கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--செண்பகம், தாமரை, சேடல், செம்மை
➦➠ by:
கும்மாச்சி,
பதிவுலகம்,
வலைச்சரம்
கடந்த இரண்டு நாட்களாக தொடுக்கப்பட்ட இரண்டு மலர்ச்சரங்களை காண
கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா
கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்---ஆம்பல், அனிச்சம்,குவளை, குறிஞ்சி
இன்று மூன்றாவது மலர்ச்சரத்தில் முதல் பூவாக தளிர் சுரேஷ் அவர்களின் வலைப்பூ. சென்னைக்கருகே பொன்னேரியில் கோவில் அர்ச்சகராக இருந்துகொண்டு தனது வலைப்பூவில் எண்ணற்ற பதிவுகளை பதிப்பித்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகள் கதை கேட்கும் காலம் போய் இன்றைய தொலைகாட்சி காலத்தில் இன்னும் பாப்பா மலர் கதைகளை நியாபகப்படுத்த சுருக்குக்கு ஏற்ற கழுத்து போன்ற சிறு கதைகள் இவரது தளத்தில் காணலாம்.
உங்கள் தமிழ் அறிவு எப்படி என்று தமிழ் கற்றுக்கொடுக்கும் எண்ணற்ற பதிவுகளை தனக்கே உரிய நடையில் தெளிவாக எடுத்துரைப்பார். இந்த பகுதியை ஒரு தொடர் போல கொடுத்து தமிழ் மொழியின் அருமைகளை நமக்கு சுட்டிக்காட்டும் நவீன தொல்காப்பியர்.
ஜப்பானிய ஹைக்கூ கவிதை வடிவம் மற்றும் சென்ரியூ வடிவங்களுக்கு உள்ள நுட்பமான வித்தியாசங்களை சொல்லி இரு வகையிலும் கவிதை புனைந்து நம்மை வியப்பில் ஆழுத்தும் பதிவுகள் இவர் தளத்தில் நிறையவே உள்ளன. இவரது கதம்ப சோறு என்ற பல்சுவை பகுதி சுவையுள்ளதாக இருக்கும்.
தமிழில் மரபுக்கவிதை எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தப் புதுக்கவிதை யுகத்தில் மரபுக்கவிகளை கலைநயத்துடன் எழுதுவதில் சகோதரி அம்பாளடியாள் அவர்களுக்கு ஈடு இணை இல்லை. தமிழே என் உயிரே என்று தமிழ் கவி பாட தமிழன்னையை விருத்த மழை பொழிந்து அழைக்கிறார். பெண்களுக்கு பெண்களால்தான் அழிவு இங்கே என்று யதார்த்த நிலையை கவிதையில் பொறுமுகிறார். கற்பழிப்பு குற்றத்திலும் பெரும் குற்றம் என தனது கவிதை மூலம் அநீதியை எதிர்த்து வலுவான சட்டம் அவசியம் என்கிறார்.
அம்மையார் அவர்களின் தளத்தில் ஏராளமான கவிதை முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அன்பைவிடவா உயர்ந்தது அறிவும் அழகும்?
பதிவுலகில் என்னை வியப்பில் ஆழ்த்துபவர் சி.பி. செந்தில்குமார். இவருடைய வலைத்தளமான அட்ராசக்க வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மேலும் இவருடைய தளம் தமிழ் திரைப்பட விரும்பிகளுக்கு ஒரு அட்சயபாத்திரம். புதிய படங்கள் வந்தவுடன் உடனுக்குடன் விமர்சனம் எழுதிவிடுவார். ஒரு சில நாட்களில் மூன்று நான்கு விமர்சனங்கள் வருவதுமுண்டு. பட விமர்சனத்தில் ரசித்த வசனங்களையும் பட்டியலிடுவார். சமீபத்தில் வெளிவந்த அவரின் கோச்சடையான் பட விமர்சனம்.
இவர் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். அங்கு வெளியிடும் கீச்சுகளை தொகுத்து திண்டுக்கல் ரீட்டா V/S கேப்டன் என்று கதம்பமாலை கட்டுவார். சில சமயங்களில் அரசியல் பதிவிட்டு நம்மை வியக்க வைப்பார். பெரும்பாலான திரட்டிகளில் இவர் முன்னிலை வகித்தவர். சென்னிமலையார் ஆரம்ப ப்லாகர்களுக்கு முன்னோடி. வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி இவரது சினிமா பல்சுவை பகுதி.
மற்றுமொரு பிரபல தொழில்நுட்ப வலைத்தளம் ப்ளாகர் நண்பன். இந்த வலைப்பூ நடத்தும் அப்துல் பாசித் என் போன்ற தொழிநுட்ப தற்குறிகளுக்கு ஆபத்பாந்தவன். எனது வலைப்பூவில் சிக்கல் என்றால் நான் உடனே நாடுவது இவரது வலைமனையைத்தான். சமீபத்தில் இவருடைய பதிவு ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்து விட்டதா? மிகவும் உபயோகமான பதிவு. ப்ளாகரில் மால்வேர் எச்சரிக்கை என்று வருமுன் காக்க நமக்கு அறிவுறுத்துவார்.
கூகிள் தளம் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் முதன் முதலில் நமக்கு அப்துல் பாசித் அதை தெரியப்படுத்திவிடுவார் ( பதிவை கூகிள் பிளசில் தானாக பகிரலாம்) புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன? என்று ஆரம்பப் பாடம் நமக்கு இவர் தளத்தில் கிடைக்கும்.
இனி இன்னும் சில மலர்களை அடுத்தப் பதிவில் தொடுக்கிறேன்.
அதுவரை
என்றென்றும் அன்புடன்
கும்மாச்சி
|
|
மிகச் சிறந்த அறிமுகங்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
குமார் வருகைக்கு நன்றி.
Deleteஅருமையான மலர்ச்சரம்....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அருணா வருகைக்கு நன்றி.
Deleteஎன்னவென்று சொல்வது என் எழுத்துக்களின் தன்மை குறித்து
ReplyDeleteஎடுத்துரைத்த விதத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்
சகோதரா ! மிக்க நன்றி மிகச் சிறந்த தளங்களுடன் எனது
தளத்தையும் அறிமுகம் செய்து வைத்துக் கௌரவித்தமைக்கு .
அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
என்னவென்று சொல்வது என் எழுத்துக்களின் தன்மை குறித்து
ReplyDeleteஎடுத்துரைத்த விதத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்
சகோதரா ! மிக்க நன்றி மிகச் சிறந்த தளங்களுடன் எனது
தளத்தையும் அறிமுகம் செய்து வைத்துக் கௌரவித்தமைக்கு .
அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
நன்றி சகோதரி.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteபயனுள்ள தளங்கள்
நன்றி ஐயா.
DeleteSo many Blogs... So little time.... Thanks Kummachi...
ReplyDeleteநன்றி சகோ.
Deleteபுதிய பதிவர்களை இன்று காண முடிந்தது. தொழில்நுட்ப உத்திகளைக் கூறியுள்ள பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
நன்றி ஐயா.
Deleteஅனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்னுடைய தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே! தொடரும் நண்பர்களுடன் என் தளமும் இன்று இங்கு அறிமுகம் கண்டதில் மகிழ்ச்சி! நன்றி!
ReplyDeleteசுரேஷ் வருகைக்கு நன்றி.
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி.
Deleteசிறந்த அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...
என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஅப்துல் பாசித் வருகைக்கு நன்றி.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு சில தளங்கள் புதியது. சென்று பார்க்கிறேன்
ReplyDeleteவருகைக்கு நன்றி சொக்கன்.
Deleteஅனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
ReplyDelete