07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 24, 2014

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

 


ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
பாவங்கள் தீர்க்கும் பணிகளில் ஒன்று 
கோலம் போடுதல் குமரிக்கு நன்று
குனிதல் உடலுக்கு நலம் தரும் ஒன்று



அப்பாடா ஒரு மாதிரி பயணம் நல்ல மாதிரி முடிந்தது .என்ன ரூபன்  வெய்யில் இப்பிடி கொளுத்துது இந்தியாவில. எப்பிடி சமாளிக்கப் போகிறோம். ஆமா நாம இப்ப இங்க வந்தது DD க்கு தெரியுமோ? இல்லம்மா சொல்லல அப்போ யாரு உதவுவா. வந்தது   தான் வந்தோம் ட்ரை பண்ணி எல்லோரையும் பார்த்து விட்டு போகலாம் இல்ல சரி .அப்போ DD க்கு கோல் பண்ணுங்க அவர் தான் சரியான ஆளு அவருக்கு தான் எல்லோரையும் தெரியும் அத்துடன் மனசாட்சி உள்ளவர் இல்ல சும்மா சொல்லக் கூடாது நல்ல மனிதர் தான்  என்ன ரூபன்.   ஆமா இப்போ இங்க யாரை எல்லாம் பார்க்கலாம் சொல்லுங்கள்.

இல்லம்மா முதல்ல நாங்க உங்க அம்மு வீட்டிற்கு போகலாம் சரியா. அட அது தாங்க நம்ம (அந்த இங்கிலீஷ் டீச்சர் தாங்க அவங்க மிச்சம் பார்த்துக் கொள்ளுவாங்க இல்ல.அதுவும் நல்ல ஐடியா தான் ok  அவுங்க முகவரி இருக்குதா ரூபன் ஆமாம்மா அதெல்லாம் என்கிட்ட இருக்கு. எப்பிடி ரூபன் எப்பிடியோ இருக்கும்மா வாங்க . சரி சரி நமக்கென்ன வந்துது காரியம் முடிஞ்சா சரிதானே  என்று முணுமுணுத்துக்கொண்டேன்.  வழியில ரக்சி ஒன்றில் ஏறி மைதிலி வீட்டிற்கு சென்றோம்.

அங்கு போனதுமே பெல்லை அடித்தோம் விடியற்காலை அல்லவா  குளித்து முடித்து இளநீல நிற சுரிதார் அணிந்து நெற்றியில் சிறிய பொட்டும் வைத்து ரம்யமாக வந்து கணீர் என்ற குரலில்  யாரு வேணும் யாரை தேடுகிறீர்கள் என்கிறார். அப்புறம் ரூபனை பார்த்து எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறது என்கிறார். எங்க  பார்த்தேன்.  இதற்கிடையில் அங்கு வந்த   Mathu அவர் தாங்க( நல்ல ஒரு  ஆசிரியர். நல்ல ஒரு வழி காட்டியும்கூட எனக்கும் தான் அவர் படைப்புகள் ஒவ்வொன்றும் சமூக நலன் மிகுந்திருக்கும்.)அவர்  ரூபன்  எப்படி நீங்க இங்க என்கிறார். மைதிலி அசந்து தான் போனார். நான் பேசாமல் கொஞ்சம் தள்ளி பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரூபன் அப்போ  இது யார் சொல்லுங்க பார்ப்போம். ம்....ம்... தெரியலியே. இவங்க தான் உங்க செல்லம் Iniya .
உண்மையாகவா. அப்பிடியா என்று என்னை கட்டிக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அம்முக்கு கையும் ஓடல காலும் ஓடல என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். எங்களை இரு என்று கூட சொல்லத் தோணலைன்னா பாருங்களேன். அப்புறம் மது தான் எங்களை இருக்கச் சொன்னார் அப்புறம் வெகு நேரம் பேசிட்டே இருந்தோம். மகிழ் நிறை வந்து ஒட்டிக் கொண்டாங்க ரொம்ப சமத்து அம்மா மாதிரியே. சரின்னு அம்மு காபி போட போய்ட்டாங்க சுகர் கம்மியா என்றேன். சரின்னுநொடியில் போட்டு  தந்தாங்க அய்ய குடிச்சா சகிக்கல பார்த்தா புள்ள பதற்றத்தில சர்க்கரைக்கு பதிலா  உப்பு, அதுவும் கம்மி என்று சொன்னதனாலே தப்பிச்சேன். நான் மறுக்கலையே, உப்பிட்டவரை  உள்ளளவும் நினை என்பதற் கிணங்க தன்னை நினைக்கணும் என்று தானோ என்று மட மட வென்று குடித்துவிட்டேன்.  ரூபனை பார்த்தா ஆப்பிழுத்த குரங்கு போல முழிக்கிறாரு நான் முழுசி பார்த்த பார்வையில அப்பிடியே மடக் கென்று  குடிச்சிட்டார். நானோ முகத்தில கொஞ்சமும் காட்டிக்கவே இல்லையே அம்முவுக்கு தெரியவே தெரியாதே அதனால நீங்களும் சொல்லி அம்முவ சங்கடப் படுத்தாதீங்க சரியா.

சரி யார் யாரை எல்லாம் பார்க்கலாம் அம்மு இங்க எல்லோரும் கல்யாணத்திற்கு வந்தால் சுலபம் அனைவரையும் பார்த்து விடலாம் இல்லையா? அப்போ அம்மு  நா.முத்துநிலவன்   நிலவன் அண்ணா வருவாரு அப்பிடியா தலலைப்பே இல்லாமல் போய் பட்டிமன்றத்தில அசத்துவாரில்ல கட்டாயம் அவரை பார்க்கணும். அவரோட பட்டிமன்றமும் பார்க்கணும் என்று ரொம்ப நாளா எனக்கு ஆசை. அப்புறம் பெரிய அறிஞர்களை எல்லாம் அறிமுகப் படுத்துவார் இல்ல   சகோதரர் கரந்தை ஜெயக்குமார்   வருவாரு.wow ம்..ம்..அப்புறம் Ramani S  ஐயா வருவாரு அப்பிடியா அவர் தான் எதை எடுத்தாலும் பார்த்தாலும் கவிதையாய் ம்,... ம் ....பின்னிடுவாரே அடேங்கப்பா. அப்ப... தமிழ் துளிர் விட  தமிழை கத்துதருவாரே ‘தளிர்’ சுரேஷ், அவரு,    அட நம்ம  சுப்பு தாத்தா  என்னமா பாடுகிறார் மெட்டுப் போட்டு, வருவாரில்ல சொல்ல முடியாது. வந்தாலும் வரலாம் .அடடா சுப்பு தாத்தா வை பார்க்கணுமே நேர்ல பார்த்து நன்றி சொல்லியே ஆகணும்.  அப்புறம்  தோழிகள்  கலை ,தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,, angelin கீத மஞ்சரி , Geetha M, , உஷா, இராஜராஜேஸ்வரி  இவங்களுக்கெல்லாம் வரமுடியுமா என்ன கால் பண்ணி  பார்க்கலாமா?அட நம்ம கலை, அது தாங்க நம்ம கருவாச்சி ம்...ம்...ம்..அந்த பொண்ணு தெரிஞ்சா நிச்சயமா பேசிக்கொண்டே பொடி நடையா வந்தாலும்  வந்திடுமில்ல. சகோதரர் பால கணேஷ் இருக்கார் இல்ல அவர் ஒரு பதிவு பார்த்தால் நூறு பதிவு பார்த்த மாதிரிங்க . ஏன்னா   அத்தி பூத்தாற்போல் தான் அவர் வரவிருக்கும். அதை தாங்க சொன்னேன். ஆனால் மொறுமொறு மிக்சர் நல்லா பண்ணுவாருங்கபோகும் போது கொஞ்சம் வாங்கிட்டு போகலாம் என்ன அம்மு வழியில கொறிச்சுக் கொண்டு போகலாம் இல்ல, அப்புறம் டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று நகைசுவை , விடுகதை எல்லாம் போட்டு அடிக்கடி  அசத்துவாரில்ல  அவர் வருவாரா அம்மு. ம்..ம்.. வரக்கூடும். வேறு யாரு ...... ம் ..ம்...ஆமா அந்த எழுத்து ஆர்வமும் ஆற்றலும் நிறைந்தவர் ஒவ்வொரு நாளும் பதிவு போடுவாரே ஆ......அவர் தாங்க சகோ விமலன் சிட்டுக்குருவி  அவரு சொல்லமுடியாது வந்தாலும் வரலாம். மா சகோதரர்   Thulasidharan V Thillaiakathu, அதுவும் தெரியலை, அட அவர் அகத்தை அமைதிபடுத்த எத்தனை விடயங்களை அலசுவார் அப்பப்பா.இப்ப பொம்பளையா பிறக்கக்கூடாது என்று வேற சொல்கிறார் தூக்கிவாரிப் போட்டுட்டுதுப்பா என்னன்னு போய் பார்க்கணும் அவசியம். அப்புறம்சகோ  துரை செல்வராஜூ இல்லையா , அவர் ஆன்மீகத்தை பற்றியும் ஆண்டவனை பற்றியும் மட்டும் தான் பேசுவாருங்க அங்க போனால் கோவிலுக்கு போன மாதிரி திருப்தியா மனம் அமைதியாயிடுமுங்க, அவரையும் பார்க்க முடியாதில்ல, குவெய்த் இல்ல அவரு ம்..ம்...ஆமா   இமயத்தலைவன்    இவர் ஓ...ஓ. அவர் USA யில அல்லவா அப்பிடியா?அப்போ பார்க்க முடியாது ...ம்ம்..ம்... அவரோட தளத்துக்கு வேண்டாம் விடுங்க அதையேன் பேசுவான். அம்மு என்ன  என்ன சொல்லுங்க இ...ல்..ல அ..ங்..க   போ...னா அங்க போனா அலறியடிச்சிட்டு ஓடியாந்திடுவேன் இல்ல. ஏன் அ...து....வா அங்க ஆ.வி..க...ள் நட..மா..ட்டம் அதிகமா இருக்கில்ல அது தான். ஆனால் நீங்க ரொம்ப தைரிய சாலிகள் நீங்க போகலாம். ஆனா ஒன்னு போ..கு..ம் போது யாரையாவது துணைக்கு கூட்..டிட்...டு  போ...ங்க...ப்பா சொல்லிட்டேன்.அம்மு விழுந்து விழுந்து சிரிக்கிறா எனக்கொண்னும் பயமில்லையாக்கும் நான் தனியவே போவேனே என்கிறார்.அப்ப   இவர்கள்  இங்க இல்ல இல்லையா ம்..ம்..    ok  அம்மு ரூபனை பார்த்து அம்மாவை பார்க்க போகலையா ரூபன் எனவும் அவர் இல்ல போனா திரும்ப மலேசியா போக விடமாட்டாங்க அதனால நான் இப்போ போகல. ரூபன் போன நானும் போய் இருக்கலாம். அங்கு நாம யாழ்பாவணன் அது தாங்க சகோதரர் Jeevalingam Kasirajalingam அவரையும் பார்த்து யாப்பிலக்கணம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வந்திருக்கலாம் இல்ல. சரி  அடுத்த முறை வரும் போது பார்க்கலாம் ஒரு கிழமை லீவு தானே என்ன செய்வது.
 சரி சரி  ஏன் அம்மு இன்னிக்கு கொஞ்சம் கோவில்கள் பார்க்கலாமா நீங்க ப்ரீ தானே எப்பிடி நீங்க தான் சொல்லிட்டு வரலையே என்று எரிஞ்சு விளறா இப்ப லீவு தருவாங்களோ இல்லையோ சரி எதுக்கும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் என்று முணுமுணுப்போடு போறா ok லீவு கிடைத்தது விட்டது  என்று வந்தார். சரி நாங்க இப்ப  கோவில்கள் தரிசனம் செய்யலாம் சரியா.

அது சரி சொல்ல மறந்துட்டேங்க இவங்க எல்லாம் வலை தளத்தை கலக்கிறவங்க. பேர் போனவங்க பெயரை சொன்னாலே அதிருமில்ல!   அதான் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். பெயரை சொடுக்கினாலே அவர்கள் பூர்வீகமே தெரிஞ்சிடுமே. பார்த்து..... ரொம்ப பெரிய ஆளுங்கப்பா மோதிடாதீங்க. பக்குவமா போய் கருத்து போட்டிடுங்க சரியா..அவங்க மலையும் நான் மடுவும் அல்லவா எப்படி அவர்களை.....நான்..... அறிமுகப் படுத்தலாமா நல்லா இருக்காதில்ல அதனால் தான் இப்படி ஒரு ஏற்பாடு பிடிச்சிருக்கு இல்ல.

விரும்பினவங்க எங்களோட ஜோயன்ட் பண்ணலாம். இதோ  ஆலய தரிசனம் கண்டு களியுங்கள்.


1  என்னை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரன். என்னுடைய துறை கணினிமென்துறை என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர் சகோதரன் என்னும் வலைப்பூவில் பலவகைப்பட்ட படைப்புக்ளை எழுதி வருகிறார் அவற்றில் ஒன்றுதா

உயிர்களின் பரிணாமத்தின் விளங்கும் தசவதாரம்


சிவநூல்கள் பற்றியும், http://lordeswaran.wordpress.com/sivabooks/


2.      பைரவர் வழிபாடு என்னும் வலைப்பூவில் எழுதிவரும் உறவு.


http://bairavarvazhibaadu.blogspot.com/ சொல்லியுள்ளார் வாருங்கள் நாமும் சென்று பயனடைவோம்.

3.       30 வருடங்களுக்கு மேலாக பலவைகைப்பட்ட படைப்புக்ளையும் பல புத்தங்களையும் எழுதிவரும்  இவர்கடமையைச் செய்:பலனை எதிர்பார்க்காதே என்கிறார் இவர் Radha Balu   -எண்ணத்தில் வண்ணங்கள் என்னும் வலைப்பூவில் தனது படைப்புக்களை படைத்து வருகிறார். அவற்றில் ஒன்று தங்களின் பார்வைக்கு இதோ



4.         அருள் என்னும் வலைப்பூவில் கணபதி.முருகன் சிவன்பற்றி சிறப்புறக் கூறியுள்ளார் வாருங்கள் சென்று பார்வையிடுவோம். http://arull.wordpress.com/2010/06/12/metaphysics/


5.         ஆன்மீகம் என்னும் வலைப்பூவில் இறைவனைஅடைய உதவும் ஐந்து மார்க்கங்கள் என்னும் தலைப்பில் சொல்லிய படிமங்களை பார்வையிட இதோ. http://aannmegam.blogspot.com/2013/11/blog-post.html


6.          திருமதி மணிராஜ் அவர்களின் வலைப்பூவில் எப்போதும் ஆலய தரினம் பற்றிதான் எழுதுகிறார்கள் அவர்களின் வலைப்பூவை முதலில் படித்து தரிசனம் பெற்றபின்தான் மற்ற வலைப்பூவுக்கு செல்வார்கள் என்று பல பின்னூட்டங்களில் நான் பார்த்தேன்.. அந்த வகையில்
ஆனந்தம் அருளும் ஆடவல்லீலேஸ்வரர் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார்கள் வாருங்கள் சென்று வருவோம்



7.         திருமதி கோமதிஅரசு அவர்கள்  மிக சிறப்பாக திருமதி பக்கங்கள் என்னும் வலைப்பூவில் பலவகைப்பட் பதிவுகளை வாசக உள்ளங்களுக்கு தினம் தினம் எழுதிக்கொண்டு இருக்கிறார் அந்த வகையில் ஆலயங்கள் பற்றி சொல்லியுள்ளார் அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு http://mathysblog.blogspot.com

8.          தஞ்சையம் பதி என்னும் வலைப்பூவில் எழுதிவரும் துரை செல்வராஜூ அவர்களின் எழுத்து எல்லோரையும் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை அந்த வகையில் ஐயாவின் வலைப்பக்கம் மாங்கனித்திரு விழாபற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார் சென்று பாருங்கள்
http://thanjavur14.blogspot.com/2014/07/blog-post10-karaikkaal-ammaiyar.html


9.         சகோதரி ராஜி அவர்கள் கானாமல் போன கனவுகள் என் வலைப்பூவில் எழுதிவருகிறார் பலவகைப்பட்ட படைப்புக்களை எழுதியுள்ளார் அவற்றில் ஒன்றுதான் இது சென்று பாருங்களேன்.

சுவாமிமலை-புண்ணியம் தேடி ஒரு பயணம்


10        சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு. {ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய வேண்டிய விசயம்}சிவலிங்கம்– நீங்கள் அறிந்திடாத புதிய வரலாற்றுத் தகவல்கள்! சென்று பார்க்க இதோ   http://madipakkamsrisivavishnutemple.blogspot.ca/


75 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    ஒவ்வொரு நாளும் வித்தியாசமான மதிநுற்பத்துடன் பதிவுகள் கடந்து செல்கிறது. என்னையும் தொடர்புபடுத்தி கதை பின்னிய விதம் கண்டு மகிழ்ந்தேன் நான் நினைக்கிறேன் என்னை வைத்து கலக்குவது 1வாரம் ஓடும் போல தெரியது..
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்ன ரூபன் கதை விட்டு கதை அறிய பார்க்கிறீர்களா? அது சஸ்பென்ஸ் இல்ல ஹா ஹா தொடர்ந்து பாருங்கள்.சரியா ரூபன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. ஆன்மீகத்துல எனக்கு இன்ட்ரஸ்ட் கம்மிங்கறதால நம்ம இராஜராஜேஸ்வரியம்மா தளத்துக்கு மட்டும் அப்பப்ப விசிட் அடிப்பேன். மத்த தளமெல்லாம் எனக்குத் தெரியாதவைதான். அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆன்மிகம் மனதுக்கு அமைதியை தரும் சகோ!
      மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  3. மைதிலி தங்கச்சி வீட்ல காபி குடிக்க நான் பயப்படவே மாட்டனாக்கும். ஏன்னா... நான் சுகரே போடாம காபி குடிக்கப் பழகிட்டேன்ல...? ஹா... ஹா... ஹா... அப்படியே சந்தடிசாக்குல அத்தி பூத்தாப்புல வருவாருன்னு என்னைக் குத்திட்டயேம்மா... அவ்வ்வ்வ்வ்... வலிக்குது. முன்னல்லாம் வாரம் இரண்டு பதிவுகள்னு தவறாம எழுதிட்டிருந்தேன். இப்ப வாழ்க்கைல சில பிரச்சனைகளை சந்திச்சு சரிபண்ண போராடிட்டிருக்கறதால இணைய நேரம் மிக குறைஞ்சு போச்சு. சீக்கிரம் சரி பண்ணிடறேன் செல்லமான இனியா சிஸ். சொன்னதுக்காகவே. ரைட்டா...?

    ReplyDelete
    Replies
    1. சுகர் போடாம குடிக்கலாம் சகோ உப்பு போட்டு குடிப்பீர்களோ என்பது தானே கேள்வி?
      இந்த காப்பி குடிக்கிற விடயத்தை நீங்க எப்பிடி எடுத்தீங்க என்ன புரிந்து கொண்டீங்க இனிமே நான் சொல்லப் போற விடயத்தை எப்படி எடுத்துக்க போறீங்க என்பதை கண்டு பிடித்து சொல்லுங்கள். இல்லையேல் நான் கடைசியில் சொல்லுகிறேன், சரியா.
      வலிக்குதா சாச்சா நான் அப்பிடி குத்துவனா சும்மா கலாய்க்கத்தானே. எப்பிடி மருந்தும் போட்டுவிட்டேனே சகோ இனி என்ன வலி போய் விட்டதல்லவா?
      எல்லாம் சுமுகமாக தீரும் சகோ நீங்களும் பதிவுகள் பல போடுவீர்கள் கவலை வேண்டாம். நீங்கள் மெதுவாகவே வரலாம். சகோ எல்லா நலன்களும் வந்தடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ....!

      Delete
    2. அண்ணா! நீங்க வாங்க உங்களுக்கு நிதானமா சுகர் ப்ரீ காபி தருவேன்:))

      Delete
    3. இந்த அண்ணாவுக்கு சுகர் ப்ரீ காபி என்றால் எனக்கு ?

      Delete
    4. சுக்கு கசாயம் வேணா தரவா சகா?

      Delete
  4. உங்க கதை ரொம்ப சூப்பராகத்தான் போயிக்கிட்டு இருக்கு.

    நிறைய ஆன்மீகத்தளங்கள், போய்ப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியா சகோ ரொம்ப சந்தோஷம்.
      மிக்க நன்றி!சகோ வரவுக்கும் கருத்துக்கும்

      Delete
  5. ****எங்களை இரு என்று கூட சொல்லத் தோணலைன்னா பாருங்களேன். அப்புறம் மது தான் எங்களை இருக்கச் சொன்னார் அப்புறம் வெகு நேரம் பேசிட்டே இருந்தோம். மகிழ் நிறை வந்து ஒட்டிக் கொண்டாங்க ரொம்ப சமத்து அம்மா மாதிரியே. சரின்னு அம்மு காபி போட போய்ட்டாங்க சுகர் கம்மியா என்றேன். சரின்னுநொடியில் போட்டு தந்தாங்க அய்ய குடிச்சா சகிக்கல பார்த்தா புள்ள பதற்றத்தில சர்க்கரைக்கு பதிலா உப்பு, அதுவும் கம்மி என்று சொன்னதனாலே தப்பிச்சேன். நான் மறுக்கலையே, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதற் கிணங்க தன்னை நினைக்கணும் என்று தானோ என்று மட மட வென்று குடித்துவிட்டேன். ரூபனை பார்த்தா ஆப்பிழுத்த குரங்கு போல முழிக்கிறாரு நான் முழுசி பார்த்த பார்வையில அப்பிடியே மடக் கென்று குடிச்சிட்டார். நானோ முகத்தில கொஞ்சமும் காட்டிக்கவே இல்லையே அம்முவுக்கு தெரியவே தெரியாதே அதனால நீங்களும் சொல்லி அம்முவ சங்கடப் படுத்தாதீங்க சரியா??***

    நான் இதை வாசிக்கவேவில்லை. அதனால இதைப்பத்தி விமர்சிக்கப் போவதில்லை! :)))))

    இருந்தாலும், "அவங்க செல்லமான, உங்களை" அடையாளம் காட்டக்கூட வாழ்க்கைத் துணையோட உதவி தேவைப்பட்டதா??!! :)))) இதெல்லாம் ரொம்ப அதிகம்ங்க இனியா! :)

    ReplyDelete
    Replies
    1. என்ன வருண் இப்படியா....... குத்தம் சொல்றீங்களா பாராட்டுகிறீர்களா என்று தெரியமாட்டேங்குதே. இல்லையே அதை ரூபன் தானே சொன்னார் கேட்டதும் அவரே. மதுப் பிளையருக்கும் என்னை தெரியாதே அப்புறம் எப்படி .....மிக்க நன்றி! வருண் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
    2. ஓ ரூபந்தான் அடையாளம் காட்டினார் இல்லை? நாந்தான் தவறுதலா புரிந்து/சொல்லி விட்டேன்.

      குற்றமா? நீங்க வேற, உங்க நட்பைப் பார்த்து மெய்சிலிர்த்து பேச்சு மூச்சில்லாமல் நிர்கிறேன். :)

      Delete
    3. புரிஞ்சிட்டுதா புரிஞ்சா சரிதான். பேச்சு நின்னா பரவாய் இல்லப்பா மூச்சை நிறுத்திடாதய்யா நமக்கெல்லாம் தேவையானதில்ல...ஹா ஹா .....

      Delete
    4. என் மூச்சு நின்னாத்தான் என்ன இப்போ? ஒரு தொல்லையில்லாமல் நீங்க நிம்மதியா இருக்கலாம் இல்லையா? எளிதாக எடுத்துக்கோங்க! :)))

      Delete
    5. அப்பிடியெல்லாம் விடமுடியாதுப்பா இது எளிதா விடுகிற விடயமா வலையுலக நண்பர்கள் அனைவரும் துடிச்சுப் போவோம் இல்ல. பத்திரப்படுத்தி கோங்கய்யா.

      Delete
    6. ***என் மூச்சு நின்னாத்தான் என்ன இப்போ?****
      வலையுலக வசிஸ்டர் இப்படி சொன்னால், வலை உலகம் என்னாவது?:((
      I second you INIYAA!!

      Delete
  6. உரையாடல் பாணியில் அறிமுகங்கள் - ரொம்பவே ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    மூன்று தளங்கள் அறியாதவை...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஆஹா மூன்று தளம் தெரியாதா சரி சரி போய்ட்டு வாங்க.
    மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

    ReplyDelete
  8. நன்றி என்னை அறிமுகம் செய்ததற்கும்,
    உடன் பெரியவர்கள்(பதிவர்கள்)
    பலரையும் கூட்டிவந்ததற்குமாய்/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ....!

      Delete
  9. படிக்கும்போதே உண்மை சம்பவம்போல போய்க்கொண்டிருக்கிறதே.... அடடே அபாரம் போங்க, போங்க, வர்றோம் வர்றோம் (படிக்க)

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ! தங்கள் இனிய கருத்தில். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சகோ

      Delete
  10. இன்று என் தளம் இங்கு இடம்பெற்று இருப்பதை, ரூபன், திண்டுக்கல் தனபாலன்அவர்கள் வந்து சொல்லி வாழ்த்தினார்கள்.
    இருவருக்கும் என் நன்றிகள்.
    என் தளத்தைப்பற்றி சிறப்பாக சொல்லி அறிமுகபடுத்தியத்திற்கு நன்றி இனியா.
    இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும்/ மேலும் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

      Delete
  11. கோலம் போடுதல் குமரிக்கு நன்று
    குனிதல் உடலுக்கு நலம் தரும் ஒன்று//

    நன்றாக சொன்னீர்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....!

      Delete

  12. நீங்க எப்பவும் யாழ்ப்பாணம் வாங்க...
    http://kayjay.tk/jaffna.php என்ற இணைப்பில் முக்கிய இடங்கள்.
    என்னோடு இணைந்தே சுற்றிப் பார்க்கலாம்.
    அறிஞர் இனியா, அறிஞர் ரூபன் உடன்
    வலைச்சர உறவுகள் அதாவது பதிவர்கள்
    எல்லோருக்குமான அழைப்பு!
    சிறப்பான அறிமுகங்கள்
    அறிமுகப்படுத்தும் விதம் அழகு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! தங்கள் இனிய அழைப்புக்கு காலம் கனிந்தால் வருவோம் நிச்சயம்.மிக்க நன்றி! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

      Delete
  13. இனிமை, சுவாரஸ்யம், ஈர்ப்பு என அத்தனை வழிகளாலும்
    எங்களைக் கட்டி இழுக்கின்ற உங்கள் எழுத்துத் திறமை மிகச் சிறப்பு!..

    தற்சமயம் நேர நெருக்கடியாக இருக்கின்றது தோழி!
    தெரிந்த பதிவர்களும் தெரியாத பல பதிவர்களும் இன்று அறிமுகம்.
    பார்க்கின்றேன்.
    பகிர்விற்கு உங்களுக்கு அன்பு நன்றியுடன்
    அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது தோழி நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் மெதுவா. தங்கள் இனிய கருத்து மிகவும் மனதுக்கு இதமாக உள்ளது மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி.வருகைக்கும் வாழ்த்துக்கும் .

      Delete
  14. சகோதரி பிச்சு பின்னுகின்றீர்கள்! அழகான கவிதையோடு ஆரம்பித்து உண்மையிலேயே நடப்பது போன்ற உரையாடலோட, ரூபன் தம்பியையும் அழைத்துக் கொண்டு எல்லார் வீட்டிற்கும் வருகை தந்து....எங்கள் அகத்திற்கும் வந்து விட்டீர்களே! மிக்க நன்றி சகோதரி! பல எழுத்து மேதைகளின் நடுவில் எங்களைப் போன்ற சிறியவர்களையும் (வயதில் அல்ல...எழுத்தில்) அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

    DD நண்பருக்கு எங்கள் நன்றி எங்கள் தில்லைஅகம் அறிமுகம் ஆகி உள்ளது என்றத் தகவல் தந்ததற்கு. இணையதளப் பிரச்சினை இருந்ததால் தளம் வர சி'றிது தாமதாமாகிவிட்டது! மிக்க நன்றி டிடி!

    அறிமுகங்கள் பலரை அழைத்து வந்ததற்கு தங்களுக்கு எங்கள் நன்றிகள், அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ கஷ்டப்பட்டது வீண் போகவில்லை அப்பாடா. அது தான் நல்ல கருத்து சொல்லிட்டீங்களே ஹாஹா மிக்க மகிழ்ச்சி சகோ!

      Delete

  15. வணக்கம்!

    பேச்சு மொழியழகு பின்னி மணங்கொடுக்கும்!
    மூச்சுத் தமிழென்று முன்மொழியும்! - பூச்செண்டு
    இனியா..போல் இன்பத் தமிழ்பேசும் மங்கை
    இனி...யார் உரைப்பீர் எனக்கு?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே! எங்கே காணவில்லையே என்று பார்த்தேன்.
      தங்கள் வருகையும்
      ஈந்த கவிதையும்
      என்றும் சேர்க்கும் சிறப்பு- எனக்கு
      புகழ் ஓங்கும் தமக்கு

      Delete
  16. வாங்க இனியாச்செல்லாம்
    நான் போட்ட கமெண்டை காக்கா தூக்கிக்கிட்டு போய்டுச்சு:((
    ஆன தம 7 மட்டும் இருக்கு:) இனியாச்செல்லம் நீங்க வந்ததால வீடே ஸ்வீட்டா ஆகிடுச்சா? so நான் குடிச்சுப்பார்த்தப்ப கூட காபி ஸ்வீட்டா தான் இருந்துச்சு:))
    அப்புறம் இன்னைக்கு நான் ப்ளு சுடிதார் தான் போட்டிருக்கேன்!! அப்புறம் டெய்லி சொல்லவது மறந்து போற விஷயம் ஒன்னு! கதை சொல்வது போல் பழக்கமானவர்களையும், கட்டுரையாய் மற்றவர்களையும் அறிமுக படுத்தும் ஸ்மார்ட் இனியா விற்கு ஒரு பொக்கே இதோ!



    ReplyDelete
    Replies
    1. மைதிலி நீங்க சுகர் போட்டுதான் காப்பி கொடுத்தீங்க ஆனா உங்களை பார்த்ததால் இனியாவின் கண்களில் ஆனந்த் கண்ணிர் வந்து அந்த கண்ணிர் துளிகள் காபியில் விழுந்து அது உப்பின் சுவையாக மாறிவிட்டது போல

      Delete
    2. அருமையான விளக்கம் தல! :) மகிழ்ச்சியில் திளைக்கும் தோழிகளுக்கு உண்மை விளங்காமல் போய்விட்டது. நீங்கதான் அந்த சோடியம் க்ளோரைட் எங்கேயிருந்து வந்ததுனு அழகா விளக்கி இருக்கீங்க!

      I like your rationale is more reasonable, thala!

      எவ்ளோதான் இனிமையானவங்களா இருந்தாலும் அவங்க கண்ணீரில் "சுகர்" கலந்து வராமல்ப் போனது அந்த "கடவுள் குற்றம்" தான். :(

      Delete
    3. அருமையான விளக்கம் தல! :) மகிழ்ச்சியில் திளைக்கும் தோழிகளுக்கு உண்மை விளங்காமல் போய்விட்டது. நீங்கதான் அந்த சோடியம் க்ளோரைட் எங்கேயிருந்து வந்ததுனு அழகா விளக்கி இருக்கீங்க!

      I like your rationale, which is more reasonable, thala!

      எவ்ளோதான் இனிமையானவங்களா இருந்தாலும் அவங்க கண்ணீரில் "சுகர்" கலந்து வராமல்ப் போனது அந்த "கடவுள் குற்றம்" தான். :(

      Delete
    4. கமென்ட் பகுதியை இப்படி facebook மெசேஜ் போல ஆகிய பெருமை மிகு நண்பர்கள் வாழ்க!:))

      Delete
    5. அம்முக்குட்டி காக்கா தூக்கிடுச்சா சரி விடுங்க திருஷ்டி பரிகாரம் இன்னு நினைச்சுக்குவோம் சரியா.பார்த்தீங்களா அம்மு எவ்வளவு ஒற்றுமை என்று நான் நினைக்க அதே கலர் சுரிதார் போட்டிருகிறீங்கள் அல்லவா வெளியில் சொல்லாதீங்க ஏன்னா வருனும் மதுரை தமிழனும் கண்ணு வைக்கிறாங்க இல்ல அம்மு. அது சரி சும்மா சொல்லக் கூடாது மதுரை வீரன் ரொம்ப ஸ்மார்ட் இல்ல அம்மு காபி சுவீட் ஆ இருந்து து இல்ல அப்போ சுவை மாறிய காரணத்தை அவர் தானே கரக்டா கண்டு பிடிச்சிருக்கார். எனவே நன்றி சொல்கிறோம் சகோ உங்களுக்கு தான் சகோ !

      Delete
  17. அப்புறம் ஒரு விஷயம் தோழி!!! என்னை போய் கோவிலுக்கு கூப்பிட்டிருகீங்க பாருங்க! உங்க மன தைரியத்தை பாராட்டி கனடத்துகட்டழகி யின் சோப் டப்பா தரேன்:))) தோழி கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்லமுடியுமா? என் மாமியாரோடு கோயிலக்கு போய் சும்மா மாமல்லபுரம் சிற்பங்கள் சுத்திபார்கிற மாதிரி வேடிக்கை தானே பார்ப்பேன். இப்பவும் அதையே செய்திட்டா போச்சு:))) நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிருக்கேன்**வாணி சரஸ்வதி, இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை***
    உடனே டல் ஆகக்கூடாது :)) அதான் உங்களுக்காக வரேன்னு சொல்லிடேனே:)

    ReplyDelete
    Replies
    1. ///வாணி சரஸ்வதி, இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை***///
      ஆனா இராமர் மேல நம்பிக்கை உண்டுல்லா அதுதாங்க நம்ம கஸ்தூரி மேல.... இல்லைன்னு சொல்லி தப்பிக்க முடியாதுல்ல...

      Delete
    2. நம்பிக்கை இல்லைனா விடமாட்டீங்களே! சிந்திக்க விடுங்க, தல! ஆனாலும் உங்க "கடவுள் பக்தி" அப்பப்போ என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. சின்ன வயசுலயே நல்லா பக்தியை ஊட்டி ஊட்டி வளர்த்து விட்டுட்டாங்க போல உங்க பெற்றோர். அதான் இப்படி ஒரு "பக்தி மானா" வந்து நிக்கிறீங்க! :)

      Delete
    3. அடடா முதல்ல தெரிஞ்சிருந்தா வேற எங்கேயாச்சும் கூட்டிட்டு போயிருப்பேன் இல்ல சரி இப்ப என்ன கேட்டுப் போச்சு சிலைகளில் கலைகளை ரசித்தீர்கள் அல்லவா அதுவும் எனக்காக நன்றிம்மா! அம்முகுட்டிக்காக நான் உப்புப் போட்ட காபி குடிக்கலையா. எனக்காக கோவிலுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இரண்டுக்கும் சரியாப் போச்சில்ல அம்மு.
      மிக்க நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  18. வெகு யதார்த்தமான சம்பவங்களுடன் - இன்றைய பதிவு வெகுசிறப்பு!..
    எனது தளத்தினையும் சிறப்பித்துக் கூறி அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி..

    தகவல் அளித்து வாழ்த்திய அன்புக்குரிய ரூபன் மற்றும் திண்டுக்கல் தனபாலன்
    அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!..

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! மிக்க நன்றி வருகைக்கும் இனியகருத்துக்கும், தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவதற்கும்.

      Delete
  19. ஆன்மீக பதிவர்களை அடையாளம் காண்பித்து இருக்கிறீர்கள் எல்லாம் இந்துக்கள் ஆன்மீகமாகவே இருக்கிறது அது சரி அடுத்து கிறிஸ்துவ,முஸ்லீம், சிக்கிய,புத்த ஆன்மிகத்தை பற்றி பதிவு வருமுல்ல???? இல்லை என்றால் கறுப்பு கொடி பிடித்து போராட்டம் நடுத்தப்படுமில்ல.....

    பரட்டை பத்த வைச்சிட்டியே.........ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. அடடா இந்த மதுரைவீரன்ட தொல்லை தாங்க முடியல்லப்பா ஷ் .....ஷ் பொல்லாத trouble makerப்பா எனக்கு அதப்பத்தியெல்லாம் பிரச்சினை இல்ல நான் தான் இயேசு நாதருக்கு பாடல் இயற்றி போட்டிரு
      க்கிறேனே. அப்புறம் என்ன என் பெற்றோரில் எனக்கு அளவு கடந்த அன்பிருக்கலாம் அதற்காக தங்கள் பெற்றோரை அவமதிப்பதாகாது அவர்களையும் மதித்து மரியாதையை கொடுப்பேன். சரியா சகோ?
      மிக்கநன்றி வரவுக்கும் கருத்துக்கும் சகோ

      Delete
    2. பத்த வைத்தது அணைந்து விட்டதா ஹா ஹா

      Delete
  20. வணக்கம் இனியா !

    இன்கதையில் நல்ல இனிதான நட்புகளின்
    மின்வலைகள் தந்தீர் மிளிர்ந்து !

    அறிந்தவர்கள் அரைவாசி அறியாதோர் அரைவாசி
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. சீராளா !எங்கே காணோம் என்று பார்த்தேன்.
      ஒரு வழியாக வந்து விட்டீர்கள் . மிக்க நன்றி! வருகைக்கும் இனியகருத்துக்கும்.

      Delete
  21. வித்தியாசமான முறையில் வலைதள அறிமுகம் சிறப்பு! புதியதளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! என்னை நினைவு கூர்ந்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  22. அறிமுகங்களைக் கண்டேன். ஆனந்தமடைந்தேன். தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி வாழ்த்துக்கள் !

      Delete
  23. நான் வருவேனா வரமாட்டேனா என்றா நினைத்தீர்கள் !!

    நேற்று முதல் நாள் எனக்கு கால பைரவரின் கடாக்ஷம் கிடைத்தது போல்.!!
    ஒரு நண்பர் வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்தேன்.

    குபீர் என்று எங்கிருந்தோ பறந்து வந்த அந்த
    பாமநேரியன் எனது இரண்டு கால்களை குதறிவிட்டது .

    மருத்துவ மனை , டெட்டனஸ், ஆண்டி ரேபிஸ் வாக்சின் என்று போட்டுவிட்டு,

    அஷ்டமத்து சனி இன்னும் வரவில்லை, இப்படி ஏன் நடக்கிறது என்று
    புரியாமல் நின்ற நிலையில்,

    டி.டி. சார் தகவல் .அனுப்பி இருந்தார்.

    இனியாவின் இனிய அறிமுகத்துக்கு
    இதயம் கனிந்த நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஆமா தாத்தா காணோம் என்று கவலை யாய் போய்விட்டது. அடடா..... கஷ்ட காலம் தீர்ந்தது என்று நினைச்சுக்கோங்க தாத்தா. கவலைப்படாமல் எல்லாம் சரியாகிவிடும். ok வா மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.தாத்தா!

      Delete
  24. வித்தியாசமான வியாழன் தொகுப்பு வாழ்த்துக்கள் இனியா ! ரூபன் கஞ்சியாகிவிடுவார் போல ஊர் சுற்றி!ஹீ

    ReplyDelete
    Replies
    1. சச்சா இது அவரின் வழமையான விருப்பமான விளையாட்டு தானே.ஆகையால் கஞ்சி ஆகமாட்டார். மிக்க நன்றி!வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  25. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  27. Replies
    1. வாக்கிற்கு நன்றி சகோ!

      Delete
  28. அட எவ்வளவு அழகா ஒரு அறிமுகம் :)
    என்னையும் கூப்பிட்டுருக்கீங்க..நான் தாமதமாப் பாத்துட்டேனே.. பரவாயில்லை பறந்து வந்துறேன்.. :)
    மிக்க நன்றி தோழி..

    ReplyDelete
  29. அது தானே எங்கே காணோம் என்று கவலையாப் போச்சும்மா. அப்பாடா இப்பவாவது வந்தீங்களே சந்தோஷம்மா. மிக்க நன்றி!

    ReplyDelete
  30. என்னையும் நட்பு வட்டாரத்திலிருந்து அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி இனியா. அறிமுகமான சக பதிவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. மேலும் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  32. வரைச் சரத்தில் முதன் முறையாக என் வலைப்பூவை அறிமுகப்படுத்திய 'இனியா' தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  33. மேலும் மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  34. அன்றே படித்தேன் என்றாலும் இன்று
    மீண்டும் படித்தேன்
    ரசித்தேன் ...

    ReplyDelete
  35. அறிமுகம் தந்தமைக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது