என்னைப்பற்றியும் என் வலைப்பூ கும்மாச்சி பற்றியும் ஒரு சிறிய அறிமுகம்.
கும்மாச்சி என்ற புனை பெயரில் 2009லிருந்து வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகிலே விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் பிறந்து சிங்காரச் சென்னையிலே வளர்ந்து "திரைகடல் ஓடி திரவியம் தேட" கத்தாரில் நடுக்கடலில் எண்ணெய் கிணறுகளில் என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்.
முதலில் அனுபவங்களை கதைகளாக எழுதி வலைப்பூவில்அறிமுகம், பின்பு வந்த வரவேற்பினாலும், வாசகர் ஊக்கத்தினாலும் கதை, கட்டுரை, கவிதை என்று எழுத்தின் வீச்சு சற்று பெருகியது.
எனது எண்ணத்தில் தமிழ் மொழியின் பெருமையை உணர்த்திய எனது தமிழாசிரியை கமலா டீச்சர் பற்றிய பதிவு என் பதிவுகளில் சிறந்ததாக கருதுகிறேன்.
எங்கிருந்தோ வந்தார் எங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்து எங்களுக்கு உழைத்த முதியவரைப் பற்றியது.
சென்னையில் உரத்தொழிற்சாலையில் பணிபுரிந்தபொழுது கிடைத்த வித்யாசமான அனுபவம் தெருநாய்க்கு மரியாதை என்ற பதிவானது..
நகைச்சுவையில் கவிதை எழுதலாம் வாங்க.
நான் எப்படி பதிவரானேன் மற்றுமொரு நகைச்சுவை பதிவு.
கவிதை என்ற பெயரில் கவிதை இலக்கணம் குறித்து கவிதை கிறுக்க தொடங்கிய காலம் அரசியல் ஆத்திச்சூடி என்ற நையாண்டியில் முடிந்தது.
மழைக்கால நினைவில் அவள் என் வாழ்வில் மறக்கமுடியா நினைவு.
சிறு வயது முதல் எனக்கிருந்த அரசியல் ஈடுபாடு பல அரசியல் பதிவுகளும் கலக்கல் காக்டெயில் என்ற பல்சுவை பகுதியும் டீ வித் முனியம்மா என்ற செய்தி தொகுப்பும் எழுத வழி செய்தன.
நாளை முதல் எனக்குப் பிடித்த பதிவர்களை கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம் என்ற தலைப்பிலே அறிமுகப்படுத்த உள்ளேன்.
என்னை ஊக்குவிக்கும் வலைப்பூ நண்பர்களுக்கும், வலைச்சரம் ஆசிரியர் குழுமத்திற்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்து தற்பொழுது விடைபெறுகிறேன்.
வணக்கம்
என்றென்றும் அன்புடன்

|
|
வணக்கம்
ReplyDeleteஅறிமுகம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து அசந்த எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
ReplyDelete//எண்ணெய் கிணறுகளில் என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்// அருமையான அறிமுகம்.
ReplyDeleteநானும் அங்கே பல வருடங்கள் என்னை கிணற்றில் என்னையே வறுத்து(தி) கொண்டவன் தான்.
விசு நன்றி.
Deleteசுய அறிமுகம் நன்று கும்மாச்சி அவர்களே...
ReplyDeleteமேலும் அசத்த வாழ்த்துக்கள்...
தனபாலன் நன்றி.
Deleteநல்வரவு.
ReplyDeleteதுளசி கோபால் நன்றி.
Deleteசுய அறிமுகம் நன்று.....
ReplyDeleteதொடர்கிறேன்.
வெங்கட் நாகராஜ் நன்றி.
Deleteசுய அறிமுகம் நன்று... அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteகுமார் நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteகவிப்ரியன் நன்றி.
Deleteஅழகான
ReplyDeleteதன் (சுய) அறிமுகம்
என் உள்ளத்தை ஈர்க்கிறதே!
தங்கள்
அறிமுகங்கள் தொடர
எனது வாழ்த்துகள்!
நன்றி ஜீவலிங்கம்,
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteஆதி வெங்கட் நன்றி.
ReplyDeletewelcome boss
ReplyDeleteயாசிர் நன்றி
Deleteஅறிமுகம் நன்று! பணிதொடர வாழ்த்து!
ReplyDeleteஐயா வருகைக்கு நன்றி.
Deleteஅன்பின் திரு.. கும்மாச்சி..
ReplyDeleteதங்கள் வரவு நல்வரவாகுக..
நல்வாழ்த்துக்கள்!..
நன்றி துரை செல்வராஜூ
Deleteசுய அறிமுகமும் அதனில் கொடுத்த பதிவுகளும் சிறப்பாக இருந்தன! மலர்சரம் மணக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஅசத்தலான அறிமுகம் அருமை கும்மாச்சி அவர்களே... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி கில்லேர்ஜி
Deleteவாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.
ReplyDeleteதொடர்கிறேன்.
அருணா வருகைக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteநன்றி சகோ.
ReplyDeleteஅறிமுகம் நன்று! பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteநன்றி இனியா.
Deleteசுய அறிமுகம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி.
Deleteஇன்றுதான் தங்களின் பதிவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். அறிமுகம் அருமையாக உள்ளது. தொடர்ந்து வாசிப்பேன். வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in