07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 27, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  இனியா.    - இவரது  வலைத்தளம்   : kaviyakavi.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
இவர் புதுமையாக ,ஏற்கனவே பிரபலமான பல பதிவர்களை அவர்களது பெயர்களையும் அவரகளது சிறப்பினையும் மட்டுமே குறிப்பிட்டு அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர்களது பதிவுகளை அறிமுகப் படுத்த வில்லை.

இவர் வலைச்சர விதி முறைகளின் படியும் சில பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. பிரபலமான பதிவர்கள் கீழ்க்கண்ட புள்ளி விபரங்களீல் வரவில்லை.

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 062
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 087
பெற்ற மறுமொழிகள்                            : 384
வருகை தந்தவர்கள்                              : 1864
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 049

இனியா பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

இனியாவினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   தியானா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 


இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.. இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முழுவதும் மதுரையில் படித்தவர்தான். தியாகராசர் பொறியியல் கல்லூரியிலிருந்து வளாகத் தேர்வு மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று பெங்களூர் சென்றார்..

இவருக்கு  இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்தவுடன், அவளுக்காக மூன்று ஆண்டுகள் விடுப்பு எடுத்து மீண்டும் வேலையில் சேர்ந்தார்.. தற்பொழுது இரண்டரை வயதாகும், இரண்டாவது குழந்தைக்காக மீண்டும் விடுப்பில் இருக்கிறார். கூடிய விரைவில் வேலையில் சேர உள்ளார்.

இவரது  முதல் குழந்தையைப் பற்றி, அவள் விளையாட்டுகளைப் பதிவு செய்யவே இவரது தளத்தை அவள் பெயரில் ஆரம்பித்தார்.. குழந்தைகளுடன் நேரம் செலவளிப்பதே இவரது பொழுது போக்கு. தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார்.

இவரது தளத்தின் பெயர்  பூந்தளிர் 

இவரது தளத்தின் முகவரி :: http://dheekshu.blogspot.com.

 இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 
நல்வாழ்த்துகள் தியானா
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா 
நட்புடன் சீனா 




27 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. இந்த வார வலைச்சர அசிரியர் பொறுப்பேற்ற சகோதரி தியானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்!

      Delete
  3. வாய்ப்புக்கு நன்றி சீனா ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம்
    மிகவும்கடமைஉணர்வுடன் தனது ஆசிரியர் பொறுப்பினை செய்து முடித்த இனியா(அம்மா) அவர்களுக்கு நன்றிகள் பல. அத்தோடு புதிதாக வருகிற ஆசிரியர் தியானா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் இந்த வாரம்சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சகோதரி தியானா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்,,,
    வருக, வருக,
    நன் பதிவுகளை
    தருக, தருக...

    ReplyDelete
  6. சகோதரி தியானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இந்த வாரம் வலைச்சரத்தில் -
    பணியேற்கும் தியானா அவர்களுக்கு நல்வரவு.. நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜு

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஆஹா "நம்ம தியானாவா இவ்வார வலைச்சர ஆசிரியை?!!"னு சொல்லுமளவுக்கு எனக்கு பரிச்சயமானவர், தியானா அவர்கள்.

    அவர் குழந்தைகளுக்கு "சம்மர் ப்ரேக்" ஆக இருக்கும் என்பதால் இது ஒரு நல்ல தருணம்தான்.

    என்னைப் பொருத்தவரையில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு, என்பது "big responsibility". ஒரு வாரம் தொடர்ந்து உழைக்க வேண்டுமாக்கும். Lazy people like me would not dare to undertake such a big responsibility!

    Wish you all the best, Dhiyana! :)

    ReplyDelete
    Replies
    1. Thanks Varun. ஆனா அவுங்க வீட்டில இருக்கிறப்பத் தான் நமக்கு நிறைய வேலை இருக்கு

      Delete
  10. வாழ்த்துக்கள் தியானா! மதுரைனா சும்மா அதிருதில!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விசு. மதுரைனா சும்மாவா?

      Delete
  11. ஒரு குடும்பத் தலைவிக்குரிய கடமைகளை வழுவறச் செய்யும் தியானாவைப் பாராட்டி, வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உலகளந்த நம்பி

      Delete
  12. பணி சிறக்க வாழ்த்துக்கள் தியானா....!

    ReplyDelete
  13. இனியா மற்றும் தியானா இருவருக்கும் வாழ்த்துகள்.........

    ReplyDelete
  14. சிறப்பாக ஆசிரியப்பணியை நிறைவு செய்த ஆசிரியருக்கும், பொறுப்பேற்கவுள்ளவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நல்வாழ்த்துகள் தியானா
    நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா

    ReplyDelete
  16. வெற்றிக்கரமாக, கொடுத்த பணியை சிறக்க செய்து முடித்த சகோதரி இனியாவிற்கு வாழ்த்துக்கள்.

    தங்களின் ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள் தியானா சகோதரி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது