07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 12, 2014

கும்மாச்சியின் பூங்கொத்து

கடந்த நான்கு நாட்களாக எனக்குப் பிடித்த வலைப்பூக்களை மலர்ச்சரமாக தொடுத்து அறிமுகப்படுத்தினேன்.

மேலும் சில வலைப்பூக்களை இந்தப் பதிவில் காணலாம்.

மோகன் குமார் அவர்களின் வலைத்தளமான வீடு திரும்பல் ஒரு பல்சுவை களஞ்சியம். சினிமா விமர்சனங்கள், பயணக்கட்டுரைகள், நகைச்சுவை என்று எல்லா துறைகளிலும் நல்ல நடையுடன் எழுதும்  மோகன்குமார் ஒரு நல்ல நிறுவனத்தில் பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு எவ்வாறு இவ்வளவு பதிவுகளை எழுதுகிறார் என்று வியக்க வைப்பவர்.

அவருடைய தளத்திலிருந்து சில முத்துக்கள்

2013 ஒரு டையரி குறிப்பு ,

புத்தக சந்தையும் நம்ம புக்கும்,

இங்கிலீஷ் விங்கிலீஷ் தவற விடக்கூடாத ஒரு படம்,

சுஜாதாவின் கரையெல்லாம் செண்கப்பூ,

சென்னை தி.நகர் ஒரு ரவுண்டு அப்.


பகவான்ஜி : இவரின் ஜோக்காளி தளம், "சிரி"வீடு, "பய"டேட்டா, "சிரி"ப்பாக்கம், "சிரி"கவிதை, தின"சிரி"ஜோக், "சிரி"கதை, சீரியஸ் கதை என்று வித்தியாச விருந்து படைக்கும் தளம்.

அவற்றி சில

காதலுக்கும் கள்ளக்காதளுக்கும் உள்ள வித்தியாசம்.

பயடேட்டா 

சின்ன வீடு "செட் அப்" புக்கு சம்மதித்த மனைவி 

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள். 


ஜெயதேவ்தாஸ்: மற்றுமொரு பல்சுவை எழுத்தாளர்.

ரூபனின் எழுத்துப்படைப்பு என்ற தளம் ரூபன் அவர்களால் நடத்தப்படுகிறது. கவிதைகளில் பின்னி எடுப்பார்.

அவற்றி சில

எப்போதுதான் பார்ப்பது?

அன்று ஒரு நாள் 

தேடுகிறேன் தேடுகிறேன் 

இன்னும் எண்ணற்ற பதிவர்களை நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன். 

இந்த தருணத்தில் ஒரு மறைந்த பதிவரைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.

பட்டாப்பட்டி என்ற பதிவரைப் பற்றி இப்பொழுது வந்த புதிய பதிவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. நகைச்சுவை இவரது தனி சொத்து. சிங்கப்பூர் வாசியாக இருந்த கோவை இளைஞர். அவரது அகால மரணம் பதிவுலகத்திற்கு பெரிய இழப்பு.

அவரது தளத்தைக் காண. அவரது அறிமுகத்திலேயே நகைச்சுவையை அள்ளித்தெளித்த பதிவர். 

நானா?.. பேரு பட்டாபட்டி.. வளர்ந்தது கோவை. வசிப்பது சிங்கை. நல்ல பயபுள்ளைக , இளகின மனசுக்காரங்க , ஸ்மைலி போட்டு காண்டு ஏத்திரவங்க, ஓட்டு கேட்டு வருபவர்கள்..ப்ளீஸ்.. எங்காவது பொட்டியடிக்கிற ப்ளாக்குக்கு போயிடுங்க.. இது... நொண்ன , மொக்கை , வடை , புர்ர்ரசீ..னு சொல்லீட்டு வருபவர்களை, துகிலுரிக்கும் இடம். மீறி வந்துட்டு, என்னை திட்டீட்டான், கிள்ளீட்டான்னு அழுதீங்க.. தக்காளி.. அப்பால இருக்கு டான்ஸ்..!! அம்புட்டுதேன்... Any Questions?

ஆ ஆ ராசா Exclusive (எச்சக்கலை) பேட்டி படிங்க அவரின் நக்கல் நடை உங்களை வியப்படையச்செய்யும். 

பட்டாப்பட்டி வீ மிஸ் யு 

என்றென்றும அன்புடன்
கும்மாச்சி 

22 comments:

  1. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.... தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் வருகைக்கு நன்றி.

      Delete
  2. வணக்கம்
    எல்லாம் செல்லும் தளங்கள்தான்... அறிமுகத்திற்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அறிமுகம் செய்ததற்கு நன்றி கும்மாச்சி ,ஜோக்காளி தளப் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள் போலிருக்கே !
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. தவறுக்கு மன்னிக்கவும் பகவான்ஜி.

      Delete
    2. தவறு திருத்தப்பட்டுவிட்டது.

      Delete
    3. மிக்க நன்றி கும்மாச்சி !

      Delete
  4. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். சகோதரர் பட்டாப்பட்டியின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்

    ReplyDelete
    Replies
    1. ராஜி வருகைக்கு நன்றி. மறக்கமுடியாத பதிவர் பட்டாப்பட்டி.

      Delete
  5. சிறப்பான அறிமுகங்கள். அனைவருமே அறிந்தவர்கள் தான். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சிறந்த அறிமுகங்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
  7. பட்டாபட்டி அவர்களை நினைவு கூர்ந்த வண்ணம் -
    சிறப்பான அறிமுகங்கள்.. நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. பட்டாப்பட்டி தளம் மட்டும் இதுவரை சென்றதில்லை! மற்றவர்கள் தொடரும் நல்ல பதிவர்கள்! அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
    பட்டாப்பட்டியை படித்திருக்கிறேன்...
    மற்றவர்களை தொடர்ந்து வாசிக்கிறேன்...

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள் கும்மாச்சி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் வருகைக்கு நன்றி.

      Delete
  11. நன்றி நண்பர் கும்மாச்சி ...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது