07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 9, 2014

கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்---ஆம்பல், அனிச்சம்,குவளை, குறிஞ்சி

முதல் மலர்ச்சரத்தை காண இங்கே  

வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்ற இரண்டாவது நாளில் தொடுக்கும் மலர்ச்சரம்.

முதலில் நகைச்சுவை பதிவு ஒன்றைப் பார்ப்போம். எனது கருத்தில் நகைச்சுவைக்கு சிறந்த வலைப்பூ சேட்டைக்காரன். பதிவுலகில் மூத்தவர். சிறந்த நகைச்சுவை நடைக்கு சேட்டை சேட்டைதான். கையில காசு வாயில தோசை படித்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது உறுதி. கவிதை காய்ச்சல் என்று கவிதையிலும் நகைச்சுவை நையாண்டி செய்வார் சேட்டை. அரசியல் நகைச்சுவைக்கு ஒரு பானை சோற்றில் ஒரு சோறு நாங்க புதுசா கட்டிகிட்ட சோடிதானுங்க. ராஜா என்பார் மந்திரி என்பார் என்று கிரிக்கெட் நகைச்சுவை பாட்டு.

இன்னும் நகைச்சுவை முத்துக்கள் அவரது தளத்தில் ஏராளம். மிஷ்டிதோயும் ரசகுல்லாவும் படிக்க அவரது புத்தகம் "மொட்டைத்தலையும் முழங்காலும்" ஆன்லைனில் வாங்கி படிக்கலாம். மொத்தத்தில் சேட்டை நகைச்சுவை எழுத்தில் மன்னர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

பல்சுவை கொடுப்பதில்  வலையுலக அரசி ராஜி "காணாமல் போன கனவுகள்" . ராஜியின் கிச்சன்கார்னர் மிகவும் பிரசித்தம். நான் சென்னையில் வசித்த பொழுது வடகறி என்று நாயர் டீக்கடைகளில் ஒரு சைடு டிஷ் கிடைக்கும் என்று பேசிக்கொள்வார்கள். இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதன் செய்முறையை இவரது தளத்தில் பார்த்தபின் இப்பொழுது அடிக்கடி வீட்டில் வடைகறி தான்.

புண்ணியம் தேடி ஒரு பயணம் ராஜியின் சிறப்பு பகுதிகளில் ஒன்று, குலதெய்வ வழிபாடு என்று புகைப்படங்களுடன் நமக்கு நேரில் காணும் அனுபவத்தை ஏற்படுத்துவார்.குழந்தைகளை கைவினைப் பொருட்கள் செய்ய ஊக்குவித்து அதை பதிவிடவும் செய்வார்.

மொத்தத்தில் பல்சுவைக்கு "காணாமல் போன கனவுகள்" ஒரு நல்ல வலைப்பூ.

சினிமா விமர்சனங்களாகட்டும் இல்லை வேறு எந்த தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மிக ஆழ்ந்த கருத்துக்களுடன் பதிவிடுவது ஹாரியின் தனிச்சிறப்பு. இந்த பதிவரும் நானும் கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்கள் என்பதை அவரது பதிவுகளில் இருந்து நான் தெரிந்துகொண்டேன். பதிவுகளின் ஊடே ஓடும் மெல்லிய நகைச்சுவை இவரது தனித்தன்மை.

உள்ளூரு சினிமா உலக சினிமா என்று நக்கலடிக்கும் பதிவு இது. எனது அபிமான எழுத்தாளர் சுஜாதா பற்றிய  அவருடைய இடுகை. ஹாரியின் நகைச்சுவை நடைக்கு தம்புடியும் நல்லாவும்.

புக்கு  சேலு அவரது ஊரில் நடக்கும் பொழுது எப்படி இருக்கும் என்ற பதிவு.

சினிமா விமர்சனத்திற்கு ஹாரியின் பொம்மை படம் பம்பர் ஹிட் ஆன கதை. 2012ல் தமிழ் பட கதாநாயகிகள் என்று விரிவான அலசல் படங்களுடன். 2012ல் டாப் 20 ப்ளாகர்ஸ்.

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் நகைச்சுவை பதிவு ஹாரியின் ட்ரேட் மார்க்.

தொழில்நுட்ப பதிவர்களில் வந்தேமாதரம் சசிகுமாரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவருடைய தளத்தை என்னுடைய வலைப்பூவில் சூப்பர் ஸ்டார் பதிவர்கள் என்ற தொடரில் அறிமுகப்படுத்தி உள்ளேன், அவரை மீண்டும் அறிமுகம் செய்வதில்  பெருமையடைகிறேன். ஆரம்ப காலத்தில் எனது வலைப்பூவை வடிவமைப்பதில் இவரது தளத்தின் பங்கு அளப்பரியது. இப்பொழுதும் வலைதளத்தில் பிரச்சினை என்றால் இவரது தளத்தை அணுகினால் பிரச்சினைக்கு தீர்வு எளிதாக கிடைக்கும்.

ப்ளாகரில் கஸ்டம் URL வசதி  அனைவருக்கும் உபயோககரமான பதிவு.

ப்ளாகரில் இனி புதிய போட்டோ அல்லது விடியோக்களை வெப்கேம் மூலமாக இணைக்கலாம் மற்றுமொரு தொழில்நுட்பம்.

இன்னும் சில மலர்களை அடுத்த பதிவில் தொடுக்கிறேன்.

அதுவரை
என்றென்றும் அன்புடன்
கும்மாச்சி

21 comments:

  1. மீண்டும் ஒரு சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரி.

      Delete
  2. கும்மாச்சி அண்ணா..... கொஞ்ச நாளாக காணாமல் போனவர் ராஜி அக்கா.
    அதற்காக அவரது தளத்தை “காணாமல் போன பதிவென்றா பதிவிட வேண்டும்....))

    அவரின் தளம் “காணாமல் போன கனவு“

    இன்று அறிமுகமான அனைவரும் நான் பின்தொடர்பவர்களே...
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிழை திருத்தப்பட்டு விட்டது. நன்றி அருணா.

      Delete
    2. வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன் அருணா!!!!!! காணமல் போனவங்க லிஸ்ட்ல என்னையும் சேர்த்துடாதீங்கப்பா.

      Delete
  3. மீண்டும் சிறப்பான அறிமுகங்களின் தொகுப்பு.
    அனைவருக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ.

      Delete
  4. பயனுள்ள தொழிற்நுட்ப தளங்கள் உட்பட இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  5. தொழில்நுட்ப பதிவர்களில் வந்தேமாதரம் சதீஷ்குமாரை அறியாதவர்கள் இருக்க முடியாது.///

    அவரது பெயர் சசிகுமார்....

    ReplyDelete
    Replies
    1. பிரகாஷ் தவறு, திருத்தப்பட்டுவிட்டது.

      வருகைக்கு நன்றி.

      Delete
  6. நன்றி தல.. பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இருக்கின்றீர்கள்.. நன்றி நன்றி.. மற்றும் ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. வெற்றிகரமாக தொடருங்கள் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஹாரி.

      Delete
  7. சிறந்த தொழில்நுட்பப் பதிவர்களின் அறிமுகம்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. இன்றைய அறிமுகங்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சிறப்பான அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. குமார் வருகைக்கு நன்றி.

      Delete
  11. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
  12. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது