மழலை மொழிகள் மகத்தான செல்வம்
மழலை மொழிகள் மகத்தான செல்வம்
வாழ பழக்கு வருங்காலம் அவர்க்கு
ஊக்கம் உறுதியும் ஊட்டிடு உவக்க-அவர்
ஆக்கமும் நோக்கமும் அறிவும் சிறக்க
நன்றாக இருந்தது அம்முக்குட்டியின் சமையல். ரசித்து ருசித்து சாப்பிட்டோமா கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டோம். அதனால் கொஞ்சம் அசதியாக இருந்தது.எல்லோரும் அமைதியாக இருந்தோம். ரூபன் என்னம்மா யோசனை சொல்லுங்கள் என்றார் இல்ல நான் வெளிக்கிடும் போது வீட்டுக்காரர் உடம்பை பாத்துக்கோ சுகர் சேர்த்துக்காத என்று சொன்னாரு ஆனால் இங்கு பார்த்தால் அம்முவின் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. அவர் ஒரே குலாப்ஜமன், பால் பாயசம், லட்டு என்று ஏகப்பட்ட சுவீட் தந்தாரா ஒரு சுத்து பெருத்திட்டன் இல்ல வீட்டுக்கு போக வீட்டுக் காரங்க என்ன உண்டு இலன்னு பண்ணிடுவாங்களே என்று பயமா இருக்கையா. அது தான் யோசனை வேறு ஒன்றும் இல்லை. எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோமா. மகிழ் நிறை கதை சொல்லுங்கள் ஆன்ரி என்று நச்சரித்தார்கள். இன்று வீட்டிலேயே இருப்போம் என்று முடிவு. எனவே ரூபனும் சகோ மதுவும் கூட சரி சொல்லுங்கள் நாங்களும் கேட்கிறோம் என்றார்கள் சரி என்று நானும் சொல்லத் துவங்கினேன்.
பேராசிரியர் நியூக்லிட் என்பவர் தன் பேராசிரியர் நண்பர்களுடன் எகிப்து நாட்டிலுள்ள பிரமிட்டுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் ஒரு பேராசிரிய நண்பர் " நியூக்லிட் ," இந்த பிரமிடின் உயரத்தை நீங்கள் டேப்பை வைத்து அளந்து சொல்லிவிட முடியுமா ?"என்று கேட்டார்.
பிரமிட் அடிப்பகுதி அகலமாகவும் , போகப் போக குறுகலாகவும் உள்ள அமைப்பு. அதில் டேப்பை தொங்க விட்டு அளக்க முடியாது. "ஏனப்பா! எறிவிடலாமெனப் பார்க்கிறாயா?"என்று கிண்டல் செய்தார் ஒருவர்
"இரப்பா ! யோசிக்கட்டும் என்றார் ஒருவர். நியுக்லிட் எதுவும் பேசாமல் டேப்பை எடுத்து பிரமிட்டின் நிழலை அளந்து குறித்தார். தான் நிழலையும், உயரத்தையும் வைத்துக் கணக்கிட்டவர், இத்தனை நீள நிழலுக்கு இத்தனை உயரம் இருக்கும் என்று துல்லியமாக கணக்கிட்டுச் சொன்னார். நியுக்லிட் சொன்னது பிரமிட்டின் சரியான உயரம் என்பதை அறிந்த நண்பர்கள் அவரது புத்திக்கூர்மையைக் கண்டு பிரமித்தார்கள்.
"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு."
நீர்பூக்களின் தண்டின் நீளம் அவை தண்ணீரில் நிற்கும் அளவே இருக்கும். நீர் உயர உயர தண்டும் உயரும். மனிதருக்கும் ஊக்கத்தின் அளவே உயர்ச்சியும் இருக்கும். முடியாது என்று எதுவுமே இல்லை என்று முயன்றார் நியுக்லிட். வெற்றியும் புகழும் பெற்றார்.
எப்படி கதை என்றேன். எலோரும் ம்...ம்.. நன்றாகவே உள்ளது என்றார்கள்.
மகிழ் நிறை ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.
சரி tea டைம் என்றேன் பின்னர் நானே போட்டுக் கொடுத்தேன். உடனே எல்லோரும் wow காப்பியே இப்படி என்றால் நிச்சயம் சமையலும் நன்றாகவே இருக்கும். எனவே டின்னர் நீங்கள் தான் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழி இல்லாமல் சரி என்று நானும் தலையாட்டி விட்டு, பேசிக்கொண்டு இருந்தோம். நான் என் அம்முவை கேட்டேன் எப்படி மாணவர்களை சமாளிக்கிறீர்கள் உலகம் போகிற போக்கில் கொஞ்சம் பயமாகவே உள்ளது. குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்க்கவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால் எப்படி என்று புரியாமல் இருப்பார்கள் அல்லவா நீங்கள் ஆசிரியர்களாக இருப்பதால் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றேன்.
உடனே காத்திருந்தது போலவே மதுவும் மைதிலியும் மாறி மாறி சொன்னார்கள் இதோ நீங்களும் கேட்டுப்பாருங்களேன் உங்களுக்கும் இவை மிகவும் உதவும்.
கதை தொடரும்
சரி உறவுகளே மீண்டும் நாளை சந்திப்போம். விடை பெறும் நேரம் நெருங்கி விட்டது.
கதை எப்படி முடியும் guess பண்ணுங்க பார்க்கலாம் நட்புகளா.
1 மகிழம்பூச்சரம்
என்னும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி சாகம்பரி அவர்கள் குழந்தை வளர்ப்பு
பற்றி மிக அருமையாக கூறிள்ளார் வாருங்கள் சென்று பார்ப்போம் குழந்தைகளும் ஊட்டச்சத்துப் பானமும் பாகம்- mahizhampoosaram. blogspot.com
2 4 பெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொரு விடயங்களையும் துல்லியமாக மிக மிக அருமையாக கூறியுள்ளர்கள் சென்று பாருங்கள். fourladiesforum.com
3 மாணவர்களின் பார்வையிலிருந்து...
9 காற்றும் வீச மறுத்ததால் மரங்களும் மரித்ததாம் இதனால் வயல் வெளிக்கு ஒரு மணம் வாழை மரத்திற்கு ஒரு மணம் என்கிறார் ஜெ.பாண்டியன் பாலைவனமாகும் உலகு என்கிறார் தூக்கிவாரிப்
போடுகிறது நமக்கு என்ன தான் சொல்லுகிறார். இரவைக் கூட இரவல் வாங்க
வேண்டுமோ என்று ஆதங்கப் படுகிறார். /சென்று தான் பாருங்களேன் ஒரு முறை. 3 மாணவர்களின் பார்வையிலிருந்து...
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...
மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும். என்கிறார் ரோஜா பூந்தோட்டம் எஸ் பாரத் bharathbharathi. blogspot.com நிறைய விடயங்கள் சொல்கிறார் கேட்டுத் தான் பாருங்களேன்.
4 ‘குழந்தை வளர்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு
தூக்கமின்மை பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தான் என்கிறார். பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள். நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள் அதை நிவர்த்தி செய்யுங்கள் என்கிறார். Dr M K Muruganandan மேலும் என்ன சொல்கிறார் சென்று பாருங்கள். தூக்கத்தைத் தொலைத்த குழந்தைகளுடன்
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும். என்கிறார் ரோஜா பூந்தோட்டம் எஸ் பாரத் bharathbharathi.
4 ‘குழந்தை வளர்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு
தூக்கமின்மை பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தான் என்கிறார். பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள். நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள் அதை நிவர்த்தி செய்யுங்கள் என்கிறார். Dr M K Muruganandan மேலும் என்ன சொல்கிறார் சென்று பாருங்கள். தூக்கத்தைத் தொலைத்த குழந்தைகளுடன்
5
சிறுவர்களை வழி நடத்த நற்கருத்துக்கள் உள்ள தன்னம்பிக்கையை வளர்க்கக்
கூடிய நீதிக்கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். தவறுகளை ஆரம்பத்திலேயே
முளையிலேயே கிள்ளி விடவேண்டும் என்கிறார் பாபு நடேசன்.சென்று தான்
பாருங்களேன். தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள் http://tamilarivukadhaikal.blogspot.ca
6 நாளைய சமுதாயம் நலமாக வாழ மனிதநேயத்தை கட்டிக் காக்க, ஆரோக்கியமாக வாழ, நற்குணங்கள் கொண்டு , விவேகமும் வெற்றியும் பெற குழந்தைகள் எப்படி வளர வேண்டும் வளர்க்கப் பட வேண்டும் என்று விலாவாரியாக எடுத்துரைக்கிறார் சம்பத்குமார்
நிச்சயம் ஒவ்வொரு பேரன்ட்சும் தெரிந்து கொள்ள வேண்டியவை. சென்று பாருங்கள் நட்புகளா. குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1 தமிழ்பேரன்ட்ஸ் http://www.tamilparents.com எனும் தளத்தில்
7 ஆதித்தன் வலைக்குடிலில் ஓவியம், சிறுவர் பாடல்கள், குழந்தை பாடல்கள், பொ து அறிவுச் செய்திகள்,சிரிப்பு துணுக்குகள் என பல விடயங்களை அள்ளித் தருகிறார். இச்சிறுவனுக்குத் தான் எத்தனை ஆர்வம் எத்தனை பற்று தமிழில். அவரை நாம் ஊக்கப் படுத்த வேண்டாமா இதோ சென்று பாருங்கள் க. ஆதித்தன் http://kuttivall.blogspot.ca/ பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்
6 நாளைய சமுதாயம் நலமாக வாழ மனிதநேயத்தை கட்டிக் காக்க, ஆரோக்கியமாக வாழ, நற்குணங்கள் கொண்டு , விவேகமும் வெற்றியும் பெற குழந்தைகள் எப்படி வளர வேண்டும் வளர்க்கப் பட வேண்டும் என்று விலாவாரியாக எடுத்துரைக்கிறார் சம்பத்குமார்
நிச்சயம் ஒவ்வொரு பேரன்ட்சும் தெரிந்து கொள்ள வேண்டியவை. சென்று பாருங்கள் நட்புகளா. குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1 தமிழ்பேரன்ட்ஸ் http://www.tamilparents.com எனும் தளத்தில்
7 ஆதித்தன் வலைக்குடிலில் ஓவியம், சிறுவர் பாடல்கள், குழந்தை பாடல்கள், பொ து அறிவுச் செய்திகள்,சிரிப்பு துணுக்குகள் என பல விடயங்களை அள்ளித் தருகிறார். இச்சிறுவனுக்குத் தான் எத்தனை ஆர்வம் எத்தனை பற்று தமிழில். அவரை நாம் ஊக்கப் படுத்த வேண்டாமா இதோ சென்று பாருங்கள் க. ஆதித்தன் http://kuttivall.blogspot.ca/ பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்
10 குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை உரியநேரத்தில் போட்டால் நோய் வரு முன் தடுக்கலாம் என்பதை விளக்கும் இப் பதிவு இதோ குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை......... http://kiruukkal.blogspot.com
|
|
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தலைப்புடன் ஒளிகிறது என்னை தொடர்ந்து கதை பின்னி செல்லுகிறதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய வலைச்சரஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு ரவுண்டு போயிட்டுவாறேன் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் முதல் வருகையும் தந்து ஊக்கப் படுத்தும் வகையில் கருத்தும் அளிப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சியே. அதுவுமின்றி என்னுடன் பயணிப்பதற்கு மிக்க நன்றி! ரூபன் ஹா ஹா... சுற்றுலா செல்கிறீர்களா சரி சரி சென்று வாருங்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
எல்லாத்தளங்களும் நான் தொடரும் தளங்கள்தான்.. அறிமுகம்செய்துவைத்தமைக்கு நன்றிகள் பல. த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி! ரூபன் வாக்குக்கு. இப்படி ஓடி ஓடி கஞ்சி ஆகப் போகிறீர்கள்ளாமே உண்மையா
Delete***அவர் ஒரே குலாப்ஜமன், பால் பாயசம், லட்டு என்று ஏகப்பட்ட சுவீட் தந்தாரா ஒரு சுத்து பெருத்திட்டன் இல்ல வீட்டுக்கு போக வீட்டுக் காரங்க என்ன உண்டு இலன்னு பண்ணிடுவாங்களே என்று பயமா இருக்கையா.***
ReplyDeleteஈவனிங் உங்க அம்முக்குட்டியோட சேர்ந்து ஒரு ஆறு மைல் ஜாகிங் போகலையா? அப்புறம் எப்படி அடுத்த வேளை பசிக்கும்? :)
அப்பிடித் தான் நானும் அம்முவும் பிளான் பண்ணினோம் ஆனால் மகிழ் நிறை தன்னுடனேயே இருந்து கதை சொல்ல வேண்டுமாமே அதனால் எங்கும் போக முடிவதில்லை. அது மட்டுமல்ல சகோ மதுவும் ரூபனும் காரில என்றால் வருவார்களாம் 6 மைல். நடந்து என்றால் வரமாட்டார்களாம். அப்போ என்ன செய்வது சொல்லுங்கள். தனியாக நாம் இருவரும் போவது பயம்தானே. ஹா ஹா .....
Deleteசம்பத்குமார் அவர்கள் மேலும் தொடர வேண்டும்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆமாம் உண்மை தான் நல்ல தொரு பதிவு தொடர்ந்தால்...... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. மிக்கநன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Delete***கதை எப்படி முடியும் guess பண்ணுங்க பார்க்கலாம் நட்புகளா.***
ReplyDeleteஉங்க பாஸ்போர்ட் தொலஞ்சி போயிடுதாம். புது பாஸ்போர்ட் வாங்க 2 மாதகாலமாகும்னு சொல்லிடுறாங்க. சரினு அங்கே உள்ள ஒரு பள்ளியில் நீங்களும் ஆசிரியையா வேலை செய்றீங்க. 2 மாதத்தில் பாச்போர்ட் வந்துடுது..ஆனால் அந்தப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் உங்களை போக விடமாட்டேன் என்கிறார்கள். இனியா டீச்சர் டீச்சர்னு ஒரே அன்பு பெருக்கெடுத்துஓடுது. பாஸ்போர்ட்டை கிழிச்சுப்போட்டுட்டு அங்கேயே டீச்சரா இருந்துடுறீங்களாம். :)
அடடா நல்ல கற்பனை தான் கதையை தொடர்ந்து நீங்களே எழுதலாம் போல இருக்கே.சோர்ட் அண்ட் sweet ஆ முடிக்கனுமில்ல டைம் is ஓவர்நொவ். பார்க்கலாம் மதுரை வீரன்,கில்க்ரீ என்ன சொல்கிறார்கள் என்று சரியா.
Deleteஆஹா! சூப்பர்! சூப்பர்!
Deleteஇனியாவை எங்களோடு தங்கவைத்த தங்கம் வாழ்க:))
இனியாச்செல்லம் கதை ரொம்ப ஸ்வீட்டா இருந்துச்சு! பாவம் ரொம்ப hard work ப்பா!!
ReplyDeleteஎத்தனை மணிக்கு தூங்குறீங்க?
இன்னிக்கு நான் நிறைய பேருக்கு follower ஆகியிருக்கேன்:)) thanks டா செல்லம்:))
Deleteஅப்படா கஷ்டப்பட்டது வீண் போகலை. நற் கருத்து உங்களிடம் இருந்து எனக்கு. உங்களுக்கு followers கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி. டெய்லி 2 மணி யளவில் தான் தூங்குவேன். நமக்குள்ள எதுக்கு thanks எல்லாம்.அன்னியப் படுத்திற மாதிரி அல்லவா ஆயிடும். மிக்க மகிழ்ச்சி அம்மு.
அருமையான பயனுள்ள தளங்கள்..பாராட்டுக்கள்.!
ReplyDeleteமிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்துக்கும்!
Deleteஅறிமுப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்துக்கும்!
Deleteகடந்த கருத்துரையை படிச்சுட்டு ஐடியா கொடுத்த நண்பர் ரூபனிடம் சண்டை போடவேண்டாம்.
Deleteஅதெப்படி ஒரு பெட்டி தங்கம் போச்சே போச்சே.......
Deleteஅன்பு மக்களே..வணக்கம்.. எனது தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது எனும் செய்தியை அண்ணன் திரு.ரூபன் அவர்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்..
ReplyDeleteஇதுவே வலைசரத்தில் எனது முதல் அறிமுகம்..
புகழ்பெற்ற தமிழ் பதிவர்களும், தமிழ் அறிஞர்களும் சங்கமிக்கும் வலைசர தளத்தில், அடியேனது எழுத்துக்கும் அங்கீரம் தந்த ஆசிரியர் திருமதி. இனியா அவர்களுக்கும், வாசகர் பெருமக்களுக்கும், எனது உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
"சாதிச்சிட்ட டா விக்னேசு...நீ சாதிச்சிட்ட" ....:-)
(இதெல்லாம் கொஞ்சம் ஓவர்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது..ஹிஹி...)
நன்றி:-)
ஆமா விக்னேஷ் இதில் என்ன சந்தேகம் சாதிச்சதுக்கு வாழ்த்துக்கள் ....! மேலும் மேலும் சிறப்புறவும் வாழ்த்துக்கள்...!
Deleteநன்றி :-)
Delete" 4 பெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொரு விடயங்களையும் துல்லியமாக மிக மிக அருமையாகக் கூறியுள்ளர்கள்." என்பது உண்மையே!
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்
ஆமாம் குழந்தை வளர்ப்பு முக்கிமானதொன்று அனைவரும் அறிந்திருப்பது நன்மை பயக்கும்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !சகோ !
நல்ல செய்திகளுடன் - மீண்டும் ஒரு அருமையான தொகுப்பு..
ReplyDeleteஇன்றைய சரத்தில் அறிமுக தளங்கள் அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள்..
வாழ்க நலம்..
மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteஇனியாச்செல்லம்
ReplyDeleteநாளை ஊருக்கு செல்கிறேன் என நினைக்கிறேன். அண்ணியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா! எனவே நாளை உங்களை சென்னை ஏர்போர்ட்டில் சந்திக்கிறேன்:))
இங்கே வந்து தேடாதீர்கள்:)))
அம்முக்....குட்டி ..... இப்படி கடைசி நேரத்தில காலை வாரலாமா..... ? இப்ப போய் கதையை பிளானை மாத்த முடியாதில்ல ஆகையால் இன்னிக்கு போகலை நாளைக்கு தான் போகிறேன் என்று சொல்லிடுங்கள் சரியா அம்மு நல்ல குட்டியில்ல ... ஹா.... ஹா .
Deleteஇன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்துக்கும்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லாம் புதியவை.சென்று பார்க்கிறேன் நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்துக்கும்.
Deleteகதையின் முடிவை காண நாளை வரை காத்து இருக்கின்றேன்:))
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்துக்கும்.
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்துக்கும்.
Deleteவலை அறிமுகத்தையே ஒரு நடந்த நிகழ்ச்சி போல இப்படி அழகாச் சொல்லமுடியுமா? அருமை சகோதரி (.இவங்கல்லாம் எப்ப சந்திச்சாங்க...நமக்குச் சொல்லவே இல்லயேன்னு எனக்கு ஒருகட்டத்தில் சந்தேகமே வந்துவிட்டது) ரொம்ப அருமைப்பா.. நான் கொஞ்சம் தாமதமாக வந்ததுக்கு மன்னிச்சிக்கோ தங்கையே!..) நாய்க்கு வேலை இல்லயாம்..ஆனா உட்கார நேரமில்லையாம்ங்கிற மாதிரி பணிஓய்வு பெற்ற பின் ஊர் ஊராக ஓடித்திரிகிறேன்.. நள்ளிரவு வீடு வந்து.. முற்பகலெல்லாம் தூங்கி பிற்பகலில் அடுத்த நிகழ்ச்சிக்குக் கிளம்பி... நாளை உங்கள் வாரப்பதிவை வலைச்சரத்தில் படித்துவிட்டுக் கருத்திடுவேன்...இப்பக்கூட இந்திய இரவு மணி 3.30!)
ReplyDeleteஅடடா நிலவன் அண்ணா தங்களை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டேனா? வரவில் மிகுந்த மகிழ்ச்சி என்றாலும். கொஞ்சம் வேதனையாகவே உள்ளதண்ணா நீங்கள் மெதுவாகவே பாருங்கள் இந்தக் கருத்தே எனக்கு ஆயரம் ஊட்டச்சத்து அளித்தது போல் தான் உள்ளதண்ணா மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteநல்ல தளங்கள் அறிமுகம்! எல்லோரையும் தொடர ஆசையாகத்தான் உள்ளது! ஆனால் நேரம் என்பது ...ம்ம்ம்ம் பார்ப்போம் எப்படியாவது எல்லா தளங்களும் சென்று வர வேண்டும்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி!
முடியாவிட்டால் கஷ்டப் படவேண்டாம் சகோ மெதுவாக செல்லுங்கள்.நேரம் இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறதே இதை எப்படி பிடிப்பது என்று தான் தெரியவில்லை சகோ!
Deleteமிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
அருமை! அருமை! எப்படி இத்தனை அழகாகத் தினமும்..
ReplyDeleteஎன்று ஆச்சரியப்பட வைக்கின்றீர்கள் தோழி!
இனியா என்று இனிமை உங்கள் பெயரிலேயே இருப்பதாலோ...:)
மிகச் சிறப்பு! அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றிம்மா! தொடர்ந்து தந்த ஆதரவிற்கு.
Deleteதொடர்வோம் நட்பை தொடர்ந்து.
எனது வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteமேலும் மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் ....!
Delete