07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 8, 2014

கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா

இந்த ஐந்து வருடங்களாகத்தான் வலைப்பூக்களை வாசம் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.  பதிவர்கள் தங்கள் எண்ணச்சிதறல்களை அள்ளி இறைத்திருக்கும் பூக்காடு இந்த வலைமனைகள். மனமென்னவோ எல்லா மலர்களையும் அள்ளிச்செல்ல துடிக்கிறது. ஒவ்வொரு பூவிற்கும் தனி மணம், தனி நிறம் இருந்தும் சில பூக்கள் நம் நாசியைத்தாண்டி, பார்வையைத்தாண்டி இதயத்தில் நுழைந்து வருடுகின்றன.அந்த வகையில் என் சிந்தையை வருடும் பூக்களின் அறிமுகம் இதோ.


முதலில் உப்புமடச்சந்தி ஹேமா. "புறவிசை தாக்கும் வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும். நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம். என் தாக்கமும் இது வழியே..எவரிடமும் வாதிடமுடியாத..சொல்லிப் பகிர முடியா பின்னிக்குமையும் என்னச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன். என் மன ஆறுதலுக்காக. நன்றி நட்போடு ஹேமா" என்று வித்தியாசமான அறிமுகத்தில் ஈழத்தமிழில்  சிறந்த முத்துக்களை அள்ளி இறைத்துக்கொண்டிருப்பவர்.

நாமெல்லோரும் ரசிக்கும் இசையின் பெருமையை அந்த வித்தகர் வாயிலாக விளக்குகிறார். தனது எளிய நடையில் இசைத்தந்தையின் பிரசவம்.
அவரின் மற்றைய தளமான "வானம் வெளித்த பின்னும்" என்ற வலைப்பூவில் கிடைக்கும் நட்சத்திரங்கள்  பல. மதம் பிடித்த புத்தம் என்று மதக்கலவரங்களை கவிதை வடிவில் சுட்டெரிக்கிறார். அரூபியும் மீனும் ஆர்ப்பாட்டமில்லா ஒரு சமூக சாடல்.



பின்னூட்டப் புயல் திண்டுக்கல்லார் (திண்டுக்கல் தனபாலன்) இல்லை என்றால் இன்று என் போன்ற பல பதிவர்கள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தளம் ஒரு அள்ள அள்ள குறைய ஒரு அட்சய பாத்திரம். பதிவர் பிரச்சினைக்கு தீர்வு என்று விட்டுக்கொடுத்தல் பற்றி தமக்கே உரிய பாணியில் வாழ்க்கை புரிதல்களை அள்ளிவிடுவார். எந்த பதிவாகினும் நமக்கு தெரிந்த திரை இசை மூலம் பாட்டிலே பல  கோடி நெஞ்சை நானும் புடிச்சேன் என்று நம்மிடம் நம்மை அறியாமலே மனசில் குடியேறும் அவர் எழுத்து. இடுக்கண் வருங்கால் நகுக என்று சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்
என்று நவீன குறள்  படிப்பது சிறப்பு அம்சம். வேலையில்ல பட்டதாரியா? கவலை வேண்டாம் என் வலி தனி வழி என்கிறது இவர் பாணி.

மேலும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கும் நமக்கு வழிகாட்டுவார். 



சிந்தனைகளை சிதறவிட்டு முத்துக்கள் எடுக்கவேண்டுமா? வாருங்கள் நண்டுநொரண்டு தளத்திற்கு. பெரியார் பிறந்த ஊரிலே வழக்காடிக்கொண்டு தமது வலைப்பூவில் சமூக கருத்துக்களை தமக்கே உரிய நடையில் பதித்து எண்ணற்ற தேடல்களுக்கு வித்திட்டு எவரையும் சிந்திக்கவைப்பார்.யார் சிறந்த சிந்தையாளர் பெரியாரா? திருவள்ளுவரா? என்று வித்தியாசம் காட்டுவார்.சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் என்று நமது அரசாங்க கல்விக்கொள்கை அபத்தங்களை துகிலுரிக்கும் பதிவு. தெரு வாசகம் வித்தியாச பதிவு. ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் என்று மற்றுமொரு நையாண்டி நண்டு.



கடல்கடந்து தமிழ் வளர்க்கும் எண்ணற்ற பதிவர்களில் முக்கியமானவர் இவர். பிரான்சு தேசத்தில் வசித்துக்கொண்டு மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் இயற்றி எண்ணற்ற கவிதை ரசிக்கும் உள்ளங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார் அருணா செல்வம்.

 அன்னையின் அன்பு , தமிழ் அழகு என்று பதிற்றந்தாதி பாடுகிறார். சமையல் குறிப்பாக கோழிவறுவல் கவிதை வடிவில் சமைக்கிறார். ஒரு பக்க கதைகளுக்கு அருணா செல்வம் புதிய எழுத்தாளர்களுக்கு ஆசிரியை.

தெளிவு வித்தியாசமான அனுபவம்.

போக போகத் தெரியும் தொடர்கதை வேண்டுமா? அருணாவின் மற்றுமொரு தளமான கவிமனம் என்ற வலைப்பூவில் கிடைக்கும்.

அருணா செல்வம் அவர்களின் கவிதைகள் நான் மிகவும் ரசிப்பவை. மரபுக்கவிதை வடிப்பதில் வித்தகர்.

இனி அடுத்த மலர்ச்சரம் நாளை தொடுக்கிறேன்.

அதுவரை
என்றென்றும் அன்புடன்
கும்மாச்சி



28 comments:

  1. தொடர்ந்து படிக்கும் த்ளங்கள்.....

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  2. மிக்க மிக்க நன்றி கும்மாச்சி... இன்றைய அறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைத்து அறிமுகங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி இனியா.

      Delete
  4. பல தெரிந்த முகம், சில புதுமுகம் அருமையான அறிமுகம்.. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி விசு.

      Delete
  5. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி சொக்கன் சுப்பிரமணியன்.

    ReplyDelete
  7. சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
    இவ்வார வலைச்சர அறிமுகத்தை ஏற்று வழிநடத்தும் சகோதரர்
    தங்களுக்கும் என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் .மென்மேலும்
    சிறந்த தளங்களை அறிமுகம் செய்து வைத்து நற் புகழ் பெற்றிடவே ...

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவுகளுடன் சிறந்த அறிமுகங்கள்!

    ReplyDelete
  9. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. இனிய அறிமுகங்கள்..
    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ.

      Delete
  11. என்னை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

    மற்ற அறிமுகங்கள் அனைவருக்கு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி சகோ!

    ReplyDelete
  13. புதிய பதிவர்களை அறிமுகப்படுததியமைக்கு நன்றி. தங்களின் வலைச்சர ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  14. அனைவரும் நான் தொடரும் அருமையான பதிவர்கள்! வலைச்சரத்தில் தொகுத்து அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் தொடர்வதற்கு நன்றி.

      Delete
  15. Replies
    1. உதவும் கரங்கள் விண்ணப்பம் குறித்து உங்களுடன் நேரில் தொடர்புகொள்கிறேன்..

      Delete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது